< Exode 37 >
1 Ensuite ils firent, pour le tabernacle, dix courtines.
௧பெசலெயேல் சீத்திம் மரத்தினால் பெட்டியை உண்டாக்கினான்; அதின் நீளம் இரண்டரை முழமும் அதின் அகலம் ஒன்றரை முழமும் அதின் உயரம் ஒன்றரை முழமுமானது.
2 La longueur de l'une des courtines fut de vingt-huit coudées; elles eurent toutes la même longueur, sur une largeur de quatre coudées.
௨அதை உள்ளும் வெளியும் சுத்தப்பொன் தகட்டால் மூடி, சுற்றிலும் அதற்குப் பொன் விளிம்பை உண்டாக்கி,
3 Et ils firent le voile d'hyacinthe, de pourpre, d'écarlate filé et de lin filé: œuvre tissée, œuvre variée,
௩அதற்கு நான்கு பொன் வளையங்களை வார்ப்பித்து, அவைகளை அதின் நான்கு மூலைகளிலும் போட்டு, ஒரு பக்கத்தில் இரண்டு வளையங்களும் மறுபக்கத்தில் இரண்டு வளையங்களும் இருக்கும்படித் தைத்து,
4 Qu'ils placèrent sur quatre colonnes de bois incorruptible revêtu d'or fin, avec des chapiteaux d'or et des bases d'argent.
௪சீத்திம் மரத்தினால் தண்டுகளைச் செய்து, அவைகளைப் பொன்தகட்டால் மூடி,
5 Et ils firent le voile de la porte du tabernacle du témoignage; ils le firent d'hyacinthe, de pourpre, d'écarlate filé et de lin filé: œuvre variée.
௫அந்தத் தண்டுகளால் பெட்டியைச் சுமக்கும்படி, அவைகளைப் பெட்டியின் பக்கங்களில் இருக்கும் வளையங்களிலே பாய்ச்சினான்.
6 Ils revêtirent d'or ses cinq colonnes, et les anneaux, et les chapiteaux, et les volutes; ils firent en airain les cinq bases.
௬கிருபாசனத்தையும் சுத்தப்பொன்னினால் செய்தான்; அது இரண்டரை முழ நீளமும் ஒன்றரை முழ அகலமுமானது.
7 Ils firent le côté sud du parvis, les tentures du parvis en lin filé, sur une longueur de cent coudées,
௭தகடாக அடிக்கப்பட்ட பொன்னினால் இரண்டு கேருபீன்களையும் உண்டாக்கி, கிருபாசனத்தின் இரண்டு ஓரங்களிலே,
8 Et leurs vingt colonnes et leurs vingt bases.
௮ஒருபக்கத்து ஓரத்தில் ஒரு கேருபீனும் மறுபக்கத்து ஓரத்தில் மற்றக் கேருபீனுமாக அந்தக் கேருபீன்களைக் கிருபாசனத்தின் இரண்டு ஓரங்களிலும் அதனோடு ஒரே வேலைப்பாடாகவே செய்தான்.
9 Ils firent le côté nord sur une longueur de cent coudées, comme le côté du midi, et les vingt colonnes et les vingt bases;
௯அந்தக் கேருபீன்கள் தங்களுடைய இறக்கைகளை உயர விரித்து, தங்களுடைய இறக்கைகளால் கிருபாசனத்தை மூடுகிறவைகளும், ஒன்றுக்கொன்று எதிர்முகமுள்ளவைகளாகவும் இருந்தது; கேருபீன்களின் முகங்கள் கிருபாசனத்தை நோக்கிக்கொண்டிருந்தது.
10 Et le côté de l'occident avec les tentures sur une longueur de cinquante coudées, et ses dix colonnes, et ses dix bases;
௧0மேஜையையும் சீத்திம் மரத்தால் செய்தான்; அது இரண்டு முழ நீளமும் ஒரு முழ அகலமும் ஒன்றரை முழ உயரமுமானது.
11 Et le côté de l'orient avec les tentures sur une longueur de cinquante coudées,
௧௧அதைப் சுத்தப் பொன்தகட்டால் மூடி, சுற்றிலும் அதற்குப் பொன் விளிம்பை உண்டாக்கி,
12 Ayant, d'un côté, quinze coudées de haut, avec trois colonnes et trois bases;
௧௨சுற்றிலும் அதற்கு நான்கு விரல் அளவான சட்டத்தையும், அதின் சட்டத்திற்குச் சுற்றிலும் பொன் விளிம்பையும் உண்டாக்கி,
13 Et, de l'autre côté de la porte du parvis, ils firent des tentures de quinze coudées, et trois colonnes, et trois bases.
௧௩அதற்கு நான்கு பொன்வளையங்களை வார்ப்பித்து, அவைகளை அதின் நான்கு கால்களுக்கு இருக்கும் நான்கு மூலைகளிலும் தைத்தான்.
14 Ils firent de lin filé toutes les draperies du tabernacle;
௧௪அந்த வளையங்கள் மேஜையைச் சுமக்கும் தண்டுகளைப் பாய்ச்சும் இடங்களாக இருக்கும்படி சட்டத்தின் அருகே இருந்தது.
