< Ἰησοῦς Nαυῆ 18 >
1 Συνηθροίσθη δε πάσα η συναγωγή των υιών Ισραήλ εν Σηλώ, και έστησαν εκεί την σκηνήν του μαρτυρίου· και υπετάχθη η γη εις αυτούς.
பின் இஸ்ரயேல் மக்கள் சீலோ என்னும் இடத்தில் ஒன்றுகூடி அங்கே சபைக் கூடாரத்தை அமைத்தார்கள். அந்த நாடு அவர்களுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது,
2 Και έμενον μεταξύ των υιών Ισραήλ επτά φυλαί, αίτινες δεν είχον λάβει την κληρονομίαν αυτών.
ஆனால் இஸ்ரயேலில் இன்னும் ஏழு கோத்திரங்கள் தங்கள் சொத்துரிமையைப் பெறாமல் இருந்தன.
3 Και είπεν ο Ιησούς προς τους υιούς Ισραήλ, Έως πότε θέλετε μένει νωθροί εις το να υπάγητε να κυριεύσητε την γην, την οποίαν Κύριος ο Θεός των πατέρων σας έδωκεν εις εσάς;
எனவே யோசுவா இஸ்ரயேலரிடம் கூறியதாவது: “உங்கள் முற்பிதாக்களின் இறைவனாகிய யெகோவா உங்களுக்கு அளித்துள்ள நாட்டை, உங்கள் கைவசமாக்குவதற்கு இன்னும் எவ்வளவு காலத்திற்குத் தாமதிப்பீர்கள்?
4 εκλέξατε εις εαυτούς τρεις άνδρας κατά φυλήν· και θέλω αποστείλει αυτούς, και σηκωθέντες θέλουσι περιέλθει την γην και διαγράψει αυτήν κατά τας κληρονομίας αυτών, και θέλουσιν επιστρέψει προς εμέ·
ஒவ்வொரு கோத்திரத்திலிருந்தும் மூன்றுபேரை நியமியுங்கள். நான் அவர்களை நாட்டைச் சுற்றிப்பார்த்து மதிப்பீடு செய்ய அனுப்புவேன். அவர்கள் ஒவ்வொரு கோத்திரத்திற்கும் கொடுக்கப்படவேண்டிய சொத்துரிமை அளவுப்படி அதை விவரமாய் எழுதிக்கொண்டு என்னிடம் திரும்பி வரவேண்டும்.
5 και θέλουσι διαιρέσει αυτήν εις επτά μερίδια· ο Ιούδας θέλει κατοικεί εν τοις ορίοις αυτού προς μεσημβρίαν, και ο οίκος Ιωσήφ θέλουσι κατοικεί εν τοις ορίοις αυτών προς βορράν·
நீங்கள் தேசத்தை ஏழு பங்குகளாகப் பிரிக்கவேண்டும். யூதா கோத்திரம் தென்பகுதியிலும், யோசேப்பின் குடும்பம் வடபகுதியிலும் தொடர்ந்து குடியிருக்கட்டும்.
6 θέλετε λοιπόν διαγράψει την γην εις επτά μέρη, και θέλετε φέρει εδώ προς εμέ την διαγραφήν, και εγώ θέλω εκβάλει κλήρους διά σας ενταύθα ενώπιον Κυρίου του Θεού ημών·
நாட்டின் ஏழு பிரிவுகளின் விவரங்களையும் எழுதியபின் என்னிடம் கொண்டுவாருங்கள். நான் நமது இறைவனாகிய யெகோவாவுக்கு முன்பாக உங்களுக்காகச் சீட்டுப்போட்டு, உங்கள் பங்கைக் குறிப்பிடுவேன்.
