< Iuda 1 >

1 NA Iuda he kauwa na Iesu Kristo, o ke kaikaina hoi o Iakobo, i ka poe i huikalaia e ke Akua ka Makua, a i malamaia hoi e Iesu Kristo, me ka heaia mai;
இயேசுகிறிஸ்துவினுடைய ஊழியக்காரனும், யாக்கோபினுடைய சகோதரனுமாக இருக்கிற யூதா, பிதாவாகிய தேவனாலே பரிசுத்தமாக்கப்பட்டவர்களும், இயேசுகிறிஸ்துவினாலே காக்கப்பட்டவர்களுமாகிய அழைக்கப்பட்டவர்களுக்கு எழுதுகிறதாவது:
2 I nui ko oukou lokomaikaiia mai, a me ka maluhia, a me ke alohaia mai.
உங்களுக்கு இரக்கமும் சமாதானமும் அன்பும் பெருகட்டும்.
3 E na punahele, i ka wa a'u i hooikaika ai e palapala aku ia oukou i ke ola nui, he mea pono ia'u ke palapala aku me ka nonoi ia oukou, e hooikaika nui oukou no ka manaoio i haawi mua ia mai na ka poe haipule.
பிரியமானவர்களே, பொதுவான இரட்சிப்பைக்குறித்து உங்களுக்கு எழுதுவதற்கு நான் மிகவும் கருத்துள்ளவனாக இருக்கும்போது, பரிசுத்தவான்களுக்கு ஒருமுறை ஒப்புக்கொடுக்கப்பட்ட விசுவாசத்திற்காக நீங்கள் தைரியமாகப் போராடவேண்டும் என்று, உங்களுக்கு எழுதி உணர்த்துவது எனக்கு அவசியமாகத் தெரிந்தது.
4 No ka mea, ua komo maopopo ole mai kekahi poe kanaka i hoohewa mua ia mai ma keia hoopai ana, he poe aia, e hoolilo ana i ke aloha o ko kakou Akua i mea makaleho wale: a e hoole aku ana hoi i ke Akua i ke alii hookahi, i ko kakou Haku ia Iesu Kristo.
ஏனென்றால், நமது தேவனுடைய கிருபையைக் காமவிகாரத்திற்குரியதாக மாற்றி, நம்முடைய ஒரே ஆண்டவராகிய தேவனையும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவையும் மறுதலிக்கிற பக்தி இல்லாதவர்களாகிய சிலர் இரகசியவழியாக நுழைந்திருக்கிறார்கள்; அவர்கள் இந்த தண்டனைக்கு உள்ளாவார்கள் என்று ஆரம்பத்திலே எழுதியிருக்கிறது.
5 Ua makemake au e paipai i ko oukou manao; ua ike no oukou mamua, ua hoola mai ka Haku i kona poe kanaka mai ka aina mai o Aigupita, a mahope hoi luku iho la ia i ka poe manaoio ole aku.
நீங்கள் முன்னமே அறிந்திருந்தாலும், நான் உங்களுக்கு ஞாபகப்படுத்த விரும்புகிறது என்னவென்றால், கர்த்தர் தமது மக்களை எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணி, இரட்சித்து, பின்பு விசுவாசிக்காதவர்களை அழித்தார்.
6 O ka poe anela i hoomau ole ma ko lakou ano kahiko, aka, i haalele i ko lakou wahi i noho ai, ua hoana e oia ia lakou iloko o na kaulahao mau loa ma ka pouli, no ka hookolokolo ana o ka la nui. (aïdios g126)
தங்களுடைய ஆதி மேன்மையைக் காத்துக்கொள்ளாமல், தங்களுக்குச் சொந்தமான வசிக்கும் இடத்தை விட்டுவிட்ட சாத்தானுடைய தூதர்களையும், தேவனுடைய நாளின் நியாயத்தீர்ப்புக்காக நித்திய சங்கிலிகளினாலே கட்டி, அந்தகார இருளில் அடைத்து வைத்திருக்கிறார். (aïdios g126)
7 E like me ko Sodoma poe a me ko Gomora hoi, a me ko na kulanakauhale e kokoke aku ana, i lilo like me lakou nei i poe moe kolohe, me ka hahai aku mamuli o na kino e, ua hooliloia mai no lakou i mea hoike, e ehaeha ana i ka hoopaiia ma ke ahi aa mau loa. (aiōnios g166)
அப்படியே சோதோம் கொமோரா பட்டணத்தைச் சேர்ந்தவர்களும், அவைகளைச் சுற்றியுள்ள பட்டணத்து மக்களும், அவர்களைப்போல விபசாரம்பண்ணி, இயற்கைக்கு மாறான இச்சைகளிலே விழுந்து, நித்திய அக்கினியின் தண்டனையைப் பெற்று அடையாளமாக வைக்கப்பட்டிருக்கிறார்கள். (aiōnios g166)
8 Pela no hoi keia poe moe uhane, ua hoohaumia lakou la i ke kino, ua hoowahawaha aku i na'lii, a ua hailiili aku hoi i na lunakiekie.
