< Psalmien 150 >
1 Halleluja! Ylistäkää Jumalaa hänen pyhäkössään, ylistäkää häntä hänen väkevyytensä taivaanvahvuuksissa.
௧அல்லேலூயா, தேவனை அவருடைய பரிசுத்தஸ்தலத்தில் துதியுங்கள்; அவருடைய வல்லமை வெளிப்படும் வானத்தைப்பார்த்து அவரைத் துதியுங்கள்.
2 Ylistäkää häntä hänen voimallisista teoistansa, ylistäkää häntä, sillä hänen herrautensa on suuri.
௨அவருடைய வல்லமையுள்ள செயல்களுக்காக அவரைத் துதியுங்கள்; மாட்சிமை பொருந்திய அவருடைய மகத்துவத்திற்காக அவரைத் துதியுங்கள்.
3 Ylistäkää häntä pasunan pauhulla, ylistäkää häntä harpuilla ja kanteleilla.
௩எக்காளச் சத்தத்தோடு அவரைத் துதியுங்கள்; வீணையோடும் சுரமண்டலத்தோடும் அவரைத் துதியுங்கள்.
4 Ylistäkää häntä vaskirummuilla ja karkelolla, ylistäkää häntä kielisoittimilla ja huiluilla.
௪தம்புரோடும் நடனத்தோடும் அவரைத் துதியுங்கள்; யாழோடும் தீங்குழலோடும் அவரைத் துதியுங்கள்.
5 Ylistäkää häntä helisevillä kymbaaleilla, ylistäkää häntä kumisevilla kymbaaleilla.
௫ஓசையுள்ள கைத்தாளங்களோடும் அவரைத் துதியுங்கள்; பேரோசையுள்ள கைத்தாளங்களோடும் அவரைத் துதியுங்கள்.
6 Kaikki, joissa henki on, ylistäkää Herraa! Halleluja!
௬சுவாசமுள்ள அனைத்தும் யெகோவாவை துதிப்பதாக. அல்லேலூயா.