< Kanawailua 19 >
1 A IA hoopau o Iehova kou Akua i na lahuikanaka, no lakou ka aina a Iehova kou Akua e haawi mai ai nou, a lilo ko lakou wahi nou, a e noho iho oe ma ko lakou kulanakauhale, a maloko hoi o ko lakou mau hale;
௧“உன் தேவனாகிய யெகோவா உனக்குக் கொடுக்கும் தேசத்தின் மக்களை அவர் வேரற்றுப்போகச்செய்வதினால், நீ அவர்கள் தேசத்தைச் சொந்தமாக்கிக்கொண்டு, அவர்கள் பட்டணங்களிலும் அவர்கள் வீடுகளிலும் குடியேறும்போது,
2 Alaila e hookaawale oe i na kulanakauhale ekolu nou iwaena o kou aina a Iehova kou Akua e haawi lilo mai ai nou.
௨நீ உன் தேவனாகிய யெகோவா உனக்குச் சொந்தமாகக் கொடுக்கும் உன் தேசத்தின் நடுவிலே, உனக்காக மூன்று பட்டணங்களைப் பிரித்துவைக்கக்கடவாய்.
3 E hoomakaukau i alanui nou, a o kou aina a Iehova kou Akua i hoolilo mai ai nou, o kau ia e mahele i na mokuna ekolu, i holo ai na pepehi kanaka a pau ilaila.
௩கொலைசெய்தவன் எவனும் அங்கே ஓடிப்போகும்படி உன் தேவனாகிய யெகோவா உனக்குச் சொந்தமாகக் கொடுக்கப்போகிற உன் தேசத்தின் எல்லையை நீ மூன்று பங்காகப் பகுத்து அதற்கு வழியை உண்டாக்குவாய்.
4 Eia ke ano o ka pepehi kanaka e holo ai ilaila i ola ia: o ka mea pepehi i kona hoalauna me ka ike ole, aole ia i inaina aku ia ia mamua;
௪கொலைசெய்து அங்கே ஓடிப்போய், உயிரோடிருக்கத்தக்கவன் யாரென்றால்: தான் முன்னே பகைத்திராத பிறனொருவனை மனதறியாமல் கொன்றவன்தானே.
5 A o ka mea e hele aku i ka ululaau me kona hoalauna e kua laau, a hahau iho kona lima me ke koilipi e oki i ka laau, a hemo aku la ke koilipi mai ke au aku, a pa i kona hoalauna a make ia, e holo aku ia i kekahi o ia mau kulanakauhale, a ola;
௫ஒருவன் விறகுவெட்ட மற்றொருவனுடன் காட்டிற்குப்போய், மரத்தை வெட்டத் தன் கையிலிருந்த கோடரியை ஓங்கும்போது, இரும்பானது காம்பைவிட்டுக் கழன்று மற்றவன்மேல் பட்டதினால் அவன் இறந்துபோனால்,
6 O hahai auanei ka hoopai koko mahope o ka pepehi kanaka i kona wa e ukiuki ai kona naau, no ka mea, ua loihi ke ala, a pepehi ia ia; aole nae ona hewa e make ai, no ka mea, aole ia i inaina aku ia ia mamua.
௬இரத்தப்பழிக்காரன் தன் மனம் எரியும்போது கொலைசெய்தவனை வழி தூரமாயிருக்கிறதினாலே பின்தொடர்ந்து பிடித்து, அவனைக் கொன்றுபோடாதபடி, இவன் அந்தப் பட்டணங்கள் ஒன்றில் ஓடிப்போய் உயிரோடிருப்பானாக; இவன் அவனை முன்னே பகைக்காததினால், இவன்மேல் சாவுக்கான குற்றம் சுமரவில்லை.
7 No ia mea, ke kauoha aku nei au ia oe, i ka i ana'ku, E hookaawale nou i na kulanakauhale ekolu.
௭இதினிமித்தம் மூன்று பட்டணங்களை உனக்காகப் பிரித்துவைக்கக்கடவாய் என்று நான் உனக்குக் கட்டளையிடுகிறேன்.
8 Ina e hoopalahalaha o Iehova kou Akua i kou mokuna e like me kana i hoohiki ai i kou mau kupuna, a haawi ia oe i ka aina a pau ana i olelo ni e haawi i kou mau kupuna:
௮“நீ உன் தேவனாகிய யெகோவாவிடத்தில் அன்புசெலுத்தி, எந்நாளும் அவர் வழிகளில் நடப்பதற்காக, இன்று நான் உனக்குக் கற்பிக்கிற இந்த எல்லாக் கற்பனைகளையும் கைக்கொண்டு அதின்படி செய்து,
9 Ina paha oe e malama i keia mau kauoha a pau e hana aku ia mea a'u e kauoha aku nei ia oe i keia la, e aloha aku in Iehova kou Akua, a e hele ma kona aoao i na la a pau, alaila e hookaawale oe nou i na kulanakauhale hou ekolu me kela mau mea ekolu:
௯உன் தேவனாகிய யெகோவா உன் முற்பிதாக்களுக்கு வாக்களித்தபடியே, அவர் உன் எல்லையை விஸ்தாரமாக்கி, உன் முற்பிதாக்களுக்குக் கொடுப்பேன் என்று சொன்ன தேசம் முழுவதையும் உனக்குக் கொடுத்தால்,
10 I ole e hookaheia ke koko hala ole iloko o kou aina a Iehova kou Akua i hoolilo mai ai nou, a maluna ou ke koko.
௧0அப்பொழுது உன் தேவனாகிய யெகோவா உனக்குச் சொந்தமாகக் கொடுக்கும் உன் தேசத்தில் குற்றமில்லாத இரத்தம் சிந்தப்படுகிறதினால் உன்மேல் இரத்தப்பழி சுமராதபடி, இந்த மூன்று பட்டணங்களும் அல்லாமல் இன்னும் மூன்று பட்டணங்களை ஏற்படுத்தக்கடவாய்.
