< Ecclésiaste 10 >
1 Les mouches mortes font que l'huile du parfumeur produit une mauvaise odeur; ainsi un peu de folie l'emporte sur la sagesse et l'honneur.
செத்த ஈக்கள் நறுமணத் தைலத்திலும் கெட்ட நாற்றத்தை ஏற்படுத்துகின்றன. அதுபோலவே ஒரு சிறு மூடத்தனம் ஞானத்திற்கும், மதிப்பிற்கும் மேலோங்கி நிற்கும்.
2 Le cœur du sage est à sa droite, mais le cœur d'un insensé à sa gauche.
ஞானமுள்ளவர்களின் இருதயம் நியாயத்தின் பக்கம் சாய்கிறது, மூடர்களின் இருதயமோ வழிவிலகிப் போவதையே தேடுகிறது.
3 Oui, même quand l'insensé marche sur le chemin, son intelligence lui fait défaut, et il dit à tout le monde qu'il est un insensé.
ஒரு மூடன் வீதியில் போகும்போதே, புத்தியற்றவனாக நடந்து எல்லோருக்கும் தான் எவ்வளவு மதியீனன் என்பதைக் காண்பிக்கிறான்.
4 Si l'esprit du chef s'élève contre toi, ne quitte pas ta place, car la douceur met en repos les grandes offenses.
ஒரு ஆளுநனின் கோபம் உனக்கெதிராக மூண்டால், நீ உன் பதவியைவிட்டு விலகாதே; நிதானமாயிருந்தால் பெரிய குற்றமும் மன்னிக்கப்படும்.
5 Il y a un mal que j'ai vu sous le soleil, c'est le genre d'erreur qui vient du chef.
சூரியனுக்குக் கீழே நான் கண்ட வேறொரு தீமையும் உண்டு, ஒரு ஆளுநனிடமிருந்து வரும் ஒருவிதத் தவறே அது.
6 La folie est placée dans une grande dignité, et les riches sont assis dans un lieu bas.
மூடர்கள் பல உயர்ந்த பதவிகளில் அமர்த்தப்படுகிறார்கள்; செல்வந்தர்களோ தாழ்ந்த பதவிகளையே வகிக்கிறார்கள்.
7 J'ai vu des serviteurs sur des chevaux, et des princes marchant comme des serviteurs sur la terre.
அடிமைகள் குதிரையில் ஏறிச் சவாரி செய்கிறதை நான் கண்டிருக்கிறேன்; பிரபுக்களோ அடிமைகளைப்போல் நடந்து செல்வதையும் கண்டிருக்கிறேன்.
8 Celui qui creuse une fosse peut y tomber, et celui qui perce un mur peut être mordu par un serpent.
குழி ஒன்றை வெட்டுகிறவன் அதில் விழக்கூடும்; பழைய சுவரை இடிப்பவனையும் பாம்பு கடிக்கக்கூடும்.
9 Celui qui taille des pierres peut être blessé par elles. Celui qui fend du bois peut être mis en danger par celui-ci.
கற்களைக் குழிகளில் தோண்டி எடுப்பவன் அவற்றால் காயப்படக்கூடும்; மரக்கட்டையை பிளக்கிறவனுக்கு அதனாலே ஆபத்து உண்டாகலாம்.
10 Si la hache est émoussée, et qu'on n'en aiguise pas le tranchant, il faut employer plus de force; mais l'habileté fait réussir.
ஒரு கோடரி மழுங்கிப் போய் அதின் முனை கூர்மையாக்கப்படாமல் இருந்தால், அதிக பலம் வேண்டியிருக்கும். ஆனால் தொழில் திறமையோ வெற்றியைக் கொண்டுவரும்.
11 Si le serpent mord avant d'être charmé, la langue du charmeur n'y gagne rien.
ஒரு பாம்பை வசியப்படுத்துமுன் அது கடிக்குமானால், அதை வசியப்படுத்தும் வித்தைத் தெரிந்தும் பயனில்லை.
12 Les paroles de la bouche du sage sont agréables, mais l'insensé est avalé par ses propres lèvres.
ஞானமுள்ளவர்களின் வாயிலிருந்து வரும் வார்த்தைகள் தயவுள்ளவைகள்; மூடனோ தன் உதடுகளாலேயே அழிக்கப்படுகிறான்.
13 Le commencement des paroles de sa bouche est folie, et la fin de son discours est folie malicieuse.
அவனுடைய வார்த்தைகள் ஆரம்பத்தில் மூடத்தனமானவை; முடிவிலோ கொடிய பைத்தியக்காரத்தனமானவை.
14 L'insensé multiplie aussi les paroles. L'homme ne sait pas ce qui sera; et ce qui sera après lui, qui peut le dire?
மூடன் வார்த்தைகளை அதிகமாக்குகிறான். ஒரு மனிதனும் வரப்போவதை அறியான். அவனுக்குப்பின் என்ன நடக்கும் என்பதை யாரால் அவனுக்குச் சொல்லமுடியும்?
15 Le travail des insensés fatigue chacun d'eux, car il ne sait pas comment aller à la ville.
மூடனின் வேலை அவனையே களைப்படையச் செய்யும்; ஏனெனில், பட்டணத்திற்குப் போகும் வழி அவனுக்குத் தெரியாது.
16 Malheur à toi, pays, quand ton roi est un enfant, et tes princes mangent le matin!
அடிமையை அரசனாகவும் விடியற்காலமே விருந்து உண்கிறவர்களை பிரபுக்களாகவும் கொண்ட நாடே, உனக்கு ஐயோ!
17 Heureux es-tu, pays, quand ton roi est le fils de nobles, et vos princes mangent en temps voulu, pour la force, et non pour l'ivresse!
உயர்குடியில் பிறந்தவனை அரசனாகக் கொண்ட நாடே, நீ ஆசீர்வதிக்கப்படுவாய். குடிபோதைக்கு அல்லாமல் தங்கள் பெலத்திற்காக உரிய நேரத்தில் சாப்பிடுகிற இளவரசர்களைக் கொண்ட நாடே, நீ ஆசீர்வதிக்கப்படுவாய்.
18 Par la paresse, le toit s'enfonce; et par l'oisiveté des mains, la maison fuit.
சோம்பேறியினுடைய வீட்டுக்கூரை வளைந்து தொங்கும்; செயலற்ற கைகளினால் அவனுடைய வீடு ஒழுகும்.
19 On fait un festin pour rire, et le vin rend la vie heureuse; et l'argent est la réponse à tout.
மகிழ்ச்சிக்காகவே விருந்து செய்யப்படுகிறது, திராட்சை இரசம் வாழ்க்கையை களிப்புள்ளதாக்குகிறது, ஆனால் எல்லாவற்றிற்கும் தேவையானது பணமே.
20 Ne maudissez pas le roi, non, pas dans vos pensées; et ne maudissez pas les riches dans votre chambre, car un oiseau du ciel peut porter votre voix, et ce qui a des ailes peut en parler.
உனது சிந்தனையிலும் அரசனை நிந்திக்காதே, உனது படுக்கை அறையிலும் பணக்காரனை சபிக்காதே, ஏனெனில் ஆகாயத்துப் பறவை உன் வார்த்தைகளைக் கொண்டு செல்லலாம், சிறகடிக்கும் பறவை நீ சொல்வதைப் போய்ச் சொல்லலாம்.