< איוב 27 >
ויסף איוב שאת משלו ויאמר | 1 |
யோபு மேலும் தன் பேச்சைத் தொடர்ந்து சொன்னதாவது:
חי-אל הסיר משפטי ושדי המר נפשי | 2 |
“எனக்கு நீதியை மறுத்து, வாழ்வைக் கசப்பாக்கின எல்லாம் வல்ல இறைவன் வாழ்வது நிச்சயம்போலவே,
כי-כל-עוד נשמתי בי ורוח אלוה באפי | 3 |
எனக்குள் என் உயிரும், என் மூக்கில் இறைவனின் சுவாசமும் இருக்கும்வரை,
אם-תדברנה שפתי עולה ולשוני אם-יהגה רמיה | 4 |
என் உதடுகள் கொடுமையானதைப் பேசாது, என் நாவு வஞ்சகமானவற்றைச் சொல்லாது.
חלילה לי אם-אצדיק אתכם עד-אגוע-- לא-אסיר תמתי ממני | 5 |
நீங்கள் சொல்வது சரி என நான் ஒருபோதும் ஒத்துக்கொள்ளமாட்டேன்; நான் சாகும்வரை என் உத்தமத்தை மறுக்கவுமாட்டேன்.
בצדקתי החזקתי ולא ארפה לא-יחרף לבבי מימי | 6 |
என் நேர்மையை நான் காத்துக்கொள்வேன், அதை நான் ஒருபோதும் விடமாட்டேன்; நான் உயிரோடிருக்குமட்டும் என் மனசாட்சி என்னைக் கடிந்துகொள்ளாது.
יהי כרשע איבי ומתקוממי כעול | 7 |
“என் பகைவர் கொடியவர்களைப்போல் இருக்கட்டும், என் விரோதி அநீதியுள்ளவர்களைப்போல் இருக்கட்டும்.
כי מה-תקות חנף כי יבצע כי ישל אלוה נפשו | 8 |
இறைவனை மறுதலிக்கிறவன் வெட்டுண்டுபோய், இறைவன் அவனுடைய உயிரை எடுத்துக்கொள்ளும்போது, அவனுடைய நம்பிக்கை என்ன?
הצעקתו ישמע אל-- כי-תבוא עליו צרה | 9 |
அவனுக்குத் துன்பம் வரும்போது இறைவன் அவனுடைய கதறலைக் கேட்பாரோ?
אם-על-שדי יתענג יקרא אלוה בכל-עת | 10 |
எல்லாம் வல்லவரில் அவன் மகிழ்ச்சியடைவானோ? எல்லா நேரங்களிலும் அவன் இறைவனைக் கூப்பிடுவானோ?
אורה אתכם ביד-אל אשר עם-שדי לא אכחד | 11 |
“இறைவனின் வல்லமையைக் குறித்து நான் உங்களுக்குப் போதிப்பேன்; எல்லாம் வல்லவரின் வழிகளை நான் மறைக்கமாட்டேன்.
הן-אתם כלכם חזיתם ולמה-זה הבל תהבלו | 12 |
இவற்றையெல்லாம் நீங்கள் பார்த்திருந்தும் ஏன் இந்த வீண்பேச்சு?
זה חלק-אדם רשע עם-אל ונחלת עריצים משדי יקחו | 13 |
“கொடியவனுக்கு இறைவனிடத்திலிருந்து கிடைக்கும் பங்கும், தீயவன் எல்லாம் வல்ல இறைவனிடமிருந்து பெறும் உரிமைச்சொத்தும் இதுவே:
אם-ירבו בניו למו-חרב וצאצאיו לא ישבעו-לחם | 14 |
அவனுக்கு பிள்ளைகள் அநேகர் இருப்பார்கள், ஆனால் அவர்கள் வாளுக்கு இரையாவார்கள்; அவனுடைய சந்ததியினருக்கு ஒருபோதும் போதியளவு உணவு கிடைக்காது.
שרידיו במות יקברו ואלמנתיו לא תבכינה | 15 |
அவனுக்கு மீதியானவர்கள் கொள்ளைநோய்க்குப் பலியாகும்போது, அவர்களுடைய விதவைகள் அழமாட்டார்கள்.
אם-יצבר כעפר כסף וכחמר יכין מלבוש | 16 |
அவன் வெள்ளியைப் தூசியைப்போலவும், உடைகளைக் களிமண் குவியலைப் போலவும் குவித்து வைத்தாலும்,
יכין וצדיק ילבש וכסף נקי יחלק | 17 |
அவன் குவித்து வைத்ததை நேர்மையானவர்கள் உடுத்துவார்கள், குற்றமற்றவர்கள் அவனுடைய வெள்ளியைப் பகிர்ந்துகொள்வார்கள்.
בנה כעש ביתו וכסכה עשה נצר | 18 |
அவன் தன்னுடைய வீட்டை சிலந்தி பூச்சியின் கூட்டைப்போலவும், காவற்காரன் கட்டிய சிறுகுடிசையைப்போலவும் கட்டுகிறான்.
עשיר ישכב ולא יאסף עיניו פקח ואיננו | 19 |
அவன் செல்வந்தனாக படுக்கைக்குப் போகிறான், ஆனால் தொடர்ந்து அப்படியிரான்; அவன் தன் கண்களைத் திறக்கும்போது எல்லாமே போய்விடுகின்றன.
תשיגהו כמים בלהות לילה גנבתו סופה | 20 |
பயங்கரங்கள் வெள்ளம்போல் அவனை மேற்கொள்கின்றன; இரவில் பெரும்புயல் அவனை அள்ளிக்கொண்டுபோகிறது.
ישאהו קדים וילך וישערהו ממקמו | 21 |
கொண்டல் காற்று அவனை அடித்து செல்கிறது, அவன் காணாமல் போகிறான்; அவன் இருப்பிடத்திலிருந்து அவனை வாரிக்கொண்டுபோகிறது.
וישלך עליו ולא יחמל מידו ברוח יברח | 22 |
அது இரக்கமின்றி அவனை விரட்டும்; இறைவனுடைய கைக்குத் தப்பியோட பார்ப்பார்கள்.
ישפק עלימו כפימו וישרק עליו ממקמו | 23 |
மக்கள் அவனைப் பார்த்துக் கைகொட்டி ஏளனம் செய்து, அவனை அவனுடைய இடத்தைவிட்டு விரட்டிவிடுவார்கள்.”