7 διότι οι Λευΐται δεν έχουσι μερίδιον μεταξύ σας· διότι η ιερατεία του Κυρίου είναι η κληρονομία αυτών· και ο Γαδ και ο Ρουβήν και το ήμισυ της φυλής Μανασσή έλαβον την κληρονομίαν αυτών πέραν του Ιορδάνου προς ανατολάς, την οποίαν Μωϋσής ο δούλος του Κυρίου έδωκεν εις αυτούς.
லேவி கோத்திரத்தார் உங்கள் நாட்டில் உங்கள் மத்தியில் பங்கைப் பெறுவதில்லை. ஏனெனில் யெகோவாவுக்கு ஆசாரியர்களாகப் பணிசெய்வதே அவர்கள் பங்கு. காத், ரூபன், மனாசேயின் பாதிக் கோத்திரம் ஏற்கனவே யோர்தானின் கிழக்குப் பகுதியில் தங்கள் சொத்துரிமையைப் பெற்றிருந்தார்கள். அதை யெகோவாவின் அடியவனாகிய மோசே கொடுத்திருந்தான்.”
8 Και σηκωθέντες οι άνδρες απήλθον· και προσέταξεν ο Ιησούς τους απελθόντας διά να διαγράψωσι την γην, λέγων, Υπάγετε και περιέλθετε την γην και διαγράψατε αυτήν και επιστρέψατε προς εμέ, και εγώ θέλω εκβάλει κλήρους διά σας ενταύθα ενώπιον του Κυρίου εν Σηλώ.
நாட்டை அளந்து பார்த்துப் பங்கிட அவர்கள் புறப்பட்டபோது யோசுவா அவர்களிடம், “நாட்டைச் சுற்றிப்பார்த்து அதன் விவரத்தை எழுதிக்கொண்டு என்னிடம் திரும்பிவாருங்கள். நான் சீலோவிலே யெகோவாவின் முன்னிலையில் உங்களுக்காக சீட்டுப்போடுவேன்” என்று அறிவுறுத்தினான்.
9 Και υπήγαν οι άνδρες και περιήλθον την γην και διέγραψαν αυτήν εν βιβλίω κατά πόλεις εις μερίδια επτά, και ήλθον προς τον Ιησούν εις το στρατόπεδον εις Σηλώ.
உடனே அவர்கள் புறப்பட்டு நாட்டின் வழியாகச் சென்றார்கள். அவர்கள் நாட்டின் விவரங்களைப் பட்டணம் பட்டணமாக ஏழு பகுதிகளாகப் பிரித்து, ஒரு புத்தகச்சுருளில் எழுதி சீலோவில் கூடாரத்தில் இருந்த யோசுவாவிடம் கொண்டுவந்தார்கள்.
10 Και έρριψεν ο Ιησούς κλήρους δι' αυτούς εν Σηλώ ενώπιον του Κυρίου· και διεμοίρασεν ο Ιησούς εκεί την γην εις τους υιούς Ισραήλ κατά τους μερισμούς αυτών.
அப்பொழுது யோசுவா, சீலோவில் யெகோவாவின் முன்னிலையில் அவர்களுக்கு சீட்டுப்போட்டு, இஸ்ரயேலரின் கோத்திரப் பிரிவுகளின்படி அவர்களுக்குரிய நிலத்தை பிரித்துக்கொடுத்தான்.
11 Και εξήλθεν ο κλήρος της φυλής των υιών Βενιαμίν κατά τας συγγενείας αυτών, και έπεσε το όριον της κληρονομίας αυτών μεταξύ των υιών Ιούδα και των υιών Ιωσήφ.
வம்சம் வம்சமாக பென்யமீன் கோத்திரத்திற்கு முதலாவது சீட்டு விழுந்தது. அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட நிலப்பரப்பின் பங்கு யூதா, யோசேப்பு கோத்திரங்களுக்குக் கொடுக்கப்பட்ட நிலங்களுக்கு இடையில் இருந்தது.
