< Matteuse 13 >
1 Samal päeval läks Jeesus majast välja ja istus mere äärde.
அதே நாளில், இயேசு வீட்டைவிட்டு வெளியே போய், கடலின் அருகே உட்கார்ந்திருந்தார்.
2 Tema juurde kogunes nii suur rahvahulk, et ta pidi astuma paati ja istuma seal, samal ajal kui rahvas seisis kaldal.
அப்பொழுது மக்கள் பெருங்கூட்டமாய் இயேசுவைச் சுற்றி ஒன்றுகூடிவந்தனர். ஆகவே, அவர் ஒரு படகில் ஏறி, அதில் உட்கார்ந்தார். மக்கள் எல்லோரும் கரையில் நின்றார்கள்.
3 Ja ta rääkis neile palju asju tähendamissõnadega, öeldes: „Põllumees läks välja külvama.
இயேசு அவர்களுக்குப் பல காரியங்களை உவமைகள் மூலம் சொன்னார். அவைகளில் இது ஒன்றாகும்: “ஒரு விவசாயி விதைகளை விதைக்கும்படி புறப்பட்டான்.
4 Kui ta külvas, kukkus osa seemet teeveerele ning linnud tulid ja nokkisid selle.
அவன் விதைகளைத் தூவி விதைக்கையில், சில விதைகள் பாதையருகே விழுந்தன. பறவைகள் வந்து அவற்றைக் கொத்தித் தின்றுவிட்டன.
5 Osa kukkus kivisele pinnale, kus ei olnud palju mulda, ja tärkas kohe, sest muld ei olnud sügav.
சில விதைகள் மண் அதிகமாய் இல்லாத கற்பாறையான இடங்களில் விழுந்தன, மண் ஆழமாக இல்லாததால், அது விரைவாக முளைத்தாலும்
6 Ent kui päike tõusis ja kõrvetas, kuivasid taimed ära, sest neil ei olnud juurt.
வெயில் அதிகமானபோது, பயிர்கள் வாடிப்போயின; வேர் இல்லாததினாலே, அவை உலர்ந்தும் போயின.
7 Ja osa seemet kukkus ohakate sekka ning ohakad sirgusid ja lämmatasid selle.
வேறுசில விதைகள் முட்செடிகளின் நடுவில் விழுந்தன. முட்செடிகள் வளர்ந்து, பயிர்களை நெருக்கிப்போட்டன.
8 Aga osa seemet kukkus heasse mulda ja kandis vilja – mõni sada, mõni kuuskümmend ja mõni kolmkümmend korda rohkem kui külvati.
ஆனால் வேறுசில விதைகளோ, நல்ல மண்ணில் விழுந்தன. அங்கே அவை முறையே நூறு, அறுபது, முப்பது மடங்காக விளைச்சலைக் கொடுத்தன.
9 Kellel kõrvad on, see kuulgu!“
கேட்பதற்கு காதுள்ளவன் கேட்கட்டும்” என்றார்.
10 „Miks sa räägid neile tähendamissõnadega?“tulid jüngrid Jeesuselt küsima.
அப்பொழுது சீடர்கள் இயேசுவிடம் வந்து, “நீர் மக்களுடன் ஏன் உவமைகள் மூலம் பேசுகிறீர்?” என்று கேட்டார்கள்.
11 Jeesus vastas: „Teile on antud teada taevariigi saladusi, neile aga ei ole.
இயேசு அதற்குப் பதிலாக உரைத்தது: “பரலோக அரசின் இரகசியத்தைப் பற்றிய அறிவு உங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர்களுக்கோ அது கொடுக்கப்படவில்லை.
12 Kellel on, sellele antakse rohkem, ja tal on küllaga; aga kellel ei ole, sellelt võetakse ära seegi, mis tal on.
இருக்கிறவனுக்கு மேலும் கொடுக்கப்படும். அவன் நிறைவைப் பெற்றுக்கொள்வான். இல்லாதவனிடம் உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும்.
