< Yohaannisa Qonccethaa 12 >

1 Hessafe guye, salon wolqqaama malaati benttis. Awaa ma77ada, ageena bolla eqqada, tammanne nam77u xoolintto kallachcha ba huu7en wothida de7iya, issi maccasiya benttasu.
அன்றியும் ஒரு பெரிய அடையாளம் வானத்திலே காணப்பட்டது; ஒரு பெண் சூரியனை அணிந்திருந்தாள், அவள் பாதங்களின் கீழே சந்திரனும், அவள் தலையின்மேல் பன்னிரண்டு நட்சத்திரங்களுள்ள கிரீடமும் இருந்தன.
2 He maccasiya qantheshin, iyo iqethi oykkin un77ettada waassasu.
அவள் கர்ப்பவதியாக இருந்து, பிரசவவேதனையடைந்து, குழந்தைபெறும்படி கதறி அழுதாள்.
3 Qassi hara malaati salon benttis. Laappun huu7etinne tammu kaceti de7iya gita zo7o dawey benttis. I ba huu7eta bolla laappun kallachcha wothis.
அப்பொழுது வேறொரு அடையாளம் வானத்திலே காணப்பட்டது; ஏழு தலைகளையும், பத்துக் கொம்புகளையும், தன் தலைகளின்மேல் ஏழு கிரீடங்களையுடைய சிவப்பான பெரிய இராட்சசப் பாம்பு இருந்தது.
4 He dawey ba goynan xoolinttotappe sikkuwa saloppe dafidi sa7an yeggis. He dawey na7ay yeleti wodhdhida mela mittanaw koyidi, yelanaw eqettiya maccase sinthan eqqis.
அதின் வால் வானத்தின் நட்சத்திரங்களில் மூன்றில் ஒரு பங்கை இழுத்து, அவைகளைப் பூமியில் விழத்தள்ளியது; பிரசவவேதனைப்படுகிற அந்தப் பெண் குழந்தைபெற்றவுடனே, அவளுடைய குழந்தையைக் கொன்றுபோடுவதற்காக அந்த இராட்சசப் பாம்பு அவளுக்கு முன்பாக நின்றது.
5 He maccasiya kawotethaa ubbaa biraata xam77an haaranaw de7iya adde na7a yelasu. Na7ay Xoossaakonne iya araatakko pude ekettis.
எல்லா தேசங்களையும் இரும்புக்கோலால் ஆளுகைசெய்யும் ஆண்பிள்ளையை அவள் பெற்றாள்; அவளுடைய குழந்தை தேவனிடத்திற்கும் அவருடைய சிங்காசனத்தினிடத்திற்கும் எடுத்துக்கொள்ளப்பட்டது.
6 Maccasiya 1260 gallas gakkanaw iyo naagana mela Xoossay iw giigisi wothida bessaa bazzo biitta baqatasu.
அந்தப் பெண் வனாந்திரத்திற்கு ஓடிப்போனாள்; அவளை ஆயிரத்து இருநூற்றுஅறுபது நாட்கள் போஷிப்பதற்காக தேவனால் ஆயத்தமாக்கப்பட்ட இடம் அங்கே இருந்தது.
7 Salon oli medhettis. Mikaa7eley ba kiitanchchotara dawiyara olettis; dawey ba kiitanchchotara gididi zaari olettis.
வானத்திலே யுத்தம் உண்டானது; அந்த யுத்தத்தில் மிகாவேலும் அவனைச் சேர்ந்த தூதர்களும் இராட்சசப் பாம்போடு யுத்தம்பண்ணினார்கள்; இராட்சசப் பாம்பும் அதைச் சேர்ந்த தூதர்களும் யுத்தம்பண்ணியும் வெற்றி பெறமுடியவில்லை.
8 Shin dawey xoonettidi salon enttaw de7iya bessi dhayidosona.
பரலோகத்தில் அவர்கள் இருந்த இடமும் காணாமல்போனது.
9 Gita dawey, beni shooshay, sa7an yegettis. Ikka Daabulosa woykko Xalahe geetettiya alamiya baletheyssa. I ba kiitanchchotara issife duge alamiya yegettis.
உலகம் முழுவதையும் ஏமாற்றுகிறவன் பிசாசு என்றும் சாத்தான் என்றும் சொல்லப்பட்ட ஆரம்பத்தில் இருந்த பாம்பாகிய பெரிய இராட்சசப் பாம்பு தள்ளப்பட்டது; அது பூமியிலே விழத்தள்ளப்பட்டது, அதோடு அதைச் சேர்ந்த தூதர்களும் தள்ளப்பட்டார்கள்.
