< Johanneksen 8 >
1 Mutta Jesus meni Öljymäelle,
௧இயேசு ஒலிவமலைக்குப் போனார்.
2 Ja tuli varhain huomeneltain jälleen templiin ja kaikki kansa tuli hänen tykönsä, ja hän istui ja opetti heitä.
௨மறுநாள் காலையில் அவர் திரும்பி தேவாலயத்திற்கு வந்தபோது, மக்கள் எல்லோரும் அவரிடத்தில் வந்தார்கள். அவர் உட்கார்ந்து அவர்களுக்கு உபதேசம் செய்தார்.
3 Mutta kirjanoppineet ja Pharisealaiset toivat vaimon hänen tykönsä huoruudesta otetun kiinni. Ja kuin he olivat sen hänen eteensä asettaneet,
௩அப்பொழுது விபசாரத்திலே கண்டுபிடிக்கப்பட்ட ஒரு பெண்ணை வேதபண்டிதர்களும், பரிசேயர்களும் அவரிடத்தில் அழைத்துவந்து, அவளை நடுவே நிறுத்தி:
4 Sanoivat he hänelle: Mestari, tämä vaimo on läydetty itse työssä, kuin hän teki huorin.
௪போதகரே, இந்த பெண் விபசாரத்தில் கையும் மெய்யுமாகப் பிடிக்கப்பட்டாள்.
5 Mutta Moses on laissa meitä käskenyt, että senkaltaiset kivillä surmattaisiin. Mitäs sinä sanot?
௫இப்படிப்பட்டவர்களைக் கல்லெறிந்து கொல்லவேண்டும் என்று மோசே நியாயப்பிரமாணத்தில் நமக்குக் கட்டளைக் கொடுத்திருக்கிறாரே, நீர் என்ன சொல்லுகிறீர் என்றார்கள்.
6 Mutta sen he sanoivat, kiusaten häntä, kantaaksensa hänen päällensä. Mutta Jesus kumarsi ja kirjoitti sormellansa maahan.
௬அவர்மேல் குற்றஞ்சுமத்துவதற்கான காரணம் உண்டாக்குவதற்கு, அவரைச் சோதிக்கும்படி இப்படிச் சொன்னார்கள் இயேசுவோ குனிந்து, விரலினால் தரையிலே எழுதினார்.
7 Mutta kuin he seisoivat kysymyksensä päälle, ojensi hän itsensä ja sanoi heille: joka teistä on synnitön, se heittäkään ensin häntä kivellä.
௭அவர்கள் தொடர்ந்து அவரைக் கேட்டுக்கொண்டிருக்கும்போது, அவர் நிமிர்ந்துபார்த்து: உங்களில் பாவமில்லாதவன் இவள்மீது முதலாவது கல்லெறியட்டும் என்று சொல்லி,
8 Ja hän kumarsi taas ja kirjoitti maahan.
௮அவர் மறுபடியும் குனிந்து, தரையிலே எழுதினார்.
9 Kuin he tämän kuulivat ja olivat omaltatunnoltansa voitetut, läksivät he ulos yksittäin, ruveten vanhimmista, viimeisiin asti; ja Jesus jäi yksinänsä, ja vaimo seisoi siinä.
௯அவர்கள் அதைக்கேட்டு, தங்களுடைய மனச்சாட்சியில் உணர்த்தப்பட்டு, பெரியோர் முதல் சிறியோர் வரைக்கும் ஒவ்வொருவராக போய்விட்டார்கள். இயேசு தனித்திருந்தார், அந்த பெண் நடுவே நின்றாள்.
10 Mutta kuin Jesus ojensi itsensä, ja ei nähnyt ketään paitsi vaimoa, sanoi hän hänelle: vaimo, kussa ovat sinun päällekantajas? Onko sinua kenkään tuominnut?
௧0இயேசு நிமிர்ந்து அந்த பெண்ணைத்தவிர வேறொருவரையும் காணாமல்: பெண்ணே, உன்மேல் குற்றஞ்சுமத்தினவர்கள் எங்கே? ஒருவன்கூட உன்னைத் தண்டனைக்குள்ளாகத் தீர்க்கவில்லையா என்றார்.