15 Et les bases de leurs colonnes en airain, avec leurs attaches d'argent, leurs chapiteaux revêtus d'argent, et les colonnes revêtues d'argent: toutes les colonnes du parvis;
௧௫மேஜையைச் சுமக்கும் அந்தத் தண்டுகளைச் சீத்திம் மரத்தால் செய்து, அவைகளைப் பொன்தகட்டால் மூடி,
16 Et la tenture de la porte du parvis, œuvre variée d'hyacinthe, de pourpre, d'écarlate filé et de lin filé; elle avait vint coudées de haut, et cinq coudées de large, comme les tentures du parvis.
௧௬மேஜையின்மேலிருக்கும் பாத்திரங்களாகிய அதின் பணிப்பொருட்களையும், அதின் தட்டுகளையும், தூபக்கரண்டிகளையும், அதின் பானபலி கரகங்களையும், மூடுகிறதற்கான அதின் கிண்ணங்களையும் சுத்தப்பொன்னினால் உண்டாக்கினான்.
17 Et les quatre colonnes, avec leurs quatre bases d'airain, leurs attaches d'argent, leurs chapiteaux revêtus d'argent.
௧௭குத்துவிளக்கையும் சுத்தப்பொன்னினால் அடிப்பு வேலையாக உண்டாக்கினான்; அதின் தண்டும் கிளைகளும் மொக்குகளும் பழங்களும் பூக்களும் பொன்னினால் செய்யப்பட்டிருந்தது.
18 Enfin, ils firent d'airain tous les piquets du parvis, et ils les revêtirent d'argent.
௧௮குத்துவிளக்கின் ஒருபக்கத்தில் மூன்று கிளைகளும் அதின் மறுபக்கத்தில் மூன்று கிளைகளுமாக அதின் பக்கங்களில் ஆறு கிளைகள் செய்யப்பட்டது.
19 Telle fut l'ordonnance du tabernacle du témoignage, comme le Seigneur l'avait prescrit à Moïse; le tabernacle fut le lieu sacerdotal; les lévites le gardèrent, à commencer par Ithamar, fils du prêtre Aaron.
௧௯ஒவ்வொரு கிளையிலே வாதுமைக்கொட்டைக்கு ஒப்பான மூன்று மொக்குகளும் ஒரு பழமும் ஒரு பூவும் இருந்தது; குத்துவிளக்கில் செய்யப்பட்ட ஆறு கிளைகளிலும் அப்படியே இருந்தது.
20 Et Beseléel, fils d'Urias, de la tribu de Juda, le fit comme le Seigneur l'avait prescrit à Moïse;
௨0விளக்குத்தண்டில் வாதுமைக்கொட்டைக்கு ஒப்பான நான்கு மொக்குகளும் பழங்களும் பூக்களும் இருந்தது.
21 Avec Oliab, fils d'Achisamach, de la tribu de Dan, qui dirigea la fabrication des tissus et des broderies d'ornements, et qui fit tisser l'écarlate et le lin.
௨௧அதில் செய்யப்பட்ட இரண்டு கிளைகளின்கீழ் ஒரு பழமும், வேறு இரண்டு கிளைகளின்கீழ் ஒரு பழமும், மற்ற இரண்டு கிளைகளின்கீழ் ஒரு பழமும் இருந்தது; விளக்குத்தண்டில் செய்யப்பட்ட ஆறு கிளைகளுக்கும் அப்படியே இருந்தது.
௨௨அவைகளின் பழங்களும் அவைகளின் கிளைகளும் சுத்தப்பொன்னினால் ஒரே அடிப்பு வேலையாகச் செய்யப்பட்டது.
௨௩அதின் ஏழு அகல்களையும், அதின் கத்தரிகளையும், சாம்பல் பாத்திரங்களையும் சுத்தப்பொன்னினால் செய்தான்.
௨௪அதையும் அதின் பணிப்பொருட்கள் யாவையும் ஒரு தாலந்து/ 35 கிலோ. சுத்தப்பொன்னினால் செய்தான்.
௨௫தூபபீடத்தையும் சீத்திம் மரத்தினால் உண்டாக்கினான்; அது ஒரு முழ நீளமும் ஒரு முழ அகலமுமான சதுரமும் இரண்டு முழ உயரமுமாக இருந்தது; அதின் கொம்புகள் அதனோடே ஒரே வேலைப்பாடாக இருந்தது.
௨௬அதின் மேற்புறத்தையும், அதின் சுற்றுப்புறத்தையும், அதின் கொம்புகளையும், சுத்தப்பொன்தகட்டால் மூடி, சுற்றிலும் அதற்குப் பொன் விளிம்பை உண்டாக்கி,
௨௭அந்த விளிம்பின்கீழ் அதின் இரண்டு பக்கங்களில் இருக்கும் இரண்டு மூலைகளிலும் இரண்டு பொன்வளையங்களை செய்து, அதைச் சுமக்கும் தண்டுகளைப் பாய்ச்சும் இடங்களாகத் தைத்து,
௨௮சீத்திம் மரத்தால் அந்தத் தண்டுகளைச் செய்து, அவைகளைப் பொன்தகட்டால் மூடினான்.
௨௯பரிசுத்த அபிஷேகத் தைலத்தையும், சுத்தமான வாசனைப்பொருட்களின் நறுமணங்களையும், தைலக்காரன் வேலைக்கு ஒப்பாக உண்டாக்கினான்.