12 Και ήτο το όριον αυτών προς βορράν από του Ιορδάνου, και ανέβαινε το όριον προς το πλάγιον της Ιεριχώ κατά βορράν, και ανέβαινε διά των ορέων προς δυσμάς, και ετελείονεν εις την έρημον Βαιθ-αυέν.
அவர்களுடைய வடக்கு எல்லை யோர்தான் நதியில் ஆரம்பித்து, எரிகோவின் வடமலைச் சாரலைக் கடந்து, மேற்கே உள்ள மலைநாட்டிற்குச் சென்று, பெத் ஆவென் பாலைவனத்தை வந்து சேர்ந்தது.
13 Και εκείθεν διέβαινε το όριον προς την Λούζ, κατά το μεσημβρινόν πλάγιον της Λούζ, ήτις είναι η Βαιθήλ· και κατέβαινε το όριον εις την Αταρώθ-αδδάρ, εις το όρος το προς μεσημβρίαν της κάτω αιθ-ωρών.
அங்கிருந்து பெத்தேல் என்னும் லூஸின் தெற்கு மலைச்சரிவைக் கடந்து, பின்னர் கீழ் பெத் ஓரோனின் தெற்கே மலையில் அமைந்துள்ள அதரோத் ஆதாருக்குச் சென்றது.
14 Και το όριον εξετείνετο εκείθεν, και περιήρχετο το δυτικόν μέρος προς μεσημβρίαν, από του όρους του απέναντι της Βαιθ-ωρών κατά μεσημβρίαν· και ετελείονεν εις την Κιριάθ-βαάλ, ήτις είναι η Κιριάθ-ιαρείμ, πόλις των υιών Ιούδα· τούτο ήτο το δυτικόν μέρος.
அந்த எல்லையானது தெற்கே பெத் ஓரோனை நோக்கியுள்ள குன்றிலிருந்து, மேற்குப்புறமாகத் தெற்கே திரும்பி, யூதாவின் நகரமான கீரியாத்யாரீம் அதாவது கீரியாத் பாகாலில் முடிவடைந்தது. இதுவே பென்யமீனின் மேற்கு எல்லை.
15 Και το μεσημβρινόν μέρος ήτο από του άκρον της Κιριάθ-ιαρείμ, και διέβαινε το όριον προς δυσμάς, και εξήρχετο εις το φρέαρ των υδάτων του Νεφθωά·
தெற்கு எல்லையானது கீரியாத்யாரீம் நகர்ப்புறத்தில் ஆரம்பித்து, மேற்கே சென்று நெப்தோவின் நீர் நிலையருகில் முடிவடைந்தது.
16 και κατέβαινε το όριον εις το τέλος του όρους του κατέναντι της φάραγγος του υιού του Εννόμ, ήτις είναι εν τη κοιλάδι των Ραφαείμ προς βορράν, και κατέβαινε διά της φάραγγος του Εννόμ εις το μεσημβρινόν πλάγιον της Ιεβούς, και κατέβαινεν εις Εν-ρωγήλ·
மேலும் இவ்வெல்லை ரெப்பா பள்ளத்தாக்கின் வடக்கே உள்ள, பென் இன்னோம் பள்ளத்தாக்கிற்கு எதிரே உள்ள மலையடிவாரத்தை அடைந்தது. அங்கிருந்து கின்னோம் பள்ளத்தாக்கின் வழியாக எபூசியரின் நகர் அமைந்த மலைச்சாரலின் தென்புற வழியேசென்று, என்ரொகேலை அடைந்தது.
17 και εκτεινόμενον από βορράν διέβαινεν εις Εν-σεμές και εξήρχετο εις Γαλιλώθ, ήτις είναι κατέναντι της αναβάσεως του Αδουμμίμ, και κατέβαινεν εις τον λίθον του Βοάν υιού του Ρουβήν,
அங்கிருந்து எல்லையானது வடக்கே வளைந்து, என்சேமேசுக்குத் திரும்பி அதும்மீம் ஏற்றத்தின் எதிரே உள்ள கெலிலோத்தை அடைந்து, “போகனின் கல்” என்னும் இடத்திற்குச்சென்றது. போகன் ரூபனின் மகன்.