11 Aka, ina e inaina aku kekahi kanaka i kona hoalauna, a halua ia ia, a popoi ia ia, a hahau ia ia a make ia, a holo aku ia iloko o kekahi o keia mau kulanakauhale:
௧௧“ஒருவன் பிறனொருவனைப் பகைத்து, அவனுக்கு மறைந்திருந்து, அவனுக்கு விரோதமாக எழும்பி, அவன் சாகும்படி அவனை அடித்து, இந்தப் பட்டணங்களில் ஒன்றில் ஓடிப்போயிருப்பானாகில்,
12 Alaila e hoouna aku na lunakahiko o kona kulanakauhale, a e lawe ia ia mai laila mai. a haawi aku ia ia iloko o ka lima o ka mea hoopai koko, i make ai oia.
௧௨அந்தப் பட்டணத்தின் மூப்பர்கள் ஆள் அனுப்பி, அங்கேயிருந்து அவனைக் கொண்டுவரும்படி செய்து, அவன் சாகும்படி அவனை இரத்தப்பழி வாங்குகிறவன் கையில் ஒப்புக்கொடுக்கக்கடவர்கள்.
13 Mai minamina kou maka ia ia; aka, e huikala aku oe i ke koko hala ole mai ka Iseraela aku, i pomaikai ai oe.
௧௩உன் கண் அவனுக்கு இரங்கவேண்டாம்; குற்றமில்லாத இரத்தப்பழியை இஸ்ரவேலை விட்டு விலக்குவாயாக; அப்பொழுது நீ நன்றாயிருப்பாய்.
14 Mai hoonee aku oe i ka palena aina o kou hoalauna a ka poe kahiko i hoonoho ai ma kou aina, au i loaa ai ma ka aina a Iehova kou Akua e hoolilo mai ai nou.
௧௪“உன் தேவனாகிய யெகோவா உனக்குச் சொந்தமாகக் கொடுக்கும் தேசத்தில் உன்னிடத்திலிருக்கும் காணியாட்சியிலே முன்னோர்கள் குறித்திருக்கிற பிறனுடைய எல்லையை எடுத்துப்போடாதே.
15 Mai ku mai ka mea hoike hookahi i ke kanaka, no kekahi hala, a no kekahi hewa i na hewa a pau ana i hana hewa ai: ma ka waha o na mea hoike elua, a o na mea hoike ekolu paha, e hookupaaia'i ia mea.
௧௫“ஒருவன் எந்த அக்கிரமத்தையாவது எந்தப் பாவத்தையாவது செய்தான் என்று சொல்லப்பட்டால், ஒரே சாட்சியினால் நியாயந்தீர்க்கக்கூடாது; இரண்டு மூன்று சாட்சிகளுடைய வாக்கினாலே காரியம் நிரூபிக்கப்படவேண்டும்.
16 Ina paha e ku mai ka mea hoike hewa i kekahi kanaka, a hoike wahahee ia ia;
௧௬ஒருவன்மேல் ஒரு குற்றத்தைச் சுமத்தும்படி, ஒரு பொய்ச்சாட்சிக்காரன் அவன்மேல் சாட்சி சொல்ல எழும்பினால்,
17 Alaila, o laua, na mea hoopaapaa, e ku imua o Iehova, imua o na kahuna a me na lunakanawai e noho ana ia manawa;
௧௭வழக்காடுகிற இருவரும் யெகோவாவுடைய சந்நிதியில் அக்காலத்தில் இருக்கும் ஆசாரியர்களுக்கும் நியாயாதிபதிகளுக்கும் முன்பாக வந்து நிற்பார்களாக.
18 A e imi pono na lunakanawai: aia hoi, he wahahee ka mea nana i hoike, a ua hoike wahahee i kona hoahanau:
௧௮அப்பொழுது நியாயாதிபதிகள் நன்றாக விசாரணை செய்யக்கடவர்கள்; சாட்சி கள்ளச்சாட்சி என்றும், தன் சகோதரன்மேல் அபாண்டமாகக் குற்றம்சுமத்தினான் என்றும் கண்டால்,
19 Alaila e hana aku oukou ia ia e like me kana i manao ai e hana aku i kona hoahanau: a e lawe aku oe i ka hewa mai ou aku la.
௧௯அவன் தன் சகோதரனுக்குச் செய்ய நினைத்தபடியே அவனுக்குச் செய்யக்கடவீர்கள்; இவ்விதமாகத் தீமையை உன் நடுவிலிருந்து விலக்குவாயாக.
20 A e hoolohe ka poe i koe, a makau hoi, aole e hana hou lakou e like me keia hewa iwaena o oukou.
௨0மற்றவர்களும் அதைக் கேட்டுப் பயந்து, இனி உங்களுக்குள்ளே அப்படிப்பட்ட தீமையைச் செய்யாதிருப்பார்கள்.
21 Mai minamina kou maka; he ola no ke ola; he maka no ka maka; he niho no ka niho; he lima no ka lima; he wawae no ka wawae.
௨௧உன் கண் அவனுக்கு இரங்கவேண்டாம்; ஜீவனுக்கு ஜீவன், கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல், கைக்குக் கை, காலுக்குக் கால் கொடுக்கப்படவேண்டும்.