< 2 Rois 15 >
1 La vingt-septième année de Jéroboam, roi d'Israël, Azaria, fils d'Amatsia, roi de Juda, devint roi.
௧இஸ்ரவேலின் ராஜாவாகிய யெரொபெயாமின் இருபத்தேழாம் வருட ஆட்சியில், யூதாவின் ராஜாவாகிய அமத்சியாவின் மகன் அசரியா ராஜாவானான்.
2 Il avait seize ans à son avènement, et il régna cinquante-deux ans à Jérusalem. Or, le nom de sa mère était Jecholia de Jérusalem.
௨அவன் ராஜாவாகிறபோது பதினாறு வயதாயிருந்து, ஐம்பத்திரண்டு வருடங்கள் எருசலேமிலே ஆட்சிசெய்தான்; எருசலேம் நகரத்தைச் சேர்ந்த அவனுடைய தாயின் பெயர் எக்கோலியாள்.
3 Et il fit ce qui est droit aux yeux de l'Éternel tout comme avait fait Amatsia, son père.
௩அவன் தன் தகப்பனாகிய அமத்சியா செய்தபடியெல்லாம் யெகோவாவின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்.
4 Seulement les tertres ne disparurent pas, le peuple offrait encore des victimes et de l'encens sur les tertres.
௪மேடைகள் மாத்திரம் அகற்றப்படவில்லை; மக்கள் இன்னும் மேடைகள்மேல் பலியிட்டுத் தூபம் காட்டிவந்தார்கள்.
5 Et l'Éternel infligea une plaie au roi, qui fut lépreux jusqu'au jour de sa mort et demeura dans une infirmerie. Cependant Jotham, fils du roi, était préposé sur la Maison, rendant la justice au peuple du pays.
௫யெகோவா இந்த ராஜாவை வாதித்ததால், அவன் தன் மரணநாள்வரை தொழுநோயாளியாக இருந்து, தனித்து ஒரு வீட்டிலே குடியிருந்தான்; ராஜாவின் மகனாகிய யோதாம் அரண்மனை விசாரிப்புக்காரனாயிருந்து, தேசத்தின் மக்களை நியாயம் விசாரித்தான்.
6 Le reste des actes d'Azaria et toutes ses entreprises sont d'ailleurs consignés dans le livre des annales des rois de Juda.
௬அசரியாவின் மற்ற செயல்பாடுகளும், அவன் செய்த யாவும், யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது.
7 Et Azaria reposa avec ses pères et on lui donna la sépulture avec ses pères dans la ville de David, et Jotham, son fils, devint roi en sa place.
௭அசரியா இறந்தபின், அவனைத் தாவீதின் நகரத்திலே அவனுடைய முன்னோர்களுக்கு அருகில் அடக்கம்செய்தார்கள்; அவன் மகனாகிய யோதாம் அவனுடைய இடத்தில் ராஜாவானான்.
8 Là trente-huitième année d'Azaria, roi de Juda, Zacharie, fils de Jéroboam, devint roi d'Israël à Samarie pour six mois.
௮யூதாவின் ராஜாவாகிய அசரியாவின் முப்பத்தெட்டாம் வருட ஆட்சியில் யெரொபெயாமின் மகனாகிய சகரியா இஸ்ரவேலின்மேல் சமாரியாவிலே ஆறு மாதங்கள் ஆட்சிசெய்து,
9 Et il fit ce qui est mal aux yeux de l'Éternel comme avaient fait ses pères; il ne se départit point des péchés de Jéroboam, fils de Nebat, qui avait entraîné Israël à pécher.
௯தன் முன்னோர்கள் செய்ததுபோல, யெகோவாவின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்; இஸ்ரவேலைப் பாவம்செய்யவைத்த நேபாத்தின் மகனாகிய யெரொபெயாமின் பாவங்களைவிட்டு அவன் விலகவில்லை.
10 Et Sallum, fils de Jabès, conspira contre lui et fit main basse sur lui publiquement, et le tua et devint roi en sa place.
௧0யாபேசின் மகனாகிய சல்லூம் அவனுக்கு விரோதமாக சதித்திட்டம் தீட்டி, மக்களுக்கு முன்பாக அவனை வெட்டிக் கொன்றுபோட்டு, அவனுடைய இடத்தில் ராஜாவானான்.
