< Mi Doagidima 2 >
1 Diani Kilisiti n yini yaaba, yaaba n ye Efesa po yaa maleko po ki yedi o: diidi ki le yua n muubi a ŋmabileleeda o najienu nni, ki go cuoni wula fidisantuan-kaani lelee siiga yeni yedi:
௧எபேசு சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவென்றால்: ஏழு நட்சத்திரங்களைத் தம்முடைய வலது கையில் ஏந்திக்கொண்டு, ஏழு பொன் குத்துவிளக்குகளின் நடுவிலே உலாவிக்கொண்டிருக்கிறவர் சொல்லுகிறதாவது;
2 N bani a bontienkaala, leni a tuona, leni a juunli; n bani ke a kan tuo bi nibiadiba po. A den biigi yaaba n tua ke bi tie tondiba kinaa tie yeni, ki sua ke bi tie tuofadanba.
௨நீ செய்தவைகளையும், உன் கடினஉழைப்பையும், உன் பொறுமையையும், நீ பொல்லாதவர்களைச் சகித்துக்கொள்ளமுடியாமல் இருக்கிறதையும், அப்போஸ்தலர்களாக இல்லாதவர்கள் தங்களை அப்போஸ்தலர்கள் என்று சொல்லுகிறதை நீ சோதித்துப்பார்த்து அவர்கள் பொய்யர்கள் என்பதைக் கண்டுபிடித்ததையும்;
3 A pia li juunli, a laa fala kelima n yeli po, ki naa den cedi baa waamu.
௩நீ சகித்துக்கொண்டு இருக்கிறதையும், பொறுமையாக இருக்கிறதையும், என் நாமத்திற்காக ஓய்வு இல்லாமல் பிரயாசப்பட்டதையும் அறிந்திருக்கிறேன்.
4 Ama min fu leni a yaala, tie ke a ŋa a buakpiama.
௪ஆனாலும், நீ ஆரம்பத்திலே வைத்திருந்த அன்பைவிட்டுவிட்டாய் என்று உன்மேல் எனக்குக் குறை உண்டு.
5 Lanwani ŋan tiadi ŋan baa naani, ki lebidi a yama, ki go ya tiendi nani ŋan den kpa tiendi maama. Lani yaaka, n baa cua a kani ki tuadi a fidisantuankaanu ki ñani u u kaanu, hali a yaa lebidi a yama.
௫எனவே, நீ எந்த நிலைமையில் இருந்து விழுந்தாய் என்பதை நினைத்து, மனம்திரும்பி, ஆதியில் செய்த செய்கைகளைச் செய்; இல்லாவிட்டால் நான் சீக்கிரமாக உன்னிடம் வந்து, நீ மனம்திரும்பவில்லை என்றால், உன் விளக்குத்தண்டை அதனிடத்திலிருந்து நீக்கிவிடுவேன்.
6 Baa yeni, a pia line wani, kelima a nani nikolasa ŋoadikaaba bontienkaala, mini moko n nani yaala.
௬நான் வெறுக்கிற நிக்கொலாய் மதத்தைச் சேர்ந்தவர்களின் செய்கைகளை நீயும் வெறுக்கிறாய், இது உன்னிடத்தில் உண்டு.
7 Yua n pia a tuba, wan cengi mi Fuoma n tua Kilisiti n yini yaaba nitaana yaala. Yua n koani mi jama ki paadi n baa pa o wan ya ti di li miali tibu, yaabu n ye U Tienu ŋalijani diema nni bonluonkaala.
௭ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கவேண்டும்; ஜெயம் பெறுகிறவன் எவனோ அவனுக்கு தேவனுடைய பரதீசின் நடுவில் இருக்கிற ஜீவமரத்தின் கனியை உண்ணக்கொடுப்பேன் என்று எழுது.
8 Diani Kilisitin yini yaaba similina po ya maleki po ki yedi o: Diidi ki le o kpialo leni o juodikoa, wani yua n den kpe, ki go ye ki fo yedi line:
௮சிமிர்னா சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவென்றால்: முந்தினவரும் பிந்தினவரும், மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்தவருமானவர் சொல்லுகிறதாவது;
9 N bani ŋan ye leni ya fala leni a luoma (ba ke a pia) n go bani yaaba n tua ke bi tie jufinba ki naa tie yeni, n maadi yi po tuofamaama, bi tie sutaani nitaanli yaaba.
௯உன் செய்கைகளையும், உன் உபத்திரவத்தையும், நீ ஐசுவரியம் உள்ளவனாக இருந்தும் உனக்கு இருக்கிற தரித்திரத்தையும், தங்களை யூதர்கள் என்று சொல்லியும் யூதர்களாக இல்லாமல் சாத்தானுடைய கூட்டமாக இருக்கிறவர்கள் செய்யும் அவதூறுகளையும் அறிந்திருக்கிறேன்.
10 Han da jie, ŋan baa le ya fala diidi sutaani baa kuani yi siiga bi nitianba li kadidieli nni lani ki biigi yi, bi baa waani yi fala dana piiga. ya tie nidugika, hali mi kuuma lani n baa pa ŋa li miali ya badifogiliga.
