< איוב 6 >
לו--שקול ישקל כעשי והיתי (והותי) במאזנים ישאו-יחד | 2 |
“என் பிரச்சனைகளும், துன்பங்களும் தராசிலே வைக்கப்பட்டு நிறுக்கப்பட்டால் நலமாயிருக்கும்!
כי-עתה--מחול ימים יכבד על-כן דברי לעו | 3 |
அவை கடற்கரை மணலைவிட பாரமாயிருக்கும்; ஆகவே எனது வார்த்தைகள் மூர்க்கமாய் இருப்பது ஆச்சரியமல்லவே.
כי חצי שדי עמדי--אשר חמתם שתה רוחי בעותי אלוה יערכוני | 4 |
எல்லாம் வல்லவரின் அம்புகள் என்னில் பாய்ந்திருக்கின்றன, என் ஆவி அவைகளின் நஞ்சைக் குடிக்கிறது; இறைவனின் பயங்கரங்கள் எனக்கெதிராய் அணிவகுத்து நிற்கின்றன.
הינהק-פרא עלי-דשא אם יגעה-שור על-בלילו | 5 |
தனக்குப் புல் இருக்கும்போது காட்டுக் கழுதை கத்துமோ? தீனி இருக்கும்போது எருது கதறுமோ?
היאכל תפל מבלי-מלח אם-יש-טעם בריר חלמות | 6 |
சுவையில்லாத உணவு உப்பின்றி சாப்பிடப்படுமோ? முட்டையின் வெள்ளைக்கருவில் ஏதேனும் சுவை உண்டோ?
מאנה לנגוע נפשי המה כדוי לחמי | 7 |
இப்படியான உணவு என்னை நோயாளியாக்குகிறது; நான் அதைத் தொட மறுக்கிறேன்.
מי-יתן תבוא שאלתי ותקותי יתן אלוה | 8 |
“நான் வேண்டிக்கொள்வதையும், நான் நம்பி எதிர்பார்ப்பதையும் இறைவன் எனக்குக் கொடுக்கட்டும்.
ויאל אלוה וידכאני יתר ידו ויבצעני | 9 |
இறைவன் என்னை நசுக்க உடன்படட்டும், தன் கையை நீட்டி என்னை வெட்டிப்போடட்டும்!
ותהי-עוד נחמתי-- ואסלדה בחילה לא יחמול כי-לא כחדתי אמרי קדוש | 10 |
இந்த ஆறுதல் எனக்கு இன்னும் இருக்கும்; எனது முடிவில்லாத வேதனையிலும் பரிசுத்தரின் வார்த்தைகளை நான் மறுக்கவில்லை.
מה-כחי כי-איחל ומה-קצי כי-אאריך נפשי | 11 |
“நான் இன்னும் எதிர்பார்ப்புடன் இருக்க எனக்கு என்ன பெலன் இருக்கிறது? நான் இன்னும் பொறுமையாய் இருக்க என் முடிவு என்ன?
אם-כח אבנים כחי אם-בשרי נחוש | 12 |
ஒரு கல்லின் பெலன் எனக்கு உண்டோ? எனது சதை வெண்கலமோ?
האם אין עזרתי בי ותשיה נדחה ממני | 13 |
எனக்கே நான் உதவிசெய்யத்தக்க வல்லமை என்னில் உண்டோ? வெற்றிக்கான ஆதாரம் என்னைவிட்டு நீங்கிற்று.
למס מרעהו חסד ויראת שדי יעזוב | 14 |
“எதிர்பார்ப்பில்லாதவன், எல்லாம் வல்லவரைப் பற்றிய பயத்தைக் கைவிட்ட போதிலும், அவனுக்கு அவனுடைய நண்பர்களின் தயவு இருக்கவேண்டும்.
אחי בגדו כמו-נחל כאפיק נחלים יעברו | 15 |
ஆனால் என் சகோதரர்களோ, விட்டுவிட்டு பொங்கி ஓடும் பருவகால நீரோடைகளைப்போல, நம்பத்தகாதவர்களாய் இருக்கிறார்கள்.
