< איוב 6 >
לו--שקול ישקל כעשי והיתי (והותי) במאזנים ישאו-יחד | 2 |
௨“என் பிரச்சனைகளும், துன்பங்களும் தராசிலே வைக்கப்பட்டு நிறுக்கப்பட்டால், நலமாயிருக்கும்.
כי-עתה--מחול ימים יכבד על-כן דברי לעו | 3 |
௩அப்பொழுது அது கடற்கரை மணலைவிட பாரமாயிருக்கும்; ஆகையால் என் துக்கம் சொல்லிமுடியாது.
כי חצי שדי עמדי--אשר חמתם שתה רוחי בעותי אלוה יערכוני | 4 |
௪சர்வவல்லமையுள்ள தேவனின் அம்புகள் எனக்குள் தைத்திருக்கிறது; அவைகளின் விஷம் என் உயிரைக் குடிக்கிறது; தேவனால் உண்டாகும் பயங்கரங்கள் எனக்கு முன்பாக அணியணியாக நிற்கிறது.
הינהק-פרא עלי-דשא אם יגעה-שור על-בלילו | 5 |
௫புல் இருக்கிற இடத்திலே காட்டுக்கழுதை கத்துமோ? தனக்குத் தீவனமிருக்கிற இடத்திலே எருது கதறுமோ?
היאכל תפל מבלי-מלח אם-יש-טעם בריר חלמות | 6 |
௬ருசியில்லாத பதார்த்தத்தை உப்பில்லாமல் சாப்பிடமுடியுமோ? முட்டையின் வெள்ளைக்கருவில் சுவை உண்டோ?
מאנה לנגוע נפשי המה כדוי לחמי | 7 |
௭உங்கள் வார்த்தைகளை என் ஆத்துமா தொடமாட்டேன் என்கிறது; அவைகள் வெறுப்பான உணவுபோல இருக்கிறது.
מי-יתן תבוא שאלתי ותקותי יתן אלוה | 8 |
௮ஆ, என் மன்றாட்டு எனக்கு அருளப்பட்டு, நான் விரும்புவதை தேவன் எனக்குத் தந்து,
ויאל אלוה וידכאני יתר ידו ויבצעני | 9 |
௯தேவன் என்னை நொறுக்க விரும்பி, தம்முடைய கையை நீட்டி என்னை கொன்றுபோட்டால் நலமாயிருக்கும்.
ותהי-עוד נחמתי-- ואסלדה בחילה לא יחמול כי-לא כחדתי אמרי קדוש | 10 |
௧0அப்பொழுதாவது எனக்கு ஆறுதல் இருக்குமே; அப்பொழுது என்னை விட்டு நீங்காத வியாதியினால் உணர்வில்லாமல் இருப்பேன்; பரிசுத்தருடைய வார்த்தைகளை நான் மறைத்துவைக்கவில்லை, அவர் என்னைக் கைவிடமாட்டார்.
מה-כחי כי-איחל ומה-קצי כי-אאריך נפשי | 11 |
௧௧நான் காத்துக்கொண்டிருக்க என் பெலன் எம்மாத்திரம்? என் வாழ்நாள் நீடித்திருக்கச் செய்ய என் முடிவு எப்படிப்பட்டது?
אם-כח אבנים כחי אם-בשרי נחוש | 12 |
௧௨என் பெலன் கற்களின் பெலனோ? என் உடல் வெண்கலமோ?
האם אין עזרתי בי ותשיה נדחה ממני | 13 |
௧௩எனக்கு உதவியானது ஒன்றும் இல்லையல்லவோ? உதவி என்னைவிட்டு நீங்கிவிட்டதே.
למס מרעהו חסד ויראת שדי יעזוב | 14 |
௧௪உபத்திரவப்படுகிறவனுக்கு அவனுடைய நண்பரால் தயவு கிடைக்கவேண்டும்; அவனோ சர்வவல்லமையுள்ள தேவனுக்குப் பயப்படாமல் போகிறான்.
אחי בגדו כמו-נחל כאפיק נחלים יעברו | 15 |
௧௫என் சகோதரர் காட்டாறுபோல மோசம்செய்கிறார்கள்; ஆறுகளின் வெள்ளத்தைப்போலக் கடந்துபோகிறார்கள்.