10 Hessafe guye, salon hayssada yaagiya qaala si7as. “Ha77i atotethay, wolqqaynne kawotethay, nu Xoossassa; maatay Kiristtoosas gidis. Hiza, qammanne gallas Xoossaa sinthan, nu ishata mooteyssi saloppe duge holettis.
௧0அப்பொழுது வானத்திலே ஒரு பெரியசத்தம் உண்டாகி: இப்பொழுது இரட்சிப்பும் வல்லமையும் நமது தேவனுடைய ராஜ்யமும், அவருடைய கிறிஸ்துவின் அதிகாரமும் உண்டாயிருக்கிறது; இரவும் பகலும் நம்முடைய தேவனுக்குமுன்பாக நம்முடைய சகோதரர்மேல் குற்றஞ்சாட்டும்படி அவர்கள்மேல் குற்றஞ்சாட்டுகிறவன் தூக்கி எறியப்பட்டான்.
11 Entti dorssa suuthaaninne bantta markkatethaa qaalan, iya olidi xoonidosona. Entti bantta shemppuwas mishettonna banttana hayqos aathi immidosona.
௧௧மரணம் சம்பவிக்கிறதாக இருந்தாலும் அதற்குத் தப்பிப்பதற்காக தங்களுடைய உயிரையும் பார்க்காமல், ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினாலும் தங்களுடைய சாட்சியின் வசனத்தினாலும் அவனை ஜெயித்தார்கள்.
12 Hessa gisho, saloninne iya giddon de7eyssato ufayttite. Shin biittaanne abbaa ayye! Hiza, Xalahey baw guutha wodey attidayssa erida gisho, wolqqaama hanqon hintteko wodhdhis” yaagis.
௧௨எனவே, பரலோகங்களே! அவைகளில் வசிக்கிறவர்களே! களிகூருங்கள். ஆனால், பூமியிலும் கடலிலும் குடியிருக்கிறவர்களே! ஐயோ, பிசாசானவன் தனக்குக் கொஞ்சக்காலம்மட்டும் இருக்கிறதைத் தெரிந்து, அதிக கோபப்பட்டு, உங்களிடம் இறங்கினதினால், உங்களுக்கு ஆபத்துவரும் என்று சொல்வதைக்கேட்டேன்.
13 Qassi dawey bana sa7a yeggidayssa be7ida wode adde na7a yelida maccasiw goodis.
௧௩இராட்சசப் பாம்பானது தான் பூமியிலே தள்ளப்பட்டதை அறிந்து, அந்த ஆண் குழந்தையைப் பெற்ற பெண்ணைத் துன்பப்படுத்தினது.
14 Maccasiw shooshay qohonna mela heedzu laythinne bagga mashshenne uyashe iya naagettiya bessi bazzo biitta piradhdhada baana mela nam77u wolqqaama arggantha qefey iw imettis.
௧௪அந்தப் பெண் அந்தப் பாம்பின் முகத்திற்கு விலகி, ஒரு காலமும், காலங்களும், அரைக்காலமுமாகப் போஷிக்கப்படத்தக்கதாக வனாந்திரத்தில் உள்ள தன் இடத்திற்குப் பறந்துபோவதற்காக பெரிய கழுகின் இரண்டு சிறகுகள் அவளுக்குக் கொடுக்கப்பட்டது.
15 Yaatidi, maccasiw di7oy di77idi efana mela dawey shaafa haatha mela ba doonappe maccase guyera cooyis.
௧௫அப்பொழுது அந்தப் பெண்ணை வெள்ளம் அடித்துக்கொண்டுபோகும்படி பாம்பானது தன் வாயிலிருந்து ஒரு நதிபோன்ற தண்ணீரை அவளுக்குப் பின்பாக ஊற்றிவிட்டது.
16 Shin biittay maccasiw maaddis; biittay ba doona dooyidi dawiya doonappe keyida haathaa mittis.
௧௬ஆனால், பூமியானது பெண்ணுக்கு உதவியாகத் தன் வாயைத் திறந்து, இராட்சசப் பாம்பு தன் வாயிலிருந்து ஊற்றின தண்ணீரை விழுங்கினது.
17 He dawey maccase bolla daro hanqettidi, I zerethata, Xoossaa kiitaa naageyssatanne Yesuusi qonccisida tumaas ammanettidayssata olanaw bidi.
௧௭அப்பொழுது இராட்சசப் பாம்பு பெண்ணின்மேல் கோபப்பட்டு, தேவனுடைய கட்டளைகளைக் கடைபிடிக்கிறவர்களும், இயேசுகிறிஸ்துவைக்குறித்துச் சாட்சியை உடையவர்களுமாகிய அவளுடைய வம்சத்தின் மற்ற பிள்ளைகளோடு யுத்தம்பண்ணப் போனது.

< Yohaannisa Qonccethaa 12 >