< Kinohi 35 >
1 OLELO mai la ke Akua ia Iakoba, E ku ae oe, e pii aku i Betela, ilaila e noho ai: ilaila oe e hana'i i kuahu no ke Akua i ikea e oe i kou wa i mahuka ai mai ka maka o kou kaikuaana o Esau.
௧தேவன் யாக்கோபை நோக்கி: “நீ எழுந்து பெத்தேலுக்குப் போய், அங்கே குடியிருந்து, நீ உன் சகோதரனாகிய ஏசாவின் முகத்திற்கு விலகி ஓடிப்போகிறபோது, உனக்குக் காட்சியளித்த தேவனுக்கு அங்கே ஒரு பலிபீடத்தை உண்டாக்கு” என்றார்.
2 Alaila, i aku la o Iakoba i ko ka hale ona, a i ka poe a pau me ia, E haalele oukou i na akua e iwaena o oukou, e huikala ia oukou iho, a e aahu iho i na kapa hou:
௨அப்பொழுது யாக்கோபு தன் வீட்டாரையும் அவனுடன் இருந்த மற்ற அனைவரையும் நோக்கி: “உங்களிடத்தில் இருக்கிற அந்நிய தெய்வங்களை விலக்கிப்போட்டு, உங்களைச் சுத்தம்செய்துகொண்டு, உங்கள் ஆடைகளை மாற்றுங்கள்”.
3 A e ku ae kakou, e pii aku i Betela; malaila au e hana'i i kuahu no ke Akua nana au i maliu mai i ka la o ko'u popilikia, a i hele pu me au i kuu ala i hele ai.
௩நாம் எழுந்து பெத்தேலுக்குப் போவோம் வாருங்கள்; எனக்கு ஆபத்து நேரிட்ட நாளில் என் விண்ணப்பத்திற்கு பதில் கொடுத்து, நான் நடந்த வழியிலே என்னுடன் இருந்த தேவனுக்கு அங்கே ஒரு பலிபீடத்தை உண்டாக்குவேன் என்றான்.
4 Haawi mai la lakou ia Iakoba i na akua e ma ko lakou lima, a me na apo ma na pepeiao o lakou: a huna iho la o Iakoba ia mau mea malalo o ka laau oka aia ma Sekema.
௪அப்பொழுது அவர்கள் தங்கள் கையில் இருந்த எல்லா அந்நிய தெய்வங்களையும், தங்கள் காதணிகளையும் யாக்கோபிடத்தில் கொடுத்தார்கள்; யாக்கோபு அவைகளை சீகேம் ஊர் அருகே இருந்த ஒரு கர்வாலி மரத்தின்கீழே புதைத்துப்போட்டான்.
5 Hele aku la lakou: a kau mai la ka weliweli mai ke Akua mai maluna o na kulanakauhale ma kela aoao a keia aoao o lakou, a alualu ole mai la lakou i na keiki o Iakoba.
௫பின்பு பயணம் புறப்பட்டார்கள்; அவர்களைச் சுற்றிலும் இருந்த பட்டணத்தார்களுக்கு தேவனாலே பயங்கரம் உண்டானதால், அவர்கள் யாக்கோபின் மகன்களைப் பின்தொடரவில்லை.
6 A hiki aku la o Iakoba ia Luza, oia hoi o Betela, ma ka aina o Kanaana, oia a me na kanaka a pau me ia.
௬யாக்கோபும் அவனுடன் இருந்த எல்லா மக்களும் கானான் தேசத்திலுள்ள பெத்தேல் என்னும் லூஸுக்கு வந்தார்கள்.
7 Hana iho la ia i kuahu malaila, a kapa iho la ia wahi o i Ele-betela: no ka mea, ilaila ke Akua i ikea ai e ia i kona wa i mahuka ai mai ka maka aku o kona kaikuaana.
௭அங்கே அவன் ஒரு பலிபீடத்தைக்கட்டி, தன் சகோதரனுடைய முகத்திற்குத் தப்பி ஓடிப்போனபோது, அங்கே தனக்கு தேவன் காட்சியளித்ததால், அந்த இடத்திற்கு ஏல்பெத்தேல் என்று பெயரிட்டான்.
8 Make iho la o Debora o ke kahu no Rebeka, a ua kanuia oia malalo o Betela malalo o kekahi laau oka: a ua kapaia ka inoa o ia wahi, o i Alona-bakuta.