13 Sellepärast räägin ma neile tähendamissõnadega: „Kuigi nad vaatavad, nad ei näe; kuigi nad kuulevad, nad ei mõista.“
இதனாலேயே, அவர்களுடன் நான் உவமைகள் மூலம் பேசுகிறேன்: “‘அவர்கள் கண்டும் காணாதவர்களாகவும், அவர்கள் கேட்டும் கேளாதவர்களாகவும், விளங்கிக்கொள்ளாமலும் இருக்கிறார்கள்.’
14 Nende kohta läheb tõesti täide prohvet Jesaja ettekuulutus: „Te küll kuulate, aga ei mõista, te küll vaatate, aga ei näe.
ஏசாயாவின் இறைவாக்கு இவ்வாறு அவர்களில் நிறைவேறியது: “‘நீங்கள் எப்பொழுதும் காதாரக் கேட்டும் ஒருபோதும் உணரமாட்டீர்கள்; நீங்கள் எப்பொழுதும் கண்ணாரக் கண்டும் ஒருபோதும் அறிந்துகொள்ளமாட்டீர்கள்.
15 Selle rahva süda on kalestunud ja nende kõrvakuulmine on nüri ja nad on sulgenud oma silmad. Muidu nad näeksid oma silmadega ja kuuleksid oma kõrvadega ja mõistaksid südamega ning pöörduksid, ja ma teeksin nad terveks.“
ஏனெனில் இந்த மக்களுடைய இருதயம் மரத்துப்போய் இருக்கிறது; அவர்கள் தங்கள் காதுகளால் மிக அரிதாகவே கேட்கிறார்கள், தங்களுடைய கண்களையும் மூடிக்கொண்டு இருக்கிறார்கள். ஆகையால், அவர்கள் தங்கள் கண்களால் காணாமலும், தங்கள் காதுகளால் கேட்காமலும், தங்கள் இருதயங்களினால் உணர்ந்து, மனம் மாறாமலும் இருக்கிறார்கள்; நானும் அவர்களைக் குணமாக்காமல் இருக்கிறேன்.’
16 Aga õnnistatud on teie silmad, et need näevad, ja teie kõrvad, et need kuulevad.
உங்கள் கண்கள் ஆசீர்வதிக்கப்பட்டவை, ஏனெனில் அவை காண்கின்றன; உங்கள் காதுகள் ஆசீர்வதிக்கப்பட்டவை, ஏனெனில் அவை கேட்கின்றன.
17 Tõesti, ma ütlen teile, paljud prohvetid ja õiged on igatsenud näha seda, mida teie näete, ega ole näinud, ja kuulda, mida teie kuulete, ega ole kuulnud.
நான் உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், பல இறைவாக்கினர்களும், நீதிமான்களும் காண்பவற்றைக் காண விரும்பியும் அவர்கள் அதைக் காணவில்லை. நீங்கள் கேட்பவற்றை அவர்கள் கேட்க விரும்பியும் அவர்கள் அதைக் கேட்கவில்லை.
18 Kuulake, kuidas mõista tähendamissõna külvajast!
“ஆகையால் இப்பொழுது விதைக்கிறவனின் உவமையின் விளக்கத்தைக் கேளுங்கள்:
19 Igaühe juurde, kes sõnumit Kuningriigist kuuleb, kuid ei mõista, tuleb kurat ja röövib külvatu ta südamest. See on seeme, mis teeveerele külvati.
யாராவது இறைவனுடைய அரசைக் குறித்தச் செய்தியைக் கேட்டு, அதை விளங்கிக்கொள்ளாதிருக்கும்போது, தீயவன் வந்து அவருடைய இருதயத்தில் விதைக்கப்பட்டவற்றைப் பறித்தெடுக்கிறான். இதுவே பாதை ஓரத்தில் விதைக்கப்பட்ட விதையாகும்.
20 Seeme, mis kivisele maale külvati, on inimene, kes sõna kuuleb ja selle kohe rõõmuga vastu võtab.
கற்பாறையான இடங்களில் விழுந்த விதை, வார்த்தையைக் கேட்டவுடன் அதை சந்தோஷத்துடன் ஏற்றுக்கொண்டவர்கள்.
