< Habakuka 2 >
1 MALUNA o ko'u wahi kiai ke ku nei au, A maluna o kahi paa ke hoonoho ia'u iho, A e nana ae au e ike ai i ka mea ana e olelo mai ai no'u, A i ka mea a'u o pane aku ai no kuu hoakaka ana.
௧நான் என் காவலிலே தரித்து, பாதுகாப்பிலே நிலைகொண்டிருந்து, அவர் எனக்கு என்ன சொல்லுவாரென்றும், அவர் என்னைக் கண்டிக்கும்போது நான் என்ன உத்திரவு சொல்லுவேனென்றும் கவனித்துப்பார்ப்பேன் என்றேன்.
2 Olelo mai o Iehova ia'u, i mai la, E kakau oe i ka mea i ikeia, A e kakau hoi ia ma na papa pohaku, I hiki ka mea heluhelu e hoholo.
௨அப்பொழுது யெகோவா எனக்கு மறுமொழியாக: நீ தரிசனத்தை எழுதி, அதை செய்தி அறிவிப்பாளன் வாசிக்கும்விதத்தில் பலகைகளிலே தெளிவாக எழுது.
3 No ka mea, o ka mea i ikea no ka manawa maopopo ia; A ke lalelale nei i ka hope, aole ia e hoopunipuni; Ina e hookauluaia oia, e kali oe ia ia. No ka mea, e hiki io mai no ia, aohe ia e hookaulua.
௩குறித்தகாலத்திற்குத் தரிசனம் இன்னும் வைக்கப்பட்டிருக்கிறது; முடிவிலே அது சம்பவிக்கும், அது பொய் சொல்லாது; அது தாமதித்தாலும் அதற்குக் காத்திரு; அது நிச்சயமாக வரும், அது தாமதிப்பதில்லை.
4 Aia hoi, o ka mea hookiekie, aole pono kona naau iloko ona; Aka, o ka mea pono, e hoolaia oia ma kona manaoio.
௪இதோ, அகங்காரியாக இருக்கிறானே, அவனுடைய ஆத்துமா அவனுக்குள் செம்மையானதல்ல; தன் விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான்.
5 A he oiaio, o ka waina, ua hoopunipuni ia; O ke kanaka haaheo, aole ia i noho malie, Ua hoakea oia i kona makemake, e like me ka luakupapau, A ua like oia me ka make, aole ia e ana: Hoakoakoa oia nona iho i na lahuikanaka a pau, A ua houluulu nona iho i na kanaka a pau. (Sheol )
௫அவன் மதுபானத்தினால் அக்கிரமம்செய்து அகங்காரியாகி, வீட்டிலே தங்கியிருக்காமல், அவன் தன் ஆத்துமாவைப் பாதாளத்தைப்போல விரிவாக்கித் திருப்தியாகாமல், மரணத்திற்குச் சமமாகச் சகல தேசங்களையும் தன் வசமாகச் சேர்த்து, சகல மக்களையும் தன்னிடமாகக் கூட்டிக்கொண்டாலும், (Sheol )
6 Aole anei e hapai o keia poe a pau i mele nona, A i wahi olelo hoino nona, a e i aku, Auwe ka mea e hoomahuahua i ka waiwai, aohe nona! Pehea ka loihi! o ka mea e hoonui ana maluna ona i ka aie!
௬இவர்களெல்லோரும் அவன்பேரில் ஒரு பழமொழியையும், அவனுக்கு விரோதமான பழிச்சொல்லையும் கூறி, தன்னுடையதல்லாததைத் தனக்காகச் சேர்த்துக் கொள்ளுகிறவனுக்கு ஐயோ என்றும், அது எதுவரைக்கும் நிற்கும் என்றும், அவன் தன்மேல் களிமண் சுமையையல்லவா சுமத்திக்கொள்ளுகிறான் என்றும் சொல்லுவார்கள்.
7 Aole anei e ku koke mai ka poe e nahu mai ia oe, A e ala mai ka poe e hookaumaha ia oe? A e lilo oe i pio no lakou.
௭உன்னைக் கடிப்பவர்கள் உடனடியாக எழும்புவதும், உன்னை அலைக்கழிப்பவர்கள் விழிப்பதுமில்லையோ? நீ அவர்களுக்குச் சூறையாகாயோ?
8 No ka mea, ua hoopio oe i na lahuikanaka he nui, O ke koena a pau o na kanaka e hoopio lakou ia oe, No ke koko o kanaka, a no ka hana ino i ka aina, I ke kulanakauhale, a me ka poe a pau e noho ana iloko ona.
௮நீ அநேகம் மக்களைக் கொள்ளையிட்டதினால் மக்களில் மீதியான யாவரும் நீ சிந்தின மனித இரத்தத்தின் காரணமாகவும், நீ செய்த கொடுமையின் காரணமாகவும் உன்னைக் கொள்ளையிடுவார்கள்.
9 Auwe ka mea kuko i ka waiwai pono ole no kona hale, I hookiekie ai oia i kona punana iluna, I hoopakele ai ia ia iho mai ka mana o ka hewa mai!
