< Ioba 1 >
1 HE kanaka ma ka aina o Uza, o Ioba kona inoa, ua pono, ua pololei hoi ua kanaka la, a ua makau no ia i ke Akua, a hoopale i ka hewa.
௧ஊத்ஸ் தேசத்திலே யோபு என்னும் பெயருடைய ஒரு மனிதன் இருந்தான்: அந்த மனிதன் உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து, பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாயிருந்தான்.
2 Ua hanauia nana ehiku mau keikikane, a me na kaikamahine ekolu.
௨அவனுக்கு ஏழு மகன்களும் மூன்று மகள்களும் பிறந்தார்கள்.
3 O kana waiwai, ehiku tausani hipa me na kao, ekolu tausani kamelo, elima haneri bipikaulua a elima haneri hoki wahine, a he nui loa kona poe ohua; nolaila, ua oi aku ke koikoi o keia kanaka mamua o na kanaka a pau o ka hikina.
௩அவனுக்கு 7,000 ஆடுகளும், 3,000 ஒட்டகங்களும், 500 ஏர்மாடுகளும், 500 கழுதைகளுமாகிய மிருகஜீவன்கள் இருந்ததுமன்றி, மிகுதியான வேலைக்காரர்களும் இருந்தார்கள்; அதினால் அந்த மனிதன் கிழக்குப்பகுதியின் மக்களில் எல்லாரிலும் பெரியவனாயிருந்தான்.
4 A hele aku la kana mau keikikane, a ahaaina iho la ma ka hale, o kela mea keia mea o lakou i kona la; a hoouna aku la, a hea aku i ko lakou mau kaikuwahine ekolu, e ai pu a e inu pu me lakou.
௪அவனுடைய மகன்கள், அவனவன் தன்தன் நாளிலே தன்தன் வீட்டிலே விருந்துசெய்து, தங்கள் மூன்று சகோதரிகளையும் தங்களுடன் உணவு சாப்பிட அழைப்பார்கள்.
5 A i ka manawa i hala ae ai na la o ka ahaaina ana, hoouna aku la o Ioba a hoomaemae ia lakou, a ala ae la i kakahiaka nui, a kaumaha aku la i na mohaikuni e like me ka nui o lakou a pau; no ka mea, i iho la o Ioba, Malia paha ua hana hewa ka'u mau keikikane, a ua olelo hoino i ke Akua ma ko lakou naau. Pela o Ioba i hana'i i na la a Pau.
௫விருந்துசெய்கிற அவரவருடைய நாள்முறை முடிகிறபோது, யோபு: ஒருவேளை என் மகன்கள் பாவம் செய்து, தேவனைத் தங்கள் இருதயத்திலே நிந்தித்திருப்பார்கள் என்று சொல்லி, அவர்களை வரவழைத்து, பரிசுத்தப்படுத்தி, அதிகாலமே எழுந்து, அவர்கள் எல்லோருடைய எண்ணிக்கையின் வரிசையில் சர்வாங்க தகனபலிகளைச் செலுத்துவான்; இந்த முறையில் யோபு அந்நாட்களிலெல்லாம் செய்துவருவான்.
6 A i kekahi la, i ka manawa i hele ai na keiki a ke Akua e hoike aku ia lakou iho imua o Iehova, i hele mai hoi o Satana iwaena o lakou.
௬ஒருநாள் தேவதூதர்கள் யெகோவாவுடைய முன்னிலையில் வந்து நின்றபோது, சாத்தானும் அவர்கள் நடுவிலே வந்து நின்றான்.
7 A i mai la o Iehova ia Satana, Nohea oe i hele mai nei? olelo aku la o Satana ia Iehova, Mai ka auwana ana ma ka honua, a mai ka hele ana io ia nei malaila.
௭யெகோவா சாத்தானைப் பார்த்து: நீ எங்கேயிருந்து வருகிறாய் என்றார். சாத்தான் யெகோவாவுக்கு மறுமொழியாக: பூமியெங்கும் உலாவி, அதில் சுற்றித்திரிந்து வருகிறேன் என்றான்.
