< Lévitique 17 >
1 Yahvé parla à Moïse, et dit:
௧பின்னும் யெகோவா மோசேயை நோக்கி:
2 Parle à Aaron, à ses fils et à tous les enfants d'Israël, et tu leur diras: « Voici ce que Yahvé a ordonné:
௨“நீ ஆரோனோடும் அவனுடைய மகன்களோடும் இஸ்ரவேல் மக்கள் அனைவரோடும் சொல்லவேண்டியதாவது; யெகோவா கட்டளையிடுகிறது என்னவென்றால்:
3 Tout homme de la maison d'Israël qui aura tué un taureau, un agneau ou une chèvre dans le camp, ou qui l'aura tué hors du camp,
௩இஸ்ரவேல் குடும்பத்தாரில் எவனாகிலும் மாட்டையாவது செம்மறியாட்டையாவது வெள்ளாட்டையாவது ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலாகிய யெகோவாவுடைய வாசஸ்தலத்திற்கு முன்பாக, யெகோவாவுக்குச் செலுத்தும்படி கொண்டுவராமல்,
4 et qui ne l'aura pas apporté à l'entrée de la tente d'assignation pour l'offrir en sacrifice à l'Éternel devant la tente de l'Éternel: le sang sera imputé à cet homme. Il a versé le sang. Cet homme sera retranché du milieu de son peuple.
௪முகாமிற்குள்ளேயோ அல்லது வெளியேயோ அதைக் கொன்றால், அது அந்த மனிதனுக்கு இரத்தப்பழியாகக் கருதப்படும். அந்த மனிதன் இரத்தம் சிந்தினபடியால், தன் மக்களுக்குள் இல்லாமல் அறுப்புண்டுபோவான்.
5 Ceci afin que les enfants d'Israël apportent leurs sacrifices, qu'ils sacrifient en plein champ, afin qu'ils les apportent à l'Éternel, à l'entrée de la tente d'assignation, au sacrificateur, et qu'ils les offrent en sacrifice d'actions de grâces à l'Éternel.
௫ஆகையால் இஸ்ரவேல் மக்கள் வெளியிலே பலியிடுகிற தங்களுடைய பலிகளை, ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலில் ஆசாரியனிடத்தில் யெகோவாவுடைய சந்நிதியில் கொண்டுவந்து, அங்கே அவைகளைக் யெகோவாவுக்குச் சமாதானபலிகளாகச் செலுத்தக்கடவர்கள்.
6 Le prêtre aspergera le sang sur l'autel de l'Éternel, à l'entrée de la Tente d'assignation, et il brûlera la graisse en parfum d'agrément pour l'Éternel.
௬அங்கே ஆசாரியன், இரத்தத்தை ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலில் இருக்கிற யெகோவாவுடைய பலிபீடத்தின்மேல் தெளித்து, கொழுப்பைக் யெகோவாவுக்கு நறுமண வாசனையாக எரிக்கக்கடவன்.
7 Ils n'offriront plus leurs sacrifices aux idoles de boucs, après lesquelles ils se prostituent. Ce sera pour eux une loi à perpétuité, de génération en génération ».
௭தாங்கள் முறைகேடான முறையில் பின்பற்றுகிற பேய்களுக்குத் தங்கள் பலிகளை இனிச் செலுத்தாமல் இருப்பார்களாக; இது அவர்கள் தலைமுறைதோறும் அவர்களுக்கு நிரந்தரமான கட்டளையாக இருப்பதாக.
8 « Tu leur diras: « Tout homme de la maison d'Israël ou des étrangers qui vivent au milieu d'eux, qui offre un holocauste ou un sacrifice,
௮மேலும் நீ அவர்களை நோக்கி: “இஸ்ரவேல் குடும்பத்தாரிலும் உங்கள் நடுவே தங்குகிற அந்நியர்களிலும் எவனாகிலும் சர்வாங்கதகனபலி முதலானவைகளைச் செலுத்தி,
9 et qui ne l'apporte pas à l'entrée de la tente de la Rencontre pour le sacrifier à Yahvé, cet homme sera retranché de son peuple.
௯அதை ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலிலே யெகோவாவுக்குச் செலுத்தும்படி கொண்டுவராவிட்டால், அவன் தன் மக்களுக்குள் இல்லாமல் அறுப்புண்டுபோவான் என்று சொல்.
