< Pukaana 13 >

1 OLELO mai la o Iehova ia Mose, i mai la,
யெகோவா மோசேயை நோக்கி:
2 E hoolaa mai i na hiapo a pau na'u, o na mea a pau o na mamo a Iseraela i hanau mua o ka ke kanaka, a o ka ka holoholona, na'u no ia.
“இஸ்ரவேலர்களுக்குள் மனிதர்களிலும் மிருகஜீவன்களிலும் கர்ப்பம்திறந்து பிறக்கிற, முதற்பேறான அனைத்தையும் எனக்குப் பரிசுத்தப்படுத்து; அது என்னுடையது” என்றார்.
3 I aku la o Mose i na kanaka, E hoomanao oukou i keia la a oukou i puka mai ai, mailoko mai o Aigupita, a mailoko ae o ka hale hooluhi; no ka mea, ua lawe mai nei o Iehova ia oukou mailoko mai o ia wahi, me ka lima ikaika: aole e aiia ka berena hu.
அப்பொழுது மோசே மக்களை நோக்கி: “நீங்கள் அடிமைத்தன வீடாகிய எகிப்திலிருந்து புறப்பட்ட இந்த நாளை நினையுங்கள்; யெகோவா பலத்த கையினால் உங்களை இந்த இடத்திலிருந்து புறப்படச்செய்தார்; ஆகையால், நீங்கள் புளித்த அப்பம் சாப்பிடவேண்டாம்.
4 I keia la oukou i hele mai ai, i ka malama o Abiba.
ஆபீப் மாதத்தின் இந்த நாளிலே நீங்கள் புறப்பட்டீர்கள்.
5 A i ka wa a Iehova e lawe aku ai ia oe iloko i ka aina o ka Kanaana, a o ka Heta, a o ka Amora, a o ka Hiva a me ka Iebusa, i kahi ana i hoohiki ai i kou poe kupuna, e haawi mai oia nou, he aina e kahe ana o ka waiu a me ka meli; alaila, i keia malama, e hana oe i keia oihana.
ஆகையால், யெகோவா உனக்குக் கொடுப்பேன் என்று உன்னுடைய முன்னோர்களுக்கு ஆணையிட்டதும், பாலும் தேனும் ஓடுகிறதுமான தேசமாகிய கானானியர்கள், ஏத்தியர்கள், எமோரியர்கள், ஏவியர்கள், எபூசியர்கள் என்பவர்களுடைய தேசத்திற்கு உன்னை வரச்செய்யும் காலத்தில், நீ இந்த மாதத்திலே இந்த ஆராதனையை செய்வாயாக.
6 Ehiku mau la au e ai ai i ka berena hu ole, a i ka hiku o ka la, he ahaaina no Iehova.
புளிப்பில்லா அப்பத்தை ஏழுநாட்கள்வரை சாப்பிடவேண்டும்; ஏழாம்நாளிலே யெகோவாவுக்குப் பண்டிகை அனுசரிக்கப்படவேண்டும்.
7 I na la ehiku e aiia ka berena hu ole; aole loa e ikea ka berena hu me oe, aole hoi e ikea ka mea hu me oe, i kou mau wahi a pau.
அந்த ஏழுநாட்களும் புளிப்பில்லா அப்பம் சாப்பிடவேண்டும்; புளிப்புள்ள அப்பம் உன்னிடத்திலே காணப்படவேண்டாம்; உன்னுடைய எல்லைக்குள் எங்கும் புளித்தமாவும் உன்னிடத்தில் காணப்படவேண்டாம்.
8 A e hoike aku oe i kau keikikane i kela la, i ka i ana aku, No ka mea keia a Iehova i hana mai ai ia'u, i ko'u puka ana mai iwaho o Aigupita.
அந்த நாளில் நீ உன்னுடைய பிள்ளைகளை நோக்கி: நான் எகிப்திலிருந்து புறப்படும்போது, யெகோவா எனக்குச் செய்ததற்காக இப்படி நடப்பிக்கப்படுகிறது என்று சொல்.
9 He hoailona no ia nou ma kou lima, he mea hoomanao no hoi mawaena o kou mau maka, i mau ke kanawai o Iehova ma kou waha; no ka mea, me ka lima ikaika ka Iehova i lawe mai ai ia oe mai Aigupita mai.