8 I mai la o Iehova ia Satana, Ua noonoo pono anei oe i ka'u kauwa ia Ioba, aohe mea like me ia ma ka honua, he kanaka pono me ka pololei, ua makau i ke Akua, a ua hookaaokoa i ka hewa.
௮யெகோவா சாத்தானை நோக்கி: என் தாசனாகிய யோபின்மேல் கவனம் வைத்தாயோ? உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து, பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாகிய அவனைப்போல பூமியில் ஒருவனும் இல்லை என்றார்.
9 Alaila olelo aku la o Satana ia Iehova, i aku la, Ke makau kumu ole la anei o Ioba i ke Akua?
௯அதற்குச் சாத்தான் யெகோவாவுக்கு மறுமொழியாக: யோபு வீணாகவா தேவனுக்குப் பயந்து நடக்கிறான்?
10 Aole anei oe i hoopuni ia ia, a me kona hale a me kona mea a pau i ka pa ma na aoao a pau? Ua hoopomaikai oe i ka hana a kona mau lima, a mahuahua kona waiwai ma ka aina.
௧0நீர் அவனையும் அவனுடைய வீட்டையும் அவனுக்கு இருந்த எல்லாவற்றையும் சுற்றி வேலியடைக்கவில்லையோ? அவனுடைய கைகளின் வேலைகளை ஆசீர்வதித்தீர்; அவனுடைய சம்பத்து தேசத்தில் பெருகியது.
11 Aka, e kikoo aku ano i kou lima, a hoopa i kana mau mea a pau, a e hoino no kela ia oe imua o kou maka.
௧௧ஆனாலும் உம்முடைய கையை நீட்டி அவனுக்கு இருக்கிறவையெல்லாம் தொடுவீரானால், அப்பொழுது அவன் உமது முகத்திற்கு முன்னே உம்மை நிந்திக்கமாட்டானோ பாரும் என்றான்.
12 Olelo mai la o Iehova ia Satana, Aia hoi, iloko o kou lima kana mau mea a pau; aka, maluna ona mai kau aku oe i kou lima. A hele aku la o Satana mai ke alo aku o Iehova.
௧௨யெகோவா சாத்தானை நோக்கி: இதோ, அவனுக்கு இருக்கிறவையெல்லாம் உன் கையிலிருக்கிறது; அவன்மேல்மாத்திரம் உன் கையை நீட்டாதே என்றார்; அப்பொழுது சாத்தான் யெகோவாவுடைய சமுகத்தைவிட்டுப் புறப்பட்டுப்போனான்.
13 A i kekahi la, i ka manawa o kana mau keikikane a me kana mau kaikamahine e ahaaina ana, a e inu waina ana iloko o ka hale o ko lakou hanau mua;
௧௩பின்பு ஒருநாள் யோபுடைய மகன்களும் அவனுடைய மகள்களும், தங்கள் மூத்த சகோதரன் வீட்டிலே சாப்பிட்டு திராட்சைரசம் குடிக்கிறபோது,
14 Hele mai kekahi elele io Ioba la, i mai la, O na bipikauo e hoopalau ana, a o na hoki wahine e ai ana ma ko lakou aoao;
௧௪ஒரு ஆள் அவனிடத்தில் வந்து: எருதுகள் உழுகிறபோது, கழுதைகள் அவைகளின் பக்கத்திலே மேய்ந்து கொண்டிருக்கும்போது,
15 A popoi mai la ka poe Seba maluna o lakou, a lawe pio aku la i ia lakou; a pepehi iho la lakou i na kanaka opiopio me ka maka o ka pahikaua; a owau wale no ka i pakele e hai aku ia oe.
௧௫சபேயர்கள் அவைகளை தாக்கி, அவைகளைக் கொண்டுபோனார்கள்; வேலையாட்களையும் பட்டயத்தால் வெட்டிப்போட்டார்கள்; நான் ஒருவன் மாத்திரம் தப்பி, அதை உமக்கு அறிவிக்க வந்தேன் என்றான்.
16 A i kana kamailio ana, hele mai kekahi, i mai la, Ua lele mai ke ahi a ke Akua mai ka lani mai, a ua ai iho i na hipa a me na kahu, a ua hoopau ia lakou; a owau wale no ka i pakele e hai aku ia oe.
