< איוב 28 >
כי יש לכסף מוצא ומקום לזהב יזקו | 1 |
வெள்ளிக்குச் சுரங்கமும் தங்கத்திற்கு சுத்திகரிக்கும் இடமும் உண்டு.
ברזל מעפר יקח ואבן יצוק נחושה | 2 |
இரும்பு பூமியிலிருந்து எடுக்கப்படுகிறது, செம்பு கற்களில் உருக்கி எடுக்கப்படுகிறது.
קץ שם לחשך ולכל-תכלית הוא חוקר אבן אפל וצלמות | 3 |
மனிதன் இருளுக்கு முடிவுண்டாக்கி, உலோக மூலப்பொருட்களைக் காரிருளிலும் ஆழமான குழிகளிலும் தேடுகிறான்.
פרץ נחל מעם-גר--הנשכחים מני-רגל דלו מאנוש נעו | 4 |
அவன் மிகத் தொலைவில் சுரங்க வாசலை வெட்டுகிறான், காலடிகளே படாத, மனித நடமாட்டம் இல்லாத ஆழத்தில் ஊசலாடித் தொங்குகிறான்.
ארץ--ממנה יצא-לחם ותחתיה נהפך כמו-אש | 5 |
உணவு கொடுக்கும் பூமி அதின் கீழ்ப்பகுதியிலுள்ளவை நெருப்பினால் உருமாறுகிறது.
מקום-ספיר אבניה ועפרת זהב לו | 6 |
அதின் பாறைகளிலிருந்து நீலக்கற்கள் விளைகின்றன, அதின் தூசி தங்கத்துகள்களை உடையதாயிருக்கின்றது.
נתיב לא-ידעו עיט ולא שזפתו עין איה | 7 |
இரைதேடும் ஒரு பறவைகூட அந்த மறைவான பாதையை அறியாது; பருந்தின் கண்ணும் அதைக் காண்பதில்லை.
לא-הדריכוהו בני-שחץ לא-עדה עליו שחל | 8 |
கொடிய மிருகங்கள் அங்கு அடியெடுத்து வைப்பதுமில்லை; சிங்கம் அங்கு திரிவதுமில்லை.
בחלמיש שלח ידו הפך משרש הרים | 9 |
மனிதனின் கையே கடினமான பாறையைத் தாக்கி, மலைகளின் அடிவாரங்களை வேரோடே புரட்டுகிறான்.
בצורות יארים בקע וכל-יקר ראתה עינו | 10 |
அவன் கன்மலையில் வாய்க்கால்களை வெட்டுகிறான்; அவனுடைய கண்கள் அதின் பொக்கிஷங்களையெல்லாம் காண்கின்றன.
מבכי נהרות חבש ותעלמה יצא אור | 11 |
ஆறுகளின் உற்பத்தியிடங்களை ஆராய்ந்து, மறைந்திருக்கும் பொருட்களை வெளிச்சத்திற்குக் கொண்டுவருகிறான்.
והחכמה מאין תמצא ואי זה מקום בינה | 12 |
ஆனால் ஞானம் காணப்படுவது எங்கே? விளங்கும் ஆற்றல் குடியிருப்பது எங்கே?
לא-ידע אנוש ערכה ולא תמצא בארץ החיים | 13 |
மனிதன் அதின் மதிப்பைப் புரிந்துகொள்வதில்லை; உயிர்வாழ்வோரின் நாட்டில் அதைக் காணமுடியாது.
תהום אמר לא בי-היא וים אמר אין עמדי | 14 |
“அது என்னிடம் இல்லை” என ஆழம் சொல்கிறது; “அது என்னுடன் இல்லை” என கடலும் கூறுகிறது.
לא-יתן סגור תחתיה ולא ישקל כסף מחירה | 15 |
சுத்தத் தங்கத்தைக் கொடுத்து, அதை வாங்கமுடியாது, அதின் மதிப்பை வெள்ளியால் நிறுக்கவும் முடியாது.
לא-תסלה בכתם אופיר בשהם יקר וספיר | 16 |
ஓப்பீரின் தங்கமும், விலையேறப்பெற்ற கோமேதகமும், இந்திர நீலக்கல்லும் அதற்கு ஈடல்ல.
לא-יערכנה זהב וזכוכית ותמורתה כלי-פז | 17 |
பொன்னும் பளிங்கும் அதற்கு இணையாகாது, தங்க நகைகளைக் கொடுத்தும் அதைப் பெற்றுக்கொள்ள முடியாது.
ראמות וגביש לא יזכר ומשך חכמה מפנינים | 18 |
பவளத்தையும் மரகதத்தையும் ஒரு பொருட்டாக எண்ண முடியாது; ஞானத்தின் விலை மாணிக்கக் கற்களைவிட உயர்வானது.
לא-יערכנה פטדת-כוש בכתם טהור לא תסלה | 19 |
எத்தியோப்பியாவின் புஷ்பராகம் அதற்கு நிகரல்ல; சுத்தப் பொன்னால் அதை வாங்கமுடியாது.
והחכמה מאין תבוא ואי זה מקום בינה | 20 |
அப்படியானால் ஞானம் எங்கிருந்து வருகிறது? விளங்கும் ஆற்றல் எங்கே குடியிருக்கிறது?
ונעלמה מעיני כל-חי ומעוף השמים נסתרה | 21 |
அது உயிருள்ள அனைவருக்கும், ஆகாயத்துப் பறவைகளுக்குங்கூட மறைக்கப்பட்டும் இருக்கிறது.
אבדון ומות אמרו באזנינו שמענו שמעה | 22 |
“இதைப் பற்றிய வதந்தி மட்டுமே எங்கள் காதுகளுக்கு எட்டின” என்று அழிவும் சாவும் சொல்கின்றன.
אלהים הבין דרכה והוא ידע את-מקומה | 23 |
அதின் வழி இறைவனுக்குத் தெரியும்; அதின் குடியிருப்பை அவர் மட்டுமே அறிவார்.
כי-הוא לקצות-הארץ יביט תחת כל-השמים יראה | 24 |
ஏனெனில் பூமியின் கடைமுனைகளை அவர் பார்க்கிறார், வானத்தின் கீழுள்ள ஒவ்வொன்றையும் அவர் காண்கிறார்.
לעשות לרוח משקל ומים תכן במדה | 25 |
அவர் காற்றின் பலத்தை நிலைநாட்டி, தண்ணீர்களை அளந்தபோதும்,
בעשתו למטר חק ודרך לחזיז קלות | 26 |
மழைக்கு ஒரு நியமத்தை விதித்தபோதும், இடிமுழக்கத்தோடு கூடிய மின்னலுக்கு ஒரு பாதையை வகுத்தபோதும்,
אז ראה ויספרה הכינה וגם-חקרה | 27 |
அவர் ஞானத்தைப் பார்த்து மதிப்பிட்டார்; அதை உறுதிப்படுத்தி சோதித்தறிந்தார்.
ויאמר לאדם--הן יראת אדני היא חכמה וסור מרע בינה | 28 |
இறைவன் மனிதனிடம், “யெகோவாவுக்கு பயந்து நடத்தலே ஞானம், தீமைக்கு விலகி நடப்பதே விளங்கும் ஆற்றல்” என்று சொன்னார்.