35 Thanne the irun, tijl stoon, ether erthene vessel, bras, siluer, and gold, weren al to-brokun togidere, and dryuun as in to a deed sparcle of a large somer halle, that ben rauyschid of wynd, and no place is foundun to tho; forsothe the stoon, that smoot the ymage, was maad a greet hil, and fillide al erthe.
௩௫அப்பொழுது அந்த இரும்பும், களிமண்ணும், வெண்கலமும், வெள்ளியும், பொன்னும் முழுவதும் நொறுங்குண்டு, கோடைக்காலத்தில் போரடிக்கிற களத்திலிருந்து பறந்துபோகிற பதரைப்போலாயிற்று; அவைகளுக்கு ஒரு இடமும் கிடைக்காமல் காற்று அவைகளை அடித்துக்கொண்டுபோனது; சிலையை மோதின கல்லோவென்றால், ஒரு பெரிய மலையாகி பூமியையெல்லாம் நிரப்பிற்று.