௯தீமையின் வல்லமைக்குத் தப்பவேண்டுமென்று தன் கூட்டை உயரத்திலே வைக்கும்படிக்கு, தன் வீட்டிற்குப் பொல்லாத ஆதாயத்தைத் தேடுகிறவனுக்கு ஐயோ,
10 Ua kuka oe i ka mea hilahila no kou hale, Ma ka hooki ana i na kanaka he nui, Ua hana hewa aku hoi oe i kou uhane.
௧0அநேக மக்களை வெட்டிப்போட்டதினால் உன் வீட்டிற்கு வெட்கமுண்டாக ஆலோசனை செய்தாய்; உன் ஆத்துமாவுக்கு விரோதமாகப் பாவம்செய்தாய்.
11 No ka mea, e kahea mai ka pohaku mai ka paia mai, A o ke kaola laau e pane mai no ia.
௧௧சுவரிலிருந்து கல் கூப்பிடும், உத்திரம் மேற்கூரையிலிருந்து சாட்சியிடும்.
12 Auwe ka mea kukulu i ke kulanakauhale me ke koko, O ka mea hookumu i ke kulanakauhale me ka hewa!
௧௨இரத்தப்பழிகளாலே பட்டணத்தைக் கட்டி, அநியாயத்தினாலே நகரத்தைப் பலப்படுத்துகிறவனுக்கு ஐயோ,
13 Aia hoi, na Iehova o na kaua anei keia, e hooluhi na kanaka iloko o ke ahi, A e hookaumaha ia lakou iho no ka mea ole?
௧௩இதோ, மக்கள் நெருப்புக்கு இரையாக உழைத்து, மக்கள் வீணாக இளைத்துப்போகிறது யெகோவாவுடைய செயல் அல்லவோ?
14 No ka mea, e hoopihaia ka honua i ka ike i ka nani o Iehova, E like me na wai i hoopiha ai i na moana.
௧௪சமுத்திரம் தண்ணீரினால் நிறைந்திருக்கிறதுபோல், பூமி யெகோவாவுடைய மகிமையை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும்.
15 Auwe ka mea hoohainu i kona hoalauna, A e ninini i kou mea e wela ai ia ia, i ona oia, i nana aku ai oe i ko lakou olohelohe!
௧௫தன் தோழர்களுக்குக் குடிக்கக்கொடுத்துத் தன் தோல்பையை அவர்களுக்கு அருகிலே வைத்து, அவர்களுடைய நிர்வாணங்களைப் பார்க்குமளவுக்கு, அவர்களை வெறிக்கச்செய்கிறவனுக்கு ஐயோ,
16 E hoopihaia oe i ka hilahila no ka nani, E inu hoi oe, a e hoike i kuu okipoepoe ole: O ke kiaha o ka lima akau o Iehova e hiki mai no ia ia oe, A o ka luai hilahila e uhi mai i kou nani.
௧௬நீ மகிமையினால் அல்ல, வெட்கத்தினால் நிரப்பப்படுவாய்; நீயும் குடித்து விருத்தசேதனமில்லாதவன் என்று காட்டிக்கொள்; யெகோவாவுடைய வலதுகையில் இருக்கிற பாத்திரம் உன்னிடத்திற்குத் திரும்பும்; உன் மகிமையின்மேல் வெட்கமான வாந்திபண்ணுவாய்.
17 No ka mea, o ka hana ino ia Lebanona e uhi mai ia oe, Me ka luku o na holoholona, i hooweliweli ia lakou, No ke koko o kanaka, a no ka hana ino i ka aina, I ke kulanakauhale, a me ka poe a pau e noho ana iloko ona.
௧௭லீபனோனுக்குச் செய்த கொடுமை உன்னை மூடும்; சிந்தின மனித இரத்தத்தின் காரணமாகவும், தேசத்திற்கும் பட்டணத்திற்கும் அதின் குடிமக்கள் எல்லோருக்கும் செய்த கொடுமையின் காரணமாகவும் மிருகங்கள் செய்யும் பாழ்க்கடிப்பு உன்னைக் கலங்கச்செய்யும்.
18 Heaha ka pono o ke kii, i ka manawa i kalaiia oia e ka mea nana ia i hana? A o ke kii hooheheeia, a me ka mea ao i ka wahahee? A o ka mea nana i hana i kona kii, ua hilinai ia maluna ona, ma ka hana ana i akua lapuwale?
௧௮சித்திரக்காரனுக்கு அவன் செய்த உருவமும், ஊமையான தெய்வங்களை உண்டாக்கித் தான் உருவாக்கின உருவத்தை நம்பினவனுக்கு வார்க்கப்பட்டதும், பொய்ப்போதகம் செய்கிறதுமான சிலையும் எதற்கு உதவும்?
19 Auwe ka mea olelo i ka laau, E ala mai! A i ka pohaku leo ole, E ku iluna! Oia ke ao mai! Aia hoi, ua uhiia oia i ke gula a me ke kala, Aka, aohe hanu iki iloko ona.
௧௯மரத்தால் செய்யப்பட்ட விக்கிரகத்தைப்பார்த்து விழியென்றும், ஊமையான கல் சிலையைப் பார்த்து எழும்பு என்றும் சொல்லுகிறவனுக்கு ஐயோ, அது போதிக்குமோ? இதோ, அது பொன்னும் வெள்ளியுமான தகட்டால் மூடப்பட்டிருக்கிறது; அதற்குள்ளே சுவாசம் இல்லையே?
20 Aia no o Iehova iloko o kona luakini hoano; E hamau imua ona, e ka honua a pau.
௨0யெகோவாவோவென்றால், தமது பரிசுத்த ஆலயத்தில் இருக்கிறார்; பூமியெல்லாம் அவருக்கு முன்பாக மௌனமாயிருப்பதாக.