< Resansman 33 >
1 Sa se vwayaj a fis Israël yo sou sila yo te sòti nan peyi Égypte la pa lame pa yo, anba direksyon Moïse avèk Aaron.
௧மோசே ஆரோன் என்பவர்களுடைய கையின்கீழ்த் தங்கள்தங்கள் இராணுவங்களின்படி எகிப்துதேசத்திலிருந்து புறப்பட்ட இஸ்ரவேல் மக்களுடைய பயணங்களின் விபரம்:
2 Moïse te ekri yon rapò pou montre pwent kòmansman nan vwayaj yo selon kòmand SENYÈ a, e sa yo se vwayaj selon pwent kòmansman sila yo.
௨மோசே தனக்குக் யெகோவா கட்டளையிட்டபடி அவர்கள் புறப்பட்ட முறையாக அவர்களுடைய பயணங்களை எழுதினான்; அவர்கள் ஒவ்வொரு இடங்களிலிருந்து புறப்பட்டு பயணித்த பயணங்களாவன:
3 Yo te vwayaje soti nan Ramsès nan premye mwa a, sou kenzyèm jou a. Nan jou apre Pak la, fis Israël yo te soti avèk gwo kouraj devan zye a tout Ejipsyen yo,
௩முதலாம் மாதத்தின் பதினைந்தாம் தேதியிலே அவர்கள் ராமசேசை விட்டுப் புறப்பட்டார்கள்; பஸ்காவுக்கு மறுநாளிலே, எகிப்தியர்கள் எல்லோரும் பார்க்க, இஸ்ரவேல் மக்கள் பலத்தகையுடன் புறப்பட்டார்கள்.
4 pandan tout Ejipsyen yo t ap antere tout premye ne ke SENYÈ a te frape detwi pami yo. SENYÈ a te osi egzekite jijman sou dye ki te pou yo.
௪அப்பொழுது எகிப்தியர்கள் யெகோவா தங்களுக்குள்ளே அழித்த மூத்தபிள்ளைகளையெல்லாம் அடக்கம்செய்தார்கள்; அவர்களுடைய தெய்வங்களின் பெயரிலும் யெகோவா நீதிசெலுத்தினார்.
5 Alò, fis a Israël yo te vwayaje soti Ramsès pou te fè kan nan Succoth.
௫பின்பு இஸ்ரவேல் மக்கள் ராமசேசிலிருந்து புறப்பட்டுப்போய், சுக்கோத்திலே முகாமிட்டார்கள்.
6 Yo te vwayaje soti Succoth pou te fè kan nan Etham, ki sou kote dezè a.
௬சுக்கோத்திலிருந்து புறப்பட்டுப்போய், வனாந்திரத்தின் எல்லையிலிருக்கிற ஏத்தாமிலே முகாமிட்டார்கள்.
7 Yo te vwayaje soti Etham pou te vire fè bak jis nan Pi-Hahiroth, ki anfas Baal-Tsephon, e yo te vin fè kan devan Migdol.
௭ஏத்தாமிலிருந்து புறப்பட்டுப்போய், பாகால்செபோனுக்கு எதிராக இருக்கிற ஈரோத் பள்ளத்தாக்கின் முன்னடிக்குத் திரும்பி, மிக்தோலுக்கு முன்பாக முகாமிட்டார்கள்.
8 Yo te vwayaje soti devan Pi-Hahiroth. Yo te pase nan mitan lanmè a pou rive nan dezè a, yo te vwayaje pandan twa jou nan dezè Étham an, e yo te vin fè kan nan Mara.
௮ஈரோத்தை விட்டுப் புறப்பட்டு, சமுத்திரத்தை நடுவாகக் கடந்து வனாந்திரத்திற்குப் போய், ஏத்தாம் வனாந்திரத்திலே மூன்று நாட்கள் பயணம்செய்து, மாராவிலே முகாமிட்டார்கள்.
