< John 21 >

1 After these things did Jesus manifest himself again to the disciples on the sea of Tiberias, and he did manifest himself thus:
இவைகளுக்குப் பின்பு இயேசு திபேரியா கடற்கரையிலே மீண்டும் சீடர்களுக்குத் தம்மை வெளிப்படுத்தினார்; வெளிப்படுத்தின விபரமாவது:
2 There were together Simon Peter, and Thomas who is called Didymus, and Nathanael from Cana of Galilee, and the [sons] of Zebedee, and two others of his disciples.
சீமோன்பேதுருவும், திதிமு என்னப்பட்ட தோமாவும், கலிலேயா நாட்டில் உள்ள கானா ஊரைச்சேர்ந்த நாத்தான்வேலும், செபெதேயுவின் மகன்களும், அவருடைய சீடர்களில் வேறு இரண்டுபேரும் கூடியிருக்கும்போது,
3 Simon Peter saith to them, 'I go away to fish;' they say to him, 'We go — we also — with thee;' they went forth and entered into the boat immediately, and on that night they caught nothing.
சீமோன்பேதுரு மற்றவர்களைப் பார்த்து: மீன்பிடிக்கப் போகிறேன் என்றான். அதற்கு அவர்கள்: நாங்களும் உம்மோடு வருகிறோம் என்றார்கள். அவர்கள் புறப்பட்டுப்போய், உடனே படகில் ஏறினார்கள். அந்த இரவிலே அவர்கள் ஒன்றும் பிடிக்கவில்லை.
4 And morning being now come, Jesus stood at the shore, yet indeed the disciples did not know that it is Jesus;
விடியற்காலமானபோது, இயேசு கரையிலே நின்றார்; அவரை இயேசு என்று சீடர்கள் அறியாமல் இருந்தார்கள்.
5 Jesus, therefore, saith to them, 'Lads, have ye any meat?'
இயேசு அவர்களைப் பார்த்து: பிள்ளைகளே, சாப்பிடுவதற்கு ஏதாவது உங்களிடம் இருக்கிறதா என்றார். அதற்கு அவர்கள்: ஒன்றும் இல்லை என்றார்கள்.
6 they answered him, 'No;' and he said to them, 'Cast the net at the right side of the boat, and ye shall find;' they cast, therefore, and no longer were they able to draw it, from the multitude of the fishes.
அப்பொழுது அவர்: நீங்கள் படகுக்கு வலதுபுறமாக வலையைப் போடுங்கள், அப்பொழுது உங்களுக்கு மீன்கள் கிடைக்கும் என்றார். அப்படியே அவர்கள் வலைகளைப் போட்டு, அதிகமான மீன்கள் கிடைத்ததினால், வலையை இழுக்க முடியாமல் இருந்தார்கள்.
7 That disciple, therefore, whom Jesus was loving saith to Peter, 'The Lord it is!' Simon Peter, therefore, having heard that it is the Lord, did gird on the outer coat, (for he was naked, ) and did cast himself into the sea;
ஆகவே, இயேசுவின்மேல் அன்பாக இருந்த சீடன் பேதுருவைப் பார்த்து: அவர் கர்த்தர் என்றான். அவர் கர்த்தர் என்று சீமோன்பேதுரு கேட்டவுடனே, தான் மேற்சட்டை அணியாதவனாக இருந்ததினால், தன் மேற்சட்டையை அணிந்துகொண்டு கடலிலே குதித்தான்.
8 and the other disciples came by the little boat, for they were not far from the land, but as it were about two hundred cubits off, dragging the net of the fishes;
மற்றச் சீடர்கள் கரைக்கு ஏறக்குறைய இருநூறுமுழத் தூரத்தில் இருந்ததினால் படகில் இருந்துகொண்டே மீன்களுள்ள வலையை இழுத்துக்கொண்டு வந்தார்கள்.
9 when, therefore, they came to the land, they behold a fire of coals lying, and a fish lying on it, and bread.