הקדרים מני-קרח עלימו יתעלם-שלג | 16 |
௧௬அவைகள் குளிர்காலப் பனிக்கட்டியினாலும், அதில் விழுந்திருக்கிற உறைந்த மழையினாலும் கலங்கலாகி,
בעת יזרבו נצמתו בחמו נדעכו ממקומם | 17 |
௧௭வெப்பம் கண்டவுடனே உருகி வற்றி, சூடு பட்டவுடனே தங்கள் இடத்தில் உருகிப்போகின்றன.
ילפתו ארחות דרכם יעלו בתהו ויאבדו | 18 |
௧௮அவைகளுடைய வழிகளின் போக்குகள் இங்குமங்கும் பிரியும்; அவைகள் வீணாக பரவி ஒன்றுமில்லாமற்போகும்.
הביטו ארחות תמא הליכת שבא קוו-למו | 19 |
௧௯தேமாவின் பயணக்காரர் தேடி, சேபாவின் பயணக்கூட்டங்கள் அவைகள்மேல் நம்பிக்கை வைத்து,
בשו כי-בטח באו עדיה ויחפרו | 20 |
௨0தாங்கள் இப்படி நம்பினதினாலே வெட்கப்படுகிறார்கள்; அவ்விடம்வரை வந்து கலங்கிப்போகிறார்கள்.
כי-עתה הייתם לא תראו חתת ותיראו | 21 |
௨௧அப்படியே நீங்களும் இப்பொழுது ஒன்றுக்கும் உதவாமற்போனீர்கள்; என் ஆபத்தைக் கண்டு பயப்படுகிறீர்கள்.
הכי-אמרתי הבו לי ומכחכם שחדו בעדי | 22 |
௨௨எனக்கு ஏதாகிலும் கொண்டு வாருங்கள் என்றும், உங்கள் செல்வத்திலிருந்து எனக்கு ஏதாவது பணம் கொடுங்கள் என்றும்;
ומלטוני מיד-צר ומיד עריצים תפדוני | 23 |
௨௩அல்லது சத்துருவின் கைக்கு என்னை காப்பாற்றுங்கள், கொடியவரின் கைக்கு என்னை தப்புவித்து காப்பாற்றிவிடுங்கள் என்றும் நான் சொன்னதுண்டோ?
הורוני ואני אחריש ומה-שגיתי הבינו לי | 24 |
௨௪எனக்கு பதில் சொல்லுங்கள், நான் மவுனமாயிருப்பேன்; நான் எதிலே தவறுசெய்தேனோ அதை எனக்குத் தெரியப்படுத்துங்கள்.
מה-נמרצו אמרי-ישר ומה-יוכיח הוכח מכם | 25 |
௨௫உண்மையான வார்த்தைகளில் எவ்வளவு வல்லமை உண்டு? உங்கள் கடிந்துகொள்ளுதலினால் காரியம் என்ன?
הלהוכח מלים תחשבו ולרוח אמרי נואש | 26 |
௨௬கடிந்துகொள்ள நீங்கள் வார்த்தைகளை யோசித்து, நம்பிக்கையற்றவனுடைய வார்த்தைகளைக் காற்றிலே விட்டுவிடுகிறீர்களோ?
אף-על-יתום תפילו ותכרו על-ריעכם | 27 |
௨௭இப்படிச் செய்து திக்கற்றவன்மேல் நீங்கள் விழுந்து, உங்கள் நண்பனுக்குப் படுகுழியை வெட்டுகிறீர்கள்.
ועתה הואילו פנו-בי ועל-פניכם אם-אכזב | 28 |
௨௮இப்போதும் உங்களுக்கு விருப்பமானால் என்னை நோக்கிப் பாருங்கள்; அப்பொழுது நான் பொய்சொல்லுகிறேனோ என்று உங்களுக்கு வெளிப்படையாகத் தெரியும்.
שובו-נא אל-תהי עולה ושבי (ושבו) עוד צדקי-בה | 29 |
௨௯நீங்கள் திரும்ப யோசித்து பாருங்கள்; அநீதி காணப்படாதிருக்கும்; திரும்ப சிந்தியுங்கள் என் நீதி அதிலே வெளிப்படும்.
היש-בלשוני עולה אם-חכי לא-יבין הוות | 30 |
௩0என் நாவிலே அநீதி உண்டோ? என் வாய் ஆகாதவைகளைப் பகுத்தறியாதோ?