21 Aga kuna tal endas ei ole juurt, püsib ta lühikest aega. Kui teda tabab mure või tagakius, langeb ta kiiresti ära.
ஆனால் அவர்களில் வேரில்லாததால், அவர்கள் கொஞ்சக்காலம் மட்டுமே நிலைத்திருப்பார்கள். வார்த்தையின் நிமித்தம் கஷ்டங்களும், துன்பங்களும் வரும்போது, அவர்கள் விரைவாய் விழுந்துபோவார்கள்.
22 Ohakaisse külvatud seeme on inimene, kes sõnumit küll kuuleb, ent ajaliku elu mured ja rikkuse petlik võlu lämmatavad selle ja see jääb viljatuks. (aiōn )
முட்செடிகளுக்கு இடையில் விழுந்த விதைகளுக்கு ஒப்பானவர்கள், வார்த்தையைக் கேட்டும் உலக வாழ்வின் கவலைகளும், செல்வச் செழிப்பின் வஞ்சனைகளும், அந்த வார்த்தையை நெருக்கிவிடுகின்றன. அதனால் அவர்கள் பலனற்றுப் போவார்கள். (aiōn )
23 Heasse mulda külvatud seeme on aga inimene, kes sõnumit kuuleb ja mõistab. Tema on see, kes vilja kannab ja saaki annab: kes sada, kes kuuskümmend, kes kolmkümmend korda rohkem kui külvati.“
நல்ல நிலத்தில் விழுந்த விதைக்கு ஒப்பானவர்கள், வார்த்தையைக் கேட்டு அதை விளங்கிக்கொள்கிறவர்கள். இவர்கள் நூறு, அறுபது, முப்பது மடங்காக விளைச்சலைக் கொடுப்பார்கள்.”
24 Ta rääkis neile veel teise tähendamissõna: „Taevariik on kui mees, kes külvas oma põllule head seemet.
இயேசு அவர்களுக்கு வேறொரு உவமையைச் சொன்னார்: “பரலோக அரசு ஒரு மனிதன் தனது வயலில் நல்ல விதையை விதைத்ததற்கு ஒப்பாய் இருக்கிறது.
25 Aga kui kõik magasid, tuli ta vaenlane, külvas raiheina nisuseemne sekka ja läks minema.
எல்லோரும் நித்திரையாய் இருக்கையில், அவனுடைய பகைவன் வந்து, கோதுமைகளுக்கிடையே களைகளை விதைத்து விட்டுப் போய்விட்டான்.
26 Kui oras võrsus ja looma hakkas, ilmus ka raihein nähtavale.
கோதுமை முளைத்து வளர்ந்து கதிர்விட்டது. அப்பொழுது களைகளும் காணப்பட்டன.
27 Peremehe sulased tulid nüüd tema juurde ja küsisid: „Isand, eks sa külvanud ju oma põllule head seemet. Kust siis tuli sinna raihein?“
“வயலுக்குச் சொந்தக்காரனின் வேலைக்காரர்கள் அவனிடம் வந்து, ‘ஐயா, நீர் உமது வயலில் நல்ல விதையை அல்லவா விதைத்தீர்? அப்படியிருக்க களைகள் எங்கிருந்து வந்தன?’ என்று கேட்டார்கள்.
28 Tema aga vastas neile: „See on vaenlase töö.“„Kas sa tahad, et me läheme ja need välja korjame?“küsisid sulased.
“அதற்கு எஜமான், ‘பகைவனே அதைச் செய்தான்’ என்று பதிலளித்தான். “வேலைக்காரர்கள் அவனிடம், ‘நாங்கள் போய் அவற்றைப் பிடுங்கிப் போடட்டுமா?’ என்று கேட்டார்கள்.
29 „Ei, “vastas peremees, „sest raiheina korjates te kisuksite üles ka nisu.
“அதற்கு எஜமான், ‘இல்லை. நீங்கள் களைகளைப் பிடுங்கும்போது, அவற்றுடன் கோதுமையையும் பிடுங்கிவிடக் கூடும்.