௮ரெபெக்காளின் தாதியாகிய தெபொராள் இறந்து, பெத்தேலுக்குச் சமீபமாயிருந்த ஒரு கர்வாலி மரத்தின்கீழ் அடக்கம் செய்யப்பட்டாள்; அதற்கு அல்லோன்பாகூத் என்னும் பெயர் உண்டானது.
9 Ikea hou ke Akua e Iakoba, i kona hoi ana mai, noloko mai o Padanarama, a hoomaikai mai la ia ia.
௯யாக்கோபு பதான் அராமிலிருந்து வந்தபின்பு தேவன் அவனுக்கு மறுபடியும் காட்சியளித்து, அவனை ஆசீர்வதித்து:
10 I mai la ke Akua ia ia, O Iakoba kou inoa: aole e hea hou ia kou inoa o Iakoba, aka, o Iseraela kou inoa: a kapa iho la oia i kona inoa o Iseraela.
௧0“இப்பொழுது உன் பெயர் யாக்கோபு, இனி உன் பெயர் யாக்கோபு எனப்படாமல், இஸ்ரவேல் என்று உனக்குப் பெயராகும் என்று சொல்லி, அவனுக்கு இஸ்ரவேல்” என்று பெயரிட்டார்.
11 I mai la ke Akua ia ia, Owau no ke Akua Mana: a e hoohua ae oe, a e mahuahua; nau mai no kekahi lahuikanaka, a me na lahuikanaka; a e puka mai auanei na alii mailoko mai o kou puhaka;
௧௧பின்னும் தேவன் அவனை நோக்கி: “நான் சர்வவல்லமையுள்ள தேவன், நீ பலுகிப் பெருகுவாயாக; ஒரு தேசமும் பற்பல தேசங்களின் மக்களும் உன்னிலிருந்து உண்டாகும்; ராஜாக்களும் உன் சந்ததியில் பிறப்பார்கள்.
12 A o ka aina a'u i haawi aku ai no Aberahama, a no Isaaka, e haawi aku hoi au nou, a no kau poe mamo mahope ou ka'u e haawi aku ai i ka aina.
௧௨நான் ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் கொடுத்த தேசத்தை உனக்குக் கொடுப்பேன்; உனக்குப்பின் உன் சந்ததிக்கும் இந்த தேசத்தைக் கொடுப்பேன்” என்று சொல்லி,
13 A pii aku la ke Akua iluna mai ona aku la, ma kahi ana i kamailio pu ai me ia.
௧௩தேவன் அவனோடு பேசின இடத்திலிருந்து அவனைவிட்டு எழுந்தருளிப்போனார்.
14 Hooku ae la o Iakoba i eho ma kahi ana i kamailio mai ai me ia, he eho pohaku: a ninini iho la ia i ka mohaiinu maluna; a ninini iho la hoi oia i ka aila maluna.
௧௪அப்பொழுது யாக்கோபு தன்னோடு அவர் பேசின இடத்திலே ஒரு கல்தூணை நிறுத்தி, அதின்மேல் பானபலியை ஊற்றி, எண்ணையையும் ஊற்றினான்.
15 Kapa iho la o Iakoba i ka aina o kahi a ke Akua i olelo mai ai me ia, o Betela.
௧௫தேவன் தன்னோடு பேசின அந்த இடத்திற்கு யாக்கோபு பெத்தேல் என்று பெயரிட்டான்.
16 Hele aku la lakou mai Betela aku, a ua kokoke e hiki i Eperata, haakohi iho la o Rahela, a puua iho i ka hanau keiki ana.
௧௬பின்பு, பெத்தேலை விட்டுப் பயணம் புறப்பட்டார்கள். எப்பிராத்தாவுக்கு வர இன்னும் கொஞ்சம் தூரமிருக்கும்போது, ராகேல் பிள்ளைபெற்றாள்; பிரசவத்தில் அவளுக்குக் கடும்வேதனை உண்டானது.
17 A i kona puua ana, i aku la ka pale keiki ia ia, Mai makau oe, e loaa auanei ia oe keia keiki no hoi.
௧௭அப்போது மருத்துவச்சி அவளைப் பார்த்து: “பயப்படாதே, இந்த முறையும் மகனைப் பெறுவாய்” என்றாள்.
18 A i ka wa e kaili ana kona ea, (no ka mea, make no oia, ) kapa iho la ia i kona inoa, i Benoni: aka, kapa aka la kona makuakane ia ia, o Beniamina.
௧௮மரணகாலத்தில் அவளுடைய உயிர் பிரியும்போது, அவள் அவனுக்கு பெனொனி என்று பெயரிட்டாள்; அவனுடைய தகப்பனோ, அவனுக்கு பென்யமீன் என்று பெயரிட்டான்.