அவர்கள் கரையிலே வந்திறங்கினபோது, கரிநெருப்புப் போட்டிருக்கிறதையும், அதின்மேல் மீன் வைத்திருக்கிறதையும், அப்பத்தையும் பார்த்தார்கள்.
10 Jesus saith to them, 'Bring ye from the fishes that ye caught now;'
௧0இயேசு அவர்களைப் பார்த்து: நீங்கள் இப்பொழுது பிடித்த மீன்களில் சிலவற்றைக் கொண்டுவாருங்கள் என்றார்.
11 Simon Peter went up, and drew the net up on the land, full of great fishes, an hundred fifty and three, and though they were so many, the net was not rent.
௧௧சீமோன்பேதுரு படகில் ஏறி, நூற்று ஐம்பத்துமூன்று பெரிய மீன்களால் நிறைந்த வலையைக் கரையில் இழுத்தான்; இத்தனை மீன்கள் இருந்தும் வலை கிழியவில்லை.
12 Jesus saith to them, 'Come ye, dine;' and none of the disciples was venturing to inquire of him, 'Who art thou?' knowing that it is the Lord;
௧௨இயேசு அவர்களைப் பார்த்து: வாருங்கள், சாப்பிடுங்கள் என்றார். அவர் இயேசு என்று சீடர்கள் அறிந்தபடியால் அவர்களில் ஒருவனும்: நீர் யார் என்று கேட்கத் துணியவில்லை.
13 Jesus, therefore, doth come and take the bread and give to them, and the fish in like manner;
௧௩அப்பொழுது இயேசு வந்து, அப்பத்தையும் மீனையும் எடுத்து, அவர்களுக்குக் கொடுத்தார்.
14 this [is] now a third time Jesus was manifested to his disciples, having been raised from the dead.
௧௪இயேசு மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்தபின்பு மூன்றாவது முறையாக தம்முடைய சீடர்களுக்கு இவ்வாறு வெளிப்படுத்தினார்.
15 When, therefore, they dined, Jesus saith to Simon Peter, 'Simon, [son] of Jonas, dost thou love me more than these?' he saith to him, 'Yes, Lord; thou hast known that I dearly love thee;' he saith to him, 'Feed my lambs.'
௧௫அவர்கள் சாப்பிட்டபின்பு, இயேசு சீமோன்பேதுருவைப் பார்த்து: யோனாவின் மகனாகிய சீமோனே, இவர்களைவிட நீ அதிகமாக என்மேல் அன்பாக இருக்கிறாயா என்றார். அதற்கு அவன்: ஆம் ஆண்டவரே, உம்மை நேசிக்கிறேன் என்பதை நீர் அறிவீர் என்றான். அவர்: என் ஆட்டுக்குட்டிகளை மேய்ப்பாயாக என்றார்.
16 He saith to him again, a second time, 'Simon, [son] of Jonas, dost thou love me?' he saith to him, 'Yes, Lord; thou hast known that I dearly love thee;' he saith to him, 'Tend my sheep.'
௧௬இரண்டாவதுமுறை அவர் அவனைப் பார்த்து: யோனாவின் மகனாகிய சீமோனே, நீ என்மேல் அன்பாக இருக்கிறாயா என்றார். அதற்கு அவன்: ஆம் ஆண்டவரே, உம்மை நேசிக்கிறேன் என்பதை நீர் அறிவீர் என்றான். அவர்: என் ஆடுகளை மேய்ப்பாயாக என்றார்.
17 He saith to him the third time, 'Simon, [son] of Jonas, dost thou dearly love me?' Peter was grieved that he said to him the third time, 'Dost thou dearly love me?' and he said to him, 'Lord, thou hast known all things; thou dost know that I dearly love thee.' Jesus saith to him, 'Feed my sheep;
௧௭மூன்றாவதுமுறை அவர் அவனைப் பார்த்து: யோனாவின் மகனாகிய சீமோனே, நீ என்னை நேசிக்கிறாயா என்றார். என்னை நேசிக்கிறாயா என்று அவர் மூன்றாவதுமுறை தன்னைக் கேட்டதினாலே, பேதுரு துக்கப்பட்டு: ஆண்டவரே, நீர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறீர், நான் உம்மை நேசிக்கிறேன் என்பதையும் நீர் அறிவீர் என்றான். இயேசு: என் ஆடுகளை மேய்ப்பாயாக என்றார்.
