< Ayuba 3 >

1 Bayan wannan Ayuba ya buɗe baki ya la’anta ranar da aka haife shi.
அதற்குப் பின்பு யோபு தன் வாயைத்திறந்து, தான் பிறந்த நாளைச் சபித்து,
2 Ayuba ya ce,
வசனித்துச் சொன்னது என்னவென்றால்:
3 “A hallaka ranar da aka haife ni, da kuma daren da aka ce, ‘An haifi jariri namiji!’
நான் பிறந்தநாளும் ஒரு ஆண்பிள்ளை உற்பத்தியானது என்று சொல்லப்பட்ட இரவும் அழிவதாக.
4 Bari ranan nan ta zama duhu; kada Allah yă kula da ita; kada rana tă yi haske a wannan rana.
அந்த நாள் இருளாக்கப்படுவதாக; தேவன் உயரத்திலிருந்து அதை விசாரிக்காமலும், வெளிச்சம் அதின்மேல் பிரகாசிக்காமலும்,
5 Bari duhu da inuwa mai duhu ta sāke rufe ta; gizagizai kuma su rufe ta; duhu kuma ya rufe haskenta.
கடுமையான இருளும் மரண இருளும் அதைக் கறைப்படுத்தி, கருமேகம் அதை மூடி, மந்தாரநாளின் பயங்கரங்கள் அதை பயமுறுத்துவதாக.
6 Bari duhu mai yawa yă rufe daren nan; kada a haɗa ta cikin kwanakin shekara, ko kuma cikin kwanakin watanni.
அந்த இரவை இருள் பிடிப்பதாக; வருடத்தின் நாட்களில் அது சந்தோஷப்படுகிற நாளாக இராமலும் மாதக்கணக்கிலே அது வராமலும் போவதாக.
7 Bari daren yă zama marar amfani; kada a ji wata sowa ta farin ciki.
அந்த இரவு தனிமையாயிருப்பதாக; அதிலே கெம்பீரசத்தம் இல்லாமற்போவதாக.
8 Bari waɗanda suke la’anta ranaku su la’anta wannan rana su waɗanda suke umartar dodon ruwa.
நாளைச் சபிக்கிறவர்களும், லிவியாதானை எழும்பச் செய்கிறவர்களும், அதைச் சபிப்பார்களாக.
9 Bari taurarinta na safe su zama duhu; bari ranar tă yi ta jiran ganin haske amma kada tă gani,
அதின் மறையும் காலத்தில் தோன்றிய நட்சத்திரங்கள் இருண்டு, அது எதிர்பார்த்திருந்த வெளிச்சம் தோன்றாமலும், விடியற்காலத்து வெளுப்பை அது பார்க்காமலும் இருப்பதாக.
10 gama ba tă hana uwata ɗaukar cikina, don ta hana ni shan wahalan nan ba.
௧0நான் இருந்த கர்ப்பத்தின் வாசலை அது அடைக்காமலும், என் கண்கள் காண்கிற வருத்தத்தை மறைத்துவிடாமலும் இருந்ததே.
11 “Me ya sa ban mutu ba da za a haife ni, ko kuma in mutu sa’ad da ana haihuwata ba?
௧௧நான் கர்ப்பத்தில் அழியாமலும், கர்ப்பத்திலிருந்து புறப்படுகிறபோதே இறக்காமலும் போனதென்ன?
12 Me ya sa aka haife ni, aka tanada nono na sha na rayu?
௧௨என்னை ஏந்திக்கொள்ள மடியும், நான் பாலுண்ண மார்பகங்களும் இருந்ததென்ன?
13 Da yanzu ina kwance cikin salama; da ina barcina cikin salama
௧௩அப்படியில்லாதிருந்தால், அசையாமல்கிடந்து அமர்ந்திருந்து,
14 tare da sarakuna da mashawarta a cikin ƙasa, waɗanda suka gina wa kansu wuraren da yanzu duk sun rushe,
௧௪பாழ்நிலங்களில் தங்களுக்கு மாளிகையைக் கட்டின பூமியின் ராஜாக்களுடனும் மந்திரிமார்களுடனும்,
15 da shugabanni waɗanda suke da zinariya, waɗanda suka cika gidajensu da azurfa.
