< Lévitique 15 >

1 Et l’Éternel parla à Moïse et à Aaron, disant:
யெகோவா மோசேயிடமும் ஆரோனிடமும் பேசி,
2 Parlez aux fils d’Israël, et dites-leur: Tout homme qui a un flux [découlant] de sa chair, – son flux le rend impur.
“நீங்கள் இஸ்ரயேலருடன் பேசிச் சொல்லவேண்டியதாவது, ‘தன் உடலிலிருந்து ஒருவனுக்கு கசிவு ஏற்பட்டால் அது அசுத்தமானது.
3 Et ceci sera son impureté, dans son flux: soit que sa chair laisse couler son flux, ou que sa chair retienne son flux, c’est son impureté.
அக்கசிவு அவன் உடலிலிருந்து தொடர்ந்து வடிந்தாலும், தடைப்பட்டாலும், அது அவனை அசுத்தப்படுத்தும். அவனுடைய உடற்கசிவு அசுத்தத்தை உண்டாக்கும் விதமாவது:
4 Tout lit sur lequel aura couché celui qui est atteint d’un flux sera impur; et tout objet sur lequel il se sera assis sera impur.
“‘அவன் படுக்கின்ற எந்தக் கட்டிலும், அவன் உட்காருகிற எந்த இடமும் அசுத்தமாகும்.
5 Et l’homme qui aura touché son lit lavera ses vêtements, et se lavera dans l’eau; et il sera impur jusqu’au soir.
யாராவது ஒருவன் அந்தக் கட்டிலைத் தொட்டால் அவன் தன் உடைகளைக் கழுவி, தண்ணீரில் முழுகவேண்டும். மாலைவரை அவன் அசுத்தமாயிருப்பான்.
6 Et celui qui s’assiéra sur un objet sur lequel celui qui a le flux se sera assis, lavera ses vêtements, et se lavera dans l’eau; et il sera impur jusqu’au soir.
கசிவு உள்ள அந்த மனிதன் உட்கார்ந்த இடத்தில் யாராவது உட்கார்ந்தால், அவன் தன் உடைகளைக் கழுவி, தண்ணீரில் முழுகவேண்டும். அவன் மாலைவரை அசுத்தமாயிருப்பான்.
7 Et celui qui touchera la chair de celui qui a le flux, lavera ses vêtements, et se lavera dans l’eau; et il sera impur jusqu’au soir.
“‘கசிவுள்ளவனைத் தொடுகிறவனும் தன் உடைகளைக் கழுவி, தண்ணீரில் முழுகவேண்டும். அவன் மாலைவரை அசுத்தமாயிருப்பான்.
8 Et si celui qui a le flux crache sur un [homme] qui est pur, celui-ci lavera ses vêtements, et se lavera dans l’eau; et il sera impur jusqu’au soir.
“‘கசிவுள்ள அந்த மனிதன் சுத்தமுள்ள ஒருவன்மேல் துப்பினால், அவன் தன் உடைகளைக் கழுவி தண்ணீரில் முழுகவேண்டும். அவன் மாலைவரை அசுத்தமாயிருப்பான்.
9 Tout char sur lequel sera monté celui qui a le flux sera impur.
“‘அவன் ஏறி இருந்து சவாரி செய்த எல்லாமே அசுத்தமானதாகும்.
10 Et quiconque touchera quelque chose qui aura été sous lui, sera impur jusqu’au soir; et celui qui portera une de ces choses lavera ses vêtements, et se lavera dans l’eau; et il sera impur jusqu’au soir.
அவன் உட்கார்ந்த எந்தப் பொருளையும் தொடுகிறவன், மாலைவரை அசுத்தமாயிருப்பான். அப்படிப்பட்ட பொருளை எடுத்துக்கொண்டு போகிறவன் தன் உடைகளைக் கழுவி, தண்ணீரில் முழுகவேண்டும். அவன் மாலைவரை அசுத்தமாயிருப்பான்.
11 Et quiconque aura été touché par celui qui a le flux et qui n’aura pas lavé ses mains dans l’eau, lavera ses vêtements, et se lavera dans l’eau; et il sera impur jusqu’au soir.
“‘கசிவு உள்ளவன், தன் கைகளைக் கழுவாமல் வேறொருவனைத் தொட்டால், தொடப்பட்டவன் தன் உடைகளைக் கழுவி, தண்ணீரில் முழுகவேண்டும். அவன் மாலைவரை அசுத்தமாயிருப்பான்.
12 Et les vases de terre que celui qui a le flux aura touchés seront cassés; et tout vase de bois sera lavé dans l’eau.
“‘அவன் ஒரு மண்பாத்திரத்தைத் தொடுவானானால், அப்பாத்திரம் உடைக்கப்பட வேண்டும். மரப்பாத்திரங்களை எல்லாம் தண்ணீரால் அலசவேண்டும்.
13 Et lorsque celui qui a le flux sera purifié de son flux, il comptera sept jours pour sa purification; puis il lavera ses vêtements, et il lavera sa chair dans l’eau vive; et il sera pur.
