< Psalmien 1 >
1 Autuas se mies, joka ei vaella jumalattomain neuvossa eikä astu syntisten teitä eikä istu, kussa pilkkaajat istuvat,
௧துன்மார்க்கர்களுடைய ஆலோசனையின்படி நடக்காமலும், பாவிகளுடைய வழியில் நிற்காமலும், பரியாசக்காரர்கள் உட்காரும் இடத்தில் உட்காராமலும்,
2 vaan rakastaa Herran lakia ja tutkistelee hänen lakiansa päivät ja yöt!
௨யெகோவாவுடைய வேதத்தில் பிரியமாக இருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாக இருக்கிற மனிதன் பாக்கியவான்.
3 Hän on niinkuin istutettu puu vesiojain tykönä, joka antaa hedelmänsä ajallaan ja jonka lehti ei lakastu; ja kaikki, mitä hän tekee, menestyy.
௩அவன் நீரோடை ஓரமாக நடப்பட்டு, தன்னுடைய காலத்தில் தன்னுடைய கனியைத் தந்து, இலை உதிராமல் இருக்கிற மரத்தைப்போல இருப்பான். அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்.
4 Niin eivät jumalattomat! Vaan he ovat kuin akanat, joita tuuli ajaa.
௪துன்மார்க்கர்களோ அப்படியில்லாமல், காற்றுப் பறக்கடிக்கும் பதரைப்போல் இருக்கிறார்கள்.
5 Sentähden eivät jumalattomat kestä tuomiolla eivätkä syntiset vanhurskasten seurakunnassa.
௫ஆகையால் துன்மார்க்கர்கள் நியாயத்தீர்ப்பிலும், பாவிகள் நீதிமான்களின் சபையிலும் நிலைநிற்பதில்லை.
6 Sillä Herra tuntee vanhurskasten tien, mutta jumalattomain tie hukkuu.
௬யெகோவா நீதிமான்களின் வழியை அறிந்திருக்கிறார்; துன்மார்க்கர்களின் வழியோ அழியும்.