௧0நீ படப்போகிற பாடுகளைப்பற்றிப் பயப்படாதே; இதோ, நீங்கள் சோதிக்கப்படுவதற்காகப் பிசாசு உங்களில் சிலரைக் காவலில் போடுவான்; பத்துநாட்கள் உபத்திரவப்படுவீர்கள். ஆனாலும் நீ மரிக்கும்வரை உண்மையாக இரு, அப்பொழுது ஜீவகிரீடத்தை உனக்குத் தருவேன்.
11 Yua n pia a tuba, wan cengi mi fuoma n tua Kilisiti n yini yaaba nitaana yaala yua n koani mi jama ki paadi, mi kuliedima fala kan pundi o.
௧௧ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கவேண்டும்; ஜெயம் பெறுகிறவன் இரண்டாம் மரணத்தினால் சேதப்படுவதில்லை என்று எழுது.
12 Diani Kilisiti n yini yaaba peligama po, ya maleki po ki yedi o: diidi yua n kubi ki jugisieñoaliedi manga n yedi line:
௧௨பெர்கமு சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவென்றால்: இரண்டு பக்கமும் கூர்மையான வாளை வைத்திருப்பவர் சொல்லுகிறதாவது;
13 N bani a ye kaanu, likani tie Sutaani balikalikaanu n ye naani, a kubi n yeli, ŋaa nia li dandanli, baa ban den kpa n nidugika anti pasa ya dana nni yi dogu nni Sutaani n ye naani.
௧௩உன் செய்கைகளையும், சாத்தானுடைய சிங்காசனம் இருக்கிற இடத்தில் நீ குடியிருக்கிறதையும், நீ என் நாமத்தை உறுதியாகப் பிடித்துக் கொண்டிருக்கிறதையும், சாத்தான் குடியிருக்கிற இடத்திலே உங்களுக்குள்ளே எனக்கு உண்மையுள்ள சாட்சியான அந்திப்பா என்பவன் கொல்லப்பட்ட நாட்களிலும் என்மேல் நீ வைத்த உன் விசுவாசத்தை, நீ மறுதலிக்காமல் இருந்ததையும் அறிந்திருக்கிறேன்.
14 Ama a pia min nani yaala a kani, li tie ke a pia a kani yaaba n ŋua balaama bangima, yua n den bangi balaaka ke o tulini isalele yaaba ke bi ŋmani ti padi nandi ki go conbi.
௧௪ஆனாலும், சில காரியங்களைக்குறித்து உன்மேல் எனக்குக் குறை உண்டு; இஸ்ரவேல் மக்கள் விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளை சாப்பிடுவதற்கும் வேசித்தனம் பண்ணுவதற்கும் சாதகமான இடறலை அவர்களுக்கு முன்பாகப் போடும்படி பாலாக் என்பவனுக்குப் போதனைசெய்த பிலேயாமுடைய போதனையைக் கடைபிடிக்கிறவர்கள் உன்னிடம் உண்டு.
15 Li go tie yeni, ke a moko pia a kani yaaba moko n ŋua nikolasa bangima.
௧௫அப்படியே நிக்கொலாய் மதத்தினருடைய போதனையைக் கடைபிடிக்கிறவர்களும் உன்னிடம் உண்டு; அதை நான் வெறுக்கிறேன்.
16 Han lebidi a yama, lani yaaka, n baa cua a kani ke li kan waagi, ki koani leni laa niba leni n ñoabu jugisiega.
௧௬நீ மனம்திரும்பு, இல்லாவிட்டால் நான் சீக்கிரமாக உன்னிடம் வந்து, என் வாயின் வாளினால் அவர்களோடு யுத்தம்பண்ணுவேன்.
17 Yua n pia a tuba, wan cengi mi Fuoma n tua Kilisiti n yini yaaba nitaana yaala. Yua n koani mi jama ki paadi, n baa pa o ya mana n wuo, ki go pa o li tanpienli, ban diani li yepanli yaali ya po, oba kuli ki bani li kali yua n baa litanpienli bebe.
௧௭ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கவேண்டும்; ஜெயம் பெறுகிறவனுக்கு நான் மறைவான மன்னாவை உண்ணக்கொடுத்து, பெற்றுக்கொள்கிறவனைத்தவிர வேறொருவனுக்கும் தெரியாத புதிய நாமம் எழுதப்பட்ட வெண்மையானக் கல்லைக் கொடுப்பேன் என்று எழுது.
18 Diani Kilisiti n yini yaaba tiatila po, ya maleki po ki yedi o: Utienu Bijua, yua ya nuni n nani u mupienu yeni, ke o taana mo tie nani ya kumoandi n ñuliti yeni, n yedi yaala n te na.
௧௮தியத்தீரா சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவென்றால்: அக்கினிஜூவாலை போன்ற கண்களும், பிரகாசமான வெண்கலம்போன்ற பாதங்களும் உள்ள தேவகுமாரன் சொல்லுகிறதாவது;
19 n bani a bontienkaala, leni a buama, a dandanli leni a todima nitoaba po, leni a juunli. ŋan go yuandi ki tieni ya tuonŋama yabi ki cie, a kpiala.
