< Ayuba 9 >

1 Sai Ayuba ya amsa,
அப்பொழுது யோபு மறுமொழியாக சொன்னது:
2 “Lalle, na san wannan gaskiya ne. Amma ta yaya mutum zai iya zama mai adalci a gaban Allah?
“நீ சொல்வது உண்மையென நான் அறிவேன். மனிதன் எப்படி இறைவனுக்கு முன்பாக நீதிமானாக இருக்கமுடியும்?
3 Ko da mutum yana so yă yi gardama da shi, ba zai taɓa amsa masa ba ko da sau ɗaya cikin dubu.
இறைவனோடு மனிதன் வாதாட விரும்பினால், அவர் கேட்கும் ஆயிரத்தில் ஒரு கேள்விக்குக்கூட அவனால் பதிலளிக்க முடியாது.
4 Hikimarsa tana da zurfi, ikonsa yana da yawa. Wane ne ya taɓa yin faɗa da shi har ya yi nasara?
இறைவன் இருதயத்தில் ஞானமுள்ளவர், வல்லமையில் பலமுள்ளவர். அவரை எதிர்த்து சேதமின்றித் தப்பினவன் யார்?
5 Yana matsar da manyan duwatsu kafin su sani kuma yana juya su cikin fushinsa.
அவர் மலைகளை அவைகளுக்குத் தெரியாமலே நகர்த்துகிறார்; அவர் தன் கோபத்தில் அவற்றைப் புரட்டிப் போடுகிறார்.
6 Yana girgiza ƙasa, yana girgiza harsashenta.
அவர் பூமியின் தூண்கள் அதிரும்படி அதை அதின், இடத்திலிருந்து அசையவைக்கிறார்.
7 Yana magana da rana sai ta ƙi yin haske; yana hana taurari yin haske.
அவர் கட்டளையிட்டால், சூரியனும் ஒளி கொடாதிருக்கும்; நட்சத்திரங்களின் ஒளியையும் மூடி மறைக்கிறார்.
8 Shi kaɗai ya shimfiɗa sammai ya kuma yi tafiya a kan raƙuman ruwan teku.
அவர் தனிமையாகவே வானங்களை விரித்து, கடல் அலைகளின்மேல் மிதிக்கிறார்.
9 Shi ne ya halicci Mafarauci da Kare da Zomo, da Kaza, da’Ya’yanta da tarin taurari a sama, da taurarin kudu.
சப்தரிஷி, மிருகசீரிடம், கார்த்திகை நட்சத்திரங்களையும், தென்திசை நட்சத்திரக் கூட்டங்களையும் படைத்தவர் அவரே.
10 Yana yin abubuwan banmamaki waɗanda ba a iya ganewa, mu’ujizai waɗanda ba a iya ƙirgawa.
அவர் ஆழ்ந்தறிய முடியாத அதிசயங்களையும் அவர் கணக்கிடமுடியாத அற்புதங்களையும் செய்கிறார்.
11 Ba na iya ganinsa lokacin da ya wuce ni; ba na sani ya wuce lokacin da ya wuce.
அவர் என்னைக் கடந்து செல்லும்போது, அவரை என்னால் காணமுடியாது; அவர் என் அருகில் வரும்போது, அவரை என்னால் பார்க்க முடியாது.
12 Wane ne ya isa yă hana shi in ya ƙwace abu? Wa zai ce masa, ‘Me kake yi?’
அவர் எதையும் பறித்தெடுத்தால் அதை யாரால் நிறுத்த முடியும்? ‘நீர் என்ன செய்கிறீர்?’ என யாரால் அவரிடம் கேட்க முடியும்?
13 Allah ba ya danne fushinsa; ko dodannin ruwan da ake kira ayarin Rahab ya tattake su.
இறைவன் தமது கோபத்தைக் கட்டுப்படுத்தவில்லை; ராகாப் என்ற பெரிய விலங்கைச் சேர்ந்தவர்களும் அவருடைய காலடியில் அடங்கிக் கிடந்தனர்.
14 “Ta yaya zan iya yin faɗa da shi? Ina zan iya samun kalmomin da zan yi gardama da shi?
“இப்படியிருக்க, நான் அவரோடு எப்படி விவாதம் செய்வேன்? அவரோடு வாதாடும் வார்த்தைகளை நான் எங்கே கண்டுபிடிப்பேன்?
15 Ko da yake ba ni da laifi, ba zan iya amsa masa ba; sai dai roƙon jinƙai zan iya yi ga mahukuncina.
நான் நீதிமானாயிருந்தாலும் என்னால் அவருடன் வழக்காட முடியாது; எனது நீதிபதியிடம் இரக்கத்திற்காக மன்றாடத்தான் என்னால் முடியும்.
16 Ko da na yi kira gare shi ya amsa mini, ban yarda cewa zai saurare ni ba.
அவர் என் அழைப்பிற்கு இணங்கினாலும், என் விண்ணப்பத்திற்குச் செவிகொடுப்பார் என நான் நம்பவில்லை.
17 Zai sa hadari yă danne ni yă ƙara mini ciwona ba dalili.
அவர் என்னைப் புயலினால் தாக்குவார்; காரணமில்லாமல் அவர் என் காயங்களைப் பலுகச்செய்வார்.
18 Ba zai bari in yi numfashi ba, sai dai yă ƙara mini azaba.
அவர் என்னைத் திரும்பவும் மூச்சுவிட முடியாமல் துன்பத்திற்குள் அமிழ்த்தி விடுவார்.
