< Sananlaskujen 29 >
1 Kuritusta saanut mies, joka niskurina pysyy, rusennetaan äkisti, eikä apua ole.
௧அடிக்கடி கடிந்துகொள்ளப்பட்டும் தன்னுடைய பிடரியைக் கடினப்படுத்துகிறவன் உதவியின்றி திடீரென்று நாசமடைவான்.
2 Hurskaitten enentyessä kansa iloitsee, mutta jumalattoman hallitessa kansa huokaa.
௨நீதிமான்கள் பெருகினால் மக்கள் மகிழுவார்கள்; துன்மார்க்கர்கள் ஆளும்போதோ மக்கள் தவிப்பார்கள்.
3 Viisautta rakastavainen on isällensä iloksi, mutta porttojen seuratoveri hävittää varansa.
௩ஞானத்தில் பிரியப்படுகிறவன் தன்னுடைய தகப்பனை சந்தோஷப்படுத்துகிறான்; வேசிகளோடு தொடர்புள்ளவனோ சொத்தை அழிக்கிறான்.
4 Oikeudella kuningas pitää maan pystyssä, mutta verojen kiskoja sen hävittää.
௪நியாயத்தினால் ராஜா தேசத்தை நிலைநிறுத்துகிறான்; லஞ்சப்பிரியனோ அதைக் தலைகீழாக்குகிறான்.
5 Mies, joka lähimmäistään liehakoitsee, virittää verkon hänen askeleilleen.
௫பிறனை முகஸ்துதி செய்கிறவன், அவனுடைய கால்களுக்கு வலையை விரிக்கிறான்.
6 Pahalle miehelle on oma rikos paulaksi, mutta vanhurskas saa riemuita ja iloita.
௬துன்மார்க்கனுடைய துரோகத்திலே கண்ணி இருக்கிறது; நீதிமானோ பாடி மகிழுகிறான்.
7 Vanhurskas tuntee vaivaisten asian, mutta jumalaton ei siitä mitään ymmärrä.
௭நீதிமான் ஏழைகளின் நியாயத்தைக் கவனித்து அறிகிறான்; துன்மார்க்கனோ அதை அறிய விரும்பமாட்டான்.
8 Pilkkaajat kaupungin villitsevät, mutta viisaat hillitsevät vihan.
௮பரியாசக்காரர்கள் பட்டணத்தில் தீக்கொளுத்திவிடுகிறார்கள்; ஞானிகளோ கோபத்தை விலக்குகிறார்கள்.
9 Viisas mies kun käräjöi hullun miehen kanssa, niin tämä reutoo ja nauraa eikä asetu.
௯ஞானி மூடனுடன் வழக்காடும்போது, கோபப்பட்டாலும் சிரித்தாலும் அமைதியில்லை.
10 Murhamiehet vihaavat nuhteetonta, oikeamielisten henkeä he väijyvät.
௧0இரத்தப்பிரியர்கள் உத்தமனைப் பகைக்கிறார்கள்; செம்மையானவர்களோ அவனுடைய உயிரைக் காப்பாற்றுகிறார்கள்.
11 Tyhmä purkaa kaiken sisunsa, mutta viisas sen viimein tyynnyttää.
௧௧மூடன் தன்னுடைய உள்ளத்தையெல்லாம் வெளிப்படுத்துகிறான்; ஞானியோ அதைப் பின்னுக்கு அடக்கிவைக்கிறான்.
12 Hallitsija, joka kuuntelee valhepuheita, saa palvelijoikseen pelkkiä jumalattomia.
௧௨அதிபதியானவன் பொய்களுக்குச் செவிகொடுத்தால், அவனுடைய அலுவலர்கள் எல்லோரும் துன்மார்க்கர்களாவார்கள்.
13 Köyhä ja sortaja kohtaavat toisensa; kumpaisenkin silmille Herra antaa valon.
௧௩தரித்திரனும் கொடுமைக்காரனும் ஒருவரையொருவர் சந்திக்கிறார்கள்; அந்த இருவருடைய கண்களுக்கும் யெகோவா வெளிச்சம் கொடுக்கிறார்.
14 Kuninkaalla, joka tuomitsee vaivaisia oikein, on valtaistuin iäti vahva.
௧௪ஏழைகளுடைய நியாயத்தை உண்மையாக விசாரிக்கிற ராஜாவின் சிங்காசனம் என்றும் நிலைபெற்றிருக்கும்.
