< איוב 41 >
תמשך לויתן בחכה ובחבל תשקיע לשנו | 1 |
௧“லிவியாதானை தூண்டிலைக்கொண்டு பிடிக்கமுடியுமோ? அதின் நாக்கை நீ விடுகிற கயிற்றினாலே பிடிக்கமுடியுமோ?
התשים אגמן באפו ובחוח תקב לחיו | 2 |
௨அதின் மூக்கை நார்க்கயிறு போட்டுக் கட்டமுடியுமோ? குறட்டினால் அதின் தாடையை உருவக் குத்தமுடியுமோ?
הירבה אליך תחנונים אם-ידבר אליך רכות | 3 |
௩அது உன்னைப் பார்த்து அநேக விண்ணப்பம் செய்யுமோ? உன்னை நோக்கி ஆசைவார்த்தைகளைச் சொல்லுமோ?
היכרת ברית עמך תקחנו לעבד עולם | 4 |
௪அது உன்னுடன் உடன்படிக்கை செய்யுமோ? அதை எல்லா நாட்களும் அடிமைப்படுத்துவாயோ?
התשחק-בו כצפור ותקשרנו לנערותיך | 5 |
௫ஒரு குருவியுடன் விளையாடுகிறதுபோல், நீ அதனுடன் விளையாடி, அதை நீ உன் பெண்களுக்கு அருகில் கட்டிவைப்பாயோ?
יכרו עליו חברים יחצוהו בין כנענים | 6 |
௬மீனவர்கள் அதைப் பிடிக்க முயற்சி செய்து, அதை வியாபாரிகளுக்குப் பங்கிடுவார்களோ?
התמלא בשכות עורו ובצלצל דגים ראשו | 7 |
௭நீ அதின் தோலை அநேக அம்புகளினாலும், அதின் தலையை எறிவல்லையங்களினாலும் எறிவாயோ?
שים-עליו כפך זכר מלחמה אל-תוסף | 8 |
௮அதின்மேல் உன் கையைப்போடு, யுத்தத்தை நினைத்துக்கொள்; இனி அப்படிச் செய்யத் துணியமாட்டாய்.
הן-תחלתו נכזבה הגם אל-מראיו יטל | 9 |
௯இதோ, அதைப் பிடிக்கலாம் என்று நம்பினவன் மோசம்போய், அதைப் பார்த்தவுடனே விழுவான் அல்லவோ?
לא-אכזר כי יעורנו ומי הוא לפני יתיצב | 10 |
௧0அதை எழுப்பக்கூடிய தைரியவான் இல்லாதிருக்க, எனக்கு முன்பாக நிற்பவன் யார்?
מי הקדימני ואשלם תחת כל-השמים לי-הוא | 11 |
௧௧தனக்குப் பதில்கொடுக்கப்படும்படி, முந்தி எனக்குக் கொடுத்தவன் யார்? வானத்தின் கீழுள்ளவைகள் எல்லாம் என்னுடையவைகள்.
לא- (לו-) אחריש בדיו ודבר-גבורות וחין ערכו | 12 |
௧௨அதின் உறுப்புகளும், அதின் வீரியமும், அதின் உடல் இசைவின் அழகும் இன்னதென்று நான் சொல்லாமல் மறைக்கமாட்டேன்.
מי-גלה פני לבושו בכפל רסנו מי יבוא | 13 |
௧௩அது மூடியிருக்கிற அதின் போர்வையைக் எடுக்கக்கூடியவன் யார்? அதின் இரண்டு தாடைகளின் நடுவே கடிவாளம் போடத்தக்கவன் யார்?
דלתי פניו מי פתח סביבות שניו אימה | 14 |
௧௪அதின் முகத்தின் கதவைத் திறக்கக்கூடியவன் யார்? சுற்றிலுமிருக்கிற அதின் பற்கள் பயங்கரமானவைகள்.
גאוה אפיקי מגנים סגור חותם צר | 15 |
௧௫முத்திரைப் பதிப்புபோல அழுத்தங்கொண்டு அடர்த்தியாயிருக்கிற அதின் கேடகங்களின் அமைப்பு மகா சிறப்பாயிருக்கிறது.
אחד באחד יגשו ורוח לא-יבא ביניהם | 16 |
௧௬அவைகள் நடுவே காற்றும் நுழையமுடியாமல் நெருக்கமாக அவைகள் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டிருக்கிறது.