9 Yo te vwayaje soti Mara pou te rive nan Élim. Nan Élim, te gen douz sous dlo, swasann-dis pye palmis, e yo te fè kan an.
௯மாராவிலிருந்து புறப்பட்டு, ஏலிமுக்குப் போனார்கள்; ஏலிமிலே பன்னிரண்டு நீரூற்றுகளும் எழுபது பேரீச்சமரங்களும் இருந்தது; அங்கே முகாமிட்டார்கள்.
10 Yo te vwayaje soti nan Élim, pou te fè kan bò kote Lamè Wouj.
௧0ஏலிமிலிருந்து புறப்பட்டு, சிவந்த சமுத்திரத்தின் அருகே முகாமிட்டார்கள்.
11 Yo te vwayaje soti Lamè Wouj pou te fè kan nan dezè Tsin nan.
௧௧சிவந்த சமுத்திரத்தை விட்டுப் புறப்பட்டுப்போய், சீன் வனாந்திரத்திலே முகாமிட்டார்கள்.
12 Yo te vwayaje soti nan dezè Tsin nan pou te fè kan nan Dophka.
௧௨சீன் வனாந்திரத்திலிருந்து புறப்பட்டுப்போய், தொப்காவிலே முகாமிட்டார்கள்.
13 Yo te vwayaje soti nan Dophka pou te fè kan nan Alusch.
௧௩தொப்காவிலிருந்து புறப்பட்டுப் போய், ஆலூசிலே முகாமிட்டார்கள்.
14 Yo te vwayaje soti Alusch pou te fè kan nan Rephidim. Se te la ke pèp la pa t gen dlo pou bwè a.
௧௪ஆலூசிலிருந்து புறப்பட்டுப்போய், ரெவிதீமிலே முகாமிட்டார்கள். அங்கே மக்களுக்குக் குடிக்கத் தண்ணீர் இல்லாமல் இருந்தது.
15 Yo te vwayaje soti nan Rephidim pou te fè kan nan dezè Sinaï a.
௧௫ரெவிதீமிலிருந்து புறப்பட்டுப்போய், சீனாய் வனாந்திரத்திலே முகாமிட்டார்கள்.
16 Yo te vwayaje soti nan dezè Sinaï a pou te fè kan nan Kibroth-Hattaava.
௧௬சீனாய் வனாந்திரத்திலிருந்து புறப்பட்டுப்போய், கிப்ரோத் அத்தாவிலே முகாமிட்டார்கள்.
17 Yo te vwayaje soti nan Kibroth-Hattaava pou te fè kan nan Hatséroth.
௧௭கிப்ரோத் அத்தாவிலிருந்து புறப்பட்டுப்போய், ஆஸரோத்திலே முகாமிட்டார்கள்.
18 Yo te vwayaje soti nan Hatséroth pou te fè kan nan Rithma.
௧௮ஆஸரோத்திலிருந்து புறப்பட்டுப்போய், ரித்மாவிலே முகாமிட்டார்கள்.
19 Yo te vwayaje soti nan Rithma pou te fè kan nan Rimmon-Pérets.
௧௯ரித்மாவிலிருந்து புறப்பட்டுப்போய், ரிம்மோன்பேரேசிலே முகாமிட்டார்கள்.
20 Yo te vwayaje soti nan Rimmon-Pérets pou te fè kan nan Libna.
௨0ரிம்மோன்பேரேசிலிருந்து புறப்பட்டுப்போய், லிப்னாவிலே முகாமிட்டார்கள்.
21 Yo te vwayaje soti nan Libna pou te fè kan nan Rissa.
௨௧லிப்னாவிலிருந்து புறப்பட்டுப்போய், ரீசாவிலே முகாமிட்டார்கள்.
22 Yo te vwayaje soti nan Rissa pou te fè kan nan Kehélatha.
௨௨ரீசாவிலிருந்து புறப்பட்டுப்போய், கேலத்தாவிலே முகாமிட்டார்கள்.
