< Romans 8 >

1 Therfor now no thing of dampnacioun is to hem that ben in Crist Jhesu, whiche wandren not after the flesch.
ஆனபடியால், கிறிஸ்து இயேசுவிற்கு உட்பட்டவர்களாக இருந்து, சரீரத்தின்படி நடக்காமல் ஆவியானவருக்கு ஏற்றபடி நடக்கிறவர்களுக்கு தண்டனைத்தீர்ப்பு இல்லை.
2 For the lawe of the spirit of lijf in Crist Jhesu hath delyuerid me fro the lawe of synne, and of deth.
ஜீவனுடைய ஆவியானவரின் பிரமாணம் கிறிஸ்து இயேசுவிற்குள் என்னைப் பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்திலிருந்து விடுதலையாக்கினதே.
3 For that that was vnpossible to the lawe, in what thing it was sijk bi flesch, God sente his sone in to the licknesse of fleisch of synne, and of synne dampnede synne in fleisch;
அது எப்படியென்றால், சரீரத்தினாலே பலவீனமாக்கப்பட்ட நியாயப்பிரமாணம் செய்யமுடியாததை தேவனே செய்வதற்காக, தம்முடைய குமாரனைப் பாவசரீரத்தின் சாயலாகவும், பாவத்தை நீக்கும் பலியாகவும் அனுப்பி, சரீரத்திலே பாவத்தை தண்டனைக்குள்ளாகத் தீர்த்தார்.
4 that the iustefiyng of the lawe were fulfillid in vs, that goen not aftir the fleisch, but aftir the spirit.
சரீரத்தின்படி நடக்காமல் ஆவியானவருக்கு ஏற்றபடி நடக்கிற நம்மிடம் நியாயப்பிரமாணத்தின் நீதி நிறைவேறுவதற்காகவே அப்படிச் செய்தார்.
5 For thei that ben aftir the fleisch, saueren tho thingis that ben of the fleisch; but thei that ben after the spirit, feelen tho thingis that ben of the spirit. For the prudence of fleisch is deth;
அன்றியும் சரீரத்தின்படி நடக்கிறவர்கள் சரீரத்திற்குரியவைகளைச் சிந்திக்கிறார்கள்; ஆவியானவருக்கு ஏற்றபடி நடக்கிறவர்கள் ஆவியானவருக்குரியவைகளைச் சிந்திக்கிறார்கள்.
6 but the prudence of spirit is lijf and pees.
சரீரசிந்தை மரணம்; ஆவியானவரின் சிந்தையோ ஜீவனும் சமாதானமுமாகும்.
7 For the wisdom of the fleisch is enemye to God; for it is not suget to the lawe of God, for nether it may.
எப்படியென்றால், சரீரசிந்தை தேவனுக்கு எதிரான பகை; அது தேவனுடைய நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்படியாமலும், கீழ்ப்படியமுடியாமலும் இருக்கிறது.
8 And thei that ben in fleisch, moun not plese to God.
சரீரத்திற்கு உட்பட்டவர்கள் தேவனுக்குப் பிரியமாக இருக்கமாட்டார்கள்.
9 But ye ben not in fleisch, but in spirit; if netheles the spirit of God dwellith in you. But if ony hath not the spirit of Crist, this is not his.
தேவனுடைய ஆவியானவர் உங்களுக்குள் இருந்தால், நீங்கள் சரீரத்திற்கு உட்பட்டவர்களாக இல்லாமல் ஆவியானவருக்கு உட்பட்டவர்களாக இருப்பீர்கள். கிறிஸ்துவின் ஆவியானவர் இல்லாதவன் அவருடையவன் இல்லை.
10 For if Crist is in you, the bodi is deed for synne, but the spirit lyueth for iustefiyng.
௧0மேலும் கிறிஸ்து உங்களுக்குள் இருந்தால் சரீரமானது பாவத்தினிமித்தம் இறந்ததாகவும், ஆவியானது நீதியினிமித்தம் ஜீவனுள்ளதாகவும் இருக்கும்.