௧௫அல்லது, பொன்னை உடையவர்களும், தங்கள் வீடுகளை வெள்ளியினால் நிரப்பினவர்களுமான பிரபுக்களுடன் நான் இப்பொழுது தூங்கி இளைப்பாறுவேனே.
16 Ko kuma don me ba a ɓoye ni a cikin ƙasa kamar jaririn da aka haifa ba rai ba, kamar jaririn da bai taɓa ganin hasken rana ba.
௧௬அல்லது, வெளிப்படாத வளர்ச்சியடையாத கருவைப்போலவும், வெளிச்சத்தைப் பார்க்காத குழந்தைகளைப்போலவும் இருப்பேனே.
17 A wurin mugaye za su daina yin mugunta, gajiyayyu kuma za su huta.
௧௭துன்மார்க்கருடைய தொந்தரவு அங்கே ஓய்ந்திருக்கிறது; பெலனற்று சோர்ந்து போனவர்கள் அங்கே இளைப்பாறுகிறார்கள்.
18 Waɗanda aka daure za su sami jin daɗin; an sake su ba za su sāke jin ana tsawata masu ba.
௧௮சிறைப்பட்டிருந்தவர்கள் அங்கே ஏகமாக அமர்ந்திருக்கிறார்கள்; ஒடுக்குகிறவனுடைய சத்தம் அங்கே கேட்கப்படுகிறதில்லை.
19 Manyan da ƙanana suna a can, bawa kuma ya sami’yanci daga wurin maigidansa.
௧௯சிறியவனும் பெரியவனும் அங்கே சமமாக இருக்கிறார்கள்; அடிமை தன் எஜமானுக்கு நீங்கலாயிருக்கிறான்.
20 “Don me ake ba da haske ga waɗanda suke cikin ƙunci, rai kuma ga masu ɗacin rai
௨0மரணத்திற்கு ஆசையாகக் காத்திருந்து, புதையலைத் தேடுகிறதுபோல அதைத் தேடியும் அடையாமற்போகிறவர்களும்,
21 ga waɗanda suke neman mutuwa amma ba su samu ba, waɗanda suke nemanta kamar wani abu mai daraja a ɓoye,
௨௧கல்லறையைக் கண்டுபிடித்ததினால் மிகவும் மகிழ்ந்து,
22 waɗanda suke farin ciki sa’ad da suka kai kabari?
௨௨அதற்காகச் சந்தோஷப்படுகிற பாக்கியம் இல்லாதவராகிய இவர்களுக்கு வெளிச்சமும், மனவருத்தமும் உள்ள இவர்களுக்கு உயிர் கொடுக்கப்படுகிறதினால் பலன் என்ன?
23 Don me aka ba mutum rai, mutumin da bai san wani abu game da kansa ba, mutumin da Allah ya kange shi.
௨௩தன் வழியைக் காணமுடியாதபடிக்கு, தேவனால் வளைந்துகொள்ளப்பட்டவனுக்கு வெளிச்சத்தினால் பலன் என்ன?
24 Baƙin ciki ya ishe ni maimakon abinci; ina ta yin nishi ba fasawa;
௨௪என் சாப்பாட்டுக்கு முன்னே எனக்குப் பெருமூச்சு உண்டாகிறது; என் கதறுதல் வெள்ளம்போல் புரண்டுபோகிறது.
25 Abin da nake tsoro ya faru da ni; abin da ba na so ya same ni.
௨௫நான் பயந்த காரியம் எனக்குச் சம்பவித்தது; நான் பயப்பட்டது எனக்கு வந்தது.
26 Ba ni da salama, ba natsuwa; ba ni da hutu, sai wahala kawai.”
௨௬எனக்குச் சுகமுமில்லை, நிம்மதியுமில்லை, அமைதலுமில்லை; எனக்குத் துன்பமே வந்தது.

< Ayuba 3 >