11 Hän sanoi: Herra, ei kenkään. Niin Jesus sanoi: en minä myös sinua tuomitse: mene, ja älä silleen syntiä tee.
௧௧அதற்கு அவள்: இல்லை, ஆண்டவரே, என்றாள். இயேசு அவளைப் பார்த்து: நானும் உன்னைத் தண்டனைக்குள்ளாகத் தீர்க்கிறதில்லை; நீ போ, இனிப் பாவம் செய்யாதே என்றார்.
12 Niin Jesus puhui taas heille ja sanoi: minä olen maailman valkeus: joka minua seuraa, ei hän pimeydessä vaella, mutta saa elämän valkeuden.
௧௨மறுபடியும் இயேசு மக்களைப் பார்த்து: நான் உலகத்திற்கு ஒளியாக இருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடக்காமல் ஜீவ ஒளியை அடைந்திருப்பான் என்றார்.
13 Pharisealaiset sanoivat hänelle: sinä todistat itsestäs; ei sinun todistukses ole tosi.
௧௩அப்பொழுது பரிசேயர்கள் அவரைப் பார்த்து: உன்னைக்குறித்து நீயே சாட்சி கொடுக்கிறாய்; உன்னுடைய சாட்சி உண்மையானதல்ல என்றார்கள்.
14 Jesus vastasi ja sanoi heille: vaikka minä itsestäni todistan, niin minun todistukseni on tosi; sillä minä tiedän, kusta minä tulin ja kuhunka minä menen; mutta ette tiedä, kusta minä tulin ja kuhunka minä menen.
௧௪இயேசு அவர்களுக்கு மறுமொழியாக: என்னைக்குறித்து நானே சாட்சி கொடுத்தாலும், என் சாட்சி உண்மையாக இருக்கிறது; ஏனென்றால், நான் எங்கே இருந்து வந்தேன் என்றும், எங்கே போகிறேன் என்றும் அறிந்திருக்கிறேன்; நீங்களோ நான் எங்கே இருந்து வருகிறேன் என்றும், எங்கே போகிறேன் என்றும் உங்களுக்குத் தெரியாது.
15 Te tuomitsette lihan jälkeen, en minä ketään tuomitse.
௧௫நீங்கள் மனித வழக்கத்திற்கு ஏற்றபடி நியாயந்தீர்க்கிறீர்கள், நான் ஒருவனையும் நியாயந்தீர்க்கிறதில்லை;
16 Ja vaikka minä tuomitsisin, niin minun tuomioni on tosi; sillä en minä ole yksinäni, vaan minä ja Isä, joka minun lähetti.
௧௬நான் நியாயந்தீர்த்தால், என் தீர்ப்பு சத்தியத்தின்படி இருக்கும்; ஏனென்றால், நான் தனித்திருக்கவில்லை, நானும் என்னை அனுப்பின பிதாவுமாக இருக்கிறோம்.
17 Ja teidän laissanne on myös kirjoitettu, että kahden ihmisen todistus on tosi.
௧௭இரண்டு பேருடைய சாட்சி உண்மை என்று உங்களுடைய நியாயப்பிரமாணத்திலும் எழுதி இருக்கிறதே.
18 Minä olen se, joka itsestäni todistan, ja Isä, joka minun lähetti, todistaa myös minusta.
௧௮நான் என்னைக்குறித்துச் சாட்சி கொடுக்கிறவனாக இருக்கிறேன், என்னை அனுப்பின பிதாவும் என்னைக்குறித்துச் சாட்சிக் கொடுக்கிறார் என்றார்.
19 Niin he sanoivat hänelle: kussas Isäs on? Jesus vastasi: ette tunne minua ettekä minun Isääni: jos te tuntisitte minun, niin te tuntisitte myös minun Isäni.
௧௯அப்பொழுது அவர்கள்: உம்முடைய பிதா எங்கே என்றார்கள். இயேசு மறுமொழியாக: என்னையும் அறியீர்கள். என் பிதாவையும் அறியீர்கள்; நீங்கள் என்னை அறிந்தீர்களானால் என் பிதாவையும் அறிவீர்கள் என்றார்.
20 Nämät sanat puhui Jesus uhri-arkun tykönä, opettain tenplissä, ja ei häntä kenkään ottanut kiinni; sillä ei hänen aikansa ollut vielä tullut.
௨0தேவாலயத்திலே இயேசு உபதேசம் செய்கிறபோது, காணிக்கைப்பெட்டி இருக்கும் இடத்தில் இந்த வசனங்களைச் சொன்னார். அவருடைய வேளை இன்னும் வராதபடியினால் ஒருவனும் அவரைப் பிடிக்கவில்லை.
