< Ioba 35 >

1 OLELO aku la hoi o Elihu, i aku la,
பின்னும் எலிகூ மறுமொழியாக:
2 Ke manao nei oe he pono keia, O kau i olelo mai, O ko'u pono, ua oi mamua o ko ke Akua?
“என் நீதி தேவனுடைய நீதியைவிட உயர்ந்ததென்று நீர் சொன்னது நியாயம் என்று நினைக்கிறீரோ?
3 No ka mea, ua ninau mai oe, Heaha ka pono no'u? Heaha hoi ko'u pomaikai no kuu hewa ole ana?
நான் பாவியாக இல்லாததினால் எனக்கு நன்மை என்ன? பலன் என்ன? என்று சொன்னீர்.
4 Owau ke hoihoi aku ia olelo iou la, A i kou mau hoalauna me oe.
உமக்கும் உம்முடன் இருக்கிற உம்முடைய நண்பனுக்கும் நான் பதில் சொல்லுகிறேன்.
5 E nana ae oe i ka lani, a ike; A e nana i na ao, ua kiekie lakou mamua ou.
நீர் வானத்தை அண்ணாந்து பார்த்து, உம்மைவிட உயரமாயிருக்கிற ஆகாயமண்டலங்களைக் கண்ணோக்கும்.
6 Ina e hana hewa oe, heaha kau hana ia ia? Ina e hoonuiia kou mau hala, heaha kau e hana'i nana?
நீர் பாவம் செய்தால் அதினாலே அவருக்கு என்ன நஷ்டம்? உம்முடைய மீறுதல்கள் அதிகமானாலும், அதினாலே அவருக்கு என்ன பாதிப்பு?
7 Ina ua pono oe, heaha kau e haawi aku ai ia ia? Heaha kana e loaa'i mai kou lima aku?
நீர் நீதிமானாயிருந்தால், அதினாலே அவருக்கு என்ன கிடைக்கும்? அல்லது அவர் உம்முடைய கையில் என்ன லாபத்தைப் பெறுவார்?
8 No ke kanaka e like me oe kou hala, A no ke keiki a ke kanaka kou pono.
உம்முடைய பாவத்தினால் உம்மைப்போன்ற மனிதனுக்கு நஷ்டமும், உம்முடைய நீதியினால் மனுமக்களுக்கு லாபமும் உண்டாகும்.
9 Ke uwe ae nei ka poe kaumaha no ka hooluhiia; I uwe lakou no ka lima o na mea koikoi.
அநேகரால் பலவந்தமாக ஒடுக்கப்பட்டவர்கள் முறையிட்டு, வல்லவர்களுடைய புயத்தினிமித்தம் அலறுகிறார்கள்.
10 Aka, aole e i mai kekahi, Auhea ke Akua nana au i hana, Ka mea i haawi mai i na mele olioli i ka po;
௧0பூமியின் மிருகங்களைவிட எங்களைப் புத்திமான்களும், ஆகாயத்துப் பறவைகளைவிட எங்களை ஞானவான்களுமாக்கி,
11 O ka mea i ao mai ia kakou mamua o na holoholona o ka honua, A ua hoonaauao oia ia kakou mamua o na manu o ka lewa?
௧௧என்னை உண்டாக்கினவரும், இரவிலும் பாடல்பாட அருள்செய்கிறவருமாகிய என்னை உருவாக்கின கர்த்தராகிய தேவன் எங்கே என்று கேட்பவன் ஒருவனுமில்லை.
12 Malaila lakou e uwe ai, aole mea i ekemu mai, No ka haaheo o ka poe hewa.
௧௨அங்கே அவர்கள் பொல்லாதவர்களின் பெருமையினாலே கூப்பிடுகிறார்கள்; அவரோ திரும்ப பதில் கொடுக்கிறதில்லை.
13 He oiaio, aole ke Akua e hoolohe mai i ka mea wahahee, Aole ka Mea mana e maliu mai ia.
௧௩தேவன் வீண்வார்த்தைகளைக் கேட்கமாட்டார், சர்வவல்லமையுள்ள தேவன் அதைக் கவனிக்கமாட்டார்.
14 Ina paha e olelo oe, aole oe i ike ia ia, Imua ona ka hooponopono, nolaila e kali aku oe ia ia.
௧௪அவருடைய தரிசனம் உமக்குக் கிடைக்கிறதில்லை என்று நீர் சொல்லுகிறீரே; ஆனாலும் நியாயத்தீர்ப்பு அவரிடத்தில் இருக்கிறது; ஆகையால் அவருக்குக் காத்துக்கொண்டிரும்.
15 Ano hoi, he mea ole ka hoopai ana o kona inaina, Aole ia e haka pono mai i na hewa;
௧௫இப்போது அவருடைய கோபமானது நியாயத்தை முற்றிலும் விசாரிக்காது; அவர் இன்னும் ஒன்றையும் குறையில்லாத முறையில் தண்டிக்கவில்லை.
16 Nolaila i oaka hewa mai ai ko Ioba waha, He hoonui olelo kana me ko ike ole.
௧௬ஆகையால் யோபு வீணாய்த் தம்முடைய வாயைத் திறந்து, அறிவில்லாத வார்த்தைகளை அதிகமாகப் பேசுகிறார்” என்றான்.

< Ioba 35 >