11 Le reste des actes de Zacharie est d'ailleurs consigné dans le livre des annales des rois d'Israël.
௧௧சகரியாவின் மற்ற செயல்பாடுகள் இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது.
12 C'est la parole de l'Éternel qu'il avait dite à Jéhu en ces termes: Tu auras des fils de la quatrième génération assis au trône d'Israël, et il en fut ainsi.
௧௨உன் மகன்கள் நான்காம் தலைமுறைவரை இஸ்ரவேலுடைய சிங்காசனத்தின்மேல் வீற்றிருப்பார்கள் என்று யெகோவா யெகூவோடே சொன்ன வார்த்தை இதுதான்; அப்படியே நிறைவேறியது.
13 Sallum, fils de Jabès, devint roi la trente-neuvième année d'Hozias, roi de Juda, et régna un mois de temps à Samarie.
௧௩யூதாவின் ராஜாவாகிய உசியாவின் முப்பத்தொன்பதாம் வருட ஆட்சியில் யாபேசின் மகனாகிய சல்லூம் ராஜாவாகி, சமாரியாவில் ஒரு மாதம் ஆட்சிசெய்தான்.
14 Et Menahem, fils de Gadi, s'avança de Thirtsa, et entra dans Samarie, et fit main basse sur Sallum, fils de Jabès, dans Samarie, et lui donna la mort et devint roi en sa place.
௧௪காதியின் மகனாகிய மெனாகேம் திர்சாவிலிருந்து சமாரியாவுக்கு வந்து, யாபேசின் மகனாகிய சல்லூமை சமாரியாவிலே வெட்டிக் கொன்றுபோட்டு, அவனுடைய இடத்தில் ராஜாவானான்.
15 Le reste des actes de Sallum, et sa conjuration qu'il avait formée, sont d'ailleurs consignés dans le livre des annales des rois d'Israël.
௧௫சல்லூமின் மற்ற செயல்பாடுகளும், அவன் செய்த சதித்திட்டமும், இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது.
16 C'est alors que Menahem fit main basse sur Thiphsach et sur tous ceux qui y étaient, et sur tout son territoire à partir de Thirtsa; ce fut parce qu'on ne lui ouvrit pas qu'il porta ce coup; il y éventra toutes les femmes enceintes.
௧௬அப்பொழுது மெனாகேம் திப்சா பட்டணத்தையும், அதிலுள்ள யாவையும், திர்சா தொடங்கி அதின் எல்லைகளையும் தாக்கினான்; அவர்கள் தனக்கு வாசலைத் திறக்கவில்லையென்று அவர்களை வெட்டி, அவர்களுடைய கர்ப்பவதிகளின் கர்ப்பங்களையெல்லாம் கிழித்துப்போட்டான்.
17 La trente-neuvième année d'Azaria, roi de Juda, Menahem, fils de Gadi, devint roi d'Israël, pour dix ans à Samarie.
௧௭யூதாவின் ராஜாவாகிய அசரியாவின் முப்பத்தொன்பதாம் ஆளுகை வருடத்தில், காதியின் மகனாகிய மெனாகேம் இஸ்ரவேல்மேல் ராஜாவாகி சமாரியாவிலே பத்துவருடங்கள் அரசாட்சிசெய்து, அவன் தன் நாட்களிலெல்லாம் யெகோவாவின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்.
18 Et il fit ce qui est mal aux yeux de l'Éternel; il ne se départit point des péchés de Jéroboam, fils de Nebat, auxquels celui-ci avait entraîné Israël, toute sa vie durant.
௧௮இஸ்ரவேலைப் பாவம்செய்யவைத்த நேபாத்தின் மகனாகிய யெரொபெயாமின் பாவங்களைவிட்டு விலகாதிருந்தான்.
19 Phul, roi d'Assyrie, fit invasion dans le pays, et Ménahem donna à Phul mille talents d'argent afin qu'il lui prêtât la main pour assurer la royauté dans sa propre main.
௧௯அசீரியாவின் ராஜாவாகிய பூல், தேசத்திற்கு விரோதமாக வந்தான்; அப்பொழுது மெனாகேம் பூலின் உதவியினால் அரசாட்சியை தன் கையில் பலப்படுத்துவதற்காக, அவனுக்கு ஆயிரம் தாலந்து வெள்ளி கொடுத்தான்.
20 Et Menahem tira cette somme à payer au roi d'Assyrie, sur les Israélites, tous les gens à moyens, à raison de cinquante sicles d'argent par individu. Puis le roi d'Assyrie rebroussa sans séjourner alors dans le pays.