21 Niin Jesus sanoi taas heille: minä menen pois, ja te etsitte minua, ja teidän pitää kuoleman teidän synneissänne. Kuhunka minä menen, ette sinne taida tulla.
௨௧இயேசு மறுபடியும் அவர்களைப் பார்த்து: நான் போகிறேன், நீங்கள் என்னைத் தேடி உங்களுடைய பாவங்களிலே மரித்துப்போவீர்கள்; நான் போகிற இடத்திற்கு உங்களால் வர முடியாது என்றார்.
22 Niin sanoivat Juudalaiset; tappaneeko hän itsensä, sillä hän sanoo: kuhunka minä menen, ette sinne taida tulla.
௨௨அப்பொழுது யூதர்கள்: நான் போகிற இடத்திற்கு உங்களால் வர முடியாது என்கிறானே, தன்னைத்தானே கொலைசெய்து கொள்ளுவானோ என்று பேசிக்கொண்டார்கள்.
23 Ja hän sanoi heille: te olette alhaalta, ja minä olen ylhäältä: te olette maailmasta, en minä ole maailmasta.
௨௩அவர் அவர்களைப் பார்த்து: நீங்கள் கீழேயிருந்து உண்டானவர்கள், நான் மேலேயிருந்து உண்டானவன்; நீங்கள் இந்த உலகத்திலிருந்து உண்டானவர்கள், நான் இந்த உலகத்திலிருந்து உண்டானவன் இல்லை.
24 Sentähden sanoin minä teille: teidän pitää kuoleman synneissänne; sillä jos ette usko, että minä se olen, niin teidän pitää kuoleman synneissänne.
௨௪ஆகவே, நீங்கள் உங்களுடைய பாவங்களில் மரித்துப்போவீர்கள் என்று உங்களுக்குச் சொன்னேன்; நானே அவர் என்று நீங்கள் விசுவாசிக்காவிட்டால் உங்களுடைய பாவங்களிலே மரித்துப்போவீர்கள் என்றார்.
25 Niin he sanoivat hänelle: kuka sinä olet? Jesus sanoi heille: se kuin minä alusta puhuin teille.
௨௫அதற்கு அவர்கள்: நீர் யார் என்றார்கள். இயேசு அவர்களைப் பார்த்து: நான் ஆரம்ப முதலாக உங்களுக்குச் சொல்லியிருக்கிறவர் தான்.
26 Minulla on paljon teistä puhumista ja tuomitsemista, vaan se on totinen, joka minun lähetti; ja mitä minä olen häneltä kuullut, niitä minä puhun maailmalle.
௨௬உங்களைக்குறித்துப் பேசவும் நியாயந்தீர்க்கவும் எனக்கு அநேக காரியங்கள் இருக்கிறது; என்னை அனுப்பினவர் சத்தியமானவர்; நான் அவரிடத்தில் கேட்டவைகளை உலகத்திற்குச் சொல்லுகிறேன் என்றார்.
27 Mutta ei he ymmärtäneet, että hän puhui heille Isästä.
௨௭பிதாவைக்குறித்துப் பேசினார் என்று அவர்கள் அறியாதிருந்தார்கள்.
28 Sanoi siis Jesus heille: kuin te olette Ihmisen Pojan ylentäneet, niin te ymmärrätte, että minä se olen, ja etten minä tee itsestäni mitään, vaan niinkuin Isä on minun opettanut, niitä minä puhun.
௨௮ஆதலால் இயேசு அவர்களைப் பார்த்து: நீங்கள் மனிதகுமாரனை உயர்த்தினபின்பு, நானே அவர் என்றும், நான் என் சொந்தமாக ஒன்றும் செய்யாமல், என் பிதா எனக்குப் போதித்தபடியே இவைகளைச் சொன்னேன் என்றும் அறிவீர்கள்.
29 Ja se, joka minun lähetti, on minun kanssani. Ei Isä jättänyt minua yksinäni, sillä minä teen aina niitä, mitkä hänelle kelvolliset ovat.
௨௯என்னை அனுப்பினவர் என்னுடனே இருக்கிறார், பிதாவிற்குப் பிரியமானவைகளை நான் எப்பொழுதும் செய்கிறதினால் அவர் என்னைத் தனியே இருக்கவிடவில்லை என்றார்.