הקדרים מני-קרח עלימו יתעלם-שלג | 16 |
அவைகள் குளிர்காலப் பனிக்கட்டியினாலும், அதில் விழுந்திருக்கிற உறைந்த மழையினாலும் வழிந்தோடும்.
בעת יזרבו נצמתו בחמו נדעכו ממקומם | 17 |
ஆனால் வெப்பக் காலத்தில் வற்றி, வெயிலில் கால்வாய்களிலிருந்து மறைந்துபோகின்றன.
ילפתו ארחות דרכם יעלו בתהו ויאבדו | 18 |
வியாபாரிகளின் கூட்டம் நீரோடையைத் தேடி; பாதையைவிட்டு விலகி பாழ்நிலங்களுக்குச் சென்று அழிகின்றன.
הביטו ארחות תמא הליכת שבא קוו-למו | 19 |
தேமாவின் வியாபாரிகளும், சேபாவின் வியாபாரிகளும் தண்ணீரைத் தேடி நம்பிக்கையுடன் எதிர்பார்க்கிறார்கள்.
בשו כי-בטח באו עדיה ויחפרו | 20 |
அவர்கள் நம்பிக்கையுடன் போனதால் வருத்தப்படுகிறார்கள்; அவ்விடத்தைச் சேர்ந்ததும் ஏமாற்றமடைகிறார்கள்.
כי-עתה הייתם לא תראו חתת ותיראו | 21 |
இப்பொழுது நீங்களும் அப்படியே எனக்கு உதவாமல் போனீர்கள்; என் ஆபத்தைக் கண்டு பயப்படுகிறீர்கள்.
הכי-אמרתי הבו לי ומכחכם שחדו בעדי | 22 |
நான், ‘எனக்காக எதையாவது கொடுங்கள் என்றோ, உங்கள் செல்வத்தினால் என்னை மீட்டுக்கொள்ளுங்கள் என்றோ,
ומלטוני מיד-צר ומיד עריצים תפדוני | 23 |
என் பகைவரின் கைகளிலிருந்து என்னை விடுவியுங்கள் என்றோ, கொடியவர்களின் பிடியிலிருந்து என்னை மீட்டு விடுங்கள்’ என்றோ நான் சொன்னதுண்டா?
הורוני ואני אחריש ומה-שגיתי הבינו לי | 24 |
“எனக்கு போதியுங்கள்; நான் மவுனமாய் இருப்பேன்; நான் எதிலே தவறு செய்தேனோ அதை எனக்குக் காட்டுங்கள்.
מה-נמרצו אמרי-ישר ומה-יוכיח הוכח מכם | 25 |
நேர்மையான வார்த்தைகள் எவ்வளவு வேதனையாக இருக்கின்றன! ஆனால் உங்கள் விவாதங்கள் எதை நிரூபிக்கின்றன?
הלהוכח מלים תחשבו ולרוח אמרי נואש | 26 |
நான் சொன்னவற்றைத் திருத்த எண்ணுகிறீர்களோ? மனச்சோர்வுற்ற மனிதரின் வார்த்தைகளை வெறும் காற்றாக மதிக்கிறீர்களோ?
אף-על-יתום תפילו ותכרו על-ריעכם | 27 |
அநாதைகளுக்கு எதிராகக்கூட நீங்கள் சீட்டுப்போடுவீர்கள்; உங்கள் நண்பர்களை விற்பதற்கும் பேரம் பேசுவீர்கள்.
ועתה הואילו פנו-בי ועל-פניכם אם-אכזב | 28 |
“ஆனால் இப்பொழுதோ தயவாக என்னைப் பாருங்கள். உங்கள் முகத்துக்கு முன்பாக நான் பொய் சொல்வேனா?
שובו-נא אל-תהי עולה ושבי (ושבו) עוד צדקי-בה | 29 |
போதும் விட்டுவிடுங்கள், அநியாயஞ்செய்ய வேண்டாம்; பொறுங்கள், நீதி இன்னும் என் பக்கமிருக்கிறது.
היש-בלשוני עולה אם-חכי לא-יבין הוות | 30 |
என் உதடுகளில் அநீதி உண்டோ? என் வாய் வஞ்சகத்தை நிதானித்து அறியாதோ?