“‘அந்தக் கசிவு அவனைவிட்டு நீங்கும்போது, சம்பிரதாய முறைப்படி அவன் சுத்தமாவதற்கு ஏழுநாள் பொறுத்து, ஏழாம்நாள் தன் உடைகளைக் கழுவி சுத்தமான தண்ணீரில் முழுகவேண்டும். அப்பொழுது அவன் சுத்தமாவான்.
14 Et le huitième jour, il prendra deux tourterelles, ou deux jeunes pigeons, et il viendra devant l’Éternel, à l’entrée de la tente d’assignation, et les donnera au sacrificateur;
எட்டாம் நாளிலே, இரண்டு புறாக்களை அல்லது இரண்டு மாடப்புறாக்குஞ்சுகளை அவன் யெகோவா முன்னிலையில் கொண்டுவர வேண்டும். அவற்றை சபைக்கூடார வாசலில் ஆசாரியனிடம் கொடுக்கவேண்டும்.
15 et le sacrificateur les offrira, l’un en sacrifice pour le péché, et l’autre en holocauste; et le sacrificateur fera propitiation pour lui devant l’Éternel, à cause de son flux.
ஆசாரியன் ஒன்றைப் பாவநிவாரண காணிக்கையாகவும், இன்னொன்றைத் தகன காணிக்கையாகவும் பலிசெலுத்தவேண்டும். இவ்விதம் யெகோவா முன்னிலையில் அந்தக் கசிவின் நிமித்தம் அவனுக்காக ஆசாரியன் பாவநிவிர்த்தி செய்யவேண்டும்.
16 Et lorsque la semence sort d’un homme, il lavera dans l’eau toute sa chair; et il sera impur jusqu’au soir.
“‘ஒருவனிலிருந்து விந்து வெளியேறினால், அவன் தண்ணீரில் உடல் முழுவதையும் கழுவி முழுகவேண்டும். அவன் மாலைவரை அசுத்தமுள்ளவனாயிருப்பான்.
17 Et tout vêtement ou toute peau sur lesquels il y aura de la semence, sera lavé dans l’eau, et sera impur jusqu’au soir.
விந்துபட்ட எந்த உடையும், தோல் பொருளும் தண்ணீரினால் கழுவப்பட வேண்டும். அது மாலைவரை அசுத்தமாயிருக்கும்.
18 Et une femme avec laquelle un homme aura couché ayant commerce avec elle; … ils se laveront dans l’eau, et seront impurs jusqu’au soir.
ஒரு மனிதன் ஒரு பெண்ணுடன் உறவுகொண்டு விந்து வெளிப்பட்டால், அவர்கள் இருவரும் தண்ணீரில் முழுகவேண்டும். அவர்கள் மாலைவரை அசுத்தமுள்ளவர்களாய் இருப்பார்கள்.
19 Et si une femme a un flux, et que son flux en sa chair soit du sang, elle sera dans sa séparation sept jours, et quiconque la touchera sera impur jusqu’au soir.
“‘ஒழுங்கான இரத்தப்போக்கு உள்ள பெண் மாதவிடாய் காலத்தில் ஏழுநாட்களுக்கு அசுத்தமுள்ளவளாய் இருப்பாள். அவளைத் தொடுகிற எவனும், மாலைவரை அசுத்தமுள்ளவனாய் இருப்பான்.
20 Et toute chose sur laquelle elle aura couché durant sa séparation sera impure; et toute chose sur laquelle elle aura été assise sera impure;
“‘அந்நாட்களில் அவள் படுக்கின்ற படுக்கையும், அவள் உட்காரும் இடமும் அசுத்தமுள்ளதாயிருக்கும்.
21 et quiconque touchera son lit lavera ses vêtements, et se lavera dans l’eau; et il sera impur jusqu’au soir.
யாராவது அவளின் படுக்கையைத் தொட்டால், அவன் தன் உடைகளைக் கழுவி தண்ணீரில் முழுகவேண்டும். அவன் மாலைவரை அசுத்தமுள்ளவனாய் இருப்பான்.
22 Et quiconque touchera un objet, quel qu’il soit, sur lequel elle se sera assise, lavera ses vêtements, et se lavera dans l’eau; et il sera impur jusqu’au soir.
அவள் உட்காரும் எதையாவது யாராவது ஒருவன் தொட்டால், அவன் தன் உடைகளைக் கழுவி, தண்ணீரில் முழுகவேண்டும். அவன் மாலைவரை அசுத்தமுள்ளவனாய் இருப்பான்.
23 Et s’il y a quelque chose sur le lit, ou sur l’objet, quel qu’il soit, sur lequel elle se sera assise, quiconque l’aura touché sera impur jusqu’au soir.
அவள் படுக்கையை அல்லது, அவள் உட்கார்ந்த எதையாவது ஒருவன் தொட்டால், அவன் மாலைவரை அசுத்தமுள்ளவனாய் இருப்பான்.
24 Et si un homme a couché avec elle, et que son impureté soit sur lui, il sera impur sept jours; et tout lit sur lequel il se couchera sera impur.