30 Kuin hän näitä puhui, niin moni uskoi hänen päällensä.
௩0இவைகளை அவர் சொன்னபோது, அநேகர் அவரிடத்தில் விசுவாசம் வைத்தார்கள்.
31 Niin Jesus sanoi niille Juudalaisille, jotka hänen uskoivat: jos te pysytte minun puheessani, niin te totisesti minun opetuslapseni olette.
௩௧இயேசு தம்மை விசுவாசித்த யூதர்களைப் பார்த்து: நீங்கள் என் உபதேசத்தில் நிலைத்திருந்தால் உண்மையாகவே என் சீடராக இருப்பீர்கள்;
32 Ja teidän pitää totuuden ymmärtämän, ja totuuden pitää teidät vapahtaman.
௩௨சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்றார்.
33 Niin he vastasivat häntä: me olemme Abrahamin siemen, emmekä ole koskaan kenenkään orjina olleet; kuinka siis sinä sanot: teidän pitää vapaiksi tuleman?
௩௩அவர்கள் அவருக்கு மறுமொழியாக: நாங்கள் ஆபிரகாமின் சந்ததியாக இருக்கிறோம், நாங்கள் ஒருபோதும் ஒருவனுக்கும் அடிமைகளாக இருக்கவில்லை; விடுதலையாவீர்கள் என்று நீர் எப்படிச் சொல்லுகிறீர் என்றார்கள்.
34 Jesus vastasi heitä ja sanoi: totisesti, totisesti sanon minä teille: jokainen, joka tekee syntiä, hän on synnin orja.
௩௪இயேசு அவர்களுக்கு மறுமொழியாக: பாவம் செய்கிறவன் எவனும் பாவத்திற்கு அடிமையாக இருக்கிறான் என்று உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
35 Mutta ei orja pysy ijankaikkisesti huoneessa; vaan Poika pysyy ijankaikkisesti. (aiōn )
௩௫அடிமையானவன் என்றைக்கும் வீட்டிலே நிலைத்திரான்; குமாரன் என்றைக்கும் நிலைத்திருக்கிறார். (aiōn )
36 Jos siis Poika teidät vapaiksi tekee, niin te totisesti olette vapaat.
௩௬ஆகவே, குமாரன் உங்களை விடுதலை ஆக்கினால் உண்மையாகவே விடுதலை ஆவீர்கள்.
37 Minä tiedän, että te olette Abrahamin siemen, vaan te etsitte kuolettaaksenne minua; sillä ei minun puheellani ole teissä siaa.
௩௭நீங்கள் ஆபிரகாமின் சந்ததியார் என்று அறிவேன்; ஆனாலும் உங்களுக்குள்ளே என் உபதேசம் இடம் பெறாததினால், என்னைக் கொலைசெய்யத் தேடுகிறீர்கள்.
38 Minä puhun, mitä minä olen isäni tykönä nähnyt, ja te teette, mitä te olette nähneet teidän isänne tykönä.
௩௮நான் என் பிதாவினிடத்தில் பார்த்ததைச் சொல்லுகிறேன், நீங்களும் உங்களுடைய பிதாவினிடத்தில் பார்த்ததைச் செய்கிறீர்கள் என்றார்.
39 He vastasivat ja sanoivat hänelle: Abraham on meidän isämme. Jesus sanoi heille: jos te olisitte Abrahamin lapset: niin te tekisitte Abrahamin töitä.
௩௯அதற்கு அவர்கள்: ஆபிரகாமே எங்களுடைய பிதா என்றார்கள். இயேசு அவர்களைப் பார்த்து: நீங்கள் ஆபிரகாமின் பிள்ளைகளாக இருந்தால் ஆபிரகாமின் செயல்களைச் செய்வீர்களே.
40 Mutta nyt te etsitte minua tappaaksenne, sitä ihmistä, joka totuuden on teille puhunut, jonka hän on Jumalalta kuullut: sitä ei Abraham tehnyt.
௪0தேவனிடத்தில் கேட்டிருக்கிற சத்தியத்தை உங்களுக்குச் சொன்ன மனிதனாகிய என்னைக் கொல்லத் தேடுகிறீர்கள், ஆபிரகாம் இப்படிச் செய்யவில்லையே.
