< מִשְׁלֵי 10 >

משלי שלמה בן חכם ישמח-אב ובן כסיל תוגת אמו 1
சாலொமோனின் நீதிமொழிகள்: ஞானமுள்ள மகன் தகப்பனைச் சந்தோஷப்படுத்துகிறான்; மூடத்தனமுள்ளவனோ தாய்க்குச் சஞ்சலமாக இருக்கிறான்.
לא-יועילו אוצרות רשע וצדקה תציל ממות 2
அநியாயத்தின் பொருட்கள் ஒன்றுக்கும் உதவாது; நீதியோ மரணத்திற்குத் தப்புவிக்கும்.
לא-ירעיב יהוה נפש צדיק והות רשעים יהדף 3
யெகோவா நீதிமான்களைப் பசியினால் வருந்தவிடமாட்டார்; துன்மார்க்கர்களுடைய பொருளையோ அகற்றிவிடுகிறார்.
ראש--עשה כף-רמיה ויד חרוצים תעשיר 4
சோம்பற்கையால் வேலைசெய்கிறவன் ஏழையாவான்; சுறுசுறுப்புள்ளவன் கையோ செல்வத்தை உண்டாக்கும்.
אגר בקיץ בן משכיל נרדם בקציר בן מביש 5
கோடைக்காலத்தில் சேர்க்கிறவன் புத்தியுள்ள மகன்; அறுப்புக்காலத்தில் தூங்குகிறவனோ அவமானத்தை உண்டாக்குகிற மகன்.
ברכות לראש צדיק ופי רשעים יכסה חמס 6
நீதிமானுடைய தலையின்மேல் ஆசீர்வாதங்கள் தங்கும்; கொடுமையோ துன்மார்க்கனுடைய வாயை அடைக்கும்.
זכר צדיק לברכה ושם רשעים ירקב 7
நீதிமானுடைய பெயர் புகழ்பெற்று விளங்கும்; துன்மார்க்கனுடைய பெயரோ அழிந்துபோகும்.
חכם-לב יקח מצות ואויל שפתים ילבט 8
இருதயத்தில் ஞானமுள்ளவன் கட்டளைகளை ஏற்றுக்கொள்ளுகிறான்; அலப்புகிற மூடனோ விழுவான்.
הולך בתם ילך בטח ומעקש דרכיו יודע 9
உத்தமமாக நடக்கிறவன் பத்திரமாக நடக்கிறான்; கோணலான வழிகளில் நடக்கிறவனோ கண்டுபிடிக்கப்படுவான்.
קרץ עין יתן עצבת ואויל שפתים ילבט 10
௧0கண்சாடை காட்டுகிறவன் தவறு செய்கிறான்; அலப்புகிற மூடன் விழுவான்.
מקור חיים פי צדיק ופי רשעים יכסה חמס 11
௧௧நீதிமானுடைய வாய் ஜீவஊற்று; கொடுமையோ துன்மார்க்கனுடைய வாயை அடைக்கும்.
שנאה תערר מדנים ועל כל-פשעים תכסה אהבה 12
௧௨பகை விரோதங்களை எழுப்பும்; அன்போ எல்லாப் பாவங்களையும் மூடும்.
בשפתי נבון תמצא חכמה ושבט לגו חסר-לב 13
௧௩புத்திமானுடைய உதடுகளில் விளங்குவது ஞானம்; மதிகேடனுடைய முதுகுக்கு ஏற்றது பிரம்பு.
חכמים יצפנו-דעת ופי-אויל מחתה קרבה 14
௧௪ஞானவான்கள் அறிவைச் சேர்த்துவைக்கிறார்கள்; மூடனுடைய வாய்க்குக் கேடு சமீபித்திருக்கிறது.
הון עשיר קרית עזו מחתת דלים רישם 15
௧௫செல்வந்தனுடைய பொருள் அவனுக்குப் பாதுகாப்பான பட்டணம்; ஏழைகளின் வறுமையோ அவர்களைக் கலங்கச்செய்யும்.
פעלת צדיק לחיים תבואת רשע לחטאת 16
௧௬நீதிமானுடைய உழைப்பு வாழ்வையும், துன்மார்க்கனுடைய விளைவோ பாவத்தையும் பிறப்பிக்கும்.
