< Προς Εβραιους 6 >
1 Διά τούτο αφήσαντες την αρχικήν διδασκαλίαν του Χριστού, ας φερώμεθα προς την τελειότητα, χωρίς να βάλλωμεν εκ νέου θεμέλιον μετανοίας από νεκρών έργων και πίστεως εις Θεόν,
௧ஆகவே, கிறிஸ்துவைப்பற்றிச் சொல்லிய அடிப்படை உபதேசவசனங்களை நாம்விட்டுவிட்டு, செத்த செய்கைகளைவிட்டு மனம்திரும்புதல், தேவன்மேல் வைக்கும் விசுவாசம்,
2 της διδαχής των βαπτισμών και της επιθέσεως των χειρών, και της αναστάσεως των νεκρών και της κρίσεως της αιωνίου. (aiōnios )
௨ஞானஸ்நான உபதேசம், கரங்களை வைத்தல், மரித்தோரின் உயிர்த்தெழுதல், நித்திய நியாயத்தீர்ப்பு என்ற உபதேசங்களாகிய அஸ்திபாரத்தை மீண்டும் போடாமல், தேறினவர்களாகும்படி கடந்துபோவோம். (aiōnios )
3 Και τούτο θέλομεν κάμει, εάν επιτρέπη ο Θεός.
௩தேவனுக்கு விருப்பமானால் இப்படியே செய்வோம்.
4 Διότι αδύνατον είναι οι άπαξ φωτισθέντες και γευθέντες της επουρανίου δωρεάς και γενόμενοι μέτοχοι του Αγίου Πνεύματος
௪ஏனென்றால், ஒருமுறை பிரகாசிக்கப்பட்டும், பரலோக பரிசை ருசிபார்த்தும், பரிசுத்த ஆவியானவரைப் பெற்றும்,
5 και γευθέντες τον καλόν λόγον του Θεού και τας δυνάμεις του μέλλοντος αιώνος, (aiōn )
௫தேவனுடைய நல்வார்த்தையையும் இனிவரும் உலகத்தின் பெலன்களையும் ருசிபார்த்தும், (aiōn )
6 και έπειτα παραπεσόντες, αδύνατον να ανακαινισθώσι πάλιν εις μετάνοιαν, ανασταυρούντες εις εαυτούς τον Υιόν του Θεού και καταισχύνοντες.
௬மறுதலித்துப்போனவர்கள், தேவனுடைய குமாரனைத் தாங்களே மீண்டும் சிலுவையில் அறைந்து அவமானப்படுத்துகிறதினால், மனந்திரும்புவதற்காக அவர்களை மீண்டும் புதுப்பிக்கிறது முடியாதகாரியம்.
7 Διότι γη, ήτις πίνει την πολλάκις ερχομένην επ' αυτής βροχήν και γεννά βοτάνην ωφέλιμον εις εκείνους, διά τους οποίους και γεωργείται, μεταλαμβάνει ευλογίαν παρά Θεού·
௭எப்படியென்றால், தன்மேல் அடிக்கடி பெய்கிற மழைநீரைக் குடித்து, தன்னிடம் பயிரிடுகிறவர்களுக்குத் தேவையான பயிரை முளைப்பிக்கும் நிலமானது தேவனால் ஆசீர்வாதம் பெறும்.
8 όταν όμως εκφύη ακάνθας και τριβόλους, είναι αδόκιμος και πλησίον κατάρας, της οποίας το τέλος είναι να καυθή.
௮முள்செடிகளையும் முள்பூண்டுகளையும் முளைப்பிக்கிற நிலமோ மதிப்பில்லாததும், சபிக்கப்படுகிறதாகவும் இருக்கிறது; சுட்டெரிக்கப்படுவதே அதின் முடிவு.
9 Περί υμών δε, αν και λαλώμεν ούτως, αγαπητοί, είμεθα πεπεισμένοι ότι έχετε τα καλήτερα και συνεχόμενα με την σωτηρίαν.
௯பிரியமானவர்களே, நாங்கள் இப்படிச் சொன்னாலும், நன்மையானவைகளும் இரட்சிப்பிற்குரிய காரியங்களும் உங்களிடம் உண்டாயிருக்கிறதென்று நம்பியிருக்கிறோம்.
10 Διότι δεν είναι άδικος ο Θεός, ώστε να λησμονήση το έργον σας και τον κόπον της αγάπης, την οποίαν εδείξατε εις το όνομα αυτού, υπηρετήσαντες τους αγίους και υπηρετούντες.
௧0ஏனென்றால், உங்களுடைய செயல்களையும், நீங்கள் பரிசுத்தவான்களுக்கு ஊழியம் செய்ததினாலும், செய்து வருகிறதினாலும் அவருடைய நாமத்திற்காகக் காண்பித்த உங்களுடைய அன்பையும் மறந்துவிடுகிறதற்கு தேவன் அநீதியுள்ளவர் இல்லையே.