18 verily, verily, I say to thee, When thou wast younger, thou wast girding thyself and wast walking whither thou didst will, but when thou mayest be old, thou shalt stretch forth thy hands, and another will gird thee, and shall carry [thee] whither thou dost not will;'
௧௮நீ சிறுவயதுள்ளவனாக இருந்தபோது நீயே ஆடை அணிந்துகொண்டு, உனக்கு இஷ்டமான இடங்களிலே நடந்து திரிந்தாய்; நீ முதிர்வயதுள்ளவனாக ஆகும்போது உன் கரங்களை நீட்டுவாய்; வேறொருவன் உனக்கு ஆடையை அணிவித்து, உனக்கு இஷ்டமில்லாத இடத்திற்கு உன்னைக் கொண்டுபோவான் என்று உண்மையாகவே உண்மையாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
19 and this he said, signifying by what death he shall glorify God; and having said this, he saith to him, 'Be following me.'
௧௯இந்தவிதமான மரணத்தினாலே அவன் தேவனை மகிமைப்படுத்தப்போகிறான் என்பதைக் குறிக்கும்படியாக இப்படிச் சொன்னார். அவர் இதைச் சொல்லியபின்பு, அவனைப் பார்த்து: என்னைப் பின்பற்றிவா என்றார்.
20 And Peter having turned about doth see the disciple whom Jesus was loving following, (who also reclined in the supper on his breast, and said, 'Sir, who is he who is delivering thee up?')
௨0பேதுரு திரும்பிப்பார்த்து, இயேசுவிற்கு அன்பாக இருந்தவனும், இரவு உணவு சாப்பிடும்போது அவர் மார்பிலே சாய்ந்து: ஆண்டவரே, உம்மைக் காட்டிக்கொடுக்கிறவன் யார் என்று கேட்ட சீடன் பின்னால் வருகிறதைப் பார்த்தான்.
21 Peter having seen this one, saith to Jesus, 'Lord, and what of this one?'
௨௧அவனைப் பார்த்து, பேதுரு இயேசுவிடம்: ஆண்டவரே, இவன் காரியம் என்ன என்றான்.
22 Jesus saith to him, 'If him I will to remain till I come, what — to thee? be thou following me.' This word, therefore, went forth to the brethren that that disciple doth not die,
௨௨அதற்கு இயேசு: நான் வரும்வரைக்கும் இவன் இருக்க எனக்கு விருப்பமானால், உனக்கென்ன, நீ என்னைப் பின்பற்றிவா என்றார்.
23 yet Jesus did not say to him, that he doth not die, but, 'If him I will to remain till I come, what — to thee?'
௨௩ஆகவே, அந்தச் சீடன் மரிப்பதில்லை என்கிற பேச்சு சகோதரர்களுக்குள்ளே பரவியது. ஆனாலும், அவன் மரிப்பதில்லை என்று இயேசு சொல்லாமல், நான் வரும்வரைக்கும் இவன் இருக்க எனக்கு விருப்பமானால் உனக்கென்ன என்று சொன்னார்.
24 this is the disciple who is testifying concerning these things, and he wrote these things, and we have known that his testimony is true.
௨௪அந்தச் சீடனே இவைகளைக்குறித்து சாட்சிகொடுத்து இவைகளை எழுதினவன்; அவனுடைய சாட்சி உண்மை என்று அறிந்திருக்கிறோம்.
25 And there are also many other things — as many as Jesus did — which, if they may be written one by one, not even the world itself I think to have place for the books written. Amen.
௨௫இயேசு செய்த வேறு அநேக காரியங்களும் உண்டு; அவைகளை ஒவ்வொன்றாக எழுதினால் எழுதப்படும் புத்தகங்கள் உலகம் கொள்ளாது என்று நினைக்கிறேன். ஆமென்.

< John 21 >