19 In maganar ƙarfi ne, shi babban mai ƙarfi ne! In kuma maganar shari’a ne, wa zai kai kararsa?
பெலத்தை மட்டும் எடுத்துக்கொண்டால் அவரே வல்லமையுடையவர். நீதியை எடுத்துக்கொண்டால் அவரை விசாரணைக்கு அழைப்பவன் யார்?
20 Ko da ni marar ƙarfi ne, bakina ya isa yă sa in zama mai laifi; in ba ni da laifi, zai sa in yi laifi.
நான் மாசற்றவனாய் இருந்தாலும் என் வாயே எனக்குக் குற்றத் தீர்ப்பளிக்கும்; நான் குற்றமற்றவனாய் இருந்தாலும், அது என்னைக் குற்றவாளி எனத் தீர்க்கும்.
21 “Ko da yake ba ni da laifi, ban damu da kaina ba; na rena raina.
“நான் குற்றமற்றவன், என்னைப்பற்றி எனக்கு அக்கறையில்லை; என் சொந்த வாழ்வையே நான் வெறுக்கிறேன்.
22 Ba bambanci; shi ya sa na ce, ‘Yana hallaka marasa laifi da kuma mugaye.’
எல்லாம் ஒன்றுதான்; அதினால்தான் நான் சொல்கிறேன், ‘குற்றமற்றவர்களையும், கொடியவர்களையும் அவர் அழிக்கிறார்.’
23 Lokacin da bala’i ya kawo ga mutuwa, yakan yi dariyar baƙin cikin marasa laifi.
வாதை திடீர் மரணத்தைக் கொண்டுவரும்போது, அவர் குற்றமற்றவனின் தவிப்பைக் கண்டு ஏளனம் செய்கிறார்.
24 Lokacin da ƙasa ta faɗa a hannun mugaye, yakan rufe idanun masu shari’a. In ba shi ba wa zai yi wannan?
நாடு கொடியவர்களின் கையில் விழும்போது, அவர் அதின் நீதிபதிகளின் கண்களை மூடிக் கட்டுகிறார். அவர் அதைச் செய்யவில்லையென்றால் அதைச் செய்வது வேறு யார்?
25 “Kwanakina sun fi mai gudu wucewa da sauri; suna firiya babu wani abin jin daɗi a cikinsu.
“எனது நாட்கள் ஓடுபவனைவிட வேகமாய்ப் போகின்றன; அவை ஒருகண நேர மகிழ்ச்சியும் இல்லாமல் பறந்து போகின்றன.
26 Suna wucewa kamar jirgin ruwan da aka yi da kyauro, kamar jahurma da ta kai wa namanta cafka.
நாணல் படகுகள் வேகமாகச் செல்வது போலவும், தங்கள் இரைமேல் பாய்கிற கழுகுகளைப் போலவும் அவை பறந்து போகின்றன.
27 ‘In na ce zan manta da abin da yake damu na, zan yi murmushi in daina nuna ɓacin rai,’
‘நான் என் குற்றச்சாட்டை மறந்து, என் முகபாவனையை மாற்றி சிரிப்பேன்’ என்று சொன்னாலும்,
28 duk da haka ina tsoron duk wahalata, domin na san ba za ka ɗauke ni marar laifi ba.
நான் இன்னும் என் பாடுகளைக் குறித்துத் திகிலடைகிறேன்; நீர் என்னைக் குற்றமற்றவனாக எண்ணமாட்டீர் என்றும் அறிவேன்.
29 Tun da an riga an ɗauke ni mai laifi, duk ƙoƙarina a banza yake.
நான் ஏற்கெனவே குற்றவாளி என்பது தீர்க்கப்பட்டிருக்க, ஏன் வீணாய் போராட வேண்டும்?
30 Ko da na wanke jikina duka da sabulu, na wanke hannuwana kuma da soda,
நான் என்னை பனிநீரினால் கழுவினாலும், என் கைகளை சோப்பினால் சுத்தப்படுத்தினாலும்,
31 duk da haka za ka jefa ni cikin ƙazamin wuri, yadda ko rigunan jikina ma za su ƙi ni.
நீர் என்னைச் சேற்றின் குழிக்குள் அமிழ்த்துவீர். அப்பொழுது என் சொந்த உடைகளே என்னை அருவருக்கும்.
32 “Shi ba mutum ba ne kamar ni wanda zan iya amsa masa, har da za mu yi faɗa da juna a wurin shari’a.
“நான் அவருக்குப் பதிலளிக்கவும், அவரை நீதிமன்றத்தில் எதிர்க்கவும் அவர் என்னைப்போல் ஒரு மனிதனல்ல.
33 In da akwai wanda zai iya shiga tsakaninmu, ya ɗora hannunsa a kanmu tare,
எங்கள் இருவருக்கும் நடுவராயிருந்து தீர்ப்புக்கூறவும், எங்கள் இருவர்மேலும் தம் கையை வைத்து,
34 wani wanda zai sa Allah yă daina duka na, don yă daina ba ni tsoro.
என்னிடத்திலிருந்து இறைவனது தண்டனையின் கோலை அகற்ற ஒருவர் இருந்தால் நலமாயிருக்குமே; அவருடைய பயங்கரம் என்னைப் பயமுறுத்தாது.
35 Sa’an nan ne zan iya yin magana ba tare da jin tsoronsa ba, amma a yadda nake a yanzu ba zan iya ba.
நான் அவருக்குப் பயப்படாமல் பேசுவேன், ஆனால் இப்போதைய நிலையில் அப்படிப் பேச என்னால் முடியாது.

< Ayuba 9 >