< Leviticus 15 >
1 And Jehovah speaketh unto Moses, and unto Aaron, saying,
௧பின்னும் யெகோவா மோசேயையும் ஆரோனையும் நோக்கி:
2 'Speak unto the sons of Israel, and ye have said unto them, When there is an issue out of the flesh of any man, [for] his issue he [is] unclean;
௨“நீங்கள் இஸ்ரவேல் மக்களிடம் சொல்லவேண்டியது என்னவென்றால்: ஒருவனுக்கு விந்து கழிதல் உண்டானால், அதினாலே அவன் தீட்டானவன்.
3 and this is his uncleanness in his issue — his flesh hath run with his issue, or his flesh hath stopped from his issue; it [is] his uncleanness.
௩அவனுடைய மாம்சத்திலுள்ள விந்து ஊறிக்கொண்டிருந்தாலும், அவன் விந்து அடைபட்டிருந்தாலும், அதினால் அவனுக்குத் தீட்டுண்டாகும்.
4 'All the bed on which he lieth who hath the issue is unclean, and all the vessel on which he sitteth is unclean;
௪விந்து கழிதல் உள்ளவன் படுக்கிற எந்தப் படுக்கையும் தீட்டாகும்; அவன் எதின்மேல் உட்காருகிறானோ அதுவும் தீட்டாகும்.
5 and any one who cometh against his bed doth wash his garments, and hath bathed with water, and been unclean till the evening.
௫அவனுடைய படுக்கையைத் தொடுகிறவன் தன் உடைகளைத் துவைத்து, தண்ணீரில் குளிக்கவேண்டும்; மாலைவரைத் அவன் தீட்டுப்பட்டிருப்பானாக.
6 'And he who is sitting on the vessel on which he sitteth who hath the issue, doth wash his garments, and hath bathed with water, and been unclean till the evening.
௬விந்து கழிதல் உள்ளவன் உட்கார்ந்த இடத்தில் உட்காருகிறவன் தன் உடைகளைத் துவைத்து, தண்ணீரில் குளித்து, மாலைவரைத் தீட்டுப்பட்டிருப்பானாக.
7 'And he who is coming against the flesh of him who hath the issue, doth wash his garments, and hath bathed with water, and hath been unclean till the evening.
௭விந்து கழிதல் உள்ளவனின் உடலைத் தொடுகிறவன் தன் உடைகளைத் துவைத்து, தண்ணீரில் குளித்து, மாலைவரைத் தீட்டுப்பட்டிருப்பானாக.
8 'And when he who hath the issue spitteth on him who is clean, then he hath washed his garments, and hath bathed with water, and been unclean till the evening.
௮விந்து கழிதல் உள்ளவன் சுத்தமாக இருக்கிற ஒருவன்மேல் துப்பினால், இவன் தன் உடைகளைத் துவைத்து, தண்ணீரில் குளித்து, மாலைவரைத் தீட்டுப்பட்டிருப்பானாக.
9 'And all the saddle on which he rideth who hath the issue is unclean;
௯விந்து கழிதல் உள்ளவன் ஏறும் எந்தச் சேணமும் தீட்டாயிருக்கும்.
10 and any one who is coming against anything which is under him is unclean till the evening, and he who is bearing them doth wash his garments, and hath bathed with water, and been unclean till the evening.
௧0அவனுக்குக் கீழிருந்த எதையாகிலும் தொடுகிறவன் மாலைவரைத் தீட்டுப்பட்டிருப்பான்; அதை எடுத்துக்கொண்டு போகிறவன் தன் உடைகளைத் துவைத்து, தண்ணீரில் குளித்து, மாலைவரைத் தீட்டுப்பட்டிருப்பானாக.
11 'And anyone against whom he cometh who hath the issue (and his hands hath not rinsed with water) hath even washed his garments, and bathed with water, and been unclean till the evening.
௧௧விந்து கழிதல் உள்ளவன் தன் கைகளைத் தண்ணீரினால் கழுவாமல் ஒருவனைத் தொட்டால், இவன் தன் உடைகளைத் துவைத்து, தண்ணீரில் குளித்து, மாலைவரைத் தீட்டுப்பட்டிருப்பானாக.
12 'And the earthen vessel which he who hath the issue cometh against is broken; and every wooden vessel is rinsed with water.
௧௨விந்து கழிதல் உள்ளவன் தொட்ட மண்பானை உடைக்கப்படவும், மரச்சாமான் அனைத்தும் தண்ணீரினால் கழுவப்படவும் வேண்டும்.