30 Las mõlemad kasvavad lõikuseni ja siis ma ütlen lõikajaile: korjake esmalt raihein, siduge kimpu põletamiseks, vili aga koguge mu aita!““
அறுவடைவரைக்கும் இரண்டும் சேர்ந்து வளரட்டும். அப்பொழுது நான் அறுவடை செய்கிறவர்களிடம்: முதலில் களைகளை ஒன்றுசேர்த்து, அவற்றை எரிப்பதற்காகக் கட்டுங்கள்; அதற்குப் பின்பு கோதுமையை சேர்த்து, எனது களஞ்சியத்திற்கு கொண்டுவாருங்கள் என்பேன்.’”
31 Ta rääkis neile veel ühe tähendamissõna: „Taevariik on kui sinepiseeme, mille mees võttis ja külvas oma põllule.
இயேசு அவர்களுக்கு வேறொரு உவமையைச் சொன்னார்: “பரலோக அரசு, ஒருவன் தனது நிலத்தில் விதைத்த கடுகுவிதையைப் போன்றது.
32 Kuigi see on väikseim kõigist seemneist, kasvab aiataimedest suurimaks ja sirgub puuks, mille okstele tulevad linnud ja teevad pesa.“
அது எல்லா விதைகளிலும் சிறிதானதாக இருந்தும், அது வளரும்போது, தோட்டத்திலுள்ள மற்றெல்லாச் செடிகளைப் பார்க்கிலும் பெரியதாய் வளர்ந்து, மரமாகிறது. அதனால் ஆகாயத்துப் பறவைகள் வந்து, அதன் கிளைகளில் தங்குகின்றன” என்றார்.
33 Ta rääkis neile veel ühe tähendamissõna: „Taevariik on kui juuretis, mille naine võttis ja segas umbes kolmekümne kilogrammi jahu sekka, kuni kogu taigen läks hapnema.“
இயேசு அவர்களுக்கு வேறொரு உவமையைச் சொன்னார்: “பரலோக அரசு புளிப்புச்சத்துக்கு ஒப்பாயிருக்கிறது. ஒரு பெண் ஏறக்குறைய இருபத்து ஏழு கிலோ மாவிலே சிறிதளவு புளித்தமாவைக் கலந்து, அது முழுவதும் புளிக்கும்வரை வைத்ததற்கு ஒப்பாயிருக்கிறது” என்றார்.
34 Seda kõike rääkis Jeesus rahvale tähendamissõnades, ja tähendamissõnu kasutamata ei rääkinud ta neile midagi.
இயேசு இந்தக் காரியங்களையெல்லாம் கூடியிருந்த மக்களுக்கு உவமைகள் மூலமே பேசினார்; இயேசு அவர்களுக்கு உவமைகள் இல்லாமல் எதையுமே பேசவில்லை.
35 Nõnda läks täide, mis on öeldud prohveti suu läbi: „Ma hakkan kõnelema tähendamissõnadega, ütlen välja asju, mis on varjatud maailma loomisest peale.“
இறைவாக்கினன் மூலம் கூறப்பட்டவை இவ்வாறு நிறைவேறின: “நான் உவமைக் கதைகளால் என் வாயைத் திறப்பேன். உலகம் படைக்கப்பட்டதிலிருந்து மறைபொருளானவைகளைக் கூறுவேன்.”
36 Siis saatis Jeesus rahva minema ja tuli koju. Jüngrid tulid tema juurde ja ütlesid: „Seleta meile tähendamissõna raiheinast põllul!“
அதற்குப் பின்பு இயேசு, மக்கள் கூட்டத்தைவிட்டு வீட்டிற்குள் சென்றார். அவருடைய சீடர்கள் அவரிடம் வந்து, “வயலின் களைகளைப் பற்றிய உவமையை எங்களுக்கு விளக்கிச்சொல்லும்” என்று கேட்டார்கள்.
37 Jeesus vastas: „Hea seemne külvaja on Inimese Poeg.
இயேசு அவர்களுக்குப் பதிலளித்துச் சொன்னதாவது: “நல்ல விதையை விதைத்தவர் மானிடமகனாகிய நானே.
38 Põld on maailm, hea seeme tähistab kuningriigi inimesi. Raihein on kurjad inimesed,
வயல் என்பது உலகம், நல்ல விதை பரலோக அரசின் பிள்ளைகள். களைகளோ தீயவனின் பிள்ளைகள்.
