< Ézéchiel 46 >

1 Ainsi parle le Seigneur, l'Éternel: La porte du parvis intérieur qui donne à l'orient, demeurera fermée pendant les six jours ouvrables; mais au jour du sabbat elle s'ouvrira, et au jour de la nouvelle lune, elle s'ouvrira.
யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: வேலைசெய்கிற ஆறுநாட்களிலும் கிழக்குக்கு எதிரான உள்முற்றத்தினுடைய வாசல் பூட்டப்பட்டிருந்து, ஓய்வு நாளிலும் மாதப்பிறப்பிலும் திறக்கப்படவேண்டும்.
2 Et le prince entrera de dehors par le vestibule de la porte, et s'arrêtera devant les jambages de la porte; et les prêtres offriront son holocauste, et son sacrifice d'actions de grâces; et il adorera sur le seuil de la porte, puis il se retirera. Cependant la porte ne sera pas fermée avant le soir;
அப்பொழுது இளவரசன் வெளிவாசல் மண்டபத்தின் வழியாக நுழைந்து, வாசற்படி அருகில் நிற்கவேண்டும்; ஆசாரியர்களோ அவனுடைய தகனபலியையும், அவனுடைய சமாதான பலிகளையும் படைக்கவேண்டும்; அவன் வாசற்படியிலே ஆராதனை செய்து, பின்பு புறப்படுவானாக; அந்த வாசல் மாலைவரை பூட்டப்படாமல் இருப்பதாக.
3 et le peuple du pays adorera à l'entrée de la même porte aux jours de sabbat et de nouvelles lunes en présence de l'Éternel.
தேசத்து மக்களும் ஓய்வுநாட்களிலும் மாதப்பிறப்புகளிலும் அந்த வாசலின் நடையிலே யெகோவாவுடைய சந்நிதியில் ஆராதனை செய்யவேண்டும்.
4 Et l'holocauste que le prince aura à offrir à l'Éternel sera, le jour du sabbat, six brebis sans défaut, et un bélier sans défaut;
அதிபதி ஓய்வுநாளிலே யெகோவாவுக்குப் பலியிடும் தகனபலி, பழுதற்ற ஆறு ஆட்டுக்குட்டிகளும் பழுதற்ற ஒரு ஆட்டுக்கடாவுமே.
5 et son offrande, un épha par bélier, et par brebis une offrande telle qu'il pourra la donner, et en huile un hin par épha.
ஆட்டுக்கடாவுடன் உணவுபலியாக ஒரு மரக்கால் மாவையும், ஆட்டுக்குட்டிகளுடன் உணவுபலியாகத் தன்னுடைய திராணிக்குத்தகுந்ததாகத் தருகிற ஈவையும், ஒவ்வொரு மரக்கால் மாவோடு ஒருபடி எண்ணெயையும் படைக்கவேண்டும்.
6 Et au jour de la nouvelle lune, un jeune taureau sans défaut, et six brebis et un bélier qui devront être sans défaut;
மாதப்பிறப்பான நாளிலோ, அவன் பழுதற்ற ஒரு இளங்காளையையும், பழுதற்ற ஆறு ஆட்டுக்குட்டிகளையும் ஒரு ஆட்டுக்கடாவையும் பலியிட்டு,
7 et un épha par taureau, et un épha par bélier; c'est ce qu'il présentera comme offrande; et par brebis ce qu'il pourra donner, et en huile un hin par épha.
உணவுபலியாக இளங்காளையுடன் ஒரு மரக்கால் மாவையும், ஆட்டுக்கடாவுடன் ஒரு மரக்கால் மாவையும், ஆட்டுக்குட்டிகளுடன் தன்னுடைய திராணிக்குத்தகுந்ததாக, ஒவ்வொரு மரக்கால் மாவுடன் ஒருபடி எண்ணெயையும் படைக்கவேண்டும்.
8 Et quand le prince entrera, il entrera par le chemin du vestibule de la porte, et il sortira par le même chemin.
இளவரசன் வருகிறபோது வாசல் மண்டபத்தின் வழியாக நுழைந்து, அது வழியாகத் திரும்பப் புறப்படவேண்டும்.
9 Et quand le peuple du pays se présentera devant l'Éternel aux solennités, celui qui entrera par la porte du nord pour adorer, sortira par la porte du midi, et celui qui entrera par la porte du midi, sortira par la porte du nord. L'on ne doit point se retirer par la porte par laquelle on est entré, mais on sortira en marchant toujours devant soi.