41 Te teette teidän isänne tekoja. Niin he sanoivat hänelle: emme ole äpärinä syntyneet: meillä on yksi Isä, Jumala.
௪௧நீங்கள் உங்களுடைய பிதாவின் செயல்களைச் செய்கிறீர்கள் என்றார். அதற்கு அவர்கள்: நாங்கள் வேசித்தனத்தினால் பிறந்தவர்கள் இல்லை; ஒரே பிதா எங்களுக்கு இருக்கிறார், அவர் தேவன் என்றார்கள்.
42 Jesus sanoi heille: jos Jumala olis teidän Isänne, niin te tosin rakastaisitte minua; sillä minä läksin ja tulin Jumalasta, en minä itsestäni tullut, vaan hän lähetti minun.
௪௨இயேசு அவர்களைப் பார்த்து: தேவன் உங்களுடைய பிதாவாக இருந்தால் என்னிடத்தில் அன்பாக இருப்பீர்கள். ஏனென்றால், நான் தேவனிடத்தில் இருந்து வந்திருக்கிறேன்; நான் நானாக வரவில்லை, அவரே என்னை அனுப்பினார்.
43 Miksi ette ymmärrä tätä minun puhettani? Ette taida kuulla sitä minun sanaani.
௪௩என் வசனத்தை நீங்கள் ஏன் அறியாமல் இருக்கிறீர்கள்? என் உபதேசத்தைக் கேட்க மனதில்லாமல் இருக்கிறதினால் அல்லவா?
44 Te olette isästä perkeleestä, ja teidän isänne himoja te tahdotte tehdä. Hän on ollut murhaaja alusta, ja ei pysynyt totuudessa; sillä ei totuus ole hänessä. Kuin hän puhuu valhetta, niin hän puhuu omastansa; sillä hän on valehtelia ja valheen isä.
௪௪நீங்கள் உங்களுடைய தகப்பனாகிய பிசாசானவனால் உண்டானவர்கள்; உங்களுடைய தகப்பனின் ஆசைகளின்படி செய்ய விருப்பமாக இருக்கிறீர்கள்; அவன் ஆரம்ப முதற்கொண்டு மனித கொலைபாதகனாக இருக்கிறான்; சத்தியம் அவனிடத்தில் இல்லாததினால் அவன் சத்தியத்திலே நிலை நிற்கவில்லை; அவன் பொய்யனும் பொய்க்குப் தகப்பனுமாக இருக்கிறதினால் அவன் பொய் பேசும்போது தன்னுடைய சுபாவத்தின்படி அப்படிப் பேசுகிறான்.
45 Mutta että minä sanon totuuden, niin ette usko minua.
௪௫நான் உங்களுக்குச் சத்தியத்தைச் சொல்லுகிறதினால் நீங்கள் என்னை விசுவாசிக்கிறதில்லை.
46 Kuka teistä nuhtelee minua synnin tähden? jos minä sanon teille totuuden, miksi ette usko minua?
௪௬என்னிடத்தில் பாவம் உண்டென்று உங்களில் யார் என்னைக் குற்றப்படுத்தமுடியும்? நான் சத்தியத்தைச் சொல்லியிருந்தும், நீங்கள் ஏன் என்னை விசுவாசிக்கவில்லை.
47 Joka on Jumalasta, se kuulee Jumalan sanat; sentähden ette kuule, ettette Jumalasta ole.
௪௭தேவனால் உண்டானவன் தேவனுடைய வசனங்களுக்குச் செவிகொடுக்கிறான்; நீங்கள் தேவனால் உண்டாகாததினால் செவிகொடுக்காமல் இருக்கிறீர்கள் என்றார்.
48 Niin vastasivat Juudalaiset ja sanoivat hänelle: emmekö me oikein sano, että sinä olet Samarialainen, ja sinulla on perkele?
௪௮அப்பொழுது யூதர்கள் அவருக்கு மறுமொழியாக: உன்னைச் சமாரியன் என்றும், பிசாசு பிடித்தவன் என்றும் நாங்கள் சொல்லுகிறது சரிதானே என்றார்கள்.
49 Jesus vastasi: ei minulla ole perkele, vaan minä kunnioitan minun Isääni, ja te häpäisette minua.
௪௯அதற்கு இயேசு: நான் பிசாசு பிடித்தவன் இல்லை, நான் என் பிதாவை மதிக்கிறேன், நீங்கள் என்னை மதிக்காமலிருக்கிறீர்கள்.
50 En minä etsi omaa kunniaani, yksi on, joka sitä kysyy ja tuomitsee.
௫0நான் எனக்கு மகிமையைத் தேடுகிறதில்லை; அதைத் தேடி, நியாயந்தீர்க்கிறவர் ஒருவர் இருக்கிறார்.