11 And if the spirit of hym that reiside Jhesu Crist fro deth dwellith in you, he that reiside Jhesu Crist fro deth, shal quykene also youre deedli bodies, for the spirit of hym that dwellith in you.
௧௧அன்றியும் இயேசுவை மரித்தோரிலிருந்து உயிரோடு எழுப்பினவருடைய ஆவியானவர் உங்களுக்குள் இருந்தால், கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து உயிரோடு எழுப்பினவர் உங்களுக்குள் வாழ்கிற தம்முடைய ஆவியானவராலே மரணத்திற்குரிய உங்களுடைய சரீரங்களையும் உயிர்ப்பிப்பார்.
12 Therfor, britheren, we ben dettouris, not to the flesch, that we lyuen aftir the flesch.
௧௨எனவே, சகோதரர்களே, சரீரத்தின்படி பிழைப்பதற்கு நாம் சரீரத்திற்குக் கடனாளிகள் இல்லை.
13 For if ye lyuen aftir the fleisch, ye schulen die; but if ye bi the spirit sleen the dedis of the fleisch, ye schulen lyue.
௧௩சரீரத்தின்படி பிழைத்தால் இறப்பீர்கள்; ஆவியானவராலே சரீரத்தின் செயல்களை அழித்தால் பிழைப்பீர்கள்.
14 For who euere ben led bi the spirit of God, these ben the sones of God.
௧௪மேலும் எவர்கள் தேவனுடைய ஆவியானவராலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய குமாரர்களாக இருக்கிறார்கள்.
15 For ye han not take eftsoone the spirit of seruage in drede, but ye han taken the spirit of adopcioun of sones, in which we crien, Abba, fadir.
௧௫அப்படியே, திரும்பவும் பயப்படுகிறதற்கு நீங்கள் அடிமைத்தனத்தின் ஆவியைப் பெறாமல், ஆவியானவரால், அப்பா பிதாவே என்று கூப்பிடக்கூடிய பிள்ளை என்கிற உரிமையைப் பெற்றீர்கள்.
16 And the ilke spirit yeldith witnessyng to oure spirit, that we ben the sones of God;
௧௬நாம் தேவனுடைய பிள்ளைகளாக இருக்கிறோம் என்று ஆவியானவர்தாமே நம்முடைய ஆவியுடனே சாட்சிக் கொடுக்கிறார்.
17 if sones, and eiris, `and eiris of God, and eiris togidere with Crist; if netheles we suffren togidere, that also we ben glorified togidere.
௧௭நாம் பிள்ளைகளானால் வாரிசுகளுமாமே; தேவனுடைய வாரிசுகளும், கிறிஸ்துவிற்கு உடன் வாரிசுகளுமாமே; கிறிஸ்துவோடு நாம் மகிமைப்படுவதற்காக அவரோடு பாடுபட்டால் அப்படி ஆகும்.
18 And Y deme, that the passiouns of this tyme ben not worthi to the glorie to comynge, that schal be schewid in vs.
௧௮ஆதலால் இந்தக்காலத்துப் பாடுகள் இனி நம்மிடம் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடக்கூடியவைகள் அல்லவென்று எண்ணுகிறேன்.
19 For the abidyng of creature abidith the schewyng of the sones of God.
௧௯மேலும் தேவனுடைய குமாரர்கள் வெளிப்படுத்தப்படுவதற்காக தேவனுடைய படைப்புகள் அதிக ஆவலோடு காத்துக்கொண்டிருக்கிறது.
20 But the creature is suget to vanyte, not willynge, but for hym that made it suget in hope;
௨0அது என்னவென்றால் படைப்புகள் அழிவிற்குரிய அடிமைத்தனத்தில் இருந்து விடுதலையாக்கப்பட்டு, தேவனுடைய பிள்ளைகளுக்குரிய மகிமையான சுதந்திரத்தைப் பெற்றுக்கொள்ளும் என்கிற நம்பிக்கையோடு,
21 for the ilke creature schal be delyuered fro seruage of corrupcioun in to liberte of the glorie of the sones of God.
