< Προς Κορινθιους Β΄ 4 >
1 δια τουτο εχοντεσ την διακονιαν ταυτην καθωσ ηλεηθημεν ουκ εκκακουμεν
௧இப்படிப்பட்ட ஊழியத்தை உடையவர்களாகிய நாங்கள் இரக்கம் பெற்றிருப்பதால் சோர்ந்துபோகிறது இல்லை.
2 αλλα απειπαμεθα τα κρυπτα τησ αισχυνησ μη περιπατουντεσ εν πανουργια μηδε δολουντεσ τον λογον του θεου αλλα τη φανερωσει τησ αληθειασ συνιστωντεσ εαυτουσ προσ πασαν συνειδησιν ανθρωπων ενωπιον του θεου
௨வெட்கமான அந்தரங்க காரியங்களை நாங்கள் வெறுத்து, தந்திரமாக நடக்காமலும், தேவ வசனத்தைத் திரித்துக் கூறாமலும், சத்தியத்தை வெளிப்படுத்துகிறதினாலே தேவனுக்குமுன்பாக எல்லா மனிதர்களுடைய மனச்சாட்சிக்கும் எங்களை உத்தமர்கள் என்று விளங்கப்பண்ணுகிறோம்.
3 ει δε και εστιν κεκαλυμμενον το ευαγγελιον ημων εν τοισ απολλυμενοισ εστιν κεκαλυμμενον
௩எங்களுடைய நற்செய்தி மறைபொருளாக இருந்தால், கெட்டுப்போகிறவர்களுக்கே அது மறைபொருளாக இருக்கும்.
4 εν οισ ο θεοσ του αιωνοσ τουτου ετυφλωσεν τα νοηματα των απιστων εισ το μη αυγασαι αυτοισ τον φωτισμον του ευαγγελιου τησ δοξησ του χριστου οσ εστιν εικων του θεου (aiōn )
௪தேவனுடைய சாயலாக இருக்கிற கிறிஸ்துவின் மகிமையான நற்செய்தியின் ஒளி, அவிசுவாசிகளாகிய அவர்களுக்குப் பிரகாசமாக இல்லாதபடி, இந்த உலகத்தின் தேவனானவன் அவர்களுடைய மனதைக் குருடாக்கினான். (aiōn )
5 ου γαρ εαυτουσ κηρυσσομεν αλλα χριστον ιησουν κυριον εαυτουσ δε δουλουσ υμων δια ιησουν
௫நாங்கள் எங்களையே பிரசங்கிக்காமல், கிறிஸ்து இயேசுவைக் கர்த்தர் என்றும், எங்களையோ இயேசுவினிமித்தம் நாங்கள் உங்களுடைய ஊழியக்காரர்கள் என்றும் பிரசங்கிக்கிறோம்.
6 οτι ο θεοσ ο ειπων εκ σκοτουσ φωσ λαμψαι οσ ελαμψεν εν ταισ καρδιαισ ημων προσ φωτισμον τησ γνωσεωσ τησ δοξησ του θεου εν προσωπω ιησου χριστου
௬இருளில் இருந்து வெளிச்சத்தைப் பிரகாசிக்கச்சொன்ன தேவன் இயேசுகிறிஸ்துவின் முகத்தில் உள்ள தமது மகிமையின் அறிவாகிய ஒளியைத் தோன்றப்பண்ணுவதற்காக, எங்களுடைய இருதயங்களிலே பிரகாசித்தார்.
7 εχομεν δε τον θησαυρον τουτον εν οστρακινοισ σκευεσιν ινα η υπερβολη τησ δυναμεωσ η του θεου και μη εξ ημων
௭இந்த மகத்துவமுள்ள வல்லமை எங்களால் உண்டாகாமல், தேவனால் உண்டாகியிருக்கிறது என்று தெரியும்படி, இந்தப் பொக்கிஷத்தை மண்பாண்டங்களில் பெற்றிருக்கிறோம்.
8 εν παντι θλιβομενοι αλλ ου στενοχωρουμενοι απορουμενοι αλλ ουκ εξαπορουμενοι
௮நாங்கள் எல்லாப் பக்கங்களிலும் நெருக்கப்பட்டும் ஒடுங்கிப்போகிறதில்லை; கலக்கம் அடைவதும், மனம் உடைவதும் இல்லை;
9 διωκομενοι αλλ ουκ εγκαταλειπομενοι καταβαλλομενοι αλλ ουκ απολλυμενοι
௯துன்பப்படுத்தப்பட்டும் கைவிடப்படுவதில்லை; கீழே தள்ளப்பட்டும் மடிந்துபோகிறதில்லை.