23 Yo te vwayaje soti nan Kehélatha pou te fè kan nan Schapher.
௨௩கேலத்தாவிலிருந்து புறப்பட்டுப்போய், சாப்பேர் மலையிலே முகாமிட்டார்கள்.
24 Yo te vwayaje soti nan Mòn Schapher pou te fè kan nan Harda.
௨௪சாப்பேர் மலையிலிருந்து புறப்பட்டுப்போய், ஆரதாவிலே முகாமிட்டார்கள்.
25 Yo te vwayaje soti nan Harda pou te fè kan nan Makhéloth.
௨௫ஆரதாவிலிருந்து புறப்பட்டுப்போய், மக்கெலோத்திலே முகாமிட்டார்கள்.
26 Yo te vwayaje soti nan Makhéloth pou te fè kan nan Tahath.
௨௬மக்கெலோத்திலிருந்து புறப்பட்டுப்போய், தாகாத்திலே முகாமிட்டார்கள்.
27 Yo te vwayaje soti nan Tahath pou te fè kan nan Tarach.
௨௭தாகாத்திலிருந்து புறப்பட்டுப்போய், தாராகிலே முகாமிட்டார்கள்.
28 Yo te vwayaje soti nan Tarach pou te fè kan nan Mithka.
௨௮தாராகிலிருந்து புறப்பட்டுப்போய், மித்காவிலே முகாமிட்டார்கள்.
29 Yo te vwayaje soti nan Mithka pou te fè kan nan Haschmona.
௨௯மித்காவிலிருந்து புறப்பட்டுப்போய், அஸ்மோனாவிலே முகாமிட்டார்கள்.
30 Yo te vwayaje soti nan Haschmona pou te fè kan nan Moséroth.
௩0அஸ்மோனாவிலிருந்து புறப்பட்டுப்போய், மோசெரோத்திலே முகாமிட்டார்கள்.
31 Yo te vwayaje soti nan Moséroth pou te fè kan nan Bené-Jaakan.
௩௧மோசெரோத்திலிருந்து புறப்பட்டுப்போய், பெனெயாக்கானிலே முகாமிட்டார்கள்.
32 Yo te vwayaje soti nan Bené-Jaakan pou te fè kan nan Hor-Guidgad.
௩௨பெனெயாக்கானிலிருந்து புறப்பட்டுப்போய், கித்காத் மலையிலே முகாமிட்டார்கள்.
33 Yo te vwayaje soti nan Hor-Guidgad pou te fè kan nan Jothbatha.
௩௩கித்காத் மலையிலிருந்து புறப்பட்டுப்போய், யோத்பாத்தாவிலே முகாமிட்டார்கள்.
34 Yo te vwayaje soti nan Jothbatha pou te fè kan nan Abrona.
௩௪யோத்பாத்தாவிலிருந்து புறப்பட்டுப்போய், எப்ரோனாவிலே முகாமிட்டார்கள்.
35 Yo te vwayaje soti nan Abrona pou te fè kan nan Etsjon-Guéber.
௩௫எப்ரோனாவிலிருந்து புறப்பட்டுப்போய், எசியோன் கேபேரிலே முகாமிட்டார்கள்.
36 Yo te vwayaje soti nan Etsjon-Guéber pou te fè kan nan dezè a Tsin nan: sa vle di, Kadès.
௩௬எசியோன் கேபேரிலிருந்து புறப்பட்டுப்போய், காதேசாகிய சீன் வனாந்திரத்திலே முகாமிட்டார்கள்.
37 Yo te vwayaje soti nan Kadès pou te fè kan nan Mòn Hor, nan lizyè peyi Édom an.
௩௭காதேசிலிருந்து புறப்பட்டுப்போய், ஏதோம் தேசத்தின் எல்லையிலிருக்கிற ஓர் என்னும் மலையிலே முகாமிட்டார்கள்.