איש-באחיהו ידבקו יתלכדו ולא יתפרדו | 17 |
௧௭அவைகள் ஒன்றோடொன்று ஒட்டிக்கொண்டு இணைபிரியாமல் பிடித்துக்கொண்டிருக்கிறது.
עטישתיו תהל אור ועיניו כעפעפי-שחר | 18 |
௧௮அது தும்மும்போது ஒளி வீசும், அதின் கண்கள் சூரியஉதயத்தின் புருவங்களைப்போல இருக்கிறது.
מפיו לפידים יהלכו כידודי אש יתמלטו | 19 |
௧௯அதின் வாயிலிருந்து எரிகிற பந்தங்கள் புறப்பட்டு, நெருப்புப்பொறிகள் பறக்கும்.
מנחיריו יצא עשן-- כדוד נפוח ואגמן | 20 |
௨0கொதிக்கிற சட்டியிலும் கொப்பரையிலும் இருந்து புறப்படுகிறதுபோல, அதின் மூக்கிலிருந்து புகை புறப்படும்.
נפשו גחלים תלהט ולהב מפיו יצא | 21 |
௨௧அதின் சுவாசம் கரிகளைக் கொளுத்தும், அதின் வாயிலிருந்து தணல் புறப்படும்.
בצוארו ילין עז ולפניו תדוץ דאבה | 22 |
௨௨அதின் கழுத்திலே பெலன் குடிகொண்டிருக்கும்; பயங்கரம் அதற்குமுன் நடனமாடும்.
מפלי בשרו דבקו יצוק עליו בל-ימוט | 23 |
௨௩அதின் உடல் அடுக்குகள், அசையாத கெட்டியாக ஒன்றோடொன்று ஒட்டிக்கொண்டிருக்கும்.
לבו יצוק כמו-אבן ויצוק כפלח תחתית | 24 |
௨௪அதின் நெஞ்சு கல்லைப்போலவும், எந்திரத்தின் அடிக்கல்லைப்போலவும் கெட்டியாயிருக்கும்.
משתו יגורו אלים משברים יתחטאו | 25 |
௨௫அது எழும்பும்போது பலசாலிகள் பயத்தினால் மயங்கித் திகைப்பார்கள்.
משיגהו חרב בלי תקום חנית מסע ושריה | 26 |
௨௬அதைத் தாக்குகிறவனுடைய பட்டயம், ஈட்டி, வல்லையம், கவசம், ஒன்றும் அதற்குமுன் நிற்காது.
יחשב לתבן ברזל לעץ רקבון נחושה | 27 |
௨௭அது இரும்பை வைக்கோலாகவும், வெண்கலத்தை உளுத்த மரமாகவும் நினைக்கும்.
לא-יבריחנו בן-קשת לקש נהפכו-לו אבני-קלע | 28 |
௨௮அம்பு அதைத் துரத்தாது; கவண்கற்கள் அதற்குத் துரும்பாகும்.
כקש נחשבו תותח וישחק לרעש כידון | 29 |
௨௯அது பெருந்தடிகளை வைக்கோல்களாக எண்ணி, ஈட்டியின் அசைவை இகழும்.
תחתיו חדודי חרש ירפד חרוץ עלי-טיט | 30 |
௩0அதின் கீழாகக் கூர்மையான கற்கள் கிடந்தாலும், அது சேற்றின்மேல் ஓடுகிறதுபோல கூர்மையான அவைகளின்மேலும் ஓடும்.
ירתיח כסיר מצולה ים ישים כמרקחה | 31 |
௩௧அது ஆழத்தை உலைப்பானையைப்போல் பொங்கச்செய்து, கடலைத் தைலம்போலக் கலக்கிவிடும்.
אחריו יאיר נתיב יחשב תהום לשיבה | 32 |
௩௨அது தனக்குப் பின்னாகப் பாதையை மின்னச்செய்யும்; ஆழமானது வெளுப்பான நரையைப்போல் தோன்றும்.
אין-על-עפר משלו העשו לבלי-חת | 33 |
௩௩பூமியின்மேல் அதற்கு ஒப்பானது ஒன்றுமில்லை; அது பயப்படும்விதமாக உண்டாக்கப்பட்டது.
את-כל-גבה יראה הוא מלך על-כל-בני-שחץ | 34 |
௩௪அது மேட்டிமையானதையெல்லாம் அற்பமாக நினைக்கிறது; அது அகங்காரமுள்ள உயிரினங்களுக்கெல்லாம் ராஜாவாக இருக்கிறது” என்றார்.