௧௯உன் செய்கைகளையும், உன் அன்பையும், உன் ஊழியத்தையும், உன் விசுவாசத்தையும், உன் பொறுமையையும், நீ முன்பு செய்த செயல்களைவிட பின்பு செய்த செயல்கள் அதிகமாக இருக்கிறதையும் அறிந்திருக்கிறேன்.
20 Ama min fu leni a yaala yaapo tie a cedi ke ya pua n yi Jesabela, yua n tua ke o tie sawalipoalo, bangi n naacenba ki tulini ba, ke bi tiendi mi conconma, ki go ŋmani ti padinandi.
௨0ஆனாலும், உன்மேல் எனக்குக் குறை உண்டு; என்னவென்றால், தன்னைத் தீர்க்கதரிசி என்று சொல்லுகிற யேசபேல் என்னும் பெண், என்னுடைய ஊழியக்காரர்கள் வேசித்தனம்பண்ணவும் விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளைச் சாப்பிடவும் அவர்களுக்குப் போதித்து, அவர்களை ஏமாற்ற, நீ அவளுக்கு இடம் கொடுக்கிறாய்.
21 N den puni o u yogunu wan lebidi o yama o conconma po.
௨௧அவள் மனம்திரும்புவதற்காக அவளுக்கு வாய்ப்புக்கொடுத்தேன்; தன் வேசித்தன வழியைவிட்டு மனம்திரும்ப அவளுக்கு விருப்பம் இல்லை.
22 Diidi, n baa lu o u duanu po, ki taani leni yaaba n conbi leni o kuli, ki waani ba o falabiado, kali bi lebidi bi yama bi tuona po.
௨௨இதோ, நான் அவளைக் கட்டில்கிடையாக்கி, அவளோடு விபசாரம் செய்தவர்கள் தங்களுடைய செய்கைகளைவிட்டு மனம்திரும்பவில்லை என்றால், அவர்களையும் அதிக உபத்திரவத்திலே தள்ளி,
23 N ba cedi mi kuuma n kpa o bila, lani kilisiti n yini yaaba nitaana kuli baa bandi ke n tie yua n bigidi bi niba yantiana leni bi pala kuli, ki go baa pa yi siiga yua kuli o panpaani nani yi tuona n tie maama.
௨௩அவளுடைய பிள்ளைகளையும் கொல்லுவேன்; அப்பொழுது நானே, சிந்தனைகளையும், இருதயங்களையும் ஆராய்கிறவர் என்று எல்லா சபைகளும் அறிந்துகொள்ளும்; உங்கள் ஒவ்வொருவனுக்கும் உங்களுடைய செய்கைகளுக்குத் தகுந்தபடியே பலன் கொடுப்பேன்.
24 Yinba, leni Tiatila yaaba, yaaba n sieni kaa ŋoadi laa bangima, kaa bandi Sutaani ŋasiili, nani ban yi ba maama n yedi yi: N kan tuni yi tugitoali,
௨௪தியத்தீராவிலே இந்தப் போதகத்தைப் பின்பற்றாமலும், சாத்தானுடைய ஆழமான இரகசியங்கள் என்று சொல்லப்படுகிற அந்தத் தந்திரங்களை அறிந்துகொள்ளாமலும் இருக்கிற மற்றவர்களாகிய உங்களுக்கு நான் சொல்லுகிறதாவது; உங்கள்மேல் எந்தவொரு பாரத்தையும் சுமத்தமாட்டேன்.
25 kali yin yaa kubi yin kubi yaala bonŋanla, hali min baa cua.
௨௫நான் வரும்வரைக்கும் என்னை விசுவாசித்து என்னைப் பற்றிக்கொண்டிருங்கள்.
26 Yua n koani mi jama ki paadi, ki kubi n tuona hali mi juodima, n baa dini o li bali, wan yaa die i nibuoli.
௨௬ஜெயம்பெற்று கடைசிவரைக்கும் நான் செய்த காரியங்களைச் செய்கிறவன் எவனோ அவனுக்கு நான் என் பிதாவிடம் இருந்து அதிகாரம் பெற்றதுபோல, தேசங்களின் மக்கள்மேல் அதிகாரம் கொடுப்பேன்.
27 O ba ti yaa gobidiba leni ti kudi yaa badi- gbianu, nani ban mudi ti tandi tiadi maama yeni. nani mini n ba, min ba li bali n Baa kani maama yeni.
௨௭அவன் இரும்புக்கோலால் அவர்களை ஆளுவான்; அவர்கள் மண்பாண்டங்களைப்போல நொறுக்கப்படுவார்கள்.
28 n go ba ti pa o ki taŋaŋmabiga.
௨௮விடியற்கால நட்சத்திரத்தையும் அவனுக்குக் கொடுப்பேன்.
29 Yua n pia a tuba, wan cengi mi Fuoma n tua Kilisiti n yini yaaba nitaana yaala.
௨௯ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கவேண்டும் என்று எழுது.