51 Totisesti, totisesti sanon minä teille: joka tätkee minun sanani, ei hänen pidä näkemän kuolemaa ijankaikkisesti. (aiōn )
௫௧ஒருவன் என் வார்த்தையைக் கடைபிடித்தால், அவன் என்றென்றைக்கும் மரணத்தைப் பார்ப்பதில்லை என்று உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். (aiōn )
52 Niin Juudalaiset sanoivat hänelle: nyt me ymmärsimme, että sinulla on perkele. Abraham on kuollut ja prophetat, ja sinä sanot: joka kätkee minun sanani, ei hänen pidä maistaman kuolemaa ijankaikkisesti. (aiōn )
௫௨அப்பொழுது யூதர்கள் அவரைப் பார்த்து: நீ பிசாசு பிடித்தவன் என்று இப்பொழுது அறிந்திருக்கிறோம்; ஆபிரகாமும் தீர்க்கதரிசிகளும் மரித்தார்கள். நீயோ: ஒருவன், என் வார்த்தையைக் கடைபிடித்தால் என்றென்றைக்கும் மரணத்தை ருசிபார்ப்பதில்லை என்கிறாய். (aiōn )
53 Oletkos sinä suurempi kuin meidän isämme Abraham, joka kuollut on? ja prophetat ovat kuolleet: miksi sinä itses teet?
௫௩எங்களுடைய பிதாவாகிய ஆபிரகாமிலும் நீ பெரியவனோ? அவர் மரித்தார், தீர்க்கதரிசிகளும் மரித்தார்கள்; உன்னை நீ யார் என்று நினைக்கிறாய் என்றார்கள்.
54 Jesus vastasi: jos minä itsiäni kunnioitan, niin ei minun kunniani ole mitään: minun Isäni on se, joka kunnioittaa minua, jonka te teidän Jumalaksenne sanotte.
௫௪இயேசு மறுமொழியாக: என்னை நானே மகிமைப்படுத்தினால் அந்த மகிமை வீணாயிருக்கும், என் பிதா என்னை மகிமைப்படுத்துகிறவர், அவரை உங்களுடைய தேவன் என்று நீங்கள் சொல்லுகிறீர்கள்.
55 Ja ette tunne häntä, mutta minä tunnen hänen: ja jos minä sanoisin, etten minä häntä tuntisi, niin minä olisin valehtelia kuin tekin; mutta minä tunnen hänen ja kätken hänen sanansa.
௫௫ஆனாலும் நீங்கள் அவரை அறியவில்லை, நான் அவரை அறிந்திருக்கிறேன்; அவரை அறியேன் என்று சொன்னால் உங்களைப்போல நானும் பொய்யனாக இருப்பேன்; அவரை நான் அறிந்து, அவருடைய வார்த்தையைக் கடைபிடிக்கிறேன்.
56 Abraham teidän isänne iloitsi, nähdäksensä minun päiväni; hän näki sen, ja ihastui.
௫௬உங்களுடைய தகப்பனாகிய ஆபிரகாம் என்னுடைய நாளைக் காண ஆசையாக இருந்தான்; பார்த்து மகிழ்ந்தான் என்றார்.
57 Niin Juudalaiset sanoivat hänelle: et sinä ole vielä viidenkymmenen ajastajan vanha ja olet nähnyt Abrahamin?
௫௭அப்பொழுது யூதர்கள் அவரைப் பார்த்து: உனக்கு இன்னும் ஐம்பது வயதாகவில்லையே, நீ ஆபிரகாமைப் பார்த்தாயோ என்றார்கள்.
58 Jesus sanoi heille: totisesti, totisesti sanon minä teille: ennenkuin Abraham olikaan, olen minä.
௫௮அதற்கு இயேசு: ஆபிரகாம் உண்டாவதற்கு முன்னமே நான் இருக்கிறேன் என்று உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
59 Niin he poimivat kiviä, laskettaaksensa häntä. Mutta Jesus lymyi ja läksi ulos templistä, käyden heidän keskeltänsä; ja niin hän pääsi ulos.
௫௯அப்பொழுது அவர்மேல் எறியும்படி கற்களை எடுத்துக்கொண்டார்கள். இயேசு மறைந்து, அவர்கள் நடுவே கடந்து, தேவாலயத்தைவிட்டுப்போனார்.