தேசத்தின் மக்கள் குறிக்கப்பட்ட நாட்களில் யெகோவாவுடைய சந்நிதியில் வரும்போது, ஆராதனை செய்கிறதற்காக வடக்கு வாசல்வழியாக உள்ளே நுழைந்தவன் தெற்கு வாசல்வழியாகப் புறப்படவும், தெற்கு வாசல்வழியாக உள்ளே நுழைந்தவன் வடக்கு வாசல்வழியாகப் புறப்படவேண்டும்; தான் நுழைந்த வாசல்வழியாகத் திரும்பிப்போகாமல், தனக்கு எதிரான வழியாகப் புறப்பட்டுப்போவானாக.
10 Et le prince entrera parmi eux, quand ils entreront, et en sortant ils sortiront ensemble.
௧0அவர்கள் உள்ளே நுழையும்போது, அதிபதி அவர்கள் நடுவிலே அவர்களுடன் உள்ளே நுழைந்து, அவர்கள் புறப்படும்போது அவனும் கூடப் புறப்படவேண்டும்.
11 Et aux fêtes et aux solennités l'offrande sera un épha par taureau et un épha par bélier, et par brebis ce qu'il pourra donner, et en huile un hin par épha.
௧௧பண்டிகைகளிலும் குறிக்கப்பட்ட காலங்களிலும் அவன் படைக்கும் உணவுபலியாவது: காளையுடன் ஒரு மரக்கால் மாவும், ஆட்டுக்கடாவுடன் ஒரு மரக்கால் மாவும், ஆட்டுக்குட்டிகளுடன் அவனுடைய திராணிக்குத்தகுந்ததாகத் தருகிற ஒரு ஈவும், ஒவ்வொரு மரக்கால் மாவுடன் ஒருபடி எண்ணெயும் கொடுக்கவேண்டும்.
12 Que si le prince offre à l'Éternel un holocauste volontaire ou un sacrifice volontaire d'actions de grâces, on lui ouvrira la porte qui donne à l'orient, et il présentera son holocauste et son sacrifice d'actions de grâces comme il le fera au jour du sabbat. Et quand il sera sorti, on fermera la porte après sa sortie.
௧௨இளவரசன் உற்சாகமான தகனபலியையோ, சமாதான பலிகளையோ யெகோவாவுக்கு உற்சாகமாகச் செலுத்த வரும் போது, அவனுக்குக் கிழக்கு நோக்கி இருக்கும் வாசல் திறக்கப்படவேண்டும்; அப்பொழுது அவன் ஓய்வு நாளில் செய்கிறதுபோல, தன்னுடைய தகனபலியையும் தன்னுடைய சமாதான பலியையும் செலுத்தி, பின்பு புறப்படவேண்டும்; அவன் புறப்பட்டபின்பு வாசல் பூட்டப்படவேண்டும்.
13 Journellement tu offriras à l'Éternel en holocauste un agneau d'un an sans défaut; tu l'offriras tous les matins.
௧௩தினந்தோறும் ஒருவயதுடைய பழுதற்ற ஒரு ஆட்டுக்குட்டியைக் யெகோவாவுக்குத் தகனபலியாகப் படைக்கவேண்டும்; காலைதோறும் அதைப் படைக்கவேண்டும்.
14 Et tu y ajouteras tous les matins une offrande, la sixième partie d'un épha, et en huile le tiers d'un hin pour humecter la farine, en offrande à l'Éternel: que ce soit une règle éternelle et constante.
௧௪அதினோடு காலைதோறும் உணவுபலியாக ஒரு மரக்கால் மாவிலே ஆறிலொரு பங்கையும், மெல்லிய மாவைப் பிசையும்படி ஒருபடி எண்ணெயிலே மூன்றிலொரு பங்கையும் படைக்கவேண்டும்; இது அன்றாடம் யெகோவாவுக்குப் படைக்கவேண்டிய நித்திய கட்டளையான உணவுபலி.
15 Et offrez la brebis et l'offrande et l'huile tous les matins, comme holocauste perpétuel.
௧௫இப்படிக் காலைதோறும் அனுதின தகனபலியாக ஆட்டுக்குட்டியையும் உணவுபலியையும் எண்ணெயையும் செலுத்தவேண்டும்.
16 Ainsi parle le Seigneur, l'Éternel: Si le prince fait à l'un de ses fils un don, c'est sa propriété, il appartiendra à ses fils; ce sera leur propriété héréditaire.
௧௬யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இளவரசன் தன்னுடைய மகன்களில் ஒருவனுக்குத் தன்னுடைய சொத்தில் ஒரு பங்கைக் கொடுத்தால், அது அவனுடைய மகன்களுடையதாக இருக்கும்; அது உரிமைச் சொத்தாக அவர்களுக்குச் சொந்தமாகும்.