19 Make iho la o Rahela, a kanuia oia ma ke alanui e hele ai i Eperata, oia o Betelehema.
௧௯ராகேல் இறந்து, பெத்லகேம் என்னும் எப்பிராத்தா ஊருக்குப் போகிற வழியிலே அடக்கம் செய்யப்பட்டாள்.
20 Hooku ae la o Iseraela, i pohaku eho maluna o kona he, oia ka eho no ka he o Rahela, a hiki i keia manawa.
௨0அவளுடைய கல்லறையின்மேல் யாக்கோபு ஒரு தூணை நிறுத்தினான்; அதுவே இந்த நாள்வரைக்கும் இருக்கிற ராகேலுடைய கல்லறையின் தூண்.
21 Hele aku la o Iseraela, a kukulu iho la i kona halelewa ma o aku o ka halekiai o Edara.
௨௧இஸ்ரவேல் பயணம்செய்து, ஏதேர் என்கிற கோபுரத்திற்கு அப்புறத்தில் கூடாரம் போட்டான்.
22 A i ka noho ana o Iseraela ma ia aina, hele aka la o Reubena, a moe pu iho la me Bileha me ka haiawahine a kona makuakane; a lohe ae la o Iseraela. O na keikikane a Iakoba he umikumamalua:
௨௨இஸ்ரவேல் அந்தத் தேசத்தில் தங்கிக் குடியிருக்கும்போது, ரூபன் போய், தன் தகப்பனுடைய மறுமனையாட்டியாகிய பில்காளோடு உறவுகொண்டான்; அதை இஸ்ரவேல் கேள்விப்பட்டான்.
23 O na keikikane a Lea; o Reubena ka makahiapo a Iakoba, o Simeona, o Levi, o Iuda, o Isakara, a o Zebuluna.
௨௩யாக்கோபின் மகன்கள் பன்னிரண்டுபேர். யாக்கோபின் மூத்தமகனாகிய ரூபன், சிமியோன், லேவி, யூதா, இசக்கார், செபுலோன் என்பவர்கள் லேயாள் பெற்ற மகன்கள்.
24 O na keikikane a Rahela; o Iosepa, a o Beniamina.
௨௪யோசேப்பு, பென்யமீன் என்பவர்கள் ராகேல் பெற்ற மகன்கள்.
25 O na keikikane a Bileha, a ke kauwawahine a Rahela; o Dana, a o Napetali.
௨௫தாண், நப்தலி என்பவர்கள் ராகேலுடைய பணிவிடைக்காரியாகிய பில்காள் பெற்ற மகன்கள்.
26 O na keikikane a Zilepa, a ke kauwawahine a Lea; o Gada a o Asera. O lakou na keikikane a Iakoba, i hanau nana ma Padanarama.
௨௬காத், ஆசேர் என்பவர்கள் லேயாளின் பணிவிடைக்காரியாகிய சில்பாள் பெற்ற மகன்கள்; இவர்களே யாக்கோபுக்குப் பதான் அராமிலே பிறந்த மகன்கள்.
27 Hele aku la o Iakoba i kona makuakane ia Isaaka ma Mamere, ma ke kulanakauhale o Areba, (oia o Heberona, ) kahi i noho ai o Aberahama a me Isaaka.
௨௭பின்பு, யாக்கோபு அர்பாவின் ஊராகிய மம்ரேக்கு தன் தகப்பனாகிய ஈசாக்கினிடத்தில் வந்தான்; அது ஆபிரகாமும் ஈசாக்கும் தங்கியிருந்த எபிரோன் என்னும் ஊர்.
28 A o na la o Isaaka, hookahi haneri makahiki a me kanawalu.
௨௮ஈசாக்கு வயது முதிர்ந்தவனும் பூரண ஆயுசுமுள்ளவனாகி, 180 வருடங்கள் உயிரோடிருந்து,
29 Kuu aku la o Isaaka i ka uhane, a make iho la, a ua huiia'ku ia me kona poe kanaka: ua elemakule ia, a nui loa kona mau la: na kana mau keikikane na Esau ma laua o Iakoba oia i kanu.
௨௯உயிர்பிரிந்து இறந்து, தன் ஜனத்தாரோடு சேர்க்கப்பட்டான். அவனுடைய மகன்களாகிய ஏசாவும் யாக்கோபும் அவனை அடக்கம்செய்தார்கள்.