< Sòm 33 >
1 Rejwi ak lajwa nan SENYÈ a, O moun ladwati yo! Lwanj bèl lè l sòti nan moun ki dwat.
௧நீதிமான்களே, யெகோவாவுக்குள் சந்தோஷமாக இருங்கள்; துதிசெய்வது நேர்மையானவர்களுக்குத் தகும்.
2 Bay remèsiman a SENYÈ avèk gita. Chante lwanj a Li menm avèk ap dis kòd.
௨சுரமண்டலத்தினால் யெகோவாவை துதித்து, பத்து நரம்பு வீணையினாலும் அவரை புகழ்ந்து பாடுங்கள்.
3 Chante a Li menm yon chan tounèf. Jwe ak kapasite e fò avèk yon gwo kri lajwa.
௩அவருக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; ஆனந்த சத்தத்தோடு வாத்தியங்களை நேர்த்தியாக வாசியுங்கள்.
4 Paske pawòl SENYÈ a dwat. Tout zèv Li yo fèt avèk fidelite.
௪யெகோவாவுடைய வார்த்தை உத்தமமும், அவருடைய செய்கையெல்லாம் சத்தியமுமாயிருக்கிறது.
5 Li renmen ladwati avèk jistis. Latè ranpli avèk lanmou dous SENYÈ a.
௫அவர் நீதியிலும் நியாயத்திலும் பிரியப்படுகிறார்; பூமி யெகோவாவுடைய கருணையினால் நிறைந்திருக்கிறது.
6 Avèk pawòl SENYÈ a syèl yo te fèt: pa souf a bouch Li, tout lame syèl yo.
௬யெகோவாவுடைய வார்த்தையினால் வானங்களும், அவருடைய வாயின் சுவாசத்தினால் அவைகளின் அனைத்தும் உண்டாக்கப்பட்டது.
7 Li ranmase tout dlo lanmè yo ansanm pou fè yon gwo pil. Li fè tout pwofondè yo kouche fè kay depo.
௭அவர் கடலின் தண்ணீர்களைக் குவியலாகச் சேர்த்து, ஆழமான தண்ணீர்களைப் பொக்கிஷவைப்பாக வைக்கிறார்.
8 Kite tout latè krent SENYÈ a. Kite tout (sila) ki rete nan mond lan kanpe etone nèt pa Li menm.
௮பூமியெல்லாம் யெகோவாவுக்குப் பயப்படுவதாக; உலகத்திலுள்ள குடிமக்களெல்லாம் அவருக்கு பயந்திருப்பதாக.
9 Paske Li te pale e mond lan te fèt. Li te kòmande e li te kanpe fèm.
௯அவர் சொல்ல ஆகும், அவர் கட்டளையிட நிற்கும்.
10 SENYÈ a ranvèse konsèy a nasyon yo. Li anile pwojè a pèp yo.
௧0யெகோவா தேசங்களின் ஆலோசனையை வீணடித்து, மக்களுடைய நினைவுகளை பயனற்றதாக ஆக்குகிறார்.
11 Konsèy SENYÈ a kanpe jis pou tout tan, e pwojè a kè Li yo de jenerasyon an jenerasyon.
௧௧யெகோவாவுடைய ஆலோசனை நிரந்தரகாலமாகவும், அவருடைய இருதயத்தின் நினைவுகள் தலைமுறை தலைமுறையாகவும் நிற்கும்.
12 Beni se nasyon ki gen Bondye kon SENYÈ yo,
௧௨யெகோவாவை தங்களுக்குத் தெய்வமாகக்கொண்ட தேசமும், அவர் தமக்குச் சொந்தமாகத் தெரிந்துகொண்ட மக்களும் பாக்கியமுள்ளது.
13 pèp ke Li te chwazi pou pwòp eritaj Li a. SENYÈ a gade depi nan syèl la. Li wè tout fis a lòm yo.
௧௩யெகோவா வானத்திலிருந்து நோக்கிப்பார்த்து, எல்லா மனிதர்களையும் காண்கிறார்.
14 Soti nan abitasyon Li an, Li veye sou tout (sila) ki rete sou latè yo.
௧௪தாம் தங்கியிருக்கிற இடத்திலிருந்து பூமியின் குடிமக்கள் எல்லோர்மேலும் கண்ணோக்கமாக இருக்கிறார்.
15 Li menm ki fòme kè a yo tout, Li menm ki konprann tout zèv yo.
௧௫அவர்களுடைய இருதயங்களையெல்லாம் அவர் உருவாக்கி, அவர்கள் செய்கைகளையெல்லாம் கவனித்திருக்கிறார்.
16 Wa a pa sove pa yon lame pwisan. Yon gèrye pa delivre pa gran fòs Li.
௧௬எந்த ராஜாவும் தன்னுடைய ராணுவத்தின் மிகுதியால் காப்பாற்றப்படமாட்டான்; போர்வீரனும் தன்னுடைய பலத்தின் மிகுதியால் தப்பமாட்டான்.
17 Yon cheval se yon fo espwa pou viktwa a, ni li p ap delivre pèsòn ak pwisans li.
௧௭காப்பாற்றுவதற்கு குதிரை வீண்; அது தன்னுடைய மிகுந்த பலத்தால் காப்பாற்றாது.
18 Veye byen, zye SENYÈ a sou (sila) ki krent Li yo, sou (sila) ki mete espwa yo nan lanmou dous Li a,
௧௮தமக்குப் பயந்து, தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்களின் ஆத்துமாக்களை மரணத்திற்கு விலக்கி விடுவிக்கவும்;
19 pou delivre nanm pa yo devan lanmò, e kenbe yo vivan nan gwo grangou.
௧௯பஞ்சத்தில் அவர்களை உயிரோடு காக்கவும், யெகோவாவுடைய கண் அவர்கள்மேல் நோக்கமாக இருக்கிறது.
20 Nanm nou ap tann SENYÈ a. Se Li menm ki sekou nou ak boukliye nou.
௨0நம்முடைய ஆத்துமா யெகோவாவுக்குக் காத்திருக்கிறது; அவரே நமக்குத் துணையும் நமக்குக் கேடகமுமானவர்.
21 Paske kè nou rejwi nan Li, akoz nou mete konfyans nou nan sen non Li.
௨௧அவருடைய பரிசுத்த பெயரை நாம் நம்பியிருக்கிறபடியால், நம்முடைய இருதயம் அவருக்குள் சந்தோசமாக இருக்கும்.
22 Kite lanmou dous Ou, O SENYÈ, vin poze sou nou, selon esperans ke nou te mete nan Ou a.
௨௨யெகோவாவே, நாங்கள் உம்மை நம்பியிருக்கிறபடியே உமது கிருபை எங்கள்மேல் இருப்பதாக.