17 Mais si de son patrimoine il fait un don à l'un de ses serviteurs, ce don appartiendra à celui-ci jusqu'à l'année d'affranchissement, puis il reviendra au prince: à ses fils seuls appartient son patrimoine.
௧௭அவன் தன்னுடைய ஊழியக்காரர்களில் ஒருவனுக்குத் தன்னுடைய சொத்தில் ஒரு பங்கைக் கொடுத்திருந்தால், அது விடுதலையின் வருடம்வரை அவனுடையதாக இருந்து, பின்பு திரும்ப அதிபதியினிடம் சேரும்; அதின் சொத்து அவனுடைய மகன்களுக்கே உரியது, அது அவர்களுடையதாக இருக்கும்.
18 Et le prince ne prendra rien de l'héritage du peuple, de manière à l'exproprier; mais c'est de son propre patrimoine qu'il pourra faire des legs à ses fils, afin qu'aucun homme de mon peuple ne soit expulsé de sa propriété.
௧௮இளவரசனானவன் மக்களை பறிமுதல் செய்து, அவர்களின் சொந்தமானதற்கு அவர்களைப் வெளியாக்கி, அவர்களுடைய சொத்திலிருந்து ஒன்றும் எடுக்கக்கூடாது; என்னுடைய மக்களில் ஒருவரும் தங்களுடைய சொந்தமானதற்கு வெளியாக்கப்பட்டுச் சிதறடிக்கப்படாதபடி அவன் தன்னுடைய சொந்தத்திலே தன்னுடைய மகன்களுக்கு சொத்து கொடுக்கவேண்டும்.
19 Alors il m'introduisit par l'entrée latérale de la porte dans les chambres saintes réservées aux prêtres et donnant au nord, et voici, il y avait au fond un lieu du côté de l'occident.
௧௯பின்பு அவர் வாசலின் பக்கத்தில் இருந்த நடைவழியாக என்னை வடக்குக்கு எதிரான ஆசாரியர்களுடைய பரிசுத்த அறைவீடுகளுக்கு அழைத்துக்கொண்டுபோனார்; அந்த இடத்தில் மேற்கே இருபக்கத்திலும் ஒரு இடம் இருந்தது.
20 Et il me dit: C'est ici le lieu où les prêtres feront cuire les victimes pour le délit et pour le péché, et où ils boulangeront les offrandes, de peur qu'en portant ces choses dans le parvis extérieur, ils ne sanctifient le peuple.
௨0அவர் என்னை நோக்கி: குற்றநிவாரணபலியையும், பாவநிவாரணபலியையும், உணவுபலியையும் ஆசாரியர்கள் வெளிமுற்றத்திலே கொண்டுபோய் மக்களைப் பரிசுத்தம்செய்யாதபடி, அவர்கள் அவைகளைச் சமைக்கிறதற்கும் சுடுகிறதற்குமான இடம் இதுவே என்றார்.
21 Puis il m'emmena dans le parvis extérieur et me fit passer aux quatre angles du parvis, et voici, il y avait une cour à chaque angle du parvis.
௨௧பின்பு அவர் என்னை வெளிமுற்றத்தில் அழைத்துக்கொண்டுபோய், என்னை முற்றத்தின் நான்கு மூலைகளையும் கடந்துபோகச்செய்தார்; முற்றத்து ஒவ்வொரு மூலையிலும் ஒவ்வொரு முற்றம் இருந்தது.
22 Aux quatre angles du parvis étaient des cours découvertes, de quarante coudées de longueur et de trente de largeur; toutes quatre elles avaient les mêmes dimensions aux angles.
௨௨முற்றத்தின் நான்கு மூலைகளிலும் புகைத்துவாரங்களுள்ள இந்த முற்றங்கள் நாற்பது முழ நீளமும், முப்பது முழ அகலமுமானவைகள்; இந்த நான்கு மூலை முற்றங்களுக்கும் ஒரே அளவு இருந்தது.
23 Et toutes quatre elles avaient un mur d'enceinte, et au pied du mur tout autour on avait pratiqué des âtres.
௨௩இந்த நான்கிற்கும் சுற்றிலும் உள்ளே ஒரு பக்கஅறை உண்டாயிருந்தது; இந்தப் பக்கஅறைகளின் சுற்றிலும் அடுப்புகள் போடப்பட்டிருந்தது.
24 Et il me dit: C'est là la cuisine où les servants de la maison feront cuire les victimes du peuple.
௨௪அவர் என்னை நோக்கி: இவைகள் மக்கள் செலுத்தும் பலிகளை ஆலயத்தின் பணிவிடைக்காரர்கள் சமைக்கிற வீடுகள் என்றார்.

< Ézéchiel 46 >