39 ja vaenlane, kes neid külvab, on kurat. Lõikusaeg on ajastu lõpp, lõikajad on inglid. (aiōn )
அவற்றை விதைக்கிற பகைவன் சாத்தான். அறுவடை என்பது உலகத்தின் முடிவு. அறுவடை செய்பவர்கள் இறைத்தூதர்கள். (aiōn )
40 Nõnda nagu raihein korjatakse ja tules põletatakse, nii on ka selle ajastu lõpul. (aiōn )
“களைகள் பிடுங்கப்பட்டு நெருப்பில் எரிக்கப்படுகிறதுபோல, இந்த உலகத்தின் முடிவிலும் நடைபெறும். (aiōn )
41 Inimese Poeg läkitab oma inglid, kes korjavad tema Kuningriigist kõik, mis põhjustab pattu ja kes teevad kurja
மானிடமகனாகிய நான் எனது தூதரை அனுப்புவேன். அவர்கள் போய் எனது அரசில் இருக்கிற பாவத்திற்கு காரணமான எல்லாவற்றையும், தீமை செய்கிறவர்கள் எல்லோரையும் பிடுங்கிப் போடுவார்கள்.
42 ja heidavad need põlevasse ahju; seal on ulgumine ja hammaste kiristamine.
இறைத்தூதர் அவர்களை எரியும் சூளைக்குள் எறிந்துவிடுவார்கள். அங்கே அழுகையும், பற்கடிப்பும் இருக்கும்.
43 Siis säravad õiged otsekui päike oma Isa Kuningriigis. Kellel kõrvad on, see kuulgu!
அப்பொழுது நீதிமான்களோ தங்களுடைய பிதாவின் அரசில் சூரியனைப்போல் ஒளி வீசுவார்கள். கேட்பதற்கு காதுள்ளவன் கேட்கட்டும்.
44 Taevariik on kui põllumaasse peidetud aare, mille inimene leidis. Ta peitis selle jälle ning läks ja müüs rõõmuga maha kõik, mis tal oli, ning ostis selle põllu.
“பரலோக அரசு, ஒரு வயலில் மறைந்து கிடக்கும் புதையலுக்கு ஒப்பாயிருக்கிறது. அதை ஒருவன் கண்டுபிடித்தபோது, அவன் அதைத் திரும்பவும் மறைத்து வைத்துவிட்டு, பின்பு போய் தனது மகிழ்ச்சியின் நிமித்தம், தன்னிடமுள்ள எல்லாவற்றையும் விற்று, அந்த வயலை வாங்குகிறான்.
45 Veel on taevariik kui kaupmees, kes otsis ilusaid pärleid.
“மேலும் பரலோக அரசு, வியாபாரி ஒருவன் நல்ல முத்துக்களைத் தேடுவதற்கு ஒப்பாய் இருக்கிறது.
46 Kui ta oli leidnud ühe eriti hinnalise pärli, läks ta ja müüs ära kõik, mis tal oli, ning ostis endale selle.
பெரும் மதிப்புள்ள ஒரு முத்தைக் கண்டதும், அவன் போய் தன்னிடமுள்ள எல்லாவற்றையும் விற்று, அதை வாங்குகிறான்.
47 Veel on taevariik kui noot, mis heideti järve ja püüdis mitmesuguseid kalu.
“மேலும் பரலோக அரசு, கடலிலே வலையை வீசி எல்லா விதமான மீன்களையும் பிடிப்பதற்கு ஒப்பாயிருக்கிறது.
48 Kui noot sai täis, tõmbasid kalurid selle kaldale, istusid maha ja kogusid head kalad korvidesse, halvad aga viskasid ära.
வலை நிரம்பியபோது, மீனவர் அதைக் கரைக்கு இழுத்தெடுத்தார்கள். பின்பு அவர்கள் உட்கார்ந்து, நல்ல மீன்களையெல்லாம் ஒன்றாகக் கூடைகளில் சேர்த்தார்கள். கெட்டவற்றையோ எறிந்துவிட்டார்கள்.