38 Konsa, Aaron, prèt la, te monte nan Mòn Hor selon lòd SENYÈ a, e li te mouri la nan karantyèm ane apre fis Israël yo te sòti nan peyi Égypte la, nan premye jou sou senkyèm mwa a.
௩௮அப்பொழுது ஆசாரியனாகிய ஆரோன் யெகோவாவுடைய கட்டளையின்படி ஓர் என்னும் மலையின்மேல் ஏறி, அங்கே இஸ்ரவேல் மக்கள் எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்ட 40 ஆம் வருடம் ஐந்தாம் மாதம் முதல் தேதியிலே மரணமடைந்தான்.
39 Aaron te gen san-venn-twazan lè li te mouri sou Mòn Hor a.
௩௯ஆரோன் ஓர் என்னும் மலையிலே மரணமடைந்தபோது, 123 வயதாக இருந்தான்.
40 Alò, Kananeyen an, wa a Arad ki te rete Negev la nan peyi Canaran an, te tande ke fis Israël yo t ap pwoche.
௪0அந்த நாட்களிலே கானான் தேசத்தின் தென்திசையில் குடியிருந்த கானானியனாகிய ஆராத் என்னும் ராஜா இஸ்ரவேல் மக்கள் வருகிறதைக் கேள்விப்பட்டான்.
41 Alò, yo te vwayaje soti nan Mòn Hor pou te fè kan nan Tsalmona.
௪௧ஓர் என்னும் மலையை விட்டுப் புறப்பட்டுப்போய், சல்மோனாவிலே முகாமிட்டார்கள்.
42 Yo te vwayaje soti nan Tsalmona pou te fè kan nan Punon.
௪௨சல்மோனாவிலிருந்து புறப்பட்டுப்போய், பூனோனிலே முகாமிட்டார்கள்.
43 Yo te vwayaje soti nan Punon pou te fè kan nan Oboth.
௪௩பூனோனிலிருந்து புறப்பட்டுப்போய், ஓபோத்திலே முகாமிட்டார்கள்.
44 Yo te vwayaje soti nan Oboth pou te fè kan nan Ijjé-Abarim nan lizyè Moab la.
௪௪ஓபோத்திலிருந்து புறப்பட்டுப்போய், மோவாபின் எல்லையிலுள்ள அபாரிமீன் மேடுகளிலே முகாமிட்டார்கள்.
45 Yo te vwayaje soti nan Ijjé-Abarim pou te fè kan nan Dibon-Gad.
௪௫அந்த மேடுகளை விட்டுப்பறப்பட்டுப்போய், தீபோன்காத்திலே முகாமிட்டார்கள்.
46 Yo te vwayaje soti nan Dibon-Gad pou te fè kan nan Almon-Diblathaïm.
௪௬தீபோன்காத்திலிருந்து புறப்பட்டுப்போய், அல்மோன் திப்லத்தாயிமிலே முகாமிட்டார்கள்.
47 Yo te vwayaje soti nan Almon-Diblathaïm pou te fè kan nan mòn Abarim yo devan Nebo.
௪௭அல்மோன் திப்லத்தாயிமிலிருந்து புறப்பட்டுப்போய், நேபோவுக்கு எதிரான அபாரீம் மலைகளிலே முகாமிட்டார்கள்.
48 Yo te vwayaje soti nan mòn Abarim yo pou te fè kan nan plèn a Moab yo akote Jourdain an, anfas Jéricho.
௪௮அபாரீம் மலைகளிலிருந்து புறப்பட்டுப்போய், எரிகோவின் அருகே யோர்தானைச்சார்ந்த மோவாபின் சமனான வெளிகளிலே முகாமிட்டார்கள்.
49 Yo te fè kan akote Jourdain an, soti nan Beth-Jeschimoth pou jis rive nan Abel-Sittim nan plèn a Moab yo.
௪௯யோர்தானைச் சார்ந்த மோவாபின் சமனான வெளிகளில் அவர்கள் பெத்யெசிமோத்தைத் துவங்கி, ஆபேல் சித்தீம்மட்டும் முகாமிட்டிருந்தார்கள்.
