< Psaumes 128 >

1 En Jérusalem. Heureux tous ceux qui craignent le Seigneur et qui cheminent en ses voies.
ஆரோகண பாடல். யெகோவாவுக்குப் பயந்து, அவர் வழிகளில் நடக்கிறவன் எவனோ, அவன் பாக்கியவான்.
2 Tu mangeras le fruit des labeurs de tes mains; tu es heureux, et tu prospéreras.
உன்னுடைய கைகளின் உழைப்பை நீ சாப்பிடுவாய்; உனக்குப் பாக்கியமும் நன்மையும் உண்டாயிருக்கும்.
3 Ta femme sera comme une vigne féconde dans l'enceinte de ta maison; et tes enfants autour de ta table seront comme de jeunes plants d'olivier.
உன்னுடைய மனைவி உன் வீட்டோரங்களில் கனிதரும் திராட்சைக்கொடியைப்போல் இருப்பாள்; உன்னுடைய பிள்ளைகள் உன்னுடைய பந்தியைச் சுற்றிலும் ஒலிவமரக் கன்றுகளைப்போல் இருப்பார்கள்.
4 Voilà comme sera béni l'homme qui craint le Seigneur.
இதோ, யெகோவாவுக்குப் பயப்படுகிற மனிதன் இவ்விதமாக ஆசீர்வதிக்கப்படுவான்.
5 Que le Seigneur du haut de Sion te bénisse; et que tu voies les biens de Jérusalem, tous les jours de ta vie.
யெகோவா சீயோனிலிருந்து உன்னை ஆசீர்வதிப்பார்; நீ உயிருள்ள நாட்களெல்லாம் எருசலேமின் வாழ்வைக் காண்பாய்.
6 Et que tu voies les fils de tes fils: paix sur Israël!
நீ உன்னுடைய பிள்ளைகளின் பிள்ளைகளையும், இஸ்ரவேலுக்கு உண்டாகும் சமாதானத்தையும் காண்பாய்.

< Psaumes 128 >