௨0இந்தப் பணத்தை அசீரியாவின் ராஜாவிற்குக் கொடுக்கும்படி, மெனாகேம் இஸ்ரவேலில் பலத்த ஐசுவரியவான்களிடத்தில் ஆள் ஒன்றிற்கு ஐம்பது வெள்ளிச் சேக்கல் சுமத்தினான்; அப்படியே அசீரியாவின் ராஜா தேசத்திலே நிற்காமல் திரும்பிப்போனான்.
21 Le reste des actes de Menahem et toutes ses entreprises sont d'ailleurs consignés dans le livre des annales des rois d'Israël.
௨௧மெனாகேமின் மற்ற செயல்பாடுகளும், அவன் செய்த யாவும், இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது.
22 Et Menahem reposa avec ses pères, et Pekachia, son fils, devint roi à sa place.
௨௨மெனாகேம் இறந்தபின், அவனுடைய மகனாகிய பெக்காகியா அவனுடைய இடத்தில் ராஜாவானான்.
23 La cinquantième année d'Azaria roi de Juda, Pekachia, fils de Menahem, devint roi d'Israël à Samarie, pour deux ans.
௨௩யூதாவின் ராஜாவாகிய அசரியாவின் ஐம்பதாம் வருட ஆட்சியில், மெனாகேமின் மகனாகிய பெக்காகியா இஸ்ரவேலின்மேல் ராஜாவாகி சமாரியாவிலே இரண்டுவருடங்கள் அரசாட்சிசெய்து,
24 Et il fit ce qui est mal aux yeux de l'Éternel; il ne se départit point des péchés de Jéroboam, fils de Nebat, auxquels celui-ci avait entraîné Israël.
௨௪யெகோவாவின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்; அவன் இஸ்ரவேலைப் பாவம்செய்யவைத்த நேபாத்தின் மகனாகிய யெரொபெயாமின் பாவங்களைவிட்டு விலகவில்லை.
25 Et Pékach, fils de Remalia, son aide-de-camp, conspira contre lui et lui porta le coup dans Samarie au donjon du palais royal, en même temps qu'à Argob et à Ariè; or il se trouvait avec lui cinquante hommes d'entre les fils des Galaadites; c'est ainsi qu'il lui donna la mort et devint roi en sa place.
௨௫ஆனாலும் ரெமலியாவின் மகனாகிய பெக்கா என்னும் அவனுடைய அதிகாரி அவனுக்கு விரோதமாக சதித்திட்டம் தீட்டி, கீலேயாத் மனிதர்களில் ஐம்பதுபேரைக் கூட்டிக்கொண்டு, அவனையும் அர்கோபையும் ஆரியேயையும் ராஜாவின் வீடாகிய அரண்மனையிலே சமாரியாவில் வெட்டிக் கொன்றுபோட்டு, அவனுடைய இடத்தில் ராஜாவானான்.
26 Le reste des actes de Pekachia et toutes ses entreprises sont d'ailleurs consignés dans le livre des annales des rois d'Israël.
௨௬பெக்காகியாவின் மற்ற செயல்பாடுகளும், அவன் செய்த யாவும், இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது.
27 La cinquante-deuxième année d'Azaria roi de Juda, Pékach, fils de Remalia, devint roi d'Israël à Samarie pour vingt ans.
௨௭யூதாவின் ராஜாவாகிய அசரியாவின் ஐம்பத்திரண்டாம் வருட, ரெமலியாவின் மகனாகிய பெக்கா இஸ்ரவேலின்மேல் ராஜாவாகி சமாரியாவிலே இருபதுவருடங்கள் அரசாட்சிசெய்து,
28 Et il fit ce qui est mal aux yeux de l'Éternel; il ne se départit point des péchés de Jéroboam, fils de Nebat, auxquels celui-ci avait entraîné Israël.
௨௮யெகோவாவின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்; இஸ்ரவேலைப் பாவம்செய்யவைத்த நேபாத்தின் மகனாகிய யெரொபெயாமின் பாவங்களைவிட்டு அவன் விலகவில்லை.
29 Au temps de Pékach, roi d'Israël, Thiglath-Piléser, roi d'Assyrie, vint et prit Ijon et Abel-Beth-Maacha et Janoha et Kédès et Hatsor et Galaad et la Galilée, tout le territoire de Nephthali, et il les emmena captifs en Assyrie.