18 και διέβαινε προς το βόρειον πλάγιον το κατέναντι της Αραβά και κατέβαινεν εις Αραβά·
அது தொடர்ந்து பெத் அரபாவின் வடக்கு மலைச்சரிவுக்குச்சென்று, கீழே அரபாவை நோக்கிச்சென்றது.
19 και διέβαινε το όριον προς το βόρειον πλάγιον της αιθ-ογλά· και ετελείονε το όριον εις τον βόρειον κόλπον της θαλάσσης της αλμυράς, εις την εκβολήν του Ιορδάνου κατά μεσημβρίαν· τούτο ήτο το μεσημβρινόν όριον.
பின்னர் பெத் ஓக்லாவின் வடக்கே மலைச்சரிவிலே சென்று, சவக்கடலின் வளைகுடாக்கடலில் முடிவடைந்தது. உப்புக்கடல் தெற்கே யோர்தான் நதியின் முகத்துவாரத்தில் இருந்தது. இது பென்யமீனின் தெற்கு எல்லை.
20 Ο δε Ιορδάνης ήτο το προς ανατολάς όριον αυτού. Αύτη ήτο κατά το όριον αυτής κύκλω, η κληρονομία των υιών Βενιαμίν κατά τας συγγενείας αυτών.
அவர்களுடைய கிழக்கு எல்லையாக யோர்தான் நதி அமைந்தது. இவைகளே பென்யமீன் குடும்பங்களுக்குரிய சொத்துரிமையாய் கொடுக்கப்பட்ட நிலங்களின் எல்லை.
21 Αι δε πόλεις της φυλής των υιών Βενιαμίν κατά τας συγγενείας αυτών ήσαν Ιεριχώ, και Βαιθ-ογλά, και Εμέκ-κεσείς,
வம்சம் வம்சமாக பென்யமீன் கோத்திரத்திற்கு கொடுக்கப்பட்ட பட்டணங்களாவன: எரிகோ, பெத் ஓக்லா, எமேக் கேசீஸ்,
22 και Βαιθ-αραβά, και Σεμαραΐμ, και Βαιθήλ,
பெத் அரபா, செமராயீம், பெத்தேல்,
23 και Αυείμ, και Φαρά, και Οφρά,
ஆவீம், பாரா, ஒப்ரா
24 και Χεφάρ-αμμωνά, και Οφνεί, και Γαβαά, πόλεις δώδεκα, και αι κώμαι αυτών·
கேம்பார் அம்மோனி, ஒப்னி, கேபா, ஆகிய பன்னிரண்டு நகரங்களும் அவற்றின் கிராமங்களும் ஆகும்.
25 Γαβαών, και Ραμά, και Βηρώθ,
கிபியோன், ராமா, பேரோத்,
26 και Μισπά, και Χεφειρά, και Μωσά,
மிஸ்பா, கெபிரா, மோத்சா,
27 και Ρεκέμ, και Ιορφαήλ, και Θαραλά,
ரெக்கேம், இர்பெயேல், தாராலா,
28 και Σηλά, Ελέφ, και Ιεβούς, ήτις είναι η Ιερουσαλήμ, Γαβαάθ, και Κιριάθ, πόλεις δεκατέσσαρες, και αι κώμαι αυτών. Αύτη είναι η κληρονομία των υιών Βενιαμίν κατά τας συγγενείας αυτών.
சேலா, ஏலேப், எபூசியப் பட்டணம் அதாவது எருசலேம், கிபியா, கீரியாத் ஆகிய பதினான்கு பட்டணங்களும் அவற்றின் கிராமங்களும் ஆகும். இவையே பென்யமீன் கோத்திர வம்சங்களுக்குக் கொடுக்கப்பட்ட சொத்துரிமை.