யெகோவாவின் நியாயப்பிரமாணம் உன்னுடைய வாயிலிருக்கும்படி, இது உன்னுடைய கையிலே ஒரு அடையாளமாகவும் உன்னுடைய கண்களின் நடுவே நினைப்பூட்டுதலாகவும் இருப்பதாக; பலத்த கையினால் யெகோவா உன்னை எகிப்திலிருந்து புறப்படச்செய்தார்;
10 No ia mea, e malama oe i keia oihana, i kona manawa, ia makahiki aku, ia makahiki aku.
௧0ஆகையால், நீ வருடந்தோறும் குறித்த காலத்தில் இந்த நியாயத்தை அனுசரித்து வரவும்.
11 Eia hoi kekahi, a hiki i ka wa a Iehova e lawe aku ai ia oe i ka aina o ka Kanaana, e like me kana i hoohiki mai ai ia oe, a i kou poe kupuna, a e haawi mai ana hoi nou;
௧௧மேலும், “யெகோவா உனக்கும் உன்னுடைய முன்னோர்களுக்கும் ஆணையிட்டபடியே, உன்னைக் கானானியரின் தேசத்திலே வரச்செய்து, அதை உனக்குக் கொடுக்கும்போது,
12 Alaila e hoolaa ae oe no Iehova i na mea a pau i hanau mua, a o na hiapo a pau a na holoholona ou; no Iehova no na kane.
௧௨கர்ப்பந்திறந்து பிறக்கும் அனைத்தையும், உனக்கு இருக்கும் மிருகஜீவன்களின் முதல்பிறப்பு அனைத்தையும், யெகோவாவுக்கு ஒப்புக்கொடுப்பாயாக; அவைகளிலுள்ள ஆண்கள் யெகோவாவுடையவைகள்.
13 A o na keiki mua a pau a ka hoki, e panai aku oe no ia i keikihipa; a i ole oe e panai, alaila e uhai i kona a-i. A o na keiki mua a pau a kanaka, iwaena o kau poe keiki, o lakou kau e panai aku.
௧௩கழுதையின் முதற்பிறப்பையெல்லாம் ஒரு ஆட்டுக்குட்டியால் மீட்டுக்கொள்வாயாக; மீட்காவிட்டால், அதின் கழுத்தை உடைத்துப்போடு. உன்னுடைய பிள்ளைகளில் முதற்பேறான எல்லோரையும் மீட்டுக்கொள்.
14 Eia hoi, a i ka wa e ninau mai ai kau keikikane mahope aku nei, e i mai ana, Heaha keia? alaila e hai aku oe ia ia, Me ka lima ikaika ka Iehova i lawe mai ai ia makou mailoko mai o Aigupita, a mailoko mai hoi o ka hale hooluhi;
௧௪பிற்காலத்தில் உன்னுடைய மகன்: இது என்ன என்று உன்னைக் கேட்டால்; நீ அவனை நோக்கி: யெகோவா எங்களைப் பலத்த கையினால் அடிமைத்தன வீடாகிய எகிப்திலிருந்து புறப்படச்செய்தார்.
15 A i ka wa i aua ai o Parao i ke kuu mai ia makou, alaila pepehi iho la o Iehova i na hiapo a pau ma ka aina o Aigupita, o ka hiapo a ke kanaka a me ka hiapo a ka holoholona: nolaila ka'u e mohai aku nei i na kane a pau i hanau mua: aka, o na hiapo a pau a ka'u mau keiki, oia ka'u e hoolapanai aku.
௧௫எங்களை விடாதபடி, பார்வோன் கடினப்பட்டிருக்கும்போது, யெகோவா எகிப்து தேசத்தில் மனிதரின் முதல்பிள்ளைகள்முதல் மிருகஜீவன்களின் முதற்பிறப்புகள்வரையும் உண்டாயிருந்த முதற்பிறப்புகள் யாவையும் கொன்றுபோட்டார்; ஆகையால், கர்ப்பந்திறந்து பிறக்கும் ஆண்களையெல்லாம் நான் யெகோவாவுக்குப் பலியிட்டு, என்னுடைய பிள்ளைகளில் முதற்பிறப்புகள் அனைத்தையும் மீட்டுக்கொள்ளுகிறேன்.
