< Song of Solomon 8 >

1 I wish that you were like my brother, who nursed at my mother's breasts. Then whenever I met you outside, I could kiss you, and no one would despise me.
ஆ, நீர் என் தாயின் பால்குடித்த என் சகோதரனைப்போல் இருந்தீரானால், நான் உம்மை வெளியிலே சந்தித்து முத்தமிடுவேன்; என்னை நிந்திக்கவுமாட்டார்கள்.
2 I would lead you and bring you into my mother's house— she who taught me. I would give you spiced wine to drink and some of the juice of my pomegranates.
நான் உம்மைக் கூட்டிக்கொண்டு, என் தாயின் வீட்டுக்கு அழைத்துக்கொண்டுபோவேன்; நீர் எனக்குப் போதிப்பீர், கந்தவர்க்கமிட்ட திராட்சைரசத்தையும், என் மாதுளம்பழரசத்தையும் உமக்குக் குடிக்கக்கொடுப்பேன்.
3 His left hand is under my head and his right hand embraces me.
அவருடைய இடதுகை என் தலையின்கீழ் இருக்கும், அவருடைய வலதுகை என்னை அணைக்கும்.
4 I want you to swear, daughters of Jerusalem, that you will not interrupt our lovemaking until it is over.
எருசலேமின் இளம்பெண்களே! எனக்குப் பிரியமானவளுக்கு மனதிருப்தி உண்டாகும்வரை நீங்கள் அவளை விழிக்கச் செய்யாமலும் எழுப்பாமலும் இருக்க உங்களுக்கு ஆணையிடுகிறேன். மணவாளியின் தோழிகள்
5 Who is this who is coming up from the wilderness, leaning on her beloved? The woman speaking to the man I awakened you under the apricot tree; there your mother conceived you; there she gave birth to you, she delivered you.
தன் நேசர்மேல் சார்ந்துகொண்டு வனாந்திரத்திலிருந்து வருகிற இவள் யார்? மணவாளி கிச்சிலிமரத்தின்கீழ் உம்மை எழுப்பினேன்; அங்கே உமது தாய் உம்மைப் பெற்றாள்; அங்கே உம்மைப் பெற்றவள் வேதனைப்பட்டு உம்மைப் பெற்றாள்.
6 Set me as a seal over your heart, like a seal on your arm, for love is as strong as death. Passionate devotion is as unrelenting as Sheol; its flames burst out; it is a blazing flame, a flame hotter than any other fire. (Sheol h7585)
நீர் என்னை உமது இருதயத்தின்மேல் முத்திரையைப்போலவும், உமது புயத்தின்மேல் முத்திரையைப்போலவும் வைத்துக்கொள்ளும்; நேசம் மரணத்தைப்போல் வலிமையானது; நேசவைராக்கியம் பாதாளத்தைப்போல் கொடியதாக இருக்கிறது; அதின் தழல் அக்கினித்தழலும் அதின் சுடர் கடும் சுடரொளியுமாக இருக்கிறது. (Sheol h7585)
7 Surging waters cannot quench love, nor can floods sweep it away. If a man gave all the possessions in his house for love, the offer would utterly be despised.
திரளான தண்ணீர்கள் நேசத்தை அணைத்துவிட முடியாது, வெள்ளங்களும் அதைத் தணிக்கமுடியாது; ஒருவன் தன் வீட்டிலுள்ள சொத்துக்களையெல்லாம் நேசத்திற்காகக் கொடுத்தாலும், அது முற்றிலும் அசட்டைசெய்யப்படும். மணவாளியின் சகோதரன்
8 We have a little sister, and her breasts have not yet grown. What can we do for our sister on the day when she will be promised in marriage?
நமக்கு ஒரு சிறிய சகோதரி உண்டு, அவளுக்கு மார்பகங்கள் இல்லை; நம்முடைய சகோதரியைக் கேட்கும் நாளில் அவளுக்காக நாம் என்ன செய்வோம்?
9 If she is a wall, we will build on her a tower of silver. If she is a door, we will adorn her with boards of cedar.
அவள் ஒரு மதிலானால், அதின்மேல் வெள்ளிக்கோட்டையைக் கட்டுவோம்; அவள் கதவானால், கேதுருப்பலகைகளை அதற்கு இணைப்போம். மணவாளி
10 I was a wall, but my breasts are now like fortress towers; so I am in his eyes as one who brings peace.
௧0நான் மதில்தான், என் மார்பகங்கள் கோபுரங்கள்; அவருடைய கண்களில் இரக்கம் பெறலானேன். மணவாளன்
11 Solomon had a vineyard at Baal Hamon. He gave the vineyard to those who would maintain it. Each one was to bring a thousand shekels of silver for its fruit.
௧௧பாகால் ஆமோனிலே சாலொமோனுக்கு ஒரு திராட்சைத்தோட்டம் உண்டாயிருந்தது, அந்தத் தோட்டத்தைக் காவலாளிகள் வசத்திலே அதின் பலனுக்காக, ஒவ்வொருவன் ஆயிரம் வெள்ளிக்காசுகளைக் கொண்டுவரும்படி விட்டார்.
12 My vineyard, my very own, is before me; the thousand shekels are for you, Solomon, and the two hundred shekels are for those who maintain its fruit.
௧௨என் திராட்சைத்தோட்டம் எனக்கு முன்பாக இருக்கிறது; சாலொமோனே! உமக்கு அந்த ஆயிரமும், அதின் பழத்தைக் காக்கிறவர்களுக்கு இருநூறும் சேரும்.
13 You who live in the gardens, my companions are listening for your voice; let me hear it.
௧௩தோட்டங்களில் குடியிருக்கிறவளே! தோழர்கள் உன் சத்தத்தைக் கேட்கிறார்கள்; நானும் அதைக் கேட்கட்டும். மணவாளி
14 Hurry, my beloved, and be like a gazelle or a young stag on the mountains of spices.
௧௪என் நேசரே! விரைவாக வாரும், கந்தவர்க்கங்களின் மலைகள்மேல் உள்ள வெளிமானுக்கும் மான் குட்டிக்கும் சமானமாக இரும்.

< Song of Solomon 8 >