13 'And when he who hath the issue is clean from his issue, then he hath numbered to himself seven days for his cleansing, and hath washed his garments, and hath bathed his flesh with running water, and been clean.
௧௩“விந்து கழிதல் உள்ளவன் தன் விந்து கழிதல் நீங்கிச் சுத்தமானால், தன் சுத்திகரிப்புக்கென்று ஏழுநாட்கள் எண்ணிக்கொண்டிருந்து, தன் உடைகளைத் துவைத்து, தன் உடலை ஊற்றுநீரில் கழுவுவானாக; அப்பொழுது சுத்தமாக இருப்பான்.
14 'And on the eighth day he taketh to himself two turtle-doves, or two young pigeons, and hath come in before Jehovah unto the opening of the tent of meeting, and hath given them unto the priest;
௧௪எட்டாம்நாளிலே, அவன் இரண்டு காட்டுப்புறாக்களையாவது, இரண்டு புறாக்குஞ்சுகளையாவது, ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலிலே யெகோவாவுடைய சந்நிதியில் கொண்டுவந்து, ஆசாரியனிடத்தில் கொடுக்கக்கடவன்.
15 and the priest hath made them, one a sin-offering, and the one a burnt-offering; and the priest hath made atonement for him before Jehovah, because of his issue.
௧௫ஆசாரியன் அவைகளில் ஒன்றை பாவநிவாரணபலியும் மற்றொன்றைச் சர்வாங்கதகனபலியுமாக, அவனுக்காகக் யெகோவாவுடைய சந்நிதியில் அவனுடைய விந்து கழிதலின் காரணமாக பாவநிவிர்த்தி செய்யவேண்டும்.
16 'And when a man's seed of copulation goeth out from him, then he hath bathed with water all his flesh, and been unclean till the evening.
௧௬“ஒருவனிலிருந்து விந்து கழிந்ததுண்டானால், அவன் தண்ணீரில் குளிக்கவேண்டும்; மாலைவரை அவன் தீட்டுப்பட்டிருப்பானாக.
17 'And any garment, or any skin on which there is seed of copulation, hath also been washed with water, and been unclean till the evening.
௧௭கழிந்த விந்து பட்ட உடையும் தோலும் தண்ணீரினால் கழுவப்பட்டு, மாலைவரைத் தீட்டாயிருப்பதாக.
18 'And a woman with whom a man lieth with seed of copulation, they also have bathed with water, and been unclean till the evening.
௧௮விந்து கழிந்தவனோடே பெண் படுத்துக்கொண்டிருந்தால், இருவரும் தண்ணீரில் குளித்து, மாலைவரைத் தீட்டுப்பட்டிருப்பார்களாக.
19 'And when a woman hath an issue — blood is her issue in her flesh — seven days she is in her separation, and any one who is coming against her is unclean till the evening.
௧௯“மாதவிடாய் உள்ள பெண் தன் உடலிலுள்ள இரத்தப்போக்கினிமித்தமாக ஏழுநாட்கள் தன் விலக்கத்தில் இருப்பாளாக; அவளைத் தொடுகிறவன் எவனும் மாலைவரைத் தீட்டுப்பட்டிருப்பானாக.
20 'And anything on which she lieth in her separation is unclean, and anything on which she sitteth is unclean;
௨0அவள் விலக்கத்தில் இருக்கும்போது, எதின்மேல் படுத்துக்கொள்ளுகிறாளோ எதின்மேல் உட்காருகிறாளோ அதெல்லாம் தீட்டாயிருக்கும்.
21 and any one who is coming against her bed doth wash his garments, and hath bathed with water, and been unclean till the evening.
௨௧அவளுடைய படுக்கையைத் தொடுகிறவன் எவனும் தன் உடைகளைத் துவைத்து, தண்ணீரில் குளித்து, மாலைவரைத் தீட்டுப்பட்டிருப்பானாக.
22 'And any one who is coming against any vessel on which she sitteth doth wash his garments, and hath washed with water, and been unclean till the evening.
௨௨அவள் உட்கார்ந்த இருக்கையைத் தொடுகிறவன் எவனும் தன் உடைகளைத் துவைத்து, தண்ணீரில் குளித்து, மாலைவரைத் தீட்டுப்பட்டிருப்பானாக.
23 'And if it [is] on the bed, or on the vessel on which she is sitting, in his coming against it, he is unclean till the evening.
௨௩அவள் படுக்கையின்மேலாகிலும், அவள் உட்கார்ந்த இருக்கையின்மேலாகிலும் இருந்த எதையாகிலும் தொட்டவன், மாலைவரைத் தீட்டுப்பட்டிருப்பானாக.