10 "'Tout homme de la maison d'Israël, ou des étrangers qui vivent au milieu d'eux, qui mange du sang, quel qu'il soit, je tournerai ma face contre cet homme qui mange du sang, et je le retrancherai du milieu de son peuple.
௧0“இஸ்ரவேல் குடும்பத்தாரிலும் உங்களுக்குள் தங்கும் அந்நியர்களிலும் எவனாகிலும் எந்தவொரு இரத்தத்தைச் சாப்பிட்டால், இரத்தத்தைச் சாப்பிட்ட அவனுக்கு விரோதமாக நான் என் முகத்தைத் திருப்பி, அவன் தன் மக்களுக்குள் இல்லாதபடி அவனை அறுப்புண்டுபோகச் செய்வேன்.
11 Car la vie de la chair est dans le sang. Je vous l'ai donné sur l'autel pour faire l'expiation de vos âmes, car c'est le sang qui fait l'expiation à cause de la vie.
௧௧மாம்சத்தின் உயிர் இரத்தத்தில் இருக்கிறது; நான் அதை உங்களுக்குப் பலிபீடத்தின்மேல் உங்கள் ஆத்துமாக்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யும்படிக் கட்டளையிட்டேன்; ஆத்துமாவிற்காகப் பாவநிவிர்த்தி செய்கிறது இரத்தமே.
12 C'est pourquoi j'ai dit aux enfants d'Israël: « Personne parmi vous ne pourra manger du sang, et aucun étranger vivant au milieu de vous ne pourra manger du sang. »
௧௨ஆகவே உங்களில் ஒருவனும் இரத்தம் சாப்பிடவேண்டாம், உங்கள் நடுவே தங்குகிற அந்நியனும் இரத்தம் சாப்பிடவேண்டாம்” என்று இஸ்ரவேல் மக்களுக்குச் சொன்னேன்.
13 "'Tout homme des enfants d'Israël ou des étrangers qui vivent au milieu d'eux, qui prendra à la chasse un animal ou un oiseau comestible, en versera le sang et le couvrira de poussière.
௧௩“இஸ்ரவேல் மக்களிலும் உங்களுக்குள் தங்குகிற அந்நியர்களிலும் எவனாகிலும் சாப்பிடத்தக்க ஒரு மிருகத்தையாவது ஒரு பறவையையாவது வேட்டையாடிப் பிடித்தால், அவன் அதின் இரத்தத்தைச் சிந்தச்செய்து, மண்ணினால் அதை மூடவேண்டும்.
14 Car pour ce qui est de la vie de toute chair, son sang est avec sa vie. C'est pourquoi j'ai dit aux enfants d'Israël: « Vous ne mangerez pas le sang d'aucune espèce de chair, car la vie de toute chair, c'est son sang. Celui qui en mangera sera retranché. »
௧௪சகல மாம்சத்திற்கும் இரத்தம் உயிராக இருக்கிறது; இரத்தம் உயிருக்குச் சமானம்; ஆகையால் எந்த மாம்சத்தின் இரத்தத்தையும் சாப்பிடவேண்டாம்; சகல மாம்சத்தின் உயிரும் அதின் இரத்தம் தானே; அதைச் சாப்பிடுகிற எவனும் அறுப்புண்டுபோவான் என்று இஸ்ரவேல் மக்களுக்குச் சொன்னேன்.
15 "'Toute personne qui mangera ce qui meurt d'elle-même ou ce qui est déchiré par les animaux, qu'elle soit native ou étrangère, lavera ses vêtements, se baignera dans l'eau et sera impure jusqu'au soir. Ensuite, il sera pur.
௧௫தானாக இறந்துபோனதையாவது, பீறுண்டதையாவது சாப்பிட்டவன் எவனும் அவன் இஸ்ரவேலனானாலும் அந்நியனானாலும், தன் உடைகளைத் துவைத்து, தண்ணீரில் குளித்து, மாலைவரைத் தீட்டாயிருப்பானாக; பின்பு சுத்தமாக இருப்பான்.
16 Mais s'il ne les lave pas et ne se lave pas, il portera la peine de son iniquité.'"
௧௬அவன் தன் உடைகளைத் துவைக்காமலும், குளிக்காமலும் இருந்தால், தன் அக்கிரமத்தைச் சுமப்பான் என்று சொல்” என்றார்.