< Psalmien 10 >
1 Miksi, Herra, seisot niin kaukana, miksi kätkeydyt ahdingon aikoina?
௧யெகோவாவே, ஏன் தூரத்தில் நிற்கிறீர்? துன்பம் நேரிடுகிற நேரங்களில் நீர் ஏன் மறைந்திருக்கிறீர்?
2 Jumalattomien ylpeyden tähden kurja kärsii, takertuu heidän punomiinsa juoniin.
௨துன்மார்க்கன் தன்னுடைய பெருமையினால் ஏழ்மையானவனை கொடூரமாகத் துன்பப்படுத்துகிறான்; அவர்கள் நினைத்த சதிமோசங்களில் அவர்களே அகப்படுவார்கள்.
3 Sillä jumalaton kerskaa omista himoistansa, ja kiskuri kiroaa, pilkkaa Herraa.
௩துன்மார்க்கன் தன்னுடைய உள்ளத்தின் ஆசையில் பெருமை பாராட்டுகிறான், பொருளை அபகரிக்கிறவன் யெகோவாவைச் சபித்து அசட்டைசெய்கிறான்.
4 Jumalaton sanoo ylvästellen: "Ei hän kosta". "Ei Jumalaa ole" -siinä kaikki hänen ajatuksensa.
௪துன்மார்க்கன் தன்னுடைய கர்வத்தினால் தேவனைத் தேடமாட்டான்; அவனுடைய நினைவுகளெல்லாம் தேவன் இல்லை என்பதே.
5 Hänen hankkeensa menestyvät joka aika. Sinun tuomiosi ovat korkealla, kaukana hänestä; kaikille vastustajilleen hän hymähtää.
௫அவன் வழிகள் எப்போதும் கேடுள்ளவைகள்; உம்முடைய நியாயத்தீர்ப்புகள் அவன் பார்வைக்கு எட்டாமல் மிகவும் உயரமாக இருக்கின்றன; தன்னுடைய எதிராளிகள் எல்லோர்மேலும் சீறுகிறான்.
6 Hän sanoo sydämessään: "En horju minä, en ikinä joudu onnettomuuteen".
௬நான் அசைக்கப்படுவதில்லை, தலைமுறை தலைமுறைதோறும் தீங்கு என்னை அணுகுவதில்லை என்று தன்னுடைய இருதயத்தில் சொல்லிக்கொள்ளுகிறான்.
7 Hänen suunsa on täynnä kirousta, petosta, sortoa; tuho ja turmio on hänen kielensä alla.
௭அவன் வாய் சபிப்பினாலும், கபடத்தினாலும், கொடுமையினாலும், நிறைந்திருக்கிறது; அவன் நாவின்கீழ் தீவினையும் அக்கிரமமும் உண்டு.
8 Kylien vaiheilla hän istuu väijyksissä, hän murhaa salaa syyttömän. Hänen silmänsä vaanivat onnetonta.
௮கிராமங்களின் மறைவான இடங்களிலே மறைந்திருந்து, மறைவான இடங்களிலே குற்றமற்றவனைக் கொல்லுகிறான்; திக்கற்றவர்களைப் பிடிக்க அவனுடைய கண்கள் நோக்கிக்கொண்டிருக்கின்றன.
9 Kätkössään hän väijyy, niinkuin leijona pensaikossa, hän väijyy hyökätäksensä kurjan kimppuun; hän saa kurjan kiinni, vetää hänet verkkoonsa.
௯தன்னுடைய கெபியிலிருக்கிற சிங்கத்தைப்போல மறைவில் மறைந்திருக்கிறான்; ஏழையைப் பிடிக்கப் மறைந்திருந்து, அவனைத் தன்னுடைய வலைக்குள் இழுத்துப் பிடித்துக்கொள்ளுகிறான்.
10 Hän kyyristyy, painautuu maahan, ja onnettomat joutuvat hänen kynsiinsä.
௧0திக்கற்றவர்கள் தன்னுடைய பலவான்கள் கையில் விழும்படி அவன் பதுங்கிக் கிடக்கிறான்.
11 Hän sanoo sydämessään: "Jumala sen unhottaa, hän on peittänyt kasvonsa, hän ei sitä ikinä näe".
௧௧தேவன் அதை மறந்தார் என்று அவர் தம்முடைய முகத்தை மறைத்து, எப்போதும் அதைக் காணமாட்டார் என்றும்; தன்னுடைய இருதயத்திலே சொல்லிகொள்ளுகிறான்.
12 Nouse, Herra, kohota kätesi, Jumala! Älä unhota kurjia.
௧௨யெகோவாவே, எழுந்தருளும்; தேவனே, உம்முடைய கையை உயர்த்தும்; ஏழைகளை மறக்காமலிரும்.
13 Miksi jumalaton pilkkaa Jumalaa? Miksi hän sanoo sydämessään: "Et sinä kosta?"
௧௩துன்மார்க்கன் தேவனை அசட்டைசெய்து, நீர் கேட்டு விசாரிப்பதில்லை; என்று தன்னுடைய இருதயத்தில் ஏன் சொல்லிக்கொள்ளவேண்டும்?
14 Sinä olet sen nähnyt, sillä sinä havaitset vaivan ja tuskan, ja sinä otat sen oman kätesi huomaan; sinulle onneton uskoo asiansa, sinä olet orpojen auttaja.
௧௪அதைப் பார்த்திருக்கிறீரே! உபத்திரவத்தையும், துக்கத்தையும் கவனித்திருக்கிறீரே; நீர் பதிலளிப்பீர்; ஏழையானவன் தன்னை உமக்கு ஒப்புவிக்கிறான்; திக்கற்ற பிள்ளைகளுக்குச் சகாயர் நீரே.
15 Murskaa jumalattoman käsivarsi ja kosta pahan jumalattomuus, niin ettei häntä enää löydetä.
௧௫துன்மார்க்கனும் பொல்லாதவனுமாக இருக்கிறவனுடைய கையை முறித்துவிடும்; அவனுடைய துன்மார்க்கம் காணாமற்போகும்வரை அதைத் தேடி விசாரியும்.
16 Herra on kuningas ainiaan ja iankaikkisesti; hävinneet ovat pakanat hänen maastansa.
௧௬யெகோவா எல்லாக் காலங்களுக்கும் இராஜாவாக இருக்கிறார்; அந்நியமக்கள் அவருடைய தேசத்திலிருந்து அழிந்து போவார்கள்.
17 Sinä kuulet nöyrien halajamisen, Herra, sinä vahvistat heidän sydämensä, sinä teroitat korvasi,
௧௭யெகோவாவே, ஏழைகளுடைய வேண்டுதலைக் கேட்டிருக்கிறீர்; அவர்கள் இருதயத்தை உறுதிப்படுத்துவீர்.
18 auttaaksesi orvon ja sorretun oikeuteensa, ettei ihminen, joka maasta on, enää saisi kauhua aikaan.
௧௮மண்ணான மனிதன் இனிப் பலவந்தம்செய்யத் தொடராமல், தேவனே நீர் திக்கற்ற பிள்ளைகளுக்கும் ஒடுக்கப்பட்டவர்களுக்கும் நீதிசெய்ய உம்முடைய செவியைச் சாய்த்துக் கேட்டருளுவீர்.