< Προς Ρωμαιους 6 >
1 τι ουν ερουμεν επιμενομεν τη αμαρτια ινα η χαρισ πλεοναση
௧ஆகவே, என்னசொல்லுவோம்? கிருபை பெருகுவதற்காகப் பாவத்திலே நிலைநிற்கலாம் என்று சொல்லுவோமா? சொல்லக்கூடாதே.
2 μη γενοιτο οιτινεσ απεθανομεν τη αμαρτια πωσ ετι ζησομεν εν αυτη
௨பாவத்திற்கு மரித்த நாம் இனி அதிலே எப்படி வாழ்வோம்?
3 η αγνοειτε οτι οσοι εβαπτισθημεν εισ χριστον ιησουν εισ τον θανατον αυτου εβαπτισθημεν
௩கிறிஸ்து இயேசுவிற்குள்ளாக ஞானஸ்நானம் பெற்ற நாம் அனைவரும் அவருடைய மரணத்திற்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றதை அறியாமல் இருக்கிறீர்களா?
4 συνεταφημεν ουν αυτω δια του βαπτισματοσ εισ τον θανατον ινα ωσπερ ηγερθη χριστοσ εκ νεκρων δια τησ δοξησ του πατροσ ουτωσ και ημεισ εν καινοτητι ζωησ περιπατησωμεν
௪மேலும் பிதாவின் மகிமையினாலே கிறிஸ்து மரித்தோரிலிருந்து உயிரோடு எழுப்பப்பட்டதுபோல, நாமும் புதிய ஜீவனுள்ளவர்களாக நடந்துகொள்வதற்கு, அவருடைய மரணத்திற்குள்ளாக்கும் ஞானஸ்நானத்தினாலே கிறிஸ்துவோடு அடக்கம் பண்ணப்பட்டோம்.
5 ει γαρ συμφυτοι γεγοναμεν τω ομοιωματι του θανατου αυτου αλλα και τησ αναστασεωσ εσομεθα
௫ஆகவே, அவருடைய மரணத்தின் சாயலில் நாம் இணைக்கப்பட்டவர்களானால், அவர் உயிர்த்தெழுதலின் சாயலிலும் இணைக்கப்பட்டிருப்போம்.
6 τουτο γινωσκοντεσ οτι ο παλαιοσ ημων ανθρωποσ συνεσταυρωθη ινα καταργηθη το σωμα τησ αμαρτιασ του μηκετι δουλευειν ημασ τη αμαρτια
௬நாம் இனிப் பாவத்திற்கு அடிமையாக இல்லாதபடிக்கு, பாவசரீரம் ஒழிந்துபோவதற்காக, நம்முடைய பழைய மனிதன் அவரோடு சிலுவையில் அறையப்பட்டதென்று அறிந்திருக்கிறோம்.
7 ο γαρ αποθανων δεδικαιωται απο τησ αμαρτιασ
௭மரித்தவன் பாவத்திற்கு நீங்கி விடுதலையாக்கப்பட்டிருக்கிறானே.
8 ει δε απεθανομεν συν χριστω πιστευομεν οτι και συζησομεν αυτω
௮எனவே, கிறிஸ்துவோடு நாம் மரித்தோம் என்றால், அவரோடு பிழைத்தும் இருப்போம் என்று நம்புகிறோம்.
9 ειδοτεσ οτι χριστοσ εγερθεισ εκ νεκρων ουκετι αποθνησκει θανατοσ αυτου ουκετι κυριευει
௯மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்த கிறிஸ்து இனி இறப்பதில்லை என்று அறிந்திருக்கிறோம்; மரணம் இனி அவரை ஆண்டுகொள்ளுவதில்லை.
10 ο γαρ απεθανεν τη αμαρτια απεθανεν εφαπαξ ο δε ζη ζη τω θεω
௧0அவர் மரித்தது, பாவத்திற்கென்று ஒரேமுறை மரித்தார்; அவர் பிழைத்திருக்கிறது, தேவனுக்கென்று பிழைத்திருக்கிறார்.
11 ουτωσ και υμεισ λογιζεσθε εαυτουσ νεκρουσ μεν ειναι τη αμαρτια ζωντασ δε τω θεω εν χριστω ιησου τω κυριω ημων
௧௧அப்படியே நீங்களும், உங்களைப் பாவத்திற்கு மரித்தவர்களாகவும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவிற்குள் தேவனுக்கென்று பிழைத்திருக்கிறவர்களாகவும் எண்ணிக்கொள்ளுங்கள்.
12 μη ουν βασιλευετω η αμαρτια εν τω θνητω υμων σωματι εισ το υπακουειν αυτη εν ταισ επιθυμιαισ αυτου
௧௨ஆகவே, நீங்கள் சரீர இச்சைகளின்படி பாவத்திற்குக் கீழ்ப்படிவதற்காக, மரணத்திற்குரிய உங்களுடைய சரீரத்தில் பாவம் ஆளுகை செய்யாமல் இருக்கட்டும்.