15 Vitsa ja nuhde antavat viisautta, mutta kuriton poika on äitinsä häpeä.
௧௫பிரம்பும் கடிந்துகொள்ளுதலும் ஞானத்தைக் கொடுக்கும்; தன்னுடைய இஷ்டத்திற்கு விடப்பட்ட பிள்ளையோ தன்னுடைய தாய்க்கு வெட்கத்தை உண்டாக்குகிறான்.
16 Kun jumalattomat lisääntyvät, lisääntyy rikos, mutta vanhurskaat saavat nähdä, kuinka he kukistuvat.
௧௬துன்மார்க்கர்கள் பெருகினால் பாவமும் பெருகும்; நீதிமான்களோ அவர்கள் விழுவதைக் காண்பார்கள்.
17 Kurita poikaasi, niin hän sinua virvoittaa ja sielullesi herkkuja tarjoaa.
௧௭உன்னுடைய மகனை தண்டி, அவன் உனக்கு ஆறுதல் செய்வான், உன்னுடைய ஆத்துமாவிற்கு ஆனந்தத்தையும் உண்டாக்குவான்.
18 Missä ilmoitus puuttuu, siinä kansa käy kurittomaksi; autuas se, joka noudattaa lakia.
௧௮தீர்க்கதரிசனமில்லாத இடத்தில் மக்கள் சீர்கெட்டுப்போவார்கள்; வேதத்தைக் காக்கிறவனோ பாக்கியவான்.
19 Ei ota palvelija sanoista ojentuakseen: hän kyllä ymmärtää, mutta ei tottele.
௧௯அடிமையானவன் வார்த்தைகளினாலே அடங்கமாட்டான்; அவைகளை அவன் அறிந்தாலும் உத்திரவு கொடுக்கமாட்டான்.
20 Näet miehen, kärkkään puhumaan-enemmän on toivoa tyhmästä kuin hänestä.
௨0தன்னுடைய வார்த்தைகளில் பதறுகிற மனிதனைக் கண்டால், அவனை நம்புவதைவிட மூடனை நம்பலாம்.
21 Jos palvelijaansa nuoresta pitäen hemmottelee, tulee hänestä lopulta kiittämätön.
௨௧ஒருவன் தன்னுடைய அடிமையைச் சிறு வயதுமுதல் அவனது இஷ்டப்படி வளர்த்தால், முடிவிலே அவன் தன்னை மகனாக உரிமைபாராட்டுவான்.
22 Pikavihainen mies nostaa riidan, ja kiukkuinen tulee rikkoneeksi paljon.
௨௨கோபக்காரன் வழக்கை உண்டாக்குகிறான்; கடுங்கோபி பெரும்பாதகன்.
23 Ihmisen alentaa hänen oma ylpeytensä, mutta alavamielinen saa kunnian.
௨௩மனிதனுடைய அகந்தை அவனைத் தாழ்த்தும்; மனத்தாழ்மையுள்ளவனோ மதிப்படைவான்.
24 Joka käy osille varkaan kanssa, se sieluansa vihaa; hän kuulee vannotuksen, mutta ei ilmaise mitään.
௨௪திருடனோடு பங்கிட்டுக்கொள்ளுகிறவன் தன்னுடைய ஆத்துமாவைப் பகைக்கிறான்; சாபத்தை அவன் கேட்டாலும் காரியத்தை வெளிப்படுத்தமாட்டான்.
25 Ihmispelko panee paulan, mutta Herraan luottavainen on turvattu.
௨௫மனிதனுக்குப் பயப்படும் பயம் கண்ணியை வருவிக்கும்; யெகோவாவை நம்புகிறவனோ உயர்ந்த அடைக்கலத்திலே வைக்கப்படுவான்.
26 Hallitsijan suosiota etsivät monet, mutta Herralta tulee miehelle oikeus.
௨௬ஆளுகை செய்கிறவனுடைய முகதரிசனத்தைத் தேடுகிறவர்கள் அநேகர்; ஆனாலும் அவனவனுடைய நியாயம் யெகோவாவாலே தீரும்.
27 Vääryyden mies on vanhurskaille kauhistus, ja oikean tien kulkija on kauhistus jumalattomalle.
௨௭நீதிமானுக்கு அநியாயக்காரன் அருவருப்பானவன்; சன்மார்க்கனும் துன்மார்க்கனுக்கு அருவருப்பானவன்.