11 Επιθυμούμεν δε να δεικνύη έκαστος υμών την αυτήν σπουδήν προς την πληροφορίαν της ελπίδος μέχρι τέλους,
௧௧நீங்கள் அசதியாக இல்லாமல், வாக்குத்தத்தமான ஆசீர்வாதங்களை விசுவாசத்தினாலும் அதிக பொறுமையினாலும் சுதந்தரித்துக்கொள்ளுகிறவர்களைப் பின்பற்றுகிறவர்களாக இருந்து,
12 διά να μη γείνητε νωθροί, αλλά μιμηταί των διά πίστεως και μακροθυμίας κληρονομούντων τας επαγγελίας.
௧௨உங்களுக்கு நம்பிக்கையின் பூரணநிச்சயம் உண்டாக நீங்கள் எல்லோரும் முடிவுவரைக்கும் அதிக கவனத்தைக் காண்பிக்கவேண்டும் என்று ஆசையாக இருக்கிறோம்.
13 Διότι ο Θεός, δίδων επαγγελίαν εις τον Αβραάμ, επειδή δεν είχε να ομόση εις ουδένα μεγαλήτερον, ώμοσεν εις εαυτόν,
௧௩ஆபிரகாமுக்கு தேவன் வாக்குத்தத்தம்பண்ணினபோது, ஆணையிடுவதற்கு தம்மைவிட பெரியவர் ஒருவரும் இல்லாததினாலே தமது நாமத்தினாலே ஆணையிட்டு:
14 λέγων· Βεβαίως ευλογών θέλω σε ευλογήσει και πληθύνων θέλω σε πληθύνει·
௧௪நிச்சயமாக நான் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து, உன்னைப்பெருகவே பெருகப்பண்ணுவேன் என்றார்.
15 και ούτω προσμείνας με υπομονήν, απήλαυσε την επαγγελίαν.
௧௫அப்படியே, அவன் பொறுமையாகக் காத்திருந்து, வாக்குத்தத்தம்பண்ணப்பட்டதைப் பெற்றுக்கொண்டான்.
16 Διότι οι μεν άνθρωποι ομνύουσιν εις τον μεγαλήτερον, και ο όρκος είναι εις αυτούς τέλος πάσης αντιλογίας προς βεβαίωσιν.
௧௬மனிதர்கள் தங்களைவிட பெரியவர்கள் பெயரில் ஆணையிடுவார்கள்; எல்லா விவாதங்களிலும் உறுதிப்படுத்துவதற்கு ஆணையிடுதலே முடிவு.
17 Εις το οποίον ο Θεός, θέλων να δείξη περισσότερον προς τους κληρονόμους της επαγγελίας το αμετάθετον της βουλής αυτού, μετεχειρίσθη μέσον τον όρκον,
௧௭அப்படியே, தேவனும் வாக்குத்தத்தம்பண்ணப்பட்டவைகளைச் சுதந்தரித்துக்கொள்ளுகிறவர்களுக்குத் தமது ஆலோசனையின் மாறாத நிச்சயத்தைப் பரிபூரணமாகக் காண்பிக்க விருப்பம் உள்ளவராக, ஒரு ஆணையினாலே அதை உறுதிப்படுத்தினார்.
18 ώστε διά δύο πραγμάτων αμεταθέτων, εις τα οποία είναι αδύνατον να ψευσθή ο Θεός, να έχωμεν ισχυράν παρηγορίαν οι καταφυγόντες εις το να κρατήσωμεν την προκειμένην ελπίδα·
௧௮நமக்கு முன்பாக வைக்கப்பட்ட நம்பிக்கையைப் பற்றிக்கொள்வதற்கு அடைக்கலமாக ஓடிவந்த நமக்கு இரண்டு மாறாத விசேஷங்களினால் நிறைந்த ஆறுதல் உண்டாவதற்கு, கொஞ்சம்கூட பொய் சொல்லாத தேவன் அப்படிச் செய்தார்.
19 την οποίαν έχομεν ως άγκυραν της ψυχής ασφαλή τε και βεβαίαν και εισερχομένην εις το εσωτερικόν του καταπετάσματος,
௧௯அந்த நம்பிக்கை நமக்கு நிலையானதும், ஆத்துமாக்களுக்கு உறுதியான நங்கூரமாகவும், திரைக்குப் பின்னே மகா பரிசுத்த இடத்திற்குள் பிரவேசிக்கிறதாகவும் இருக்கிறது.
20 όπου ο Ιησούς εισήλθεν υπέρ ημών πρόδρομος, γενόμενος αρχιερεύς εις τον αιώνα κατά την τάξιν Μελχισεδέκ. (aiōn )
௨0நமக்கு முன்னோடியானவராகிய இயேசுகிறிஸ்து, மெல்கிசேதேக்கின் முறைமையில் நித்திய பிரதான ஆசாரியராக நமக்காக அந்தத் திரைக்குள் பிரவேசித்திருக்கிறார். (aiōn )