< Isaiah 55 >

1 “Come, everyone who is thirsty, come to the water, and you who have no money, come, buy and eat! Come, buy wine and milk without money and without cost.
ஓ, தாகமாயிருக்கிறவர்களே, நீங்கள் எல்லோரும் தண்ணீர்களிடம் வாருங்கள்; பணமில்லாதவர்களே, நீங்கள் வந்து, வாங்கிச் சாப்பிடுங்கள்; நீங்கள் வந்து, பணமுமின்றி விலையுமின்றித் திராட்சைரசமும் பாலும் வாங்கிக்கொள்ளுங்கள்.
2 Why do you weigh out silver for what is not bread, and why do you labor for what does not satisfy? Listen carefully to me and eat what is good, and delight yourselves in fatness.
நீங்கள் உண்மையான உணவு அல்லாததற்காகப் பணத்தையும், திருப்திசெய்யாத பொருளுக்காக உங்கள் பிரயாசத்தையும் ஏன் செலவழிக்கவேண்டும்? நீங்கள் எனக்குக் கவனமாகச் செவிகொடுத்து, சிறப்பானதைச் சாப்பிடுங்கள்; அப்பொழுது உங்கள் ஆத்துமா கொழுப்பான பொருட்களினால் மகிழ்ச்சியாகும்.
3 Turn your ears and come to me! Listen, that you may live! I will make an everlasting covenant with you—my reliable, faithful love that I promised to David.
உங்கள் செவியைச் சாய்த்து, என்னிடத்தில் வாருங்கள்: கேளுங்கள், அப்பொழுது உங்கள் ஆத்துமா பிழைக்கும்; தாவீதிற்கு அருளின நிச்சயமான கிருபைகளை உங்களுக்கு நித்திய உடன்படிக்கையாக ஏற்படுத்துவேன்.
4 Look, I have placed him as a witness to the nations, as a leader and commander to the peoples.
இதோ, அவரை மக்கள்கூட்டங்களுக்குச் சாட்சியாகவும், மக்களுக்குத் தலைவராகவும், அதிபதியாகவும் ஏற்படுத்தினேன்.
5 Look, you will call to a nation that you did not know; and a nation that did not know you will run to you because of Yahweh your God, the Holy One of Israel, who has glorified you.”
இதோ, நீ அறியாதிருந்த தேசத்தை வரவழைப்பாய்; உன்னை அறியாதிருந்த தேசம் உன் தேவனாகிய யெகோவாவின் நிமித்தமும், இஸ்ரவேலுடைய பரிசுத்தரின் நிமித்தமும் உன்னிடத்திற்கு ஓடிவரும்; அவர் உன்னை மேன்மைப்படுத்தியிருக்கிறார்;
6 Seek Yahweh while he may be found; call on him while he is nearby.
யெகோவாவைக் கண்டடையத்தக்க சமயத்தில் அவரைத் தேடுங்கள்; அவர் அருகிலிருக்கும்போது அவரை நோக்கிக் கூப்பிடுங்கள்.
7 Let the wicked leave his path, and the man of sin his thoughts. Let him return to Yahweh, and he will pity him, and to our God, who will abundantly forgive him.
துன்மார்க்கன் தன் வழியையும், அக்கிரமக்காரன் தன் நினைவுகளையும்விட்டு, கர்த்தரிடத்தில் திரும்புவானாக; அவர் அவன்மேல் மனதுருகுவார்; நம்முடைய தேவனிடத்திற்கே திரும்புவானாக; அவர் மன்னிக்கிறதற்கு மிகுந்த தயையுள்ளவர்.
8 “For my thoughts are not your thoughts, nor are your ways my ways—this is Yahweh's declaration—
என் நினைவுகள் உங்கள் நினைவுகள் அல்ல; உங்கள் வழிகள் என் வழிகளும் அல்லவென்று யெகோவா சொல்கிறார்.
9 for as the heavens are higher than the earth, so are my ways higher than your ways, and my thoughts than your thoughts.
பூமியைக்காட்டிலும் வானங்கள் எப்படி உயர்ந்திருக்கிறதோ, அப்படியே உங்கள் வழிகளைக்காட்டிலும் என் வழிகளும், உங்கள் நினைவுகளைக்காட்டிலும் என் நினைவுகளும் உயர்ந்திருக்கிறது.
10 For as the rain and snow come down from heaven and do not return there unless they saturate the earth and make it produce and sprout and give seed to the farmer who sows and bread to the eater,
௧0மழையும் உறைந்த மழையும் வானத்திலிருந்து இறங்கி, அவ்விடத்திற்குத் திரும்பாமல் பூமியை நனைத்து, அதில் முளை கிளம்பி விளையும்படிச்செய்து, விதைக்கிறவனுக்கு விதையையும் சாப்பிடுகிறவனுக்கு ஆகாரத்தையும் கொடுக்கிறது எப்படியோ,
11 so also my word will be that goes from my mouth—it will not return to me empty, but it will achieve the purpose for which I sent it.
௧௧அப்படியே என் வாயிலிருந்து புறப்படும் வசனமும் இருக்கும்; அது வெறுமையாக என்னிடத்திற்குத் திரும்பாமல், அது நான் விரும்புகிறதைச்செய்து, நான் அதை அனுப்பின காரியமாகும்படி வாய்க்கும்.
12 For you will go out in joy and be led along peacefully; the mountains and the hills will break out in joyful shouts before you, and all the trees of the fields will clap their hands.
௧௨நீங்கள் மகிழ்ச்சியாகப் பாபிலோனிலிருந்து புறப்பட்டு, சமாதானமாகக் கொண்டு போகப்படுவீர்கள்; மலைகளும் குன்றுகளும் உங்களுக்கு முன்பாகக் கெம்பீரமாக முழங்கி, வெளியின் மரங்களெல்லாம் கைகொட்டும்.
13 Instead of the thornbushes, the cypress will grow; and instead of the brier, the myrtle tree will grow, and it will be for Yahweh, for his name, as an everlasting sign that will not be cut off.”
௧௩முட்செடிக்குப் பதிலாகத் தேவதாரு மரம் முளைக்கும்; நெருஞ்சி முட்செடிக்குப் பதிலாக மிருதுச்செடி எழும்பும்; அது யெகோவாவுக்குப் புகழ்ச்சியாகவும், அழியாத நிலையான அடையாளமாகவும் இருக்கும்.

< Isaiah 55 >