< איוב 28 >
כי יש לכסף מוצא ומקום לזהב יזקו | 1 |
௧வெள்ளிக்கு விளையும் இடம் உண்டு, பொன்னுக்குப் புடமிடும் இடமுமுண்டு.
ברזל מעפר יקח ואבן יצוק נחושה | 2 |
௨இரும்பு மண்ணிலிருந்து எடுக்கப்படும்; செம்பு கற்களில் உருக்கி எடுக்கப்படும்.
קץ שם לחשך ולכל-תכלית הוא חוקר אבן אפל וצלמות | 3 |
௩மனிதன் அந்தகாரத்திலும் மரண இருளிலும் இருக்கிற கற்களைக் கடைசிவரை ஆராய்ந்து தேடி, இருளுக்கும் அங்கே முடிவுண்டாக்குகிறான்.
פרץ נחל מעם-גר--הנשכחים מני-רגל דלו מאנוש נעו | 4 |
௪கடக்கமுடியாததும் நிலையாததுமான ஆறு எழும்பினாலும், உழைப்பாளியானவன் அதை மனிதரால் வற்றிப்போகவைத்துச் செல்லுகிறான்.
ארץ--ממנה יצא-לחם ותחתיה נהפך כמו-אש | 5 |
௫பூமியின்மேல் ஆகாரம் விளையும்; அதின் கீழிடங்களிலிருக்கிறவைகளோ, நெருப்பால் மாறினது போலிருக்கும்.
מקום-ספיר אבניה ועפרת זהב לו | 6 |
௬அதின் கற்களில் இந்திரநீலம் விளையும்; அதின் பொடியில் பொன்பொடிகளும் உண்டாயிருக்கும்.
נתיב לא-ידעו עיט ולא שזפתו עין איה | 7 |
௭ஒரு வழியுண்டு, அது ஒரு பறவைக்கும் தெரியாது; கழுகின் கண்ணும் அதைக் கண்டதில்லை;
לא-הדריכוהו בני-שחץ לא-עדה עליו שחל | 8 |
௮கொடிய மிருகங்களின் கால்கள் அதில் படவில்லை; சிங்கம் அதைக் கடந்ததில்லை.
בחלמיש שלח ידו הפך משרש הרים | 9 |
௯அவன் தன் கைகளைக் கற்பாறையின்மேல் நீட்டி, மலைகளை வேருடன் புரட்டுகிறான்.
בצורות יארים בקע וכל-יקר ראתה עינו | 10 |
௧0கன்மலைகளுக்குள்ளும் நீர்க்கால்களை வெட்டுகிறான்; அவனுடைய கண் விலையுயர்ந்த எல்லாவற்றையும் காணும்.
מבכי נהרות חבש ותעלמה יצא אור | 11 |
௧௧ஒரு துளியும் கசியாதபடி ஆறுகளை அடைக்கிறான்; மறைவிடத்திலிருக்கிறதை வெளிச்சத்திலே கொண்டுவருகிறான்.
והחכמה מאין תמצא ואי זה מקום בינה | 12 |
௧௨ஆனாலும் ஞானம் கண்டெடுக்கப்படுவது எங்கே? புத்தி விளைகிற இடம் எது?
לא-ידע אנוש ערכה ולא תמצא בארץ החיים | 13 |
௧௩அதின் விலை மனிதனுக்குத் தெரியாது; அது மக்கள் வாழ்கிற தேசத்திலே கிடைக்கிறதில்லை.
תהום אמר לא בי-היא וים אמר אין עמדי | 14 |
௧௪ஆழமானது: அது என்னிடத்தில் இல்லையென்கிறது; சமுத்திரமானதும், அது என்னிடத்தில் இல்லையென்கிறது.
לא-יתן סגור תחתיה ולא ישקל כסף מחירה | 15 |
௧௫அதற்கு ஈடாகத் தங்கத்தைக் கொடுக்கவும், அதற்குக் கிரயமாக வெள்ளியை நிறுக்கவும் முடியாது.
לא-תסלה בכתם אופיר בשהם יקר וספיר | 16 |
௧௬ஓப்பீரின் தங்கமும், விலையேறப்பெற்ற கோமேதகமும், இந்திரநீலக்கல்லும் அதற்கு ஈடல்ல.
לא-יערכנה זהב וזכוכית ותמורתה כלי-פז | 17 |
௧௭பொன்னும் பளிங்கும் அதற்கு ஒப்பல்ல; பசும்பொன் ஆபரணங்களுக்கு அதை மாற்றமுடியாது.
ראמות וגביש לא יזכר ומשך חכמה מפנינים | 18 |
௧௮பவளத்தையும் ஸ்படிகத்தையும் அத்துடன் ஒப்பிட்டுப் பேசக்கூடாது; முத்துகளைவிட ஞானத்தின் விலை உயர்ந்தது.
לא-יערכנה פטדת-כוש בכתם טהור לא תסלה | 19 |
௧௯எத்தியோப்பியாவின் புஷ்பராகம் அதற்கு நிகரல்ல; பசும்பொன்னும் அதற்குச் சரியல்ல.
והחכמה מאין תבוא ואי זה מקום בינה | 20 |
௨0இப்படியிருக்க, ஞானம் எங்கேயிருந்து வரும்; புத்தி தங்கும் இடம் எங்கே?
ונעלמה מעיני כל-חי ומעוף השמים נסתרה | 21 |
௨௧அது உயிருள்ள அனைவருடைய கண்களுக்கும் ஒளித்தும், ஆகாயத்துப் பறவைகளுக்கு மறைந்தும் இருக்கிறது.
אבדון ומות אמרו באזנינו שמענו שמעה | 22 |
௨௨நாசமும், மரணமும், நாங்கள் எங்கள் காதுகளினாலேமாத்திரம் அதின் கீர்த்தியைக் கேட்டோம் என்கிறது.
אלהים הבין דרכה והוא ידע את-מקומה | 23 |
௨௩தேவனோ அதின் வழியை அறிவார், அது இருக்கும் இடம் அவருக்கே தெரியும்.
כי-הוא לקצות-הארץ יביט תחת כל-השמים יראה | 24 |
௨௪அவர் பூமியின் கடைசிமுனைகளைப் பார்த்து, வானங்களின்கீழ் இருக்கிறதையெல்லாம் காண்கிறார்.
לעשות לרוח משקל ומים תכן במדה | 25 |
௨௫அவர் காற்றுக்கு அதின் எடையை நியமித்து, தண்ணீருக்கு அதின் அளவைக் கணக்கிட்டு,
בעשתו למטר חק ודרך לחזיז קלות | 26 |
௨௬மழைக்குத் திட்டத்தையும், இடிமுழக்கத்துடன் கூடிய மின்னலுக்கு வழியையும் ஏற்படுத்துகிறார்.
אז ראה ויספרה הכינה וגם-חקרה | 27 |
௨௭அவர் அதைப் பார்த்துக் கணக்கிட்டார்; அதை ஆராய்ந்து ஆயத்தப்படுத்தி,
ויאמר לאדם--הן יראת אדני היא חכמה וסור מרע בינה | 28 |
௨௮மனிதனை நோக்கி: இதோ, ஆண்டவருக்குப் பயப்படுவதே ஞானம்; பொல்லாப்பை விட்டு விலகுவதே புத்தி என்றார்” என்று சொன்னான்.