௨௧அந்தப் படைப்புகள் சொந்த இஷ்டத்தினாலே இல்லை, கீழ்ப்படுத்தினவராலேயே மாயைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறது.
22 And we witen, that ech creature sorewith, and trauelith with peyne til yit.
௨௨எனவே, நமக்குத் தெரிந்திருக்கிறபடி, இதுவரைக்கும் படைப்புகள் எல்லாம் ஒன்றாகத் தவித்துப் பிரசவவேதனைப்படுகிறது.
23 And not oneli it, but also we vs silf, that han the first fruytis of the spirit, and we vs silf sorewen with ynne vs for the adopcioun of Goddis sonys, abidynge the ayenbiyng of oure bodi.
௨௩அதுவும் இல்லாமல், ஆவியானவரின் முதற்பலன்களைப் பெற்ற நாமும் நம்முடைய சரீர மீட்பாகிய பிள்ளை என்கிற உரிமை வருகிறதற்குக் காத்திருந்து, நமக்குள்ளே தவிக்கிறோம்.
24 But bi hope we ben maad saaf. For hope that is seyn, is not hope; for who hopith that thing, that he seeth?
௨௪அந்த நம்பிக்கையினாலே நாம் இரட்சிக்கப்பட்டிருக்கிறோம். பார்க்கப்படுகிறதை நம்புகிறது நம்பிக்கை இல்லை; ஒருவன் தான் பார்க்கிறதை நம்பவேண்டியது என்ன?
25 And if we hopen that thing that we seen not, we abiden bi pacience.
௨௫நாம் பார்க்காததை நம்பினோமானால், அது வருகிறதற்குப் பொறுமையோடு காத்திருப்போம்.
26 And also the spirit helpith oure infirmyte; for what we schulen preie, as it bihoueth, we witen not, but the ilke spirit axith for vs with sorewyngis, that moun not be teld out.
௨௬அப்படியே ஆவியானவரும் நமது பலவீனங்களில் நமக்கு உதவிசெய்கிறார். நாம் ஏற்றபடி வேண்டிக்கொள்ளவேண்டியது என்னவென்று தெரியாமல் இருக்கிறதினால், ஆவியானவர்தாமே சொல்லிமுடியாத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல்செய்கிறார்.
27 For he that sekith the hertis, woot what the spirit desirith, for bi God he axith for hooli men.
௨௭ஆவியானவர் தேவனுடைய விருப்பத்தின்படியே பரிசுத்தவான்களுக்காக வேண்டுதல்செய்கிறதினால், இருதயங்களை ஆராய்ந்து பார்க்கிறவர் ஆவியானவரின் சிந்தை என்னவென்று அறிவார்.
28 And we witen, that to men `that louen God, alle thingis worchen togidere in to good, to hem that aftir purpos ben clepid seyntis.
௨௮அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாக தேவனிடம் அன்பாக இருக்கிறவர்களுக்கு எல்லாம் நன்மைக்குரியவைகளாக நடக்கிறது என்று அறிந்திருக்கிறோம்.
29 For thilke that he knewe bifor, he bifor ordenede bi grace to be maad lijk to the ymage of his sone, that he be the first bigetun among many britheren.
௨௯தம்முடைய குமாரன் அநேக சகோதரர்களுக்குள்ளே முதற்பேறானவராக இருப்பதற்காக, தேவன் எவர்களை முன்னறிந்தாரோ அவர்களைத் தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாக இருப்பதற்கு முன்குறித்திருக்கிறார்;
30 And thilke that he bifore ordeynede to blis, hem he clepide; and whiche he clepide, hem he iustifiede; and whiche he iustifiede, and hem he glorifiede.
