< Ezekiela 6 >
1 HIKI mai la hoi ka olelo a Iehova ia'u, i mai la,
௧யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
2 E ke keiki a ke kanaka, e haliu i kou wahi maka i na mauna o ka Iseraela, a e wanana ku e ia lakou.
௨மனிதகுமாரனே, நீ இஸ்ரவேலின் மலைகளுக்கு நேராக உன்னுடைய முகத்தைத் திருப்பி, அவைகளுக்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் சொல்லிச் சொல்லவேண்டியது என்னவென்றால்,
3 A e olelo aku, E na mauna o ka Iseraela, e hoolohe i ka olelo a Iehova ka Haku, ke i mai nei Iehova ka Haku i na mauna a me na puu, i na muliwai, a me na awawa, penei; Eia hoi, owau, owau hoi ke lawe ae nei i ka pahikaua maluna o oukou, a e hookai au i ko oukou mau wahi kiekie.
௩இஸ்ரவேலின் மலைகளே, யெகோவாகிய ஆண்டவரின் வார்த்தையைக் கேளுங்கள்; யெகோவாகிய ஆண்டவர் மலைகளையும், குன்றுகளையும், ஓடைகளையும், பள்ளத்தாக்குகளையும், நோக்கி: இதோ, உங்கள்மேல் நான், நானே வாளை வரச்செய்து, உங்களுடைய மேடைகளை அழித்துப்போடுவேன்.
4 A e neoneo ko oukou mau kuahu, a e wawahiia ko oukou mau kii, a e hoolei ilalo au i ko oukou poe kanaka lukuia imua o ko oukou mau akuakii.
௪உங்களுடைய பலிபீடங்கள் பாழாக்கப்பட்டு, உங்களுடைய சிலைகள் தகர்க்கப்படும்; உங்களில் கொலைசெய்யப்படுகிறவர்களை உங்களுடைய அசுத்தமான சிலைகளுக்கு முன்பாக விழச்செய்வேன்.
5 A e hoomoe iho au i na kupapau o na mamo a Iseraela ma ke alo o ko lakou mau akuakii, a e hooleilei au i ko oukou mau iwi a puni ko oukou mau kuahu.
௫நான் இஸ்ரவேல் மக்களுடைய பிரேதங்களை அவர்களுடைய அசுத்தமான சிலைகளின் முன்னே கிடக்கச்செய்து, உங்களுடைய பலிபீடங்களைச் சுற்றிலும் உங்களுடைய எலும்புகளைச் சிதறச்செய்வேன்.
6 Ma ko oukou mau wahi e noho ai a pau, e hooneoneoia ko oukou mau kulanakauhale, a neoneo hoi ko oukou mau wahi kiekie; i hoohioloia'i ko oukou mau kuahu a neoneo, a e wawahiia hoi ko oukou mau akuakii a oki loa, a e kuaia hoi ko oukou mau kii, a e haalele loa ia ka oukou mau hana.
௬உங்கள் பலிபீடங்கள் அழிவும் பாழுமாகும்படிக்கும், உங்களுடைய அசுத்தமான சிலைகள் தகர்க்கப்பட்டு, ஓய்ந்து, உங்களுடைய சிலைகள் வெட்டப்பட்டு, உங்களுடைய செயல்கள் குலைந்துபோகும்படிக்கும், உங்களுடைய எல்லா குடியிருப்புகளிலுமுள்ள பட்டணங்கள் அழிவும் உங்களுடைய மேடைகள் பாழுமாகும்.
7 A e haule ka poe e pepehiia iwaenakonu o oukou, a e ike no oukou owau no Iehova.
௭கொலைசெய்யப்பட்டவர்கள் உங்களுடைய நடுவில் விழுவார்கள்; அப்பொழுது நான் யெகோவா என்று அறிந்துகொள்வீர்கள்.
8 Aka, e hookoe au i ke koena, no oukou kekahi poe e pakele i ka pahikaua iwaena o na lahuikanaka, i ka wa e hoopuehuia'i oukou ma na aina.
௮நீங்கள் தேசங்களில் சிதறடிக்கப்படும்போது, அந்நியஜாதிகளுக்குள்ளே பட்டயத்திற்குத் தப்புவோரை உங்களுக்கு மீதியாக வைப்பேன்.
9 A o ko oukou poe i pakele, e hoomanao lakou ia'u iwaena o na lahuikanaka, kahi e lawepioiaku ai lakou, no ka mea, e hanapepe au i ko lakou naau moe kolohe, a me ko lakou mau maka i hele moe kolohe mamuli o ko lakou mau akuakii; a e hoowahawaha lakou ia lakou iho no na hewa a lakou i hana'i i ko lakou mau mea ioaina a pau.
