< Teot 14 >
1 Niin Ikoniossa tapahtui, että he ynnä menivät sisälle Juudalaisten synagogaan, ja niin puhuivat, että suuri joukko Juudalaisia ja Grekiläisiä uskoi.
௧இக்கோனியா பட்டணத்திலே அவர்கள் இருவரும் யூதர்களுடைய ஜெப ஆலயத்தின் உள்ளே பிரவேசித்து யூதர்களிலும் கிரேக்கர்களிலும் திரளான மக்கள் நம்பத்தக்கதாகப் பிரசங்கித்தார்கள்.
2 Mutta uskomattomat Juudalaiset yllyttivät ja pahoittivat pakanain sielut veljiä vastaan.
௨விசுவாசிக்காத யூதர்கள் சகோதரர்களுக்கு விரோதமாக யூதரல்லாதவர்களுடைய மனதைத் தூண்டிவிட்டு, பகையுண்டாக்கினார்கள்.
3 Niin he olivat siellä kauvan aikaa ja puhuivat rohkiasti Herrassa, joka antoi todistuksen armonsa sanoihin, ja antoi merkit ja ihmeet heidän kättensä kautta tapahtua.
௩அவர்கள் அங்கே அநேகநாட்கள் வாழ்ந்து கர்த்த்தரை முன்னிட்டுத் தைரியம் உள்ளவர்களாகப் போதகம்பண்ணினார்கள்; அவர் தமது கிருபையுள்ள வசனத்திற்கு சாட்சியாக அடையாளங்களும் அற்புதங்களும் அவர்கள் கைகளால் செய்யப்படும்படி தயவுபண்ணினார்.
4 Niin sen kaupungin väki erkani: muutamat pitivät Juudalaisten kanssa, ja muutamat apostolien kanssa.
௪பட்டணத்து மக்கள் பிரிந்து, சிலர் யூதர்களையும் சிலர் அப்போஸ்தலர்களையும் சேர்ந்துகொண்டார்கள்.
5 Kuin siis pakanoilta ja Juudalaisilta kapina nousi, ynnä heidän päämiestensä kanssa, pilkkaamaan ja kivittämään heitä,
௫இவர்களை அவமானப்படுத்தவும் கல்லெறியவும் வேண்டும் என்று, யூதரல்லாதவர்களும், யூதர்களும் அவர்களுடைய அதிகாரிகளும் திட்டமிட்டபோது,
6 Ja kuin he sen ymmärsivät, pakenivat he Lykaonian kaupunkeihin Lystraan ja Derbeen, ja ympäri sitä lähimaakuntaa,
௬இவர்கள் அதை அறிந்து, லிக்கவோனியா நாட்டிலுள்ள பட்டணங்களாகிய லீஸ்திராவிற்கும் தெர்பைக்கும் அவைகளின் சுற்றுப் புறங்களுக்கும் ஓடிப்போய்;
7 Ja saarnasivat niissä evankeliumia.
௭அங்கே நற்செய்தியைப் பிரசங்கம்பண்ணினார்கள்.
8 Ja mies Lystrassa, sairas jaloista, istui, rampa hamasta äitinsä kohdusta, joka ei ikänänsä ollut käynyt.
௮லீஸ்திராவிலே ஒருவன் தன் தாயின் வயிற்றிலிருந்து பிறந்ததுமுதல் முடவனாக இருந்து, ஒருபோதும் நடக்காமல், கால்கள் செயலற்றவனாக உட்கார்ந்து,
9 Tämä kuuli Paavalin puhuvan; ja kuin hän katsahti hänen päällensä, ja näki hänellä uskon olevan terveeksi tulla,
௯பவுல் பேசுகிறதைக் கேட்டுக்கொண்டிருந்தான். அவனைப் பவுல் உற்றுப்பார்த்து, இரட்சிப்புக்கேற்ற விசுவாசம் அவனுக்கு உண்டென்று கண்டு,
10 Sanoi hän suurella äänellä: ojenna sinus jalkais päälle. Ja hän karkasi ylös ja kävi.
௧0நீ எழுந்து காலூன்றி நிமிர்ந்து நில் என்று உரத்த சத்தமாகச் சொன்னான். உடனே அவன் குதித்தெழுந்து நடந்தான்.
