< Proverbes 16 >
1 A l'homme de former des projets dans son cœur, mais la réponse de la langue vient de Yahweh.
௧மனதின் யோசனைகள் மனிதனுடையது; நாவின் பதில் யெகோவாவால் வரும்.
2 Toutes les voies de l'homme sont pures à ses yeux, mais Yahweh pèse les esprits.
௨மனிதனுடைய வழிகளெல்லாம் அவனுடைய பார்வைக்குச் சுத்தமானவைகள்; யெகோவாவோ ஆவிகளை நிறுத்துப்பார்க்கிறார்.
3 Recommande tes œuvres à Yahweh, et tes projets réussiront.
௩உன்னுடைய செயல்களைக் யெகோவாவுக்கு ஒப்புவி; அப்பொழுது உன்னுடைய யோசனைகள் உறுதிப்படும்.
4 Yahweh a tout fait pour son but, et le méchant lui-même pour le jour du malheur.
௪யெகோவா எல்லாவற்றையும் தமக்கென்று படைத்தார்; தீங்குநாளுக்காகத் துன்மார்க்கனையும் உண்டாக்கினார்.
5 Quiconque a le cœur hautain est en abomination à Yahweh; sûrement, il ne sera pas impuni.
௫மனமேட்டிமையுள்ளவன் எவனும் யெகோவாவுக்கு அருவருப்பானவன்; கையோடு கைகோர்த்தாலும் அவன் தண்டனைக்குத் தப்பமாட்டான்.
6 Par la bonté et la fidélité on expie l'iniquité, et par la crainte de Yahweh on se détourne du mal.
௬கிருபையினாலும், சத்தியத்தினாலும் பாவம் நிவிர்த்தியாகும்; யெகோவாவுக்குப் பயப்படுகிறதினால் மனிதர்கள் தீமையைவிட்டு விலகுவார்கள்.
7 Quand Yahweh a pour agréables les voies d'un homme, il réconcilie avec lui ses ennemis mêmes.
௭ஒருவனுடைய வழிகள் யெகோவாவுக்குப் பிரியமாக இருந்தால், அவனுடைய எதிரிகளும் சமாதானமாகும்படிச் செய்வார்.
8 Mieux vaut peu avec la justice, que de grands revenus avec l'injustice.
௮அநியாயமாக வந்த அதிக வருமானத்தைவிட, நியாயமாக வந்த கொஞ்ச வருமானமே நல்லது.
9 Le cœur de l'homme médite sa voie, mais c'est Yahweh qui dirige ses pas.
௯மனிதனுடைய இருதயம் அவனுடைய வழியை யோசிக்கும்; அவனுடைய நடைகளை உறுதிப்படுத்துகிறவரோ யெகோவா.
10 Des oracles sont sur les lèvres du roi; que sa bouche ne pèche pas quand il juge!
௧0ராஜாவின் உதடுகளில் இனிய வார்த்தை பிறக்கும்; நியாயத்தில் அவனுடைய வாய் தவறாது.
11 La balance et les plateaux justes sont de Yahweh, tous les poids du sac sont son ouvrage.
௧௧நியாயமான நிறைகோலும் தராசும் யெகோவாவுடையது; பையிலிருக்கும் நிறைகல்லெல்லாம் அவருடைய செயல்.
12 C'est une abomination pour les rois de faire le mal, car c'est par la justice que le trône s'affermit.
௧௨அநியாயம்செய்வது ராஜாக்களுக்கு அருவருப்பு; நீதியினால் சிங்காசனம் உறுதிப்படும்.
13 Les lèvres justes jouissent de la faveur des rois, et ils aiment celui qui parle avec droiture.
௧௩நீதியுள்ள உதடுகள் ராஜாக்களுக்குப் பிரியம்; நிதானமாகப் பேசுகிறவன்மேல் ராஜாக்கள் பிரியப்படுவார்கள்.
14 La fureur du roi est un messager de mort, mais un homme sage l'apaise.
௧௪ராஜாவின் கோபம் மரணதூதர்களுக்குச் சமம்; ஞானமுள்ளவனோ அதை ஆற்றுவான்.
15 La sérénité du visage du roi donne la vie, et sa faveur est comme la pluie du printemps.
௧௫ராஜாவின் முகக்களையில் வாழ்வு உண்டு; அவனுடைய தயவு பின்மாரிபெய்யும் மேகத்தைப்போல் இருக்கும்.
16 Acquérir la sagesse vaut bien mieux que l'or; acquérir l'intelligence est bien préférable à l'argent.
௧௬பொன்னைச் சம்பாதிப்பதைவிட ஞானத்தைச் சம்பாதிப்பது எவ்வளவு நல்லது! வெள்ளியை சம்பாதிப்பதைவிட புத்தியைச் சம்பாதிப்பது எவ்வளவு மேன்மை
17 Le grand chemin des hommes droits, c'est d'éviter le mal; celui-là garde son âme qui veille sur sa voie.
௧௭தீமையை விட்டு விலகுவதே செம்மையானவர்களுக்குச் சமனான பாதை; தன்னுடைய நடையைக் கவனித்திருக்கிறவன் தன்னுடைய ஆத்துமாவைக் காக்கிறான்.
