< Psaumes 41 >

1 Jusqu'à la Fin, Psaume de David. Heureux celui qui comprend le mendiant et le pauvre; aux jours mauvais Dieu le délivrera.
இராகத்தலைவனுக்கு தாவீதின் பாடல். பெலவீனமானவன்மேல் கவலையுள்ளவன் பாக்கியவான்; தீங்குநாளில் யெகோவா அவனை விடுவிப்பார்.
2 Que le Seigneur le garde et le fasse vivre; qu'il lui donne la félicité sur la terre; qu'il ne le livre pas aux mains de ses ennemis.
யெகோவா அவனைப் பாதுகாத்து அவனை உயிரோடு வைப்பார்; பூமியில் அவன் பாக்கியவானாக இருப்பான்; அவனுடைய எதிரிகளின் விருப்பத்திற்கு நீர் அவனை ஒப்புக்கொடுப்பதில்லை.
3 Que le Seigneur lui porte secours sur le lit de sa douleur, tu as remué toute sa couche en son infirmité.
படுக்கையின்மேல் வியாதியாகக் கிடக்கிற அவனைக் யெகோவா தாங்குவார்; அவனுடைய வியாதியிலே அவனுடைய படுக்கை முழுவதையும் மாற்றிப்போடுவார்.
4 Pour moi, j'ai dit: Seigneur, aie pitié de moi, guéris mon âme; car j'ai péché contre toi.
யெகோவாவே, என்மேல் இரக்கமாயிரும்; உமக்கு விரோதமாகப் பாவம்செய்தேன், என்னுடைய ஆத்துமாவைக் குணமாக்கும் என்று நான் சொன்னேன்.
5 Mes ennemis ont mal parlé contre moi: Quand mourra-t-il? quand périra son nom?
அவன் எப்பொழுது சாவான், அவனுடைய பெயர் எப்பொழுது அழியும் என்று என்னுடைய எதிரிகள் எனக்கு விரோதமாகச் சொல்லுகிறார்கள்.
6 Si l'un d'eux entrait pour me voir, son cœur parlait faussement; il amassait en lui-même son iniquité; il sortait, et il parlait avec d'autres.
ஒருவன் என்னைப் பார்க்கவந்தால் வஞ்சனையாகப் பேசுகிறான்; அவன் தன்னுடைய இருதயத்தில் அக்கிரமத்தைச் சேகரித்துக்கொண்டு, தெருவிலே போய், அதைத் தூற்றுகிறான்.
7 Tous mes ennemis chuchotaient contre moi; ils tramaient ma perte.
என்னுடைய எதிரிகள் எல்லோரும் என்மேல் ஒன்றாக முணுமுணுத்து, எனக்கு விரோதமாக இருந்து, எனக்குத் தீங்கு நினைத்து,
8 Ils ont formé un dessein inique contre moi; mais celui qui est couché ne pourra-t-il ressusciter?
தீராத வியாதி அவனைப் பிடித்துக் கொண்டது; படுக்கையில் கிடக்கிற அவன் இனி எழுந்திருப்பதில்லை என்கிறார்கள்.
9 Car l'homme de ma paix, en qui j'avais espéré, celui qui mangeait mon pain, a levé fièrement son talon sur moi.
என்னுடைய உயிர்நண்பனும், நான் நம்பினவனும், என்னுடைய அப்பம் சாப்பிட்டவனுமாகிய மனிதனும், என்மேல் தன்னுடைய குதிகாலைத் தூக்கினான்.
10 Mais toi, Seigneur, aie pitié de moi et ressuscite-moi, et je leur rendrai ce qu'ils méritent.
௧0யெகோவாவே, நீர் எனக்கு இரங்கி, நான் அவர்களுக்குச் சரிக்கட்ட என்னை எழுந்திருக்கச்செய்யும்.
11 En cela j'ai connu que tu m'as aimé; car mon ennemi ne se réjouira point de moi.
௧௧என்னுடைய எதிரி என்மேல் வெற்றி பெறாததினால், நீர் என்மேல் பிரியமாக இருக்கிறீரென்று அறிவேன்.
12 Tu m'as protégé à cause de mon innocence; et tu m'as établi devant toi pour toujours.
௧௨நீர் என்னுடைய உத்தமத்திலே என்னைத் தாங்கி, என்றென்றைக்கும் உம்முடைய சமுகத்தில் என்னை நிலைநிறுத்துவீர்.
13 Béni soit le Seigneur, Dieu d'Israël, dans tous les siècles des siècles! Ainsi soit-il, ainsi soit-il!
௧௩இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா எப்பொழுதும் என்றென்றைக்குமுள்ள எல்லாக் காலங்களிலும் நன்றிசெலுத்தப்படக்கூடியவர். ஆமென், ஆமென்.

< Psaumes 41 >