< 1 Timothée 4 >
1 Mais l'Esprit dit expressément que, dans la suite des temps, quelques-uns abandonneront la foi, s'attachant à des esprits séducteurs et à des doctrines de démons,
௧ஆனாலும், ஆவியானவர் வெளிப்படையாக சொல்லுகிறபடி, கடைசிகாலத்தில் மனச்சாட்சியில் சூடுண்ட பொய்யருடைய மாயத்தினாலே சிலர் ஏமாற்றுகிற ஆவிகளுக்கும், பிசாசுகளின் உபதேசங்களுக்கும் கீழ்ப்படிந்து, விசுவாசத்தைவிட்டு விலகிப்போவார்கள்.
2 par l'hypocrisie d'hommes qui disent des mensonges, marqués au fer rouge dans leur propre conscience,
௨திருமணம் செய்யக்கூடாது என்றும்,
3 interdisant le mariage et ordonnant de s'abstenir des aliments que Dieu a créés pour être reçus avec actions de grâces par ceux qui croient et connaissent la vérité.
௩விசுவாசிகளும், சத்தியத்தை அறிந்தவர்களும் நன்றி செலுத்தி அனுபவிக்கும்படி தேவன் படைத்த உணவுகளைச் சாப்பிடக்கூடாது என்றும் அந்தப் பொய்யர்கள் கட்டளையிடுவார்கள்.
4 En effet, toute créature de Dieu est bonne, et rien n'est à rejeter s'il est reçu avec actions de grâces.
௪தேவன் படைத்தவைகள் அனைத்தும் நல்லதாக இருக்கிறது; நன்றியோடு ஏற்றுக்கொள்ளப்படுமானால் ஒன்றும் தள்ளப்படவேண்டியது இல்லை.
5 Car elle est sanctifiée par la parole de Dieu et la prière.
௫அது தேவவசனத்தினாலும் ஜெபத்தினாலும் பரிசுத்தமாக்கப்படும்.
6 Si tu instruis les frères de ces choses, tu seras un bon serviteur de Jésus-Christ, nourri des paroles de la foi et de la bonne doctrine que tu as suivie.
௬இவைகளை நீ சகோதரர்களுக்குப் போதித்துவந்தால், விசுவாசத்திற்குரிய வார்த்தைகளிலும் நீ அநுசரித்த நல்லபோதகத்திலும் தேறினவனாகி, இயேசுகிறிஸ்துவிற்கு நல்ல ஊழியக்காரனாக இருப்பாய்.
7 Mais refusez les fables profanes et celles des vieilles femmes. Exerce-toi à la piété.
௭சீர்கேடும், கிழவிகள் பேச்சுமாக இருக்கிற கட்டுக்கதைகளுக்கு விலகி, தேவபக்திக்கானவைகளை முயற்சிபண்ணு.
8 Car l'exercice corporel a quelque valeur, mais la piété a une valeur en toutes choses, ayant la promesse de la vie présente et de la vie future.
௮சரீரமுயற்சி கொஞ்சம் பிரயோஜனமுள்ளது; ஆனால், தேவபக்தியானது இந்த ஜீவனுக்கும் இதற்குப்பின்பு வரும் ஜீவனுக்கும் உள்ள வாக்குத்தத்தமுள்ளதாகையால் எல்லாவற்றிலும் பிரயோஜனமுள்ளது.
9 Cette parole est fidèle et digne de toute acceptation.
௯இந்த வார்த்தை உண்மையும் எல்லா அங்கீகரிப்புக்கும் தகுதி உள்ளதாக இருக்கிறது.
10 Car c'est à cette fin que nous travaillons et que nous souffrons l'opprobre, parce que nous avons mis notre confiance dans le Dieu vivant, qui est le Sauveur de tous les hommes, surtout de ceux qui croient.
௧0இதற்காகவே பிரயாசப்படுகிறோம், நிந்தையும் அடைகிறோம்; ஏனென்றால், எல்லா மனிதர்களுக்கும், விசேஷமாக விசுவாசிகளுக்கும் இரட்சகராகிய ஜீவனுள்ள தேவன்மேல் நம்பிக்கை வைத்திருக்கிறோம்.
11 Commandez et enseignez ces choses.
௧௧இவைகளை நீ கட்டளையிட்டுப் போதித்துக்கொண்டிரு.
12 Que personne ne méprise ta jeunesse; mais sois un exemple pour ceux qui croient, en parole, dans ta manière de vivre, en amour, en esprit, en foi, et en pureté.
௧௨உன் இளமையைக்குறித்து ஒருவனும் உன்னை அசட்டைபண்ணாதபடி, நீ உன் வார்த்தையிலும், நடக்கையிலும், அன்பிலும், ஆவியிலும், விசுவாசத்திலும், கற்பிலும், விசுவாசிகளுக்கு முன்மாதிரியாக இரு.
13 En attendant que je vienne, attachez-vous à la lecture, à l'exhortation et à l'enseignement.
௧௩நான் வரும்வரைக்கும் வாசிக்கிறதிலும் புத்திசொல்லுகிறதிலும் உபதேசிக்கிறதிலும் ஜாக்கிரதையாக இரு.
14 Ne négligez pas le don qui est en vous, et qui vous a été donné par prophétie, avec l'imposition des mains des anciens.
௧௪சபை மூப்பர்களாகிய சங்கத்தினர்கள் உன்மேல் கரங்களை வைத்தபோது தீர்க்கதரிசனத்தினால் உனக்கு அளிக்கப்பட்ட வரத்தைக்குறித்து அசதியாக இருக்கவேண்டாம்.
15 Occupe-toi de ces choses. Donne-toi entièrement à elles, afin que tes progrès soient révélés à tous.
௧௫உன்னுடைய வளர்ச்சி எல்லோருக்கும் தெரியும்படி இவைகளையே நீ சிந்தித்து, இவைகளில் நிலைத்திரு.
16 Prends garde à toi-même et à ton enseignement. Persévère dans ces choses, car c'est ainsi que tu te sauveras toi-même et ceux qui t'écoutent.
௧௬உன்னைக்குறித்தும், உன் உபதேசத்தைக்குறித்தும் எச்சரிக்கையாக இரு, இவைகளில் நிலைகொண்டிரு, நீ இப்படிச் செய்தால், உன்னையும், உன் உபதேசத்தைக் கேட்பவர்களையும் இரட்சித்துக்கொள்ளுவாய்.