10 παντοτε την νεκρωσιν του κυριου ιησου εν τω σωματι περιφεροντεσ ινα και η ζωη του ιησου εν τω σωματι ημων φανερωθη
௧0கர்த்தராகிய இயேசுவினுடைய ஜீவன் எங்களுடைய சரீரத்திலே தெரியும்படி, இயேசுவின் மரணத்தை எப்பொழுதும் எங்களுடைய சரீரத்தில் சுமந்து திரிகிறோம்.
11 αει γαρ ημεισ οι ζωντεσ εισ θανατον παραδιδομεθα δια ιησουν ινα και η ζωη του ιησου φανερωθη εν τη θνητη σαρκι ημων
௧௧எப்படியென்றால், மரணத்திற்குரிய எங்களுடைய சரீரத்திலே இயேசுவினுடைய ஜீவன் தெரியும்படி உயிரோடு இருக்கிற நாங்கள் எப்பொழுதும் இயேசுவுக்காக மரணத்திற்கு ஒப்புக்கொடுக்கப்படுகிறோம்.
12 ωστε ο μεν θανατοσ εν ημιν ενεργειται η δε ζωη εν υμιν
௧௨இப்படி மரணமானது எங்களிடமும், ஜீவனானது உங்களிடமும் பெலன் செய்கிறது.
13 εχοντεσ δε το αυτο πνευμα τησ πιστεωσ κατα το γεγραμμενον επιστευσα διο ελαλησα και ημεισ πιστευομεν διο και λαλουμεν
௧௩விசுவாசித்தேன், ஆகவே, பேசினேன் என்று எழுதியிருக்கிறபடி, நாங்களும் அந்த விசுவாசத்தின் ஆவியை உடையவர்களாக இருந்து, விசுவாசிக்கிறதினால் பேசுகிறோம்.
14 ειδοτεσ οτι ο εγειρασ τον κυριον ιησουν και ημασ δια ιησου εγερει και παραστησει συν υμιν
௧௪கர்த்தராகிய இயேசுவை உயிரோடு எழுப்பினவர் எங்களையும் இயேசுவைக்கொண்டு எழுப்பி, உங்களோடு தமக்குமுன்பாக நிறுத்துவார் என்று அறிந்திருக்கிறோம்.
15 τα γαρ παντα δι υμασ ινα η χαρισ πλεονασασα δια των πλειονων την ευχαριστιαν περισσευση εισ την δοξαν του θεου
௧௫தேவனுடைய மகிமை அநேகருக்கு வெளிப்படுவதற்கேதுவாக அநேகருடைய ஸ்தோத்திரத்தினாலே கிருபையானது பெருகும்படி, இவைகளெல்லாம் உங்களுக்காக உண்டாகியிருக்கிறது.
16 διο ουκ εκκακουμεν αλλ ει και ο εξω ημων ανθρωποσ διαφθειρεται αλλ ο εσωθεν ανακαινουται ημερα και ημερα
௧௬எனவே, நாங்கள் சோர்ந்துபோகிறதில்லை; எங்களுடைய புறம்பான மனிதன் அழிந்தாலும், உள்ளான மனிதன் நாளுக்குநாள் புதிதாக்கப்படுகிறான்.
17 το γαρ παραυτικα ελαφρον τησ θλιψεωσ ημων καθ υπερβολην εισ υπερβολην αιωνιον βαροσ δοξησ κατεργαζεται ημιν (aiōnios )
௧௭மேலும் காணப்படுகிறவைகளை இல்லை, காணாதவைகளை நோக்கியிருக்கிற நமக்கு, அதிசீக்கிரத்தில் நீங்கிப்போகும் இலேசான நம்முடைய உபத்திரவம், மிகவும் அதிகமான நித்திய கனமகிமையை உண்டாக்குகிறது. (aiōnios )
18 μη σκοπουντων ημων τα βλεπομενα αλλα τα μη βλεπομενα τα γαρ βλεπομενα προσκαιρα τα δε μη βλεπομενα αιωνια (aiōnios )
௧௮ஏனென்றால், காணப்படுகிறவைகள் தற்காலிகமானவைகள், காணப்படாதவைகளோ நித்தியமானவைகள். (aiōnios )