௩0எவர்களை முன்குறித்தாரோ அவர்களை அழைத்தும் இருக்கிறார்; எவர்களை அழைத்தாரோ அவர்களை நீதிமான்களாக்கியும் இருக்கிறார்; எவர்களை நீதிமான்களாக்கினாரோ அவர்களை மகிமைப்படுத்தியும் இருக்கிறார்.
31 What thanne schulen we seie to these thingis? If God for vs, who is ayens vs?
௩௧இவைகளைக்குறித்து நாம் என்னசொல்லுவோம்? தேவன் நம்முடைய பட்சத்தில் இருந்தால் நமக்கு எதிராக இருப்பவன் யார்?
32 The which also sparide not his owne sone, but `for vs alle bitook hym, hou also yaf he not to vs alle thingis with hym?
௩௨தம்முடைய சொந்தக்குமாரன் என்றும் பார்க்காமல் நம்மெல்லோருக்காகவும் அவரை ஒப்புக்கொடுத்தவர், அவரோடு சேர்த்து மற்ற எல்லாவற்றையும் நமக்குக் கொடுக்காமல் இருப்பது எப்படி?
33 Who schal accuse ayens the chosun men of God? It is God that iustifieth,
௩௩தேவன் தெரிந்துகொண்டவர்கள்மேல் குற்றஞ்சாட்டுகிறவன் யார்? தேவனே அவர்களை நீதிமான்களாக்குகிறவர்.
34 who is it that condempneth? It is Jhesus Crist that was deed, yhe, the which roos ayen, the which is on the riyt half of God, and the which preieth for vs.
௩௪தண்டனைக்குள்ளாகத் தீர்க்கிறவன் யார்? கிறிஸ்துவே மரித்தவர்; அவரே உயிரோடு எழுந்தும் இருக்கிறவர்; அவரே தேவனுடைய வலதுபக்கத்திலும் இருக்கிறவர்; நமக்காக வேண்டுதல் செய்கிறவரும் அவரே.
35 Who thanne schal departe vs fro the charite of Crist? tribulacioun, or anguysch, or hungur, or nakidnesse, or persecucioun, or perel, or swerd?
௩௫“உமக்காக எந்தநேரமும் கொல்லப்படுகிறோம், அடிக்கப்படும் ஆடுகளைப்போல எண்ணப்படுகிறோம்” என்று எழுதியிருக்கிறபடி நடந்தாலும்,
36 As it is writun, For we ben slayn al dai for thee; we ben gessid as scheep of slauytir.
௩௬கிறிஸ்துவின் அன்பைவிட்டு நம்மைப் பிரிப்பவன் யார்? உபத்திரவமோ, வியாகுலமோ, துன்பமோ, பசியோ, நிர்வாணமோ. நாசமோசமோ, பட்டயமோ?
37 But in alle these thingis we ouercomen, for hym that louyde vs.
௩௭இவைகள் எல்லாவற்றிலேயும் நாம் நம்மேல் அன்பு வைத்திருக்கிறவராலே முற்றிலும் வெற்றி பெறுகிறவர்களாக இருக்கிறோமே.
38 But Y am certeyn, that nethir deeth, nether lijf, nether aungels, nethir principatus, nether vertues, nether present thingis, nether thingis to comynge, nether strengthe,
௩௮மரணமானாலும், ஜீவனானாலும், தேவதூதர்களானாலும், அதிகாரங்களானாலும், வல்லமைகளானாலும் நிகழ்காரியங்களானாலும், வரும்காரியங்களானாலும்,
39 nether heiyth, nether depnesse, nether noon othir creature may departe vs fro the charite of God, that is in `Crist Jhesu oure Lord.
௩௯உயர்வானாலும், தாழ்வானாலும், வேறெந்தப் படைப்புகளானாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமுடியாது என்று நம்பியிருக்கிறேன்.

< Romans 8 >