௨௯இஸ்ரவேலின் ராஜாவாகிய பெக்காவின் நாட்களில் அசீரியாவின் ராஜாவாகிய திகிலாத்பிலேசர் வந்து, ஈயோனையும், பெத்மாக்கா என்னும் ஆபேலையும், யனோவாகையும், கேதேசையும், ஆத்சோரையும், கீலேயாத்தையும், கலிலேயாவாகிய நப்தலி தேசமனைத்தையும் பிடித்து, குடிமக்களைச் சிறையாக அசீரியாவுக்குக் கொண்டுபோனான்.
30 Et Hosée, fils d'Éla, forma une conspiration contre Pékach, fils de Remalia, et fit main basse sur lui et lui donna la mort et devint roi en sa place la vingtième année de Jotham, fils d'Hozias.
௩0ஏலாவின் மகனாகிய ஓசெயா ரெமலியாவின் மகனாகிய பெக்காவுக்கு விரோதமாக சதித்திட்டம் தீட்டி, அவனை உசியாவின் மகனாகிய யோதாமின் இருபதாம் வருடத்தில் வெட்டிக்கொன்றுபோட்டு, அவனுடைய இடத்தில் ராஜாவானான்.
31 Le reste des actes de Pékach et toutes ses entreprises, sont d'ailleurs consignés dans le livre des annales des rois d'Israël.
௩௧பெக்காவின் மற்ற செயல்பாடுகளும், அவன் செய்த யாவும், இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது.
32 La seconde année de Pékach, fils de Remalia, roi d'Israël, Jotham, fils d'Hozias, roi de Juda, devint roi.
௩௨இஸ்ரவேலின் ராஜாவாகிய ரெமலியாவின் மகன் பெக்காவின் இரண்டாம் வருட ஆட்சியில், யூதாவின் ராஜாவாகிய உசியாவின் மகன் யோதாம் ராஜாவானான்.
33 Il avait vingt-cinq ans à son avènement et il régna seize ans à Jérusalem. Or le nom de sa mère était Jérusa, fille de Tsadoc.
௩௩அவன் ராஜாவாகிறபோது, இருபத்தைந்து வயதாயிருந்து, எருசலேமிலே பதினாறுவருடங்கள் ஆட்சிசெய்தான்; சாதோக்கின் மகளாகிய அவனுடைய தாயின் பெயர் எருசாள்.
34 Et il fit ce qui est droit aux yeux de l'Éternel; il agit en tout comme avait agi Hozias, son père.
௩௪அவன் யெகோவாவின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்; தன் தகப்பனாகிய உசியா செய்தபடியெல்லாம் செய்தான்.
35 Seulement les tertres ne disparurent pas; le peuple offrait encore des victimes et de l'encens sur les tertres. Il construisit la porte supérieure du temple de l'Éternel.
௩௫மேடைகள் மாத்திரம் அகற்றப்படவில்லை; மக்கள் இன்னும் மேடைகளின்மேல் பலியிட்டுத் தூபம் காட்டிவந்தார்கள்; இவன் யெகோவாவுடைய ஆலயத்தின் உயர்ந்த வாசலைக் கட்டினான்.
36 Le reste des actes, de Jotham et toutes ses entreprises sont d'ailleurs consignés dans le livre des annales des rois de Juda.
௩௬யோதாமின் மற்ற செயல்பாடுகளும், அவன் செய்த யாவும், யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது.
37 Dans ce même temps l'Éternel commença à envoyer contre Juda, Retsin, roi de Syrie, et Pékach, fils de Remalia.
௩௭அந்நாட்களிலே யெகோவா சீரியாவின் ராஜாவாகிய ரேத்சீனையும், ரெமலியாவின் மகனாகிய பெக்காவையும் யூதாவுக்கு விரோதமாக அனுப்பத்தொடங்கினார்.
38 Et Jotham reposa avec ses pères et reçut la sépulture avec ses pères dans la ville de David, son père, et Achaz, son fils, devint roi en sa place.
௩௮யோதாம் இறந்தபின். தன் தகப்பனாகிய தாவீதின் பட்டணத்திலே தன் முன்னோர்களுக்கு அருகில் அடக்கம் செய்யப்பட்டான்; அவனுடைய மகனாகிய ஆகாஸ் அவனுடைய இடத்தில் ராஜாவானான்.