11 Kuin kansa sen näki, mitä Paavali tehnyt oli, korottivat he äänensä Lykaonian kielellä sanoen: jumalat ovat ihmisten hahmolla alas meidän tykömme tulleet.
௧௧பவுல் செய்ததை மக்கள் கண்டு, தேவர்கள் மனித உருவமெடுத்து நம்மிடத்தில் இறங்கி வந்திருக்கிறார்கள் என்று லிக்கவோனியா மொழியிலே சத்தமிட்டுச் சொல்லி,
12 Ja he kutsuivat Barnabaan Jupiteriksi ja Paavalin Merkuriukseksi; sillä hän oli sanansaattaja.
௧௨பர்னபாவை யூப்பித்தர் என்றும், பவுல் பிரசங்கத்தை நடத்தினவனானபடியினால் அவனை மெர்க்குரி என்றும் சொன்னார்கள்.
13 Ja pappi Jupiterin templissä, joka heidän kaupunkinsa edessä oli, toi härkiä ja seppeleitä oven eteen, ja tahtoi ynnä kaupungin väen kanssa uhrata.
௧௩அல்லாமலும் பட்டணத்திற்கு முன்னே இருந்த யூப்பித்தருடைய முக்கியமான கோவிலின் மதகுரு எருதுகளையும் பூமாலைகளையும் வாசலண்டையிலே கொண்டுவந்து, மக்களோடுகூட அவர்களுக்குப் பலியிட மனதாயிருந்தான்.
14 Kuin apostolit Barnabas ja Paavali sen kuulivat, repäisivät he vaattensa ja karkasivat kansan sekaan, huutain,
௧௪அப்போஸ்தலர்களாகிய பர்னபாவும் பவுலும் அதைக் கேட்டபொழுது, தங்களுடைய துணிகளைக் கிழித்துக்கொண்டு, கூட்டத்திற்குள்ளே ஓடி, உரத்த சத்தமாக:
15 Ja sanoen: miehet, miksi te tätä teette? Mekin olemme ihmiset, puuttuvaiset kuin tekin. Ja me saarnaamme teille evankeliumia, että te näistä turhista kääntyisitte elävän Jumalan tykö, joka teki taivaan, ja maan, ja meren, ja kaikki mitä niissä on,
௧௫மனிதர்களே, ஏன் இப்படிச் செய்கிறீர்கள்? நாங்களும் உங்களைப்போலப் பாடுள்ள மனிதர்கள் தானே; நீங்கள் இந்த வீணான தேவர்களைவிட்டு, வானத்தையும் பூமியையும் கடலையும் அவைகளிலுள்ள அனைத்தையும் உண்டாக்கின ஜீவனுள்ள தேவனிடத்திற்கு திரும்பவேண்டும் என்று உங்களுக்குப் பிரசங்கிக்கிறோம்.
16 Joka entisillä ajoilla antoi kaikki pakanat vaeltaa omilla teillänsä.
௧௬கடந்த காலங்களில் அவர் எல்லா மக்களையும் தங்கள் தங்கள் வழிகளிலே நடக்கவிட்டிருந்தும்,
17 Vaikka ei hän itsiänsä antanut olla ilman todistusta, tehden hyvää, antain meille taivaasta sateen ja hedelmälliset ajat, täyttäin meidän sydämemme rualla ja ilolla.
௧௭அவர் நன்மை செய்துவந்து, வானத்திலிருந்து மழைகளையும் செழிப்புள்ள காலங்களையும் நமக்குத் தந்து, ஆகாரத்தினாலும் சந்தோஷத்தினாலும் நம்முடைய இருதயங்களை நிரப்பி, இவ்விதமாக அவர் தம்மைக்குறித்துச் சாட்சி விளங்கப்பண்ணியிருக்கிறார் என்றார்கள்.
18 Ja kuin he näitä sanoivat, saivat he kansan tuskalla hillityksi, ettei he heille uhranneet.
௧௮இப்படி அவர்கள் சொல்லியும் தங்களுக்கு மக்கள் பலியிடாதபடிக்கு அவர்களை தடுத்து நிறுத்துவது கடினமாக இருந்தது.
19 Niin sinne myös tuli muutamia Juudalaisia Antiokiasta ja Ikoniosta, ja kuin he kansan olivat saattaneet Paavalia kivittämään, riepoittivat he hänen ulos kaupungista, ja luulivat hänen kuolleeksi.