௧௬இவன் இப்படிப் பேசிக்கொண்டிருக்கும்போது, வேறொருவன் வந்து: வானத்திலிருந்து தேவனுடைய நெருப்பு விழுந்து, ஆடுகளையும் வேலையாட்களையும் சுட்டெரித்துப்போட்டது; நான் ஒருவன் மாத்திரம் தப்பி, அதை உமக்கு அறிவிக்க வந்தேன் என்றான்.
17 A i kana kamailio ana, hele mai kekahi e ae, i mai la, Hoonohonoho iho la ka poe Kaledea i ekolu poe kaua, a lele mai lakou maluna o na kamelo, a lawe pio aku ia lakou, a pepehi iho la i na kauwa opiopio me ka maka o ka pahikaua; a owau wale no ka i pakele e hai aku ia oe.
௧௭இவன் இப்படிப் பேசிக்கொண்டிருக்கும்போது, வேறொருவன் வந்து: கல்தேயர் மூன்று குழுக்களாக வந்து, ஒட்டகங்கள்மேல் விழுந்து, அவைகளை ஓட்டிக்கொண்டுபோனார்கள், வேலையாட்களையும் பட்டயக்கருக்கினால் வெட்டிப்போட்டார்கள்; நான் ஒருவன் மாத்திரம் தப்பி, அதை உமக்கு அறிவிக்க வந்தேன் என்றான்.
18 I kana kamailio ana, hele mai kekahi e ae, i mai la, O kau mau keikikane, a me kau mau kaikamahine, e ai ana a e inu waina ana iloko o ka hale o ko lakou hanau mua:
௧௮இவன் இப்படிப் பேசிக்கொண்டிருக்கும்போது, வேறொருவன் வந்து: உம்முடைய மகன்களும் உம்முடைய மகள்களும், தங்கள் மூத்த சகோதரன் வீட்டில் சாப்பிட்டுத் திராட்சைரசம் குடிக்கிறபோது,
19 Aia hoi, hiki mai la ka makani ikaika mai ka aoao o ka waonahele mai, a nou mai ma na kihi eha o ka hale, a hina iho la ia maluna o na kanaka opiopio, a ua make lakou; a owau wale no ka i pakele e hai aku ia oe.
௧௯வனாந்திரவழியாகப் பெருங்காற்று வந்து, அந்த வீட்டின் நான்கு மூலையிலும் அடிக்க, அது பிள்ளைகளின்மேல் விழுந்ததினால் அவர்கள் இறந்து போனார்கள்; நான் ஒருவன் மாத்திரம் தப்பி, அதை உமக்கு அறிவிக்க வந்தேன் என்றான்.
20 Alaila ku ae la o Ioba, a baehae iho la i kona aahu, a ako i kona poo, a hina ilalo i ka honua, a hoomana aku la,
௨0அப்பொழுது யோபு எழுந்திருந்து, தன் சால்வையைக் கிழித்து, தன் தலையைச் சிரைத்து, தரையிலே விழுந்து பணிந்து:
21 I iho la, I hele kohana mai no au mai ka opu mai o ko'u makuwahine, a e hoi kohana aku au ilaila: na Iehova i haawi mai, na Iehova hoi i lawe aku; e hoomaikaiia ka inoa o Iehova.
௨௧நிர்வாணியாக என் தாயின் கர்ப்பத்திலிருந்து வந்தேன்; நிர்வாணியாக அவ்விடத்திற்குத் திரும்புவேன்; எனக்கு இருந்ததெல்லாம் யெகோவா கொடுத்தார், யெகோவா அவைகளை எடுத்தார்; யெகோவாவுடைய நாமத்திற்கு நன்றி என்றான்.
22 Ma keia mea a pau, aole o Ioba i hana hewa, aole hoi ia i hooili wale aku i ka hewa i ke Akua.
௨௨இவையெல்லாவற்றிலும் யோபு பாவம்செய்யவுமில்லை, தேவனைப்பற்றிக் குறைசொல்லவுமில்லை.