16 A e lilo keia mea i hoailona ma kou lima, a he mea hoomanao hoi mawaena o kou mau maka; no ka mea, me ka lima ikaika i lawe mai ai o Iehova ia kakou mawaho mai o Aigupita.
௧௬யெகோவா எங்களைப் பலத்த கையினால் எகிப்திலிருந்து புறப்படச்செய்வதற்கு, இது உன்னுடைய கையில் அடையாளமாகவும், உன்னுடைய கண்களின் நடுவே ஞாபகக்குறியாகவும் இருப்பதாக என்று சொல்வாயாக” என்றான்.
17 A i ka wa i hookuu mai ai o Parao i na kanaka, aole i alakai mai ke Akua ia lakou ma ke ala o ka aina o ka poe Pilisetia, oia no nae ke ala kokoke; no ka mea, i iho la ke Akua, E makau paha na kanaka, ke ike lakou i ke kaua, a hoi hou lakou i Aigupita.
௧௭பார்வோன் மக்களைப் போகவிட்டபின்பு: மக்கள் யுத்தத்தைக் கண்டால் மனமடிந்து, எகிப்திற்குத் திரும்புவார்கள் என்று சொல்லி; பெலிஸ்தர்களின் தேசத்தின் வழியாகப் போவது அருகாமையாக இருந்தாலும், தேவன் அவர்களை அந்த வழியாக நடத்தாமல்,
18 Aka, alakai puni ae la ke Akua i na kanaka ma ke ala o ka. waonahele o ke Kaiula: hele makaukau mai la na mamo a Iseraela, mai ka aina o Aigupita mai.
௧௮செங்கடலின் வனாந்திர வழியாக மக்களைச் சுற்றிப் போகச்செய்தார். இஸ்ரவேல் மக்கள் எகிப்து தேசத்திலிருந்து கோத்திரம் கோத்திரமாக புறப்பட்டுப்போனார்கள்.
19 Lawe pu mai la o Mose me ia i na iwi o Iosepa; no ka mea, ua kauoha ikaika mai oia i na mamo a Iseraela, i ka i ana mai, He oiaio no, e hele mai ke Akua e ike ia oukou; a e lawe aku hoi oukou i ko'u mau iwi me oukou.
௧௯மோசே தன்னோடு யோசேப்பின் எலும்புகளை எடுத்துக்கொண்டு போனான். தேவன் நிச்சயமாக உங்களைச் சந்திப்பார்; அப்பொழுது உங்களுடன் என்னுடைய எலும்புகளை இந்த இடத்திலிருந்து கொண்டுபோங்கள் என்று யோசேப்பு சொல்லி, இஸ்ரவேலர்களை உறுதியாக ஆணையிடும்படிச் செய்திருந்தான்.
20 Hele aku la lakou mai Sukota aku, a hoomoana ma Etama, ma ke kihi o ka waonahele.
௨0அவர்கள் சுக்கோத்திலிருந்து பயணப்பட்டு, வனாந்திரத்தின் ஓரமாக ஏத்தாமிலே முகாமிட்டார்கள்.
21 Hele aku la o Iehova mamua o lakou maloko o ke kia ao i ke ao, e alakai ia lakou ma ke ala; a maloko o ke kia ahi i ka po, e hoomalamalama mai ia lakou; i hele lakou i ke ao a me ka po.
௨௧அவர்கள் இரவும் பகலும் வழிநடக்கக்கூடும்படி, யெகோவா பகலில் அவர்களை வழிநடத்த மேகத்தூணிலும், இரவில் அவர்களுக்கு வெளிச்சம் காட்ட அக்கினித்தூணிலும் அவர்களுக்கு முன்பு சென்றார்.
22 Aole ia i lawe aku i ke kia ao i ke ao, aole hoi i ke kia ahi i ka po, mai ke alo o na kanaka aku.
௨௨பகலிலே மேகத்தூணிலும், இரவிலே அக்கினித்தூணிலும் மக்களிடத்திலிருந்து விலகிப்போகவில்லை.

< Pukaana 13 >