< 2 Chroniques 3 >
1 Et Salomon commença à construire le Temple de l'Éternel à Jérusalem sur le mont de Moriia qui avait été indiqué à David, son père, au lieu que David avait disposé sur l'aire d'Ornan, le Jébusite.
௧பின்பு சாலொமோன் எருசலேமிலே தன் தகப்பனாகிய தாவீதுக்குக் யெகோவாவினால் காண்பிக்கப்பட்ட மோரியா என்னும் மலையில் எபூசியனாகிய ஒர்னானின் களம் என்னும் தாவீது குறித்துவைத்த இடத்திலே யெகோவாவுடைய ஆலயத்தைக் கட்டத் தொடங்கினான்.
2 Et il commença la construction au second mois, le second [jour], la quatrième année de son règne.
௨அவன் தான் ஆட்சிசெய்த நான்காம் வருடம் இரண்டாம் மாதம் இரண்டாம் தேதியிலே கட்டத்தொடங்கினான்.
3 Et voici la base que Salomon fixa pour la construction de la Maison de Dieu: la longueur, en coudées ancienne mesure, soixante coudées, et la largeur, vingt coudées,
௩தேவனுடைய ஆலயத்தைக் கட்டுகிறதற்கு, சாலொமோன் போட்ட அஸ்திபாரமானது, முற்காலத்து அளவின்படியே அறுபதுமுழ நீளமும், இருபதுமுழ அகலமுமாயிருந்தது.
4 et le vestibule dont la longueur occupait la largeur de la façade de l'édifice, vingt coudées, et la hauteur cent vingt, et il le revêtit intérieurement d'or pur.
௪முன்புற மண்டபம் ஆலயத்தினுடைய அகலத்தின்படியே இருபது முழ நீளமும், நூற்றிருபது முழ உயரமுமாயிருந்தது; அதின் உட்புறத்தைப் பசும்பொன் தகட்டால் மூடினான்.
5 Et il revêtit le grand bâtiment de bois de cyprès, et le revêtit de bel or et d'un parement de palmiers et de chaînettes.
௫ஆலயத்தின் பெரிய மாளிகையைத் தேவதாரு பலகைகளினால் செய்து பசும்பொன்னினால் மூடி, அதின்மேல் பேரீச்சுவேலையையும் சங்கிலிவேலையையும் சித்தரித்து,
6 Et il recouvrit l'édifice de pierres précieuses comme ornement, et l'or était or de Parvaïm.
௬அந்த மாளிகையை இரத்தினங்களால் அலங்கரித்தான்; பொன்னானது பர்வாயீமின் பொன்னாயிருந்தது.
7 Et il revêtit d'or l'édifice, les solives, les seuils et ses parois et battants de porte, et cisela des Chérubins aux parois.
௭அந்த மாளிகையின் உத்திரங்களையும், நிலைகளையும், சுவர்களையும், கதவுகளையும் பொன்தகட்டால் மூடி, கொத்துவேலையால் சுவர்களிலே கேருபீன்களைச் செய்வித்தான்.
8 Et il fit le bâtiment du Lieu Très-Saint, sa longueur égale à la largeur de l'édifice, étant de vingt coudées, et sa largeur de vingt coudées, et le revêtit de bel or qui se montait à six cents talents.
௮மகா பரிசுத்தமான ஆலயத்தையும் கட்டினான்; அதின் நீளம் ஆலயத்தினுடைய அகலத்தின்படி இருபதுமுழமும், அதின் அகலம் இருபது முழமுமாக இருந்தது; அதை அறுநூறு தாலந்து பசும்பொன்னினால் மூடினான்.
9 Et le poids pour les clous était de cinquante sicles d'or. Et il revêtit aussi d'or les chambres supérieures.
௯ஆணிகளின் எடை ஐம்பது பொன் சேக்கலானது; மேல் அறைகளையும் பொன்னினால் மூடினான்.