௧௯பின்பு அந்தியோகியாவிலும் இக்கோனியாவிலுமிருந்து சில யூதர்கள் வந்து மக்களைத் தூண்டிவிட்டு, பவுலைக் கல்லெறிந்து, அவன் மரித்துப்போனான் என்று எண்ணி, அவனைப் பட்டணத்திற்கு வெளியிலே இழுத்துக்கொண்டுபோனார்கள்.
20 Mutta kuin opetuslapset hänen ympärillänsä seisoivat, nousi hän ja meni kaupunkiin, ja vaelsi toisena päivänä Barnabaan kanssa Derbeen.
௨0சீடர்கள் அவனைச் சூழ்ந்துநிற்கும்போது, அவன் எழுந்து, பட்டணத்திற்குள்ளே போனான். மறுநாளில் பர்னபாவுடனேகூடத் தெர்பைக்குப் புறப்பட்டுப்போனான்.
21 Ja kuin he olivat saarnanneet siinä kaupungissa evankeliumia ja monta opettaneet, palasivat he Lystraan ja Ikonioon ja Antiokiaan,
௨௧தெர்பை பட்டணத்தில் அவர்கள் நற்செய்தியைப் பிரசங்கித்து, அநேகரைச் சீடர்களாக்கினபின்பு, லீஸ்திராவிற்கும் இக்கோனியாவிற்கும் அந்தியோகியாவிற்கும் திரும்பிவந்து,
22 Vahvistain opetuslasten sieluja, ja neuvoivat heitä uskossa pysymään (sanoen): että meidän pitää monen vaivan kautta Jumalan valtakuntaan tuleman sisälle.
௨௨சீடர்களுடைய மனதைத் தைரியப்படுத்தி, விசுவாசத்திலே நிலைத்திருக்கும்படி அவர்களுக்குப் புத்திசொல்லி, நாம் அநேக உபத்திரவங்களின்வழியாக தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கவேண்டும் என்று சொன்னார்கள்.
23 Ja kuin he olivat valinneet vanhimmat jokaiselle seurakunnalle, ja rukoilleet ja paastonneet, antoivat he heidät Herran haltuun, jonka päälle he uskoivat.
௨௩அல்லாமலும் அந்தந்த சபைகளில் அவர்களுக்கு மூப்பர்களை ஏற்படுத்தி வைத்து, உபவாசித்து ஜெபம்பண்ணி, அவர்கள் விசுவாசித்துப் பற்றிக்கொண்ட கர்த்தருக்கு அவர்களை ஒப்புவித்தார்கள்.
24 Ja he vaelsivat lävitse Pisidian ja tulivat Pamphiliaan.
௨௪பின்பு பிசீதியா நாட்டைக் கடந்து, பம்பிலியா நாட்டிற்கு வந்து,
25 Ja kuin he olivat saarnanneet sanaa Pergessä, menivät he alas Attaliaan,
௨௫பெர்கே ஊரில் வசனத்தைப் பிரசங்கித்து, அத்தலியா பட்டணத்திற்குப் போனார்கள்.
26 Ja purjehtivat sieltä Antiokiaan, jossa he olivat Jumalan armon haltuun annetut, siihen työhön, jonka he toimittaneet olivat.
௨௬அங்கே கப்பல் ஏறி, தாங்கள் நிறைவேற்றின செயல்களுக்காக தேவனுடைய கிருபைக்கு ஒப்புவிக்கப்பட்டு, புறப்பட்டு அந்தியோகியாவிற்கு வந்தார்கள்.
27 Mutta kuin he sinne tulivat ja seurakunnan kokosivat, ilmoittivat he, kuinka paljon Jumala oli heidän kanssansa tehnyt ja pakanoille uskon oven avannut.
௨௭அவர்கள் அங்கே சேர்ந்தபொழுது சபையைக் கூடிவரச்செய்து, தேவன் தங்களைக்கொண்டு செய்தவைகளையும், அவர் யூதரல்லாதவர்க்கும் விசுவாசத்தின் கதவைத் திறந்ததையும் அறிவித்து,
28 Ja he viipyivät siellä opetuslasten kanssa hetken aikaa.
௨௮அங்கே சீடர்களோடுகூட அநேகநாட்கள் தங்கியிருந்தார்கள்.