ארח לחיים שומר מוסר ועזב תוכחת מתעה 17
௧௭புத்திமதிகளைக் காத்துக்கொள்ளுகிறவன் ஜீவவழியில் இருக்கிறான்; திருத்துதலை வெறுக்கிறவனோ மோசம்போகிறான்.
מכסה שנאה שפתי-שקר ומוצא דבה הוא כסיל 18
௧௮பகையை மறைக்கிறவன் பொய் உதடன்; புறங்கூறுகிறவன் மதிகேடன்.
ברב דברים לא יחדל-פשע וחושך שפתיו משכיל 19
௧௯சொற்களின் மிகுதியால் பாவமில்லாமற்போகாது; தன்னுடைய உதடுகளை அடக்குகிறவனோ புத்திமான்.
כסף נבחר לשון צדיק לב רשעים כמעט 20
௨0நீதிமானுடைய நாவு சுத்தவெள்ளி; துன்மார்க்கனுடைய மனம் அற்பவிலையும் பெறாது.
שפתי צדיק ירעו רבים ואוילים בחסר-לב ימותו 21
௨௧நீதிமானுடைய உதடுகள் அநேகருக்கு உணவளிக்கும்; மூடரோ மதியீனத்தினால் சாவார்கள்.
ברכת יהוה היא תעשיר ולא-יוסף עצב עמה 22
௨௨யெகோவாவின் ஆசீர்வாதமே செல்வத்தைத் தரும்; அதனோடு அவர் வேதனையைக் கூட்டமாட்டார்.
כשחוק לכסיל עשות זמה וחכמה לאיש תבונה 23
௨௩தீவினைசெய்வது மூடனுக்கு விளையாட்டு; புத்திமானுக்கோ ஞானம் உண்டு.
מגורת רשע היא תבואנו ותאות צדיקים יתן 24
௨௪துன்மார்க்கன் பயப்படும் காரியம் அவனுக்கு வந்து சம்பவிக்கும்; நீதிமான் விரும்புகிற காரியம் அவனுக்குக் கொடுக்கப்படும்.
כעבור סופה ואין רשע וצדיק יסוד עולם 25
௨௫சுழல்காற்று கடந்துபோவதுபோல் துன்மார்க்கன் கடந்துபோவான்; நீதிமானோ நிரந்தர அஸ்திபாரமுள்ளவன்;
כחמץ לשנים--וכעשן לעינים כן העצל לשלחיו 26
௨௬பற்களுக்கு புளிப்பும், கண்களுக்குப் புகையும் எப்படி இருக்கிறதோ, அப்படியே சோம்பேறியும் தன்னை அனுப்புகிறவர்களுக்கு இருக்கிறான்.
יראת יהוה תוסיף ימים ושנות רשעים תקצרנה 27
௨௭யெகோவாவுக்குப் பயப்படுதல் ஆயுள்நாட்களைப் பெருகச்செய்யும்; துன்மார்க்கர்களுடைய வருடங்களோ குறுகிப்போகும்.
תוחלת צדיקים שמחה ותקות רשעים תאבד 28
௨௮நீதிமான்களின் நம்பிக்கை மகிழ்ச்சியாகும்; துன்மார்க்கருடைய வாழ்க்கையோ அழியும்.
מעוז לתם דרך יהוה ומחתה לפעלי און 29
௨௯யெகோவாவின் வழி உத்தமர்களுக்குப் பாதுகாப்பு, அக்கிரமக்காரர்களுக்கோ கலக்கம்.
צדיק לעולם בל-ימוט ורשעים לא ישכנו-ארץ 30
௩0நீதிமான் என்றும் அசைக்கப்படுவதில்லை; துன்மார்க்கர்கள் பூமியில் வசிப்பதில்லை.
פי-צדיק ינוב חכמה ולשון תהפכות תכרת 31
௩௧நீதிமானுடைய வாய் ஞானத்தை வெளிப்படுத்தும்; மாறுபாடுள்ள நாவோ அறுப்புண்டுபோகும்.
שפתי צדיק ידעון רצון ופי רשעים תהפכות 32
௩௨நீதிமான்களுடைய உதடுகள் பிரியமானவைகளைப்பேச அறியும்; துன்மார்க்கர்களுடைய வாயோ மாறுபாடுள்ளது.

< מִשְׁלֵי 10 >