18 L'orgueil précède la ruine, et la fierté précède la chute.
௧௮அழிவுக்கு முன்னானது அகந்தை; விழுதலுக்கு முன்னானது மனமேட்டிமை.
19 Mieux vaut être humble avec les petits que de partager le butin avec les orgueilleux.
௧௯அகங்காரிகளோடு கொள்ளைப்பொருளைப் பங்கிடுவதைவிட, சிறுமையானவர்களோடு மனத்தாழ்மையாக இருப்பது நலம்.
20 Celui qui est attentif à la parole trouve le bonheur, et celui qui se confie en Yahweh est heureux.
௨0விவேகத்துடன் காரியத்தை நடப்பிக்கிறவன் நன்மை பெறுவான்; யெகோவாவை நம்புகிறவன் பாக்கியவான்.
21 Celui qui est sage de cœur est appelé intelligent, et la douceur des lèvres augmente le savoir.
௨௧இருதயத்தில் ஞானமுள்ளவன் விவேகி எனப்படுவான்; உதடுகளின் இனிமை கல்வியைப் பெருகச்செய்யும்.
22 La sagesse est une source de vie pour celui qui la possède, et le châtiment de l'insensé, c'est sa folie.
௨௨புத்தி தன்னை உடையவர்களுக்கு ஜீவஊற்று; மதியீனர்களின் போதனை மதியீனமே.
23 Le cœur du sage donne la sagesse à sa bouche, et sur ses lèvres accroît le savoir.
௨௩ஞானியின் இருதயம் அவனுடைய வாய்க்கு அறிவை ஊட்டும்; அவனுடைய உதடுகளுக்கு அது மேன்மேலும் கல்வியைக் கொடுக்கும்.
24 Les bonnes paroles sont un rayon de miel, douces à l'âme et salutaires au corps.
௨௪இனிய சொற்கள் தேன்கூடுபோல் ஆத்துமாவுக்கு இன்பமும், எலும்புகளுக்கு மருந்தாகும்.
25 Telle voie paraît droite à un homme, mais son issue, c'est la voie de la mort.
௨௫மனிதனுக்குச் செம்மையாகத் தோன்றுகிற வழியுண்டு; அதின் முடிவோ மரண வழிகள்.
26 Le travailleur travaille pour lui, car sa bouche l'y excite.
௨௬உழைக்கிறவன் தனக்காகவே உழைக்கிறான்; அவனுடைய வாய் அதை அவனிடத்தில் வருந்திக் கேட்கும்.
27 L'homme pervers prépare le malheur, et il y a sur ses lèvres comme un feu ardent.
௨௭வீணான மகன் கிண்டிவிடுகிறான்; அவனுடைய உதடுகளில் இருப்பது எரிகிற அக்கினிபோன்றது.
28 L'homme pervers excite des querelles, et le rapporteur divise les amis.
௨௮மாறுபாடுள்ளவன் சண்டையைக் கிளப்பிவிடுகிறான்; கோள் சொல்லுகிறவன் உயிர் நண்பனையும் பிரித்துவிடுகிறான்.
29 L'homme violent séduit son prochain, et le conduit dans une voie qui n'est pas bonne.
௨௯கொடுமையானவன் தன்னுடைய அயலானுக்கு நயங்காட்டி, அவனை நலமல்லாத வழியிலே நடக்கச்செய்கிறான்.
30 Celui qui ferme les yeux pour méditer la tromperie, celui qui pince les lèvres, commet déjà le mal.
௩0அவனுடைய மாறுபாடானவைகளை யோசிக்கும்படி தன்னுடைய கண்களை மூடி, தீமையைச் செய்யும்படி தன்னுடைய உதடுகளைக் கடிக்கிறான்.
31 Les cheveux blancs sont une couronne d'honneur; c'est dans le chemin de la justice qu'on la trouve.
௩௧நீதியின் வழியில் உண்டாகும் நரை முடியானது மகிமையான கிரீடம்.
32 Celui qui est lent à la colère vaut mieux qu'un héros; et celui qui domine son esprit, que le guerrier qui prend les villes.
௩௨பலவானைவிட நீடிய சாந்தமுள்ளவன் உத்தமன்; பட்டணத்தைப் பிடிக்கிறவனைவிட தன்னுடைய மனதை அடக்குகிறவன் உத்தமன்.
33 On jette les sorts dans le pan de la robe, mais de Yahweh vient toute décision.
௩௩சீட்டு மடியிலே போடப்படும்; காரியத்தின் முடிவோ யெகோவாவால் வரும்.