௯என்னை விட்டு கெட்டுபோகிற இருதயத்தைக்குறித்தும், தங்களுடைய அசுத்தமான சிலைகளின் பின்னே கெட்டு போகிற தங்களுடைய கண்களைக்குறித்தும் மனவேதனையடைந்தேன் என்று உங்களில் தப்பிப்போன அவர்கள் தாங்கள் சிறைப்பட்டிருக்கும் அந்நியஜாதிகளுக்குள்ளே என்னை நினைத்து, தங்களுடைய எல்லா அருவருப்புகளினாலும் தாங்கள் செய்த பொல்லாப்புகளுக்காக தங்களையே வெறுத்து,
10 A e ike lakou, owau no Iehova, aole hoi he mea ole ka'u olelo ana, e hana au no lakou i keia mea e poino ai.
௧0இந்தத் தீங்குகளையெல்லாம் தங்களுக்கு சம்பவிக்கச்செய்வேன் என்று யெகோவாகிய நான் வீணாகச் சொன்னதில்லையென்று அறிந்துகொள்வார்கள் என்றார்.
11 Ke i mai nei Iehova ka Haku penei; E pai me kou lima, a e hahi me kou wawae, a e olelo aku, Auwe na mea inaina a pau o ka ohana a Iseraela! no ka mea, e haule lakou i ka pahikaua a me ka wi, a me ka mai ahulau.
௧௧யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: நீ உன்னுடைய கையில் அடித்து, உன்னுடைய காலால் தட்டி, இஸ்ரவேல் வம்சத்தாருடைய எல்லா பொல்லாத அருவருப்புகளுக்காகவும் ஐயோ, என்று சொல்; அவர்கள் பட்டயத்தாலும் பஞ்சத்தாலும் கொள்ளைநோயாலும் விழுவார்கள்.
12 O ka mea ma kahi loihi aku e make ia i ka mai ahulau; a o ka mea kokoke mai, e haule ia i ka pahikaua; a o ka mea i koe mai a hoopuniia, e make ia i ka wi: pela e hooko ai au i ko'u ukiuki maluna o lakou.
௧௨தூரத்தில் இருக்கிறவன் கொள்ளைநோயால் மரிப்பான்; அருகில் இருக்கிறவன் வாளால் விழுவான்; மீதியாக இருந்து, முற்றுகைபோடப்பட்டவன் பஞ்சத்தால் மரிப்பான்; இப்படி அவர்களில் என்னுடைய கடுங்கோபத்தை தீர்த்துக்கொள்ளுவேன்.
13 A e ike no oukou, owau no Iehova i ka wa e waiho ai ko lakou poe i pepehiia iwaena o ko lakou mau akuakii a puni ka lakou mau kuahu, maluna o na puu kiekie a pau, a ma na piko a pau o na mauna, a malalo iho o kela laau uliuli keia laau uliuli, a malalo ae o na laau oka paapu a pau, kahi i haawi ai lakou i ka lakou mea ala ono i ko lakou mau akuakii a pau.
௧௩அவர்கள் தங்களுடைய அசுத்தமான எல்லா சிலைகளுக்கும் இனியவாசனையான தூபத்தைக் காட்டின இடங்களாகிய உயர்ந்த எல்லா மேடுகளிலும், மலைகளுடைய எல்லா சிகரங்களிலும், பச்சையான எல்லா மரங்களின்கீழும், தழைத்திருக்கிற சகல கர்வாலி மரங்களின்கீழும், அவர்களுடைய அசுத்தமான சிலைகளின் நடுவிலும் அவர்களுடைய பலிபீடங்களைச் சுற்றிலும், அவர்களில் கொலைசெய்யப்பட்டவர்கள் கிடக்கும்போது, நான் யெகோவா என்று அறிந்துகொள்வார்கள்.
14 Pela e kau aku ai au i ko'u lima maluna o lakou, a e hooneoneo ai au i ka aina, oia, e oi aku kona neoneo ana mamua o ko ka waonahele mawaena oauei a me Dibelata, ma ko lakou wahi i noho ai a pau; a e ike lakou owau no Iehova.
௧௪நான் என்னுடைய கையை அவர்களுக்கு விரோதமாக நீட்டி, அவர்களுடைய எல்லா வீடுகளுமுள்ள தேசத்தை அழித்து, அதைத் திப்லாத்தின் வனாந்திரத்தைவிட அதிகமாகப் பாழாக்குவேன், அப்பொழுது நான் யெகோவா என்று அறிந்துகொள்வார்கள் என்றார்.