49 Nõnda on ka selle ajastu lõpul: inglid tulevad ja eraldavad õelad õigete keskelt (aiōn )
இவ்வாறே உலகத்தின் முடிவிலும் நடக்கும். இறைத்தூதர் வந்து நீதிமான்களிலிருந்து தீயவர்களைப் பிரித்தெடுத்து (aiōn )
50 ning heidavad nad põlevasse ahju; seal on ulgumine ja hammaste kiristamine.
அவர்களை எரிகிற சூளைக்குள் எறிந்துபோடுவார்கள். அங்கே அழுகையும், பற்கடிப்பும் இருக்கும்.
51 Kas te saite aru sellest kõigest?“küsis Jeesus. „Jah, “vastasid nad.
“இவற்றையெல்லாம் நீங்கள் விளங்கிக்கொண்டீர்களா?” என்று இயேசு சீடர்களை கேட்டார். “ஆம்” என அவர்கள் பதிலளித்தார்கள்.
52 Ja ta ütles neile: „Seepärast on iga kirjatundja, kellest on saanud taevariigi jünger, kui majaperemees, kes toob oma varakambrist välja uusi ja vanu aardeid.“
“ஆகவே, பரலோக அரசின் சீடனான ஒவ்வொரு மோசேயின் சட்ட ஆசிரியனும், தனது பொக்கிஷ அறையிலிருந்து புதியவைகளையும், பழையவைகளை வெளியே கொண்டுவருகின்ற ஒரு வீட்டின் சொந்தக்காரனுக்கு ஒப்பாயிருக்கிறான்” என்றார்.
53 Kui Jeesus oli need tähendamissõnad lõpetanud, lahkust ta sealt.
இயேசு இந்த உவமையைச் சொல்லி முடித்தபின், அங்கிருந்து சென்றார்.
54 Ta läks oma kodulinna ja õpetas sealses sünagoogis, nii et inimesed küsisid hämmastunult: „Kust on saanud see mees säärase tarkuse ja imelise väe?
அவர் தமது சொந்த பட்டணத்திற்கு வந்து, அவர்களுடைய ஜெப ஆலயத்தில் மக்களுக்குப் போதிக்கத் தொடங்கினார், அவர்கள் வியப்படைந்தார்கள். “இவன் இப்படிப்பட்ட ஞானத்தையும், அற்புத வல்லமையையும் எங்கிருந்து பெற்றான்?” என்று கேட்டார்கள்.
55 Eks ta ole see puusepa poeg? Eks ta ema nimi ole Maarja ning ta vennad Jaakobus, Joosep, Siimon ja Juudas?
அவர்கள், “இவன் தச்சனின் மகன் அல்லவா? இவனுடைய தாயின் பெயர் மரியாள் அல்லவா? யாக்கோபு, யோசேப்பு, சீமோன், யூதா ஆகியோர் இவனது சகோதரர்கள் அல்லவா?
56 Ja eks ta õed ela kõik siin meie juures? Kust ta siis kõik selle on saanud?“
இவனுடைய சகோதரிகளும், நம்முடன் இருக்கிறார்கள் அல்லவா? அப்படியிருக்க, இந்த மனிதன் இந்தக் காரியங்களை எங்கிருந்து பெற்றான்?” என்று சொல்லி,
57 Ja nad said tema peale vihaseks. Jeesus aga ütles neile: „Kuskil ei peeta prohvetist nii vähe lugu kui tema kodukohas ja ta oma majas!“
அவரைக்குறித்துக் கோபமடைந்தார்கள். அப்பொழுது இயேசு அவர்களிடம், “ஓர் இறைவாக்கினன் அவனது சொந்தப் பட்டணத்திலும், அவனது சொந்த வீட்டிலுமேயன்றி வேறெங்கும் மதிப்பு பெறுவான்” என்றார்.
58 Ja ta ei teinud seal kuigi palju imetegusid nende uskmatuse tõttu.
அவர்களுடைய விசுவாசக் குறைவின் நிமித்தம், இயேசு அங்கு அநேக அற்புதங்களைச் செய்யவில்லை.