“‘அந்நாட்களில் ஒருவன் அவளுடன் உறவுகொள்வதினால், அவளுடைய மாதவிடாய் அவனில் படும்போது அவன் ஏழுநாட்களுக்கு அசுத்தமுள்ளவனாய் இருப்பான். அவன் பயன்படுத்தும் எந்தப் படுக்கையும் அசுத்தமாயிருக்கும்.
25 Et lorsqu’une femme a un flux de sang qui coule plusieurs jours hors le temps de sa séparation, ou lorsqu’elle a le flux au-delà du temps de sa séparation, tous les jours du flux de son impureté elle est impure, comme aux jours de sa séparation.
“‘ஒரு பெண்ணுக்கு உடலின் இரத்தப்போக்கு மாதவிடாயைவிட வழக்கத்திற்கு மாறாக வந்தால் அல்லது மாதவிடாய் காலம் நீடித்தால், அவள் அந்த மாதவிடாய் காலத்தில் இருந்ததுபோல், இரத்தப்போக்கு இருக்கும்வரைக்கும் அசுத்தமாயிருப்பாள்.
26 Tout lit sur lequel elle couchera tous les jours de son flux sera pour elle comme le lit de sa séparation; et tout objet sur lequel elle se sera assise sera impur, selon l’impureté de sa séparation.
அவள் இந்த நாட்களில் படுக்கின்ற கட்டிலும், அவள் உட்காரும் எதுவும், முன்பு மாதவிடாய் நாட்களில் அசுத்தமுள்ளதாய் இருந்ததுபோல, இப்பொழுதும் அசுத்தமுள்ளதாய் இருக்கும்.
27 Et quiconque aura touché ces choses sera impur, et il lavera ses vêtements, et se lavera dans l’eau; et il sera impur jusqu’au soir.
யாராவது ஒருவன் அவைகளைத் தொட்டால், அவன் அசுத்தமுள்ளவனாவான். அவன் தன் உடைகளைக் கழுவி தண்ணீரில் முழுகவேண்டும். அவன் மாலைவரை அசுத்தமுள்ளவனாவான்.
28 Et si elle est purifiée de son flux, elle comptera sept jours, et après, elle sera pure;
“‘அவள் தன் மாதவிடாயிலிருந்து சுத்திகரிக்கப்படும்போது, அவள் ஏழு நாட்களை எண்ணவேண்டும். அதன்பின் சம்பிரதாய முறைப்படி அவள் சுத்தமாவாள்.
29 et le huitième jour, elle prendra deux tourterelles ou deux jeunes pigeons, et les apportera au sacrificateur, à l’entrée de la tente d’assignation.
எட்டாம் நாள் அவள் இரண்டு புறாக்களை அல்லது இரண்டு மாடப்புறாக் குஞ்சுகளைச் சபைக்கூடார வாசலில் ஆசாரியனிடம் கொண்டுவர வேண்டும்.
30 Et le sacrificateur offrira l’un en sacrifice pour le péché, et l’autre en holocauste; et le sacrificateur fera propitiation pour elle devant l’Éternel, à cause du flux de son impureté.
ஆசாரியன் அதில் ஒன்றைப் பாவநிவாரண காணிக்கையாகவும், இன்னொன்றைத் தகன காணிக்கையாகவும் பலிசெலுத்தவேண்டும். இவ்விதம் ஆசாரியன் அவளுடைய இரத்தப்போக்கின் அசுத்தத்திற்காக யெகோவா முன்பாக பாவநிவிர்த்தி செய்யவேண்டும்.
31 Et vous séparerez les fils d’Israël de leurs impuretés, et ils ne mourront pas dans leurs impuretés, en souillant mon tabernacle qui est au milieu d’eux.
“‘நீ இஸ்ரயேலரை அவர்களை அசுத்தப்படுத்தும் பொருட்களிலிருந்து வேறுபடுத்தவேண்டும். ஏனெனில் அவர்கள் மத்தியில் இருக்கும் என் வசிப்பிடத்தை அசுத்தப்படுத்துவதால், இஸ்ரயேலர் தங்கள் அசுத்தத்தில் சாகாதபடி, இப்படிச் செய்யவேண்டும்.’”
32 Telle est la loi pour celui qui a un flux ou pour celui duquel sort de la semence qui le rend impur,
ஆகவே உடலில் கசிவு உள்ளவனுக்கும், விந்து கழிவதினால் அசுத்தமுள்ளவனுக்கும்,
33 et pour la femme qui souffre à cause de ses mois, pendant sa séparation, et pour toute personne qui a un flux, soit homme, soit femme, et pour celui qui couche avec une femme impure.
மாதவிடாய் உள்ள பெண்ணுக்கும், உடல் கசிவுள்ள ஆணுக்கும், பெண்ணுக்கும், சம்பிரதாய முறைப்படி அசுத்தமாயிருக்கிற பெண்ணுடன் உடலுறவு கொள்ளும் மனிதனுக்கும் கொடுக்கப்பட்ட ஒழுங்குவிதிகள் இவையே என்றார்.

< Lévitique 15 >