10 Et il fit dans le Lieu Très-Saint deux Chérubins en travail de sculpture, et on les recouvrit d'or.
௧0அவன் மகா பரிசுத்தமான ஆலயத்திலே இரண்டு கேருபீன்களையும் சித்திரவேலையாக உண்டாக்கினான்; அவைகளைப் பொன்தகட்டால் மூடினான்.
11 Quant aux ailes des Chérubins, leur longueur était de vingt coudées; l'aile de l'un, longue de cinq coudées, touchait à la paroi de l'édifice, et l'autre aile, longue de cinq coudées, touchait à l'aile de l'autre Chérubin;
௧௧அந்தக் கேருபீன்களுடைய சிறகுகளின் நீளம் இருபது முழமானது; ஒன்றினுடைய ஒரு சிறகு ஐந்து முழமாக இருந்து, ஆலயத்துச் சுவரைத் தொட்டது; மற்ற சிறகு ஐந்து முழமாக இருந்து, மற்றக் கேருபீனின் சிறகைத் தொட்டது.
12 et l'aile de l'autre Chérubin, longue de cinq coudées, touchait à la paroi de l'édifice, et l'autre aile, longue de cinq coudées, joignait l'aile de l'autre Chérubin;
௧௨மற்றக் கேருபீனின் ஒரு சிறகும் ஐந்து முழமாக இருந்து, ஆலயத்துச்சுவரைத் தொட்டது; அதின் மற்ற சிறகும் ஐந்து முழமாக இருந்து, மற்றக் கேருபீனின் சிறகைத் தொட்டது.
13 les ailes de ces Chérubins, déployées, avaient vingt coudées de longueur, et ils étaient debout sur leurs pieds et leurs visages regardaient l'édifice.
௧௩இப்படியே அந்தக் கேருபீன்களின் சிறகுகள் இருபதுமுழம் விரிந்திருந்தது; அவைகள் தங்கள் கால்களால் ஊன்றி நின்றது; அவைகளின் முகங்கள் ஆலயத்தின் உட்புறத்தை நோக்கியிருந்தது.
14 Et il fit le voile de pourpre azuré et rouge et de cramoisi et de byssus et y adapta des Chérubins.
௧௪இளநீல நூலாலும் இரத்தாம்பர நூலாலும் சிவுப்பு நூலாலும் மெல்லிய நூலாலும் திரையையும், அதிலே கேருபீன்களின் உருவங்களையும் உண்டாக்கினான்.
15 Et il fit devant l'édifice deux colonnes ayant trente-cinq coudées de hauteur, et le parement de leur faîte avait cinq coudées [de longueur].
௧௫ஆலயத்திற்கு முன்பாக முப்பத்தைந்துமுழ உயரமான இரண்டு தூண்களையும், அவைகளுடைய முனைகளின்மேல் இருக்கும் ஐந்துமுழ உயரமான கும்பங்களையும் உண்டாக்கி,
16 Et il fit des chaînettes dans le Sanctuaire et en mit aux faîtes des colonnes et fit cent grenades qu'il ajusta aux chaînettes.
௧௬சந்நிதிக்கு முன்னிருக்கச் சங்கிலிகளையும் செய்து, தூண்களின் முனைகளின் மேல் பற்றவைத்து, நூறு மாதுளம் பழங்களையும் செய்து அந்தச் சங்கிலிகளில் கோர்த்தான்.
17 Et il dressa les colonnes à la façade du Temple, une à droite et une à gauche, et donna à celle de droite le nom de Jachin et à celle de gauche le nom de Boaz.
௧௭அந்தத் தூண்களை அவன் தேவாலயத்திற்கு முன்பாக ஒன்றை வலதுபுறத்திலும் மற்றொன்றை இடது புறத்திலும் நாட்டி, வலதுபுறத் தூணுக்கு யாகீன் என்றும், இடதுபுறத் தூணுக்கு போவாஸ் என்றும் பெயரிட்டான்.