அதைப்போலவே, சொப்பனக்காரர்களாகிய இவர்களும் சரீரத்தை அசுத்தப்படுத்திக்கொண்டு, கர்த்தரின் அதிகாரத்தை அசட்டைபண்ணி, மகத்துவங்களை அவமதிக்கிறார்கள்.
9 Aka hoi, o Mikaela ka luna anela, i kona wa i hakaka ai me ka diabolo me ka hoopaapaa ana aku no ke kino o Mose, aole ia i aa e hailiili aku ia ia, aka, i olelo wale no ia, E papa mai ka Haku ia oe.
பிரதான தூதனாகிய மிகாவேல் மோசேயினுடைய சரீரத்தைக்குறித்துப் பிசாசோடு வாக்குவாதம்பண்ணினபோது, அவனை அவமதித்து குற்றப்படுத்தத் துணிவில்லாமல்: கர்த்தர் உன்னைக் கடிந்து கொள்வாராக என்று சொன்னான்.
10 Aka, ke hoowahawaha nei keia poe i ka mea aole lakou i ike; a o ka lakou mea hoi i ike maoli ai e like me na holoholona uhane ole, malaila no e hoohaumia ai lakou ia lakou iho.
௧0இவர்கள் தங்களுக்குத் தெரியாதவைகளை அவமதிக்கிறார்கள்; புத்தி இல்லாத மிருகங்களைப்போல சுபாவத்தின்படி தங்களுக்குத் தெரிந்திருக்கிறவைகளாலே தங்களைக் கெடுத்துக்கொள்ளுகிறார்கள்.
11 Auwe lakou! no ka mea, ua hahai lakou ma ka aoao o Kaina, ua holo kiki lakou ma ka lalau ana o Balaama i mea e ukuia'i, ua hokaiia iho la lakou ma ke kipi ana ae o Kora.
௧௧இவர்களுக்கு ஐயோ! இவர்கள் காயீனுடைய வழியில் நடந்து, பிலேயாம் கூலிக்காகச் செய்த வஞ்சகத்திலே வேகமாக ஓடி, கோரா எதிர்த்துப்பேசின பாவத்திற்குள்ளாகி, கெட்டுப்போனார்கள்.
12 He mau pukoa ia mau mea ma ka oukou mau ahaaina aloha, ua ahaaina hilahila ole lakou me ka hanai ana ia lakou iho: he mau ao ua ole i lele ino i ka makani; he mau laau i mae wale, hua ole, i palua ka make ana, a i hukiia ke aa;
௧௨இவர்கள் உங்களுடைய அன்பின் விருந்துகளில் கறைகளாக இருந்து, பயம் இல்லாமல் விருந்து சாப்பிட்டு, தங்களைத் தாங்களே கவனித்துக்கொள்கிற மேய்ப்பராக இருக்கிறார்கள்; இவர்கள் காற்றுகளால் அடிபட்டு ஓடுகிற தண்ணீர் இல்லாத மேகங்களும், இலைகள் உதிர்ந்து, கனிகள் இல்லாமல் இரண்டுமுறை காய்ந்தும் வேர் இல்லாத மரங்களும்,
13 He mau ale o ke kai i kupikipikio, ke huahuai ae la i ko lakou hilahila iho: na hoku lele hoi; ua hoomakaukauia no lakou ka poeleele o ka pouli mau loa. (aiōn g165)
௧௩தங்களுடைய அவமானங்களை நுரைதள்ளுகிற இரைச்சலான கடல் அலைகளும், வழிதப்பி அலைகிற நட்சத்திரங்களுமாக இருக்கிறார்கள்; இவர்களுக்காக என்றென்றைக்கும் காரிருளே வைக்கப்பட்டிருக்கிறது. (aiōn g165)
14 Wanana mai no o Enoka ia mau mea, o ka hiku ia mai Adamu mai, i mai la, Eia hoi, e holo mai ana ka Haku me ka umi tausani o kona poe hoano,
௧௪ஆதாமுக்கு ஏழாம் தலைமுறையான ஏனோக்கும் இவர்களைக்குறித்து: இதோ, எல்லோருக்கும் நியாயத்தீர்ப்புக் கொடுக்கிறதற்கும், அவர்களில் அவபக்தியுள்ளவர்கள் எல்லோரும் அவபக்தியாகச் செய்துவந்த எல்லா அவபக்தியான செய்கைகளினாலும்,
15 E hookolokolo mai i na mea a pau, a e hoahewa mai i ka poe aia a pau iwaena o lakou i na hewa a pau a lakou i hana hewa'i, a me na olelo paakiki a pau a ka poe hewa i olelo ino aku ai ia ia.
