< איוב 10 >
נקטה נפשי בחיי אעזבה עלי שיחי אדברה במר נפשי | 1 |
௧என் ஆத்துமா உயிரை வெறுக்கிறது, நான் என் துயரத்திற்கு எனக்குள்ளே இடங்கொடுத்து, என் மனவேதனையினாலே பேசுவேன்.
אמר אל-אלוה אל-תרשיעני הודיעני על מה-תריבני | 2 |
௨நான் தேவனை நோக்கி: என்னைக் குற்றவாளியென்று முடிவுசெய்யாதிரும்; நீர் எதற்காக என்னுடன் வழக்காடுகிறீர், அதை எனக்குத் தெரியப்படுத்தும் என்பேன்.
הטוב לך כי תעשק--כי-תמאס יגיע כפיך ועל-עצת רשעים הופעת | 3 |
௩நீர் என்னை ஒடுக்கி, உம்முடைய கைகளின் செயலை வெறுத்து, துன்மார்க்கரின் யோசனையைக் கிருபையாகப் பார்க்கிறது உமக்கு நன்றாயிருக்குமோ?
העיני בשר לך אם-כראות אנוש תראה | 4 |
௪சரீரக்கண்கள் உமக்கு உண்டோ? மனிதன் பார்க்கிறவிதமாகப் பார்க்கிறீரோ?
הכימי אנוש ימיך אם-שנותיך כימי גבר | 5 |
௫நீர் என் அக்கிரமத்தைத் தேடிப்பார்த்து, என் பாவத்தை ஆராய்ந்து விசாரிக்கிறதற்கு,
כי-תבקש לעוני ולחטאתי תדרוש | 6 |
௬உம்முடைய நாட்கள் ஒரு மனிதனுடைய நாட்களைப்போலவும், உம்முடைய வருடங்கள் ஒரு மனிதனுடைய வாழ்நாளைப்போலவும் இருக்கிறதோ?
על-דעתך כי-לא ארשע ואין מידך מציל | 7 |
௭நான் துன்மார்க்கன் அல்ல என்பது உமக்குத் தெரியும்; உம்முடைய கைக்கு என்னை விடுவிக்கிறவன் இல்லை.
ידיך עצבוני ויעשוני יחד סביב ותבלעני | 8 |
௮உம்முடைய கரங்கள் என்னையும் எனக்குரிய எல்லாவற்றையும் உருவாக்கிப் படைத்திருந்தும், என்னை அழிக்கிறீர்.
זכר-נא כי-כחמר עשיתני ואל-עפר תשיבני | 9 |
௯களிமண்போல என்னை உருவாக்கினீர் என்பதையும், என்னைத் திரும்பத் தூளாகப்போகச் செய்வீர் என்பதையும் நினைத்தருளும்.
הלא כחלב תתיכני וכגבנה תקפיאני | 10 |
௧0நீர் என்னைப் பால்போல் ஊற்றி தயிர்போல் உறையச் செய்தீர் அல்லவோ?
עור ובשר תלבישני ובעצמות וגידים תשככני | 11 |
௧௧தோலையும் சதையையும் எனக்கு அணிவித்து எலும்புகளாலும் நரம்புகளாலும் என்னை இணைத்தீர்.
חיים וחסד עשית עמדי ופקדתך שמרה רוחי | 12 |
௧௨எனக்கு உயிரைத் தந்ததும் அல்லாமல், தயவையும் எனக்குப் பாராட்டினீர்; உம்முடைய பராமரிப்பு என் ஆவியைக் காப்பாற்றியது.
ואלה צפנת בלבבך ידעתי כי-זאת עמך | 13 |
௧௩இவைகள் உம்முடைய உள்ளத்தில் மறைந்திருந்தாலும், இது உமக்குள் இருக்கிறது என்று அறிவேன்.
אם-חטאתי ושמרתני ומעוני לא תנקני | 14 |
௧௪நான் பாவம்செய்தால், அதை நீர் என்னிடத்தில் விசாரித்து, என் அக்கிரமத்தை என்மேல் சுமத்தாமல் விடமாட்டீர்.
אם רשעתי אללי לי-- וצדקתי לא-אשא ראשי שבע קלון וראה עניי | 15 |
௧௫நான் துன்மார்க்கனாயிருந்தால் எனக்கு ஐயோ, நான் நீதிமானாயிருந்தாலும் என் தலையை நான் எடுக்கமாட்டேன்; அவமானத்தால் நிரப்பப்பட்டேன்; நீர் என் சிறுமையைப் பார்த்தருளும், அது அதிகரிக்கிறது.
ויגאה כשחל תצודני ותשב תתפלא-בי | 16 |
௧௬சிங்கத்தைப்போல என்னை வேட்டையாடி, எனக்கு விரோதமாக உமது அதிசய வல்லமையை விளங்கச் செய்கிறீர்.
תחדש עדיך נגדי ותרב כעשך עמדי חליפות וצבא עמי | 17 |
௧௭நீர் உம்முடைய சாட்சிகளை எனக்கு விரோதமாக இரட்டிப்பாக்குகிறீர்; என்மேல் உம்முடைய கோபத்தை அதிகரிக்கச் செய்கிறீர்; போராட்டத்தின்மேல் போராட்டம் அதிகரிக்கிறது.
ולמה מרחם הצאתני אגוע ועין לא-תראני | 18 |
௧௮நீர் என்னைக் கர்ப்பத்திலிருந்து பிறக்கவைத்தது என்ன? ஒருவரும் என்னைப் பார்க்காமல், நான் அப்பொழுதே இறந்துபோனால் நலமாமே.
כאשר לא-הייתי אהיה מבטן לקבר אובל | 19 |
௧௯நான் ஒருபோதும் இருந்ததுபோல இல்லாமல், கர்ப்பத்திலிருந்து கல்லறைக்குக் கொண்டு போகப்பட்டிருப்பேன்.
הלא-מעט ימי יחדל (וחדל) ישית (ושית) ממני ואבליגה מעט | 20 |
௨0என் நாட்கள் கொஞ்சமல்லவோ?
בטרם אלך ולא אשוב-- אל-ארץ חשך וצלמות | 21 |
௨௧காரிருளும் மரண இருளுமான இருண்ட தேசமும், இருள்சூழ்ந்த ஒழுங்கில்லாத மரண மறைவிடமுள்ள தேசமும், ஒளியும் இருளாகும் தேசமுமாகிய, போனால் திரும்பிவராத தேசத்திற்கு, நான் போகுமுன்னே,
ארץ עפתה כמו אפל--צלמות ולא סדרים ותפע כמו-אפל | 22 |
௨௨நான் சற்று இளைப்பாறுவதற்கு நீர் என்னைவிட்டு ஓய்ந்திரும்” என்றான்.