24 'And if a man really lie with her, and her separation is on him, then he hath been unclean seven days, and all the bed on which he lieth is unclean.
௨௪ஒருவன் அவளோடே படுத்துக்கொண்டதும், அவளுடைய தீட்டு, அவன்மேல் பட்டிருந்தால், அவன் ஏழுநாட்கள் தீட்டாயிருப்பானாக; அவன் படுக்கிற படுக்கையும் தீட்டுப்படும்.
25 'And when a woman's issue of blood floweth many days within the time of her separation, or when it floweth over her separation — all the days of the issue of her uncleanness are as the days of her separation; she [is] unclean.
௨௫“ஒரு பெண் விலகியிருக்க வேண்டியகாலம் அல்லாமல் அவளுடைய இரத்தம் அநேகநாட்கள் ஊறிக்கொண்டிருந்தால், அல்லது அந்தக் காலத்திற்கும் அதிகமாக அது இருக்கும் நாட்களெல்லாம் ஊறிக்கொண்டிருந்தால், தன் விலக்கத்தின் நாட்களிலிருந்ததுபோல அவள் தீட்டாயிருப்பாளாக.
26 'All the bed on which she lieth all the days of her issue is as the bed of her separation to her, and all the vessel on which she sitteth is unclean as the uncleanness of her separation;
௨௬அந்த நாட்களெல்லாம் அவள் படுக்கும் எந்தப் படுக்கையும், அவள் விலக்கத்தின் படுக்கையைப்போல, அவளுக்குத் தீட்டாயிருக்கும்; அவள் உட்கார்ந்த இருக்கையும், அவளுடைய விலக்கத்தின் தீட்டைப்போலவே தீட்டாயிருக்கும்.
27 and any one who is coming against them is unclean, and hath washed his garments, and hath bathed with water, and been unclean till the evening.
௨௭அப்படிப்பட்டவைகளைத் தொடுகிறவன் எவனும் தன் உடைகளைத் துவைத்து, தண்ணீரில் குளித்து, மாலைவரைத் தீட்டுப்பட்டிருப்பானாக.
28 'And if she hath been clean from her issue, then she hath numbered to herself seven days, and afterwards she is clean;
௨௮அவள் தன் இரத்தப்போக்கு நின்று சுத்தமானபோது, அவள் ஏழுநாட்கள் எண்ணிக்கொள்வாளாக; அதின்பின்பு சுத்தமாக இருப்பாள்.
29 and on the eighth day she taketh to herself two turtle-doves, or two young pigeons, and hath brought them in unto the priest, unto the opening of the tent of meeting;
௨௯எட்டாம்நாளிலே இரண்டு காட்டுப்புறாக்களையாவது, இரண்டு புறாக்குஞ்சுகளையாவது, ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலில் ஆசாரியனிடத்தில் கொண்டுவரக்கடவள்.
30 and the priest hath made the one a sin-offering, and the one a burnt-offering, and the priest hath made atonement for her before Jehovah, because of the issue of her uncleanness.
௩0ஆசாரியன் அவைகளில் ஒன்றைப் பாவநிவாரணபலியும், மற்றொன்றைச் சர்வாங்க தகனபலியுமாக, அவளுக்காகக் யெகோவாவுடைய சந்நிதியில் அவளுடைய இரத்தப்போக்கினிமித்தம் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்.
31 'And ye have separated the sons of Israel from their uncleanness, and they die not in their uncleanness, in their defiling My tabernacle which [is] in their midst.
௩௧“இஸ்ரவேல் மக்கள் தங்கள் நடுவே இருக்கிற என்னுடைய வாசஸ்தலத்தைத் தீட்டுப்படுத்தி, தங்கள் தீட்டுகளால் மரணமடையாமலிருக்க, இப்படி நீங்கள் அவர்களுடைய தீட்டுகளுக்கு அவர்களை விலக்கிவைப்பீர்களாக”.
32 'This [is] the law of him who hath an issue, and of him whose seed of copulation goeth out from him, for uncleanness thereby,
௩௨விந்து கழிதல் உள்ளவனுக்கும், விந்து கழிந்ததினாலே தீட்டானவனுக்கும்,
33 and of her who is sick in her separation, and of him who hath an issue, the issue of a male or of a female, and of a man who lieth with an unclean woman.'
௩௩இரத்தப்போக்கு பலவீனமுள்ளவளுக்கும், விந்து கழிதல் உள்ள பெண்களுக்கும், ஆண்களுக்கும், தீட்டாயிருக்கிறவளோடே படுத்துக்கொண்டவனுக்கும் உரிய விதிமுறைகள் இதுவே என்றார்.