௧௫தமக்கு விரோதமாக அவபக்தியுள்ள பாவிகள் பேசின கடினமான வார்த்தைகள் எல்லாவற்றினாலும், அவர்களைக் கண்டிக்கிறதற்கும், ஆயிரம் ஆயிரமான தமது பரிசுத்தவான்களோடு கர்த்தர் வருகிறார் என்று முன்னமே அறிவித்தான்.
16 Oia ka poe ohumu, oluolu ole, e hele ana ma ko lakou kuko iho: haanui iho la ko lakou waha me ka olelo hookano aku, mahalo ae la hoi i ko ke kino no ka ukuia mai.
௧௬இவர்கள் முறுமுறுக்கிறவர்களும், முறையிடுகிறவர்களும், தங்களுடைய இச்சைகளின்படி நடக்கிறவர்களுமாக இருக்கிறார்கள்; இவர்களுடைய வாய் பெருமையானவைகளைப் பேசும்; தற்புகழ்ச்சிக்காக முகஸ்துதி செய்வார்கள்.
17 E na hoalauna, e hoomanao oukou i ka olelo i olelo mua ia mai ai e ka poe lunaolelo o ko kakou Haku o Iesu Kristo;
௧௭நீங்களோ பிரியமானவர்களே, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் அப்போஸ்தலர்களால் முன்பே சொல்லப்பட்ட வார்த்தைகளை நினைத்துப்பாருங்கள்.
18 I ko lakou hai ana mai ia oukou, i ka hope o ka manawa, e hiki mai ai ka poe haakei e hele ana ma ko lakou kuko aia iho.
௧௮கடைசிக்காலத்திலே தங்களுடைய துன்மார்க்கமான இச்சைகளின்படி நடக்கிற பரிகாசக்காரர்கள் தோன்றுவார்கள் என்று உங்களுக்குச் சொன்னார்களே.
19 Eia ka poe i hookaawale ae ia lakou iho, ma ke kino lakou, aole ma ka Uhane.
௧௯இவர்கள் பிரிந்துபோகிறவர்களும், ஜென்மசுபாவம் உள்ளவர்களும், ஆவியானவர் இல்லாதவர்களுமாமே.
20 A o oukou la, e na hoaaloha, e hookupaa ia oukou iho ma ko oukou manaoio hemolele loa, e pule aku ana ma ka Uhane Hemolele;
௨0நீங்களோ பிரியமானவர்களே, உங்களுடைய மகா பரிசுத்தமான விசுவாசத்தின்மேல் உங்களை உறுதிப்படுத்திக்கொண்டு, பரிசுத்த ஆவியானவருக்குள் ஜெபம்பண்ணி,
21 E malama ia oukou iho ma ke aloha o ke Akua, e kakali koi i ke aloha ana mai o ko kakou Haku o Iesu Kristo a hiki i ke ola mau loa ana. (aiōnios g166)
௨௧தேவனுடைய அன்பிலே உங்களைக் காத்துக்கொண்டு, நித்தியஜீவனுக்குரிய நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய இரக்கத்தைப் பெற்றுக்கொள்ளக் காத்திருங்கள். (aiōnios g166)
22 E aloha aku oukou i kahi poe e hoolike ole ana.
௨௨அல்லாமலும், நீங்கள் பகுத்தறிவு உள்ளவர்களாக இருந்து, சிலருக்கு இரக்கம் காட்டி, சிலரை அக்கினியில் இருந்து இழுத்துவிட்டு, பயத்தோடு இரட்சித்து,
23 A o kahi poe e hoola ae oukou ma ka makau, me ka huki ia lakou mai ke ahi mai; me ka inaina aku i ke kapa i paumaele i ko ke kino.
௨௩பாவத்தினால் கறைப்பட்டிருக்கிற அவர்களுடைய ஆடையையும்கூட வெறுத்துத்தள்ளுங்கள்.
24 Eia hoi, i ka mea e hiki ai ke malama ia oukou i ole ai e haule, e hooku mai hoi ia oukou i hemolele imua i ke alo o kona nani me ka hauoli nui aku;
௨௪உங்களை இடறிவிழாமல் காக்கவும், தமது மகிமையுள்ள சந்நிதானத்திலே அதிக மகிழ்ச்சியோடு உங்களை மாசு இல்லாதவர்களாக நிறுத்தவும், வல்லமை உள்ளவரும்,
25 I ke Akua akamai hookahi, ko kakou mea e ola'i, nona no ka hoonaniia, a me ka hanohano, a me ka ikaika, a me ka mana i keia wa, a i ke ao pau ole. Amene. (aiōn g165)
௨௫தாம் ஒருவரே ஞானம் உள்ளவருமாகிய நம்முடைய இரட்சகரான தேவனுக்குக் கனமும், மகத்துவமும், வல்லமையும், அதிகாரமும், இப்பொழுதும், எப்பொழுதும் உண்டாவதாக. ஆமென். (aiōn g165)

< Iuda 1 >