13 μηδε παριστανετε τα μελη υμων οπλα αδικιασ τη αμαρτια αλλα παραστησατε εαυτουσ τω θεω ωσ εκ νεκρων ζωντασ και τα μελη υμων οπλα δικαιοσυνησ τω θεω
௧௩நீங்கள் உங்களுடைய சரீர உறுப்புகளை அநீதியின் ஆயுதங்களாகப் பாவத்திற்கு ஒப்புக்கொடுக்காமல், உங்களை மரித்தோரிலிருந்து பிழைத்திருக்கிறவர்களாக தேவனுக்கு ஒப்புக்கொடுத்து, உங்களுடைய சரீர உறுப்புகளை நீதிக்குரிய ஆயுதங்களாக தேவனுக்கு ஒப்புக்கொடுங்கள்.
14 αμαρτια γαρ υμων ου κυριευσει ου γαρ εστε υπο νομον αλλ υπο χαριν
௧௪நீங்கள் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டிராமல் கிருபைக்குக் கீழ்பட்டிருக்கிறதினால், பாவம் உங்களை மேற்கொள்ளமுடியாது.
15 τι ουν αμαρτησομεν οτι ουκ εσμεν υπο νομον αλλ υπο χαριν μη γενοιτο
௧௫இதினால் என்ன? நாம் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டிராமல் கிருபைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறதினால், பாவம் செய்யலாமா? செய்யக்கூடாதே.
16 ουκ οιδατε οτι ω παριστανετε εαυτουσ δουλουσ εισ υπακοην δουλοι εστε ω υπακουετε ητοι αμαρτιασ εισ θανατον η υπακοησ εισ δικαιοσυνην
௧௬மரணத்திற்குரிய பாவத்திற்கானாலும், நீதிக்குரிய கீழ்ப்படிதலுக்கானாலும், எதற்குக் கீழ்ப்படிவதற்காக உங்களை அடிமைகளாக ஒப்புக்கொடுக்கிறீர்களோ, அதற்கே அடிமைகளாக இருக்கிறீர்கள் என்று தெரியாமல் இருக்கிறீர்களா?
17 χαρισ δε τω θεω οτι ητε δουλοι τησ αμαρτιασ υπηκουσατε δε εκ καρδιασ εισ ον παρεδοθητε τυπον διδαχησ
௧௭முன்பு நீங்கள் பாவத்திற்கு அடிமைகளாக இருந்தும், இப்பொழுது உங்களுக்கு ஒப்புவிக்கப்பட்ட உபதேச சட்டத்திற்கு நீங்கள் மனப்பூர்வமாகக் கீழ்ப்படிந்ததினாலே தேவனுக்கு ஸ்தோத்திரம்.
18 ελευθερωθεντεσ δε απο τησ αμαρτιασ εδουλωθητε τη δικαιοσυνη
௧௮பாவத்திலிருந்து நீங்கள் விடுதலையாக்கப்பட்டு, நீதிக்கு அடிமைகளானீர்கள்.
19 ανθρωπινον λεγω δια την ασθενειαν τησ σαρκοσ υμων ωσπερ γαρ παρεστησατε τα μελη υμων δουλα τη ακαθαρσια και τη ανομια εισ την ανομιαν ουτωσ νυν παραστησατε τα μελη υμων δουλα τη δικαιοσυνη εισ αγιασμον
௧௯உங்களுடைய சரீர பலவீனத்தினால் மனிதர்கள் பேசுகிறதுபோலப் பேசுகிறேன். அக்கிரமத்தைச் செய்வதற்காக முன்பே நீங்கள் உங்களுடைய சரீர உறுப்புகளை அசுத்தத்திற்கும் அக்கிரமத்திற்கும் அடிமைகளாக ஒப்புக்கொடுத்ததுபோல, இப்பொழுது பரிசுத்தமானதைச் செய்வதற்காக உங்களுடைய சரீர உறுப்புகளை நீதிக்கு அடிமையாக ஒப்புக்கொடுங்கள்.
20 οτε γαρ δουλοι ητε τησ αμαρτιασ ελευθεροι ητε τη δικαιοσυνη
௨0பாவத்திற்கு நீங்கள் அடிமைகளாக இருந்தகாலத்தில் நீதிக்கு விலகினவர்களாக இருந்தீர்கள்.
21 τινα ουν καρπον ειχετε τοτε εφ οισ νυν επαισχυνεσθε το γαρ τελοσ εκεινων θανατοσ
௨௧இப்பொழுது உங்களுக்கு வெட்கமாகத் தெரிகிற காரியங்களினாலே அந்தகாலத்தில் உங்களுக்கு என்ன பலன் கிடைத்தது? அவைகளின் முடிவு மரணமே.
22 νυνι δε ελευθερωθεντεσ απο τησ αμαρτιασ δουλωθεντεσ δε τω θεω εχετε τον καρπον υμων εισ αγιασμον το δε τελοσ ζωην αιωνιον (aiōnios )
௨௨இப்பொழுது நீங்கள் பாவத்தில் இருந்து விடுதலையாக்கப்பட்டு, தேவனுக்கு அடிமைகளானதினால், பரிசுத்தமாகுதல் உங்களுக்குக் கிடைக்கும் பலன், முடிவோ நித்தியஜீவன். (aiōnios )
23 τα γαρ οψωνια τησ αμαρτιασ θανατοσ το δε χαρισμα του θεου ζωη αιωνιοσ εν χριστω ιησου τω κυριω ημων (aiōnios )
௨௩பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன். (aiōnios )