50 Alò, SENYÈ a te pale avèk Moïse nan plèn a Moab yo akote Jourdain an anfas Jéricho. Li te di:
௫0எரிகோவின் அருகே யோர்தானைச் சார்ந்த மோவாபின் சமனான வெளிகளிலே யெகோவா மோசேயை நோக்கி:
51 Pale avèk fis Israël yo e di yo, “Lè nou fin travèse Jourdain an pou antre nan peyi Canaran an,
௫௧நீ இஸ்ரவேல் மக்களோடு சொல்லவேண்டியது என்னவென்றால்: நீங்கள் யோர்தானைக் கடந்து, கானான்தேசத்தில் போய்ச் சேரும்போது,
52 alò, nou va chase deyò tout abitan nan peyi a soti devan nou. Nou va detwi tout zidòl taye an wòch pa yo, detwi tout imaj fonn yo, e kraze nèt tout wo plas yo.
௫௨அத்தேசத்துக் குடிகளையெல்லாம் உங்களுக்கு முன்பாகத் துரத்திவிட்டு, அவர்களுடைய எல்லாச் சிலைகளையும் வார்ப்பிக்கப்பட்ட அவர்களுடைய எல்லா விக்கிரகங்களையும் அழித்து, அவர்கள் மேடைகளையெல்லாம் நிர்மூலமாக்கி,
53 “Konsa, nou va pran posesyon peyi a pou viv ladann. Paske Mwen te bay peyi a a nou pou posede li.
௫௩தேசத்திலுள்ளவர்களைத் துரத்திவிட்டு, அதிலே குடியிருக்கவேண்டும்; அந்த தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளும்படி அதை உங்களுக்குக் கொடுத்தேன்.
54 Nou va eritye teren an pa tiraj osò selon fanmi nou yo. Pou pi gran fanmi yo, eritaj la va vin plis, pou pi piti yo, nou va bay mwens nan eritaj la. Nenpòt lè tiraj osò a tonbe sou nenpòt fanmi, sila a va pou li. Nou va eritye pa tribi a zansèt nou yo.
௫௪சீட்டுப்போட்டு, தேசத்தை உங்களுடைய குடும்பங்களுக்குச் சுதந்தரங்களாகப் பங்கிட்டு, அதிக மக்களுக்கு அதிக சுதந்தரமும், கொஞ்ச மக்களுக்குக் கொஞ்ச சுதந்தரமும் கொடுக்கக்கடவீர்கள்; அவரவர்க்குச் சீட்டு விழும் இடம் எதுவோ, அந்த இடம் அவரவர்க்கு உரியதாகும்; உங்கள் முன்னோர்களுடைய கோத்திரங்களின்படியே சுதந்தரம் பெற்றுக்கொள்ளக்கடவீர்கள்.
55 “Men si nou pa pouse mete deyò, tout abitan peyi a devan nou, alò, li va vin rive ke sila ke nou kite pami nou yo, va vin pike zye nou. Yo va devni tankou pikan bò kote nou, e yo va twouble nou nan peyi kote nou rete a.
௫௫நீங்கள் தேசத்தின் குடிகளை உங்களுக்கு முன்பாகத் துரத்திவிடாமல் இருப்பீர்களானால், அப்பொழுது அவர்களில் நீங்கள் மீதியாக வைக்கிறவர்கள் உங்களுடைய கண்களில் முட்களும் உங்களுடைய விலாக்களிலே கூர்களுமாக இருந்து, நீங்கள் குடியிருக்கிற தேசத்திலே உங்களை உபத்திரவப்படுத்துவார்கள்.
56 Epi li va rive ke sa M te anvizaje fè yo, M ap vin fè l nou.”
௫௬அன்றியும், நான் அவர்களுக்குச் செய்ய நினைத